புதன்கிழமை! கொஞ்சம் கொறிக்க! நிறையச் சிரிக்க!

இன்றைய நாளிதழ்களில் தேவே கௌடா, தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் கூட  பேசுபொருளாகி இருக்கிறார். இப்படி ஒருவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பதே இங்கே எத்தனைபேருக்குத் தெரியுமோ தெரியாதோ என்பதே ??குறிதான்!

symbolises a well-connected India. I thank Atal Bihari Vajpayee avaru, Dr. Manmohan Singh avaru and avaru for their immense contribution in completing a dream project of our Government.


We have had stand by PMs , Temporary PMs… but Deve Gowda was the sleeping PM… Metaphorically as well as literally

  

தேவே கௌடா பிரதமரானதே 1996 இல் நடந்த ஒரு அரசியல் விபத்துதான்! பிரதமராக இருந்ததும் கூட பதினோரு மாதங்களுக்கு சில நாட்கள் குறைவு தான்! அதிலேயே தூங்குமூஞ்சிப் பிரதமர் என்று கேலியாக அழைக்கப்பட்டவர். அவர்தான் நேற்று பிரம்மபுத்ரா நதி மேல் கட்டப்பட்ட போகிபீல் பாலத்திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாதது குறித்துப் பேசி, பேசுபொருளாகி  இருக்கிறார்.        

நேற்றுமுன்தினம் இவர் மகன், கர்நாடக முதல்வராக இருக்கும் குமாரசாமியின் முறை! இரக்கமே இல்லாமல் கொல்லுங்கள்! என்று அலைபேசியில் உத்தரவிடுகிறார்! எப்போதுமே இப்படித்தானா? காங்கிரஸ் கூட்டணிக்குப் பிறகா?


தேவே கௌடா புலம்பல், குமாரசாமி  உத்தரவு இதற்குப் பின்னால் இருக்கிற அரசியல் இவைகளை புரிந்து கொள்ள வேண்டுமா? எதனால் தேவே கௌடா பிரதமரானதே ஒரு அரசியல்விபத்து என்றானார்? புரிந்துகொள்ள கொஞ்சம் 1996 தேர்தலில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

1996 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொங்குசபை என்று தான் மக்களுடைய தீர்ப்பாக இருந்தது. பிஜேபி 161 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக, அடுத்து காங்கிரஸ் 140. சரண்சிங்குக்குப் பின் பலப்பல பிரிவுகளாக சிதறிய ஜனதாதளம் (செகுலர்) 46, இடது முன்னணி 44, இதர மாநிலக்கட்சிகள் எல்லாம் சேர்த்து 100 என்று ஒரு குழப்பமான காம்பினேஷனில் ரிசல்ட்.

தனிப்பெரும் கட்சியாக இருந்த பிஜேபியை ஆட்சி அமைக்க வாஜ்பாய் அவர்களை ஜனாதிபதி அழைத்தார். அவரால் முடியவில்லை என்றானபோது அடுத்த வாய்ப்பு காங்கிரசுக்குப் போனது. கடந்தகால அனுபவங்களில் காங்கிரஸ்  இதர கட்சிகளின் தோள் மீதேறி சவாரி செய்யவே விரும்பியதில் முதல் தேர்வாக விபி சிங்கும், அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசுவும்  இருந்தனர். ஜோதிபாசுவுக்கு  விருப்பமிருந்தாலும், கட்சிக்கட்டுப்பாடு என்கிற கட்டாயத்தில் ஒதுங்கி கொண்டார். மூன்றாவதாக கருப்பையா மூப்பனார் பெயர் அடிபட்டதும் கருணாநிதி அதைக் கழித்ததும் #பழங்கணக்கு அடுத்து நாலாவதாக காம்ப்ரமைஸ் கேண்டிடேட்டாக தேவே கௌடா பிரதமரானது, ஒரு விபத்தா இல்லையா?

காங்கிரஸ்கட்சியால் பிரதமர்பதவி ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டதில் முதலாவது சரண்சிங்! இரண்டாவது சந்திரசேகர்! அடுத்தது தேவே கவுடா! ஆரம்பத்தில் PV நரசிம்மராவ் ஆதரவாளராக இருந்த கௌடாவை காரியமானதும்,  காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை வைத்துக் கவிழ்த்தார்கள்! ஆம், பதவியில் இருந்தது   June 1, 1996, முதல் April 21, 1997 வரைதான்!  பிறகு சீதாராம் கேசரியைத் தள்ளி விட்டு  சோனியா காந்தி கட்சித் தலைமையைக் கைப்பற்றிக்  கொண்டதும் இருபது வருடங்களுக்குப் பிறகு மகன் ராகுல்காந்தியை  அந்த இடத்தில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதும்  நேற்றைய துரோகங்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன்றைய வரலாறு!         

    
அப்படியானால் சஞ்சய் பாரூ எழுதிய இந்தப்புத்தகம் மன்மோகன்சிங்கை #TheAccidentalPrimeMinister என்று சொல்லி இருப்பது தவறா? இல்லை! வேறொரு விதத்தில் அதுவும்  சரிதான் என்பதைக் கூட இந்தப்பக்கங்களில் முன்னமே பார்த்திருக்கிறோம்!

******* 
கொறிப்பதற்குகொஞ்சமல்ல நிறையவே நேற்றைய துரோகங்கள் இன்றைய வரலாறு  என்று பார்த்து விட்டோம், இல்லையா? சிரிப்பதற்கென்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? காங்கிரசின் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறதே!2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, கட்சி தேர்தலுக்கான தயாரிப்பை துவக்கி விட்டது.


இதில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது? கொஞ்சம் யோசித்துத்தான் சொல்லுங்களேன்!     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!