மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!

யக்குனர் பா.ரஞ்சித்  மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.அவருடைய வார்த்தைகளில்  சொல்வது என்றால் தொடர்ந்து  உரையாடல்களைத் தொடங்கி வைத்து!  சிலநாட்களுக்கு முன்னால் தலித் இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று அவர் பேசியது பலப்பல விவாதங்களை இங்கே ஆரம்பித்து வைத்தது. இப்போது குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அழைத்துவந்து இன்னொரு தொடர் விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறார். முதலில் எங்கே, எதற்காக என்று பார்த்துவிடலாம். வானம் என்ற அமைப்பின் கீழ் மூன்று நாட்கள் கலை  நிகழ்ச்சிக்கு ரஞ்சித் ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் தொடக்கமாகத் தான் இது!

     
Ganesha Moorthy பின்னூட்டத்தில் இப்படிக் கேட்கிறார். விவாதங்களை விட பார்த்துவிட்டு எழுதுகிற பின்னூட்டங்கள் நச்சென்று இருக்கும் என்பதனால் வீடியோ மட்டுமில்லை பின்னூட்டப் போக்கையும் சேர்த்தே கவனிக்கிற வழக்கம் எனக்கு!

"ஜாதிகள் ஒழிய வேண்டும்", "அதிகாரம் பரவலாக்கபடவேண்டும்" என்று வாய் கிழிய போலியாக பேசும் கம்யூனிஸ்டுகள்தான், ஒரே குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காங்கிரஸையும், திமுகவையம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த துடிக்கிறார்கள். காங்கிரஸ் தலைமை உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தாத்தாத்ரேய பிராமின் கட்டுப்பாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. திமுக - கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்க திராணி உண்டா?


*******

#திராவிடம் என்றால் தி மு கழகம் நினைவுக்கு வராமல் இருக்குமா? எப்படி இருக்கிறார்களாம்?

  


இப்படித் தொடர்ச்சியாக ஹிந்து தமிழ் நாளிதழிலேயே கலாய்க்கப்படுகிற அளவில் தான்
திமுக, அதன் தலைவர் செயல்பாடு இருக்கிறது.

உடன்பிறப்பே! #ரெண்டு துரைமுருகன் என்னமோ கதை சொல்கிறாராமே! ஹிந்துவில் இப்படிக் கலாய்ப்பதற்கும் ஒரு பதில் சொல்லேன்!!

*******
ங்கராஜ் பாண்டே ஊடகங்களின், உரையாடுகிற கலையின் கதாநாயகன் என்றே சொல்லிவிடலாம். கால்மணி நேரத்துக்கும் குறைவான வீடியோவில் எத்தனை விஷயங்களைக் கேட்பவர் மனதில் பதிய வைத்துவிடுகிறார் என்பதைக் கவனித்தீர்களா?

கொஞ்சம் இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!      

!


ங்கராஜ் பாண்டே வெளியேறியபிறகு தந்திடிவி நிகழ்ச்சிகள் எப்படி இருக்கின்றன? ஒரு பரபரப்புச் செய்தியின் மீதான கேள்விக்கென்ன பதில்  நிகழ்ச்சி இது! கேள்விகள் பதில்கள் எப்படி?   

தெரிந்துகொள்வதற்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தேன். உங்களுடைய கருத்தென்ன?

தயக்கமென்ன? சொல்லிவிடலாமே!  


  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!