Showing posts with label கலாய்த்தல். Show all posts
Showing posts with label கலாய்த்தல். Show all posts

இது கலாய்த்தல் காலம்! அரசியல் அப்படித்தான்!

இந்த வீடியோவை முதலில் பார்த்தபோது ரொம்பவும் தான் கலாய்க்கிறார்களோ என்று தான் நினைத்தேன். ஆனால் நம்மூர் அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் அசராத சிகாமணிகள் என்பதால் பகிர்கிறேன்! ஆக ஆக என்று சமூகநீதி என்னமாய் ஆகிறதென்று பாருங்கள்  .


சோனியா காங்கிரஸ்காரனிடம் கேட்கக்கூடாத கேள்வி பதவியைத் தியாகம்செய்வது பற்றி! மோடியை வீழ்த்த பிரதமர் கனவை தியாகம் செய்கிறதா நேரு குடும்பம் என்று வேடிக்கையாகக் கூடக் கேட்டு விட முடியாத கேள்வியை ஒருதொலைக்காட்சி  வெட்டிவிவாதமாகப் பார்க்க   

இது கொல்கத்தா கூத்து!


இதைமட்டும் கலாய்க்காமல் விட்டுவைப்பார்களா என்ன?

கொல்கத்தாவுல ஒரு டஜன் சொறிநாய்கள் குரைத்துக் கொண்டிருக்கையில், சில்வாஸாவில் ஒரு சிங்கம் கர்ஜித்துக் கொண்டிருக்கிறது.  

2004 இல் கூட்டணி 335 சீட் கெலிச்சதும் தியாகசிகரம் சோனியா, காங்கிரஸ் நாடாளுமன்றக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தைத் தூக்கிக் கொண்டு ஜனாதிபதி மாளிகைக்கு ஓடியதும், கனவில் மண் விழுந்ததால் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்த சோகமான தருணத்தை நினைவுபடுத்துகிற விதமாக The Accidental Prime Minister புத்தகம் திரைப் படமாகவும் வந்து ஓடிக்கொண்டிருக்கிறதே! தியாகம் எல்லாம் லுலுலாயிக்குத்தான் என்பதை அடுத்துவந்த 10 ஆண்டுகள் நிரூபித்தன! இந்த ஜோக் கூட அதைத்தான் சொல்கிறதோ? 

சோனியா : இவர ஏண்டா இப்படி இழுத்துட்டு வர்றிங்க ?

அஹமது படேல் : Accidental PM படத்துக்கு டிக்கெட் வாங்க லைன்ல நின்னுகிட்டு இருந்தார் மம்மீ...நான் தான் இழுத்துட்டு வரச் சொன்னேன்.


இப்படி R  நாராயணன் முகநூலில் லகலகலகலக என்று சிரிக்கிறார்! தியாகம் செய்த காங்கிரசுக்கும் இப்போதிருக்கிறவர்களுக்கும் ஸ்நான பிராப்தி கூடக் கிடையாதென்று தெரிந்தும் இப்படி ஒரு தலைப்பில் நியூஸ் 7 சேனல் விவாதம் ஒன்றை நடத்துகிறதென்றால் 
கோளாறு அவர்களிடமில்லை! எதையும் எளிதில் மறந்து விடுகிற   நம்மிடம் தான் கோளாறு இருக்கிறது. 


124வது சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.கழகத்தின் ஆலந்தூர் பாரதி மனு தாக்கல் செய்திருக்கிறார். இதுவும் கூட கண்துடைப்பு என்று தான் சட்டரீதியாகத் தோன்றுகிறது. 

சமூகநீதி, சமநீதி, ஒதுக்கீடு என்று  சில பகிர்வுகளை இந்தப்பக்கங்களில் பார்த்துக் கொண்டு வந்தது நினைவிருக்கிறதா? தொடர்ச்சியாக,முன்னம் படித்த சில நல்ல புத்தகங்களை இங்கே அறிமுகமாகப் பார்க்கலாமா?

  
தோழர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் எழுதிய இந்தப் புத்தகம் கேரளாவில் ஆங்கிலேயர்களின் கல்வி முறையை எந்த ஜாதி முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை எடுத்துச் சொல்கிறது. சமநீதி, சமூகநீதி என்பதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி, இங்கே தமிழகத்தில் நிகழ்ந்ததற்கும் அங்கே கேரளாவில் நடந்ததற்கும் உண்டான வேறுபாடு என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் புத்தகம் இது.

இங்கே சென்னை மாகாணத்தில் நடந்தது வேறு!

During the early decades of the 20th Century, when the Indian freedom movement was fast spreading across the country, another movement began to make itself felt in the Madras Presidency. Supporting the ruling British more than somewhat, this movement was more caste- and community-based. The party which was born out of it was popularly called the Justice Party, of which the Dravidian parties of today, whatever their hues, are the descendants and of that movement. 

Basically, the movement was directed against the Brahmin community in the Presidency and, frankly stated, the Justice Party had no other policy than anti-Brahminism. Indeed, before the Party was founded, the movement was called the Non-Brahmin Movement. The person who sowed the seeds for the formation of the Party was Dr. C. Natesa Mudaliar. என்று ராண்டார் கை சுருக்கமாக பிராமண வெறுப்பே நீதிக்கட்சியின் எல்லாமுமாக இருந்தது என்று சொல்வதை படிக்க இங்கே  

இது புத்தக அறிமுகமாக (சு)வாசிக்கப்போறேங்க தளத்தில் இன்று எழுதியது.

   
   

செவ்வாய்! கொஞ்சம் வாய் திறந்துதான் பேசுங்களேன்!

ன்றும் நாளையும் பொதுவேலைநிறுத்தம் என்று இடதுசாரிக் கட்சிகள் முன்னிருந்து இயக்கும் மத்திய தொழிற்சங்கங்களோடு பின்னிருந்து இயக்கும் வங்கி, காப்பீட்டு ஊழியர் சங்கங்கள், காங்கிரஸ் கட்சியின் INTUC திமுகவின் தொ.மு ச அப்புறம் நிறைய உதிரிகளும் சேர்ந்திருக்கிறார்கள். சுமார் 20 கோடி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள் என்று AITUC பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் சொல்கிறாராம்!(அத்தனை வாக்குகள் விழுந்திருந்தால், மத்தியில் ஆட்சியையே பிடித்திருக்கலாமே! யாரும் கேட்க மாட்டீர்களா?)   

Trade Union activists protesting while courting arrest during two day long Bharat Bandh called by Trade Unions, at Hazra in Kolkata on Tuesday 8th January 2019. செய்தி மற்றும் படத்துக்கு நன்றியுடன் (ARIJIT SEN / Hindustan Times)

மாற்றங்களை எதிர்கொள்வது! தடுமாறும் வங்கி ஊழியர்கள்!  என்று இங்கும், 


வேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்து போன சாங்கியம்! 


Why do people go on strike?
What makes or breaks a strike?
Aren’t strikes a bit unfair to customers or service users?
What’s the role of governments in all this?
How else could workers express their dissatisfaction with the way they’re being treated?
Is there an ideal set-up anywhere in the world? 
Have you ever been on, or considered going on, strike?


ப்படி ஏழு கேள்விகளை முன்வைத்து எழுதியிருந்ததை ஒருமுறை வாசித்துவிட்டு , உங்களுக்கு என்ன மனதில் படுகிறதோ அதைக் கொஞ்சம் வாய்திறந்து பேசுங்கள்!

 


னால் மேற்குவங்க முதல்வர்  மம்தா பானெர்ஜி இடது சாரிகளுக்கு பந்த் அதுஇது என்று நடத்தி 34 வருடங்களாக மாநிலத்தைச் சீரழித்தது போதுமென்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். செய்தி இங்கே  

*******

சென்னை புத்தககாட்சியில் புத்தகம் வாங்கிவிட்டீர்களா? புத்தகம் வாசிப்பது பற்றி ஜோதிடம்  கூறும் ரகசியங்கள்!

இப்படி இதற்கும் ஜோதிடம் பார்க்கச் சொல்கிறது தினமணி. பொன்மாலைப்பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்! 

இரண்டே நாட்களில் எலக்கியவாதி ஆவது எப்படி ?

1. நேரா புத்தக கண்காட்சிக்கு போய் அஞ்சாறு எலக்கிய ஆளுமைகள புடிச்சி கன்னத்தோடு கன்னம் ஒட்டி போட்டோ எடுத்துருங்க "ஏய்... யாருய்யா நீ ?" அப்டீன்னு கேட்டா... நாந்தான் அனலினியன், புனல்தலையன் அப்டி இப்டீன்னு எதுனா சொல்லி சமாளிங்க...! " பயபுள்ள இவனும் எலக்கியவாதிதான் போலன்னு" நம்பிருவாங்க.

2. எல்லா ஸ்டால்லயும் போய் சிரிச்சி சிரிச்சி பேசுங்க... பட் எலக்கியவாதிங்க சிரிக்க மாட்டாங்க... முறைப்பாங்க... ஆனாலும் நீங்க சிரிக்கனும்...!

3. வீட்டுக்கு வந்த உடனே, ஃபேஸ்புக்குல உள்ள சொடலமுத்துங்கற ஒங்க பேர, சொடலமுத்திரன் அப்டீன்னு மாத்திருங்க...

4. "அவன் எழுதிய புத்தகத்தை நான் குப்பையில் கிடாசுகிறேன், இவன் எழுதிய புத்தகத்தை நான் ராக்கெட் செய்து விடுகிறேன், இது கல்யோவ்ஸ்கி - டி - லே த்மபுடிக்கி எழுதிய பிரெஞ்சு நாவலின் தழுவல், அவனையெல்லாம் ஏரித்தண்ணில முழுக வெச்சி அடிச்சாலும் அவனுகெல்லாம் எலக்கியம் வராது" என்றெல்லாம் பதிவ போட்டுத்தள்ளுங்க...

5. "தமிழ்" என்பதை "தமில்" என்றெழுதி, அந்த தவறை சுட்டிக்காட்டுபவனிடம், குமரிக்கண்டத்தில் தமில் என்றுதான் பிருந்தது, ஹீத்ரு மொழியில் இருந்து வந்ததுதான் "ழ" எனும் எழுத்து, என்று அவன் குரல்வளையை கடித்துத்துப்புங்கள்...
இரண்டாம் நாள் மாலை ஆறு மணிக்கு "எலக்கியவாதி" ரெடி...!

பதிவு பகிர்வு : ராம்ஜி இசை மழலை

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனும் கலாய்க்கிறார்!

‪இதற்கு சவாலாக பெரியார் நூல்களை சீனாவில் சீப்ரேட்டில் அச்சடித்து இலவசமாக விநியோகிக்கலாமே வீரமணி. எனக்கெல்லாம் பெரியார்போல் யாராவது சொத்து எழுதிவைத்துவிட்டுப்போனால் காலச்சுவடு கண்ணன் கேஸ்போடுவாரோ என்று பயந்து நடுங்காமல் வருவது வரட்டுமென்று இலக்கியத்தை சோவியத்போல இப்படிப் பரப்புவேன்‬
Photo

செவ்வாய்க் கிழமைக் கலாய்த்தல்கள்....!



"எப்பவுமே சீரியசாவே பேசிக்கிட்டிருந்தா எப்பூடி? கொஞ்சம் லைட்டாவும் பேசோணும் , மன இறுக்கம் இல்லாமயும் பாத்துக்கோணும்  இல்லையா?" என்றபடியே புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவர சிங்கம், எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அண்ணாச்சி உள்ளே வந்தார். சரிதான், இன்னைக்கு அண்ணாச்சிபுதுசா எதையோ கிளப்பி விட்டுறப் போறாரு என்ற பீதியுடனேயே நான் "வாங்க அண்ணாச்சி! என்ன  இந்தப் பக்கம் ரொம்ப நாளாவே காணோம்?" என்றேன்.

அண்ணாச்சி என்னுடைய வரவேற்பையோ, அதில் தொனித்த பயத்தையோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மனிதர், ஒரு நாற்காலியில் சௌகரியமாக சாய்ந்து கொண்டபடியே, தன்னுடைய லேப்டாப்பைத் திறந்து "புள்ளி விவரம் பேசுவதற்கு" தயாராகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.  'இன்னைக்கு கிளிஞ்சது கிருஷ்ணகிரி மட்டுமில்லே...நானுந்தேன்' என்று மனதுக்குள் முனகிக் கொண்டு, "அண்ணாச்சி! என்ன சாப்பிடறீங்க? காபி? டீ ?" என்று உபசாரம் செய்தேன்.

அண்ணாச்சி என் உபசாரங்களுக்கெல்லாம்  அசருகிற ஆளாக இல்லை! "நீயும் தான் ஒரு பேங்குல வேலை பாத்தே! பேங்கைப் பத்தி எதுனாச்சும் புதுசா எழுதுனியா?" என்றார். சுமார் முப்பது வருஷம் எனக்கு வாழ்க்கையாகவும், சோறு போடுவதாகவும் இருந்த தொழிலை மறந்துவிட்டேனென்று குற்றம் சாட்டுகிற தொனி அதில் இருந்ததைக் கவனித்தும் கவனியாத மாதிரி அமைதியாக இருந்தேன். நான் என்னதான்  சொன்னாலும் அண்ணாச்சி தான் சொல்ல வந்ததை "நச்சென்று புள்ளிவிவரங்களுடன்" என் தலையில் குட்டிச் சொல்லாமல்  இன்றைக்கு விடப்போவதில்லை! அப்புறம் எதற்காக நான் வேறு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்?

வங்கிகளைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்து சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு  டயர் டூ காபிடலாக, அடுத்து வரும் வருடங்களில் இந்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இருக்கும் செய்தி, பேஸ் ரேட்  என்று ஒவ்வொரு வங்கியும் தான் நிர்ணயிக்கும்  அடிப்படை வட்டி விகிதத்தைப் பற்றி,  நடந்து முடிந்த ஊதிய ஒப்பந்தம், அனைவருக்கும் பென்ஷன் இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. இதை விலாவரியாகச் சொல்வது கொஞ்சம் போரடிக்கும்! அண்ணாச்சி கூட வரும்போதே கொஞ்சம் லைட்டாகச் சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்துக் கொண்டு தான் வந்தாரில்லையா? விலாவாரியாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு பால பாடமாகத் தெரிந்து கொள்ள மட்டும் இங்கே!
 
முடிந்தால் கட்டுரையின் கீழே கொடுத்திருக்கும் வேறு பதிவுகளுக்கும் போய்ப் பார்க்கலாம்!



கொஞ்சம் சுருக்கமாக ஆனால் அடிப்படையை புரிந்து கொள்வதற்கு, அரசாங்கங்களும் வங்கிகளும் எப்படி உன்னாலே உன்னாலே நான் கெட்டேன், என்னாலே என்னாலே எப்படி நீ கெட்டாய் என்று ஒன்றை ஒன்று தாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்கிற வேலையை இந்தப் படம் ஒன்றே அநேகமாகச் சொல்லி விடும்! சொன்னது புரியவில்லை என்றால், பின்னூட்டத்தில் வரலாம், கேட்கலாம்!
  
******


"வடகொரியாவுக்குப் போகவேணாம்! அது ஆபத்தான பயணம்னு" சொல்றதோட நிறுத்தியிருந்தாப் பரவாயில்லே! எங்களிடம் முன்னாள் அதிபர்கள், (அதாவது வேலை வெட்டி இல்லாதவர்கள்) எண்ணிக்கை கம்மியாத்தான் இருக்கிறார்கள் என்று டிவிட்டியிருக்கிறார் இந்தப் புண்ணியவான்!

இவர் மெய்யாலுமே, அமெரிக்க ராஜாங்கத் துறையில், ஸ்டேட் டிபார்ட்மெண்டில் வேலை செய்யறவராம்! இதைப் பாத்தவுடனேயே ஒரு யோசனை வந்தது!


"தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல் அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பது தான்.

இந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்!

கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே!"

இப்படி இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் கடினம் தான்!அமெரிக்காவிலோ, முன்னாள் பஞ்சம்! பேசாமல்  இந்த முன்னாள், முடிந்தால் இந்நாள்களையும் டெபுடேஷனில் அனுப்பி வைத்தால் என்ன! மன்மோகன் சிங் மனசு வச்சா, நடக்காமலேயா போயிடும்?!



****** 


ஆனாலும் இது கொஞ்சம் ஓவர், லொள்ளு தான் என்று பதிவைப் பற்றிச் சொல்பவர்களுக்காக! இது கொஞ்சம் ஒரிஜினல் லொள்ளு!
 
******


வெறும்  பதினாலு சென்ட் கொடுத்தால், இப்படிப் பிராண்டும், கடிக்கும் பூனையை நீங்கள் தடுக்கலாம்! இப்படிச் சொல்கிற இந்தப் படம் கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கல்லறைக்குப் போகிற நாள், நேரம் வரும் வரை, ஏமாற்றிக் கொண்டே இருக்கும் இந்திய அரசியல்வாதிகளிடம் இப்படிக் கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது கூடப் புரியும்!

விடுதலை, சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வது, நம்முடைய கைகளில் தான் இருக்கிறது!

என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



சண்டேன்னா மூணு! படங்கள் மூணு...! கவிதை ஒண்ணு!


சீரியஸா என்னத்தையோ யோசிக்கற மாதிரி எல்லாம் இல்லீங்க! ...ச்சும்மா ஒரு ஷோ காட்டத் தான்! செம்மொழி மாநாடு வேற வருது இல்லே?


எதுக்கு தலையை முட்டிட்டு நிக்கறோம்னு கேக்கறீங்களா? முட்டையில் இருந்து கோழியா, கோழியில் இருந்து முட்டையான்ற மாதிரி எங்க கிட்ட வந்து பரிணாமம் எனது புரிதல், படைப்புவாதம் இப்படீன்னெல்லாம் எழுதப்போறேன்னு பயமுறுத்தினாக்க நாங்க  வேற என்ன செய்யறதாம்...?


எங்களுக்கும் ஸ்டன்ட் அடிக்கத் தெரியும்! ஆனா இன்னாத்துக்கு ஸ்டன்ட்  அடிக்கறதுன்னு தெரியாமத் தான் ஒரே குழப்பமா இருந்தது. அதனால ஒரு ஸ்டன்ட் அடிச்சுப் பாப்போமேன்னு தான்......!

இந்தப் படம் எதுக்கு, அதுக்கு கமெண்டுன்னு கீழே கொஞ்சம் எழுதினது எதுக்குன்னு புரியலையா?

வால் பையனை விட்டே  இந்தத் தரம் உரை எழுதச் சொல்லிட்டாப் போச்சு!

அதுவரைக்கும், ரசிப்பதற்காக ரூமியின் கவிதை ஒன்று ! 

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"

முகமதுஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில் இருந்து அவ்வப்போது ஒரு சில கவிதைகளைப் பார்த்திருக்கிறோம்! அந்த வரிசையில் இன்னுமொன்று!


ரூமி  காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்மநேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதைவரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்! இங்கே இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?


Lover whispers to my ear,
"Better to be a prey than a hunter.
Make yourself My fool.
Stop trying to be the sun and become a speck!
Dwell at My door and be homeless.
Don't pretend to be a candle, be a moth,
so you may taste the savor of Life
and know the power hidden in serving."




 

பீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது! புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

னவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாதபடிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

னவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

னேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

ப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

வராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தனிவிக்கிரார்களா என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

ன்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனைஎல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

ந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும்போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம்போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

ரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது! இப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

ற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா, யோசித்து மாற்றுவதா ன்று பாதுஷாவுக்கு டுத்த ந்தேகம்  ழக்கம் போயாராகி விட்டது!

oooOooo

வால் பையன்கள் காட்டும் பரிணாமம்!


எழுத வேறெதுவும் செமை மொக்கையாகக் கிடைக்காத தருணங்களில் எல்லாம், பரிணாமத்தைப் பிராண்டுவது என்ற நல்ல வழக்கத்தை நம்ம வால்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்! சேக்காளி ராஜன் வந்து அடக்கினால் தான் உண்டு போல!

பரிணாமத்துக்கு முதலில் கொஞ்சம் முன்னுரை, அப்புறம்
அந்த
முன்னுரைக்கே விளக்கவுரை, அப்புறம் கொஞ்சம் படங்களோடு என்று பரிணாமப் பிராண்டல்கள் ஆரம்பித்துவிட்ட பிறகு நான் மட்டும் சும்மா இருந்துவிட முடியுமா என்ன?


அதனால் ஒரே ஒரு படம் மட்டும்! இந்தப் படத்துக்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் வரை சந்தோஷம்!

oooOooo 


வங்கிகள், நிதித்துறை,பொருளாதாரம் பற்றிப் பதிவில் எழுதி நாட்களாகி விட்டதே என்று செய்திகளைக் கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்.  

அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது சென்ற வருடம், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 'உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் நிறுத்த முடியும்-அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால்!"  என்ற வாசகத்தைப் பார்த்தேன்!  சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான பக்கம் இது! இந்த விவகாரமான படத்தை ஒரு டி ஷர்ட்டில் போட்டு இந்த வலைத் தளத்தில் சொல்லப்பட்ட காரணம்  இது!

"
GFCSUCKS.COM aims to stop incessant talking about the Global Financial Crisis and believes it is only making matters worse."

சரிதானா என்று கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்!


 

தலைப்புச் செய்திகள்! கொஞ்சம் சிரிக்க..நிறையக் கொதிக்க!

பாதுஷா கனவுகள், சந்தேகத்தில் நேற்றைய பொழுது போனபடியால், வெள்ளிக்கிழமைக் கேள்விகள் இன்று சனிக்கிழமைக்கு மாறி விட்டன! ஸ்ரீராம் வந்து மாற்றம் தொடருமா என்று கேட்பதற்கு முன்னாலேயே, அப்படி எந்த உத்தரவாதமும் இல்லை என்று சொல்லிவிடுகிறேன்.

பதிவுகள், கேள்விகள், அல்லது பதில்கள் என்பவை அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளால்  ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தவை!செய்திகளும் அதன் தாக்கங்களும்  மாறிக் கொண்டே இருக்கும்! சூரியக் குடும்ப டிவி மாதிரி அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு நித்தியானந்தாவைத் துவைத்துக் கொண்டே பிழைப்பை ஓட்ட முடியாது இல்லையா!

முதல் கேள்வி, கேள்விப்பட்டதே இல்லையே!?

ஒரு கட்சித் தலைவர், தன்னுடைய மாநிலக் கட்சி அலுவலகத்திற்கு வருவது அதிசயமா  என்ன?  காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அப்படித்தான்!

உலகமகா அதிசயங்களில், அல்லது ஆச்சரியங்களில் இதையும் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது! புதிய தலைமைச் செயலக திறப்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு, அப்படியே காங்கிரஸ் சரித்திரத்தில் ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக இல்லாத பழக்கமாக, சோனியா காண்டி, சத்தியமூர்த்தி பவனுக்கும் வருகிறாராம்! 1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் எவருமே  எவருமே சத்தியமூர்த்தி பவனுக்குள் எட்டிப் பார்த்ததே இல்லையாம்!முதன் முதலாக எட்டிப் பார்த்த வாரிசு, ராகுல் காண்டி, இப்போது சோனியா!  சத்தியம் என்றால் அவ்வளவு பிரியம் போல இருக்கிறது!

கேள்வி இரண்டு! வருமா, வராதா?

இடுக்கண் வருங்கால் நகுக என்பதை யாரோ சோனியாவுக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள் போல! அம்மையார், திமுக உதவி இல்லை என்றால், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா சாத்தியமே ஆகியிருக்காது என்று போகிற போக்கில்  சிரிக்காமல் சொல்லியிருக்கிறார்! 


கூத்தாடிகள் சங்கம், கூட்டணிக் கொசுறுகள்  மாதிரி, தனியாகப் பாராட்டு விழா நடத்தி, மானாடவும் மயிலாடவும் விட்டு அப்புறம்  இதைச் சொல்லாமல் போனதற்காகவே முரசொலியில் ஒரு கண்டனக் கவிதையை விரைவில் எதிர்பார்க்கலாமா?
 


படம் பாருங்கள்! ரிப்பன் கத்தரிப்பது கூட ரிப்பனுக்கு வலிக்குமே என்று கவலைப் படுகிற மாதிரி இல்லை...? மன்மோகன் சிங் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்திருக்கிறார். இப்போது மறுபடியும்! உள்ளூர் கோஷ்டிகள், வேட்டி கிழிப்பு கலாசார சங்கமம் நிகழ்ச்சியை நடத்தாமல் இருந்தால் சரி!

இன்றைய நகைச் சுவை!

" பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2010 ஆம் ஆண்டுக்கான "உலகின் சிறந்த ராஜ தந்திரி' என்ற விருதை அமெரிக்காவைச் சேர்ந்த கன்சைன்ஸ் அறக்கட்டளை வழங்குகிறது."

அமெரிக்கர்களுக்கு நகைச் சுவை உணர்வு கொஞ்சம் குரூரமாக இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்!  

அவர்களால் பாராட்டப் படும் உலகின் தலைசிறந்த ........... யைப் பார்த்து இந்திய மக்கள் பெருமிதப் பட்டுக் கொள்ள முடியாது! நாளை மறுநாள், 15 ஆம் தேதி, அணுமின் நிலைய விபத்துக்கள், நஷ்ட ஈடு வரையறுக்கப் படும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இன்றைய ஹிந்து நாளிதழில் சர்ச்சைக்குரிய இந்த மசோதா முன்வரைவைப் பற்றிக் கொஞ்சம் விரிவான கண்ணோட்டத்தை பிரம்ம செலானி எழுதியிருக்கிறார். அதில் இருந்து........ 


"Under the Bill, the foreign reactor builder — however culpable it is for a nuclear accident — will be completely immune from any victim-initiated civil suit or criminal proceedings in an Indian court or in a court in its home country. The Bill actually turns the legal liability of a foreign reactor supplier for an accident into mere financial compensation — that too, pegged at a pittance and routed through the Indian state operator of the plant. Foreign suppliers will have no direct accident-related liability."

மூன்றாவது கேள்வி!
 
இப்படி ஒரு முட்டாள்தனமான சலுகை அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்காவிலேயே கிடைக்காது! இங்கே மட்டும் ஏன்? எதற்காக? 

கட்டுரை, அணுக் கதிரியக்கத்தின் அபாயத்தைச் சொல்லவில்லை! அதைவிட மோசமான, சட்ட வடிவத்தை, இங்கே ஆட்சி செய்பவர்கள்  இந்த நாட்டு மக்கள் மீது எப்படிப்பட்ட சுமையை, ஆபத்தை வலிந்து திணிக்கிறார்கள் என்பதை சொல்கிறது.அதைப் படித்துவிட்டு  வாசகர் கருத்தாக ஒன்று  இது-"நேற்று, யூனியன் கார்பைடு ஆண்டர்சன் சட்ட விரோதமாகத் தப்பித்ததை, இன்றைக்கு சட்டபூர்வமாகவே தப்பிக்க உதவுகிற சட்டம்" என்று இப்படிச் சொல்வதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 
 
'What Anderson got away with illegally, we have successfully managed to legalize, it seems. In a country where the potential of wind energy generation is around 50,000 MW and that of solar photo-voltaics is around 20,000 MW, and we are not yet considering solar thermal energy which in India has a potential unlike anywhere in the world.'
from:  shirish joshi

இங்கே இந்தப் பக்கங்களில், உலகில் எங்குமில்லாத அதிசயமாக, அமெரிக்க பகாசுர நிறுவனங்களைக் காப்பாற்றும் அப்பட்டமான சட்டவரைவு இது என்பதைக் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். இங்கே அணுமின் நிலையங்களைக் குறித்த விவாதமோ, அதன் பாதுகாப்பு அம்சத்தை  இந்திய விஞ்ஞானிகள் அறியாதவர்கள் என்றோ சொல்லவில்லை. Accountability! பொறுப்பு! பொறுப்பிலிருந்து விடுவிக்கும் சட்டத்தை அவசர அவசரமாக முன்வைக்க வேண்டிய அவசியம் என்ன? கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன!

சில மர்ம முடிச்சுக்களை எப்போதும்போலக் காலமும் கடவுளும் தான் விடுவிக்கவேண்டும்! அப்போதும் கூடக் காங்கிரஸ் கட்சிக்கு முதுகெலும்பு, நேர்மை, சுதந்திரமான சிந்தனை இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!

அப்புறம், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை, அதில் உள் ஒதுக்கீடு  செய்யப் படாமல் இருப்பதால் தான் எதிர்க்கிறோம் என்று லொள்ளு மற்றும் தில்லு முல்லு யாதவ்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வது, முஸ்லிம் பெண்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமாம்! சிறுபான்மை இனத்தவரின் தனிப்பெரும் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் நாடகம் இது என்பது இங்கே அரசியலில் அ'னா, ஆவன்னா தெரிந்த சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும்!

ஒரு செய்தியைச் சொன்னால்  ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பது, கேள்வியை மறுபடி கேட்டால் மூன்று கூட இல்லை இரண்டே முக்கால் தான் என்று சொல்வது பாலைவனங்களில் வேண்டுமானால், சரியாக இருப்பது போல பர்தா போட்டு மூடி வைத்துவிடலாம்.. 


இந்தியா மாதிரிப் பன்முகம், பலமொழி, பல இனத்தவர் கூடி வாழும் நாட்டில் எடுபடாது. என்பது  அ. மு. செய்து$  மாதிரிப் பதிவர்களுக்கெல்லாம் தெரியுமா தெரியாதா என்று தான்  தெரியவில்லை! சில இஸ்லாமிய மத குருமாக்கள் பெண்கள் இட ஒதுக்கீடு அனாவசியம் என்று சொல்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.பெண்களைக் குறித்து அவர்களால் இப்படிக் குறுகிய பார்வையில் தான் பார்க்க முடியும் என்பதை அப்பட்டமாகச் சொல்லும் செய்தி இது.
 .

சால்வை அழகர் பானா சீனா பதவியை விட்டு இறங்கினால், பட்டிமன்றப் பேச்சாளராக வருவார் என்று நம்புகிற அளவுக்கு இந்த செய்தி இருக்கிறது!

இந்த மாதிரி ஒரு மந்திரியை என்ன பாவம் செய்து பெற்றோம் என்று வாக்களித்தவர்கள் கேட்க வேண்டிய நேரம் இது!

"ஜிகாதியை விட மோசம் நக்சல்': ""மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கத் தேவையான அளவுக்கு படைகளை பயன்படுத்த, மத்திய அரசுக்கு தார்மீக உரிமையுண்டு. மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டால் மட்டுமே அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்,'' என அமைச்சர் சிதம்பரம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஜிகாதி பயங்கரவாதத்தை விட மோசமானது நக்சல் பயங்கரவாதம். இந்த அரசின் பதவிக்காலம் முடிவதற்குள் மாவோயிஸ்ட்கள் ஒடுக்கப்படுவர். மாவோயிஸ்ட்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளனர். ஏழைகள் அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதை, அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதை மாவோயிஸ்ட்கள் விரும்புவதில்லை. அதே நேரத்தில், எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கும் வகையில், நமது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்."

சால்வை அழகர் பானா சீனாவுக்கு இந்த தேசத்தின் ஏழை மக்கள் மீது தான் எவ்வளவு அக்கறை! எவ்வளவு அக்கறை!! அவர்கள் விடுதலையில் தான் எத்தனை பொறுப்பு! இதைக் கேள்வியாக எடுத்துக் கொண்டாலும் சரி, பாராட்டி சால்வை அணிவிப்பது மாதிரி எடுத்துக் கொண்டாலும் சரி, உங்கள் இஷ்டம்!

பதிவிலும் கூட மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?

Guest post எழுதித்தர முன்வருகிற மகளிர் வாசகர்யாராவது தயாராக இருந்தால்,  பின்னூட்டத்தில் தன்னுடைய மின்னஞ்சலுடன் தகவல் சொல்லலாம்! இப்போதைக்கு மம்தா பானர்ஜி குறித்த ஒரு செய்தி மட்டும்!

"தனியாரை துணைக்குச் சேர்ப்பதால், ரயில்வே துறைக்கு லாபம் குறையுமே தவிர, அதிகரிக்காது. கட்டணம் அதிகம் என்பதால் பணக்காரர்கள் மட்டுமே இந்த சிறந்த சேவைகளைப் பெறுவார்கள். ஏழைகளுக்கு தற்போது இருக்கும் சேவைகளும் இல்லாமல் போய்விடும்.அரசு தனியார் பங்கேற்பு என்பது, கிராமத்து பாணியில் சொல்வதென்றால், அரிசியை நீ கொண்டு வா, உமியை நான் கொண்டு வருகிறேன். இருவரும் ஊதித் தின்னலாம் என்கிற கதைதான்! " இங்கே பொதுத்துறை, கூட்டு முயற்சி எந்த லட்சணத்தில் என்பதை முத்தாய்ப்பாக முடிப்பது தினமணியின் தனி முத்திரை!

தினமணியின் தலையங்கம்! எப்போதும் போல சிந்திக்க வைக்கிற மாதிரி, நேர்மையோடு எழுதப்பட்ட தலையங்கம். சிந்திக்க முடிந்தவர்கள், என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டத்தில் நாலுவார்த்தை சொல்லுங்கள்!