பீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது! புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

னவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாதபடிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

னவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

னேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

ப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

வராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தனிவிக்கிரார்களா என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

ன்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனைஎல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

ந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும்போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம்போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

ரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது! இப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

ற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா, யோசித்து மாற்றுவதா ன்று பாதுஷாவுக்கு டுத்த ந்தேகம்  ழக்கம் போயாராகி விட்டது!

oooOooo

வால் பையன்கள் காட்டும் பரிணாமம்!


எழுத வேறெதுவும் செமை மொக்கையாகக் கிடைக்காத தருணங்களில் எல்லாம், பரிணாமத்தைப் பிராண்டுவது என்ற நல்ல வழக்கத்தை நம்ம வால்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்! சேக்காளி ராஜன் வந்து அடக்கினால் தான் உண்டு போல!

பரிணாமத்துக்கு முதலில் கொஞ்சம் முன்னுரை, அப்புறம்
அந்த
முன்னுரைக்கே விளக்கவுரை, அப்புறம் கொஞ்சம் படங்களோடு என்று பரிணாமப் பிராண்டல்கள் ஆரம்பித்துவிட்ட பிறகு நான் மட்டும் சும்மா இருந்துவிட முடியுமா என்ன?


அதனால் ஒரே ஒரு படம் மட்டும்! இந்தப் படத்துக்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் வரை சந்தோஷம்!

oooOooo 


வங்கிகள், நிதித்துறை,பொருளாதாரம் பற்றிப் பதிவில் எழுதி நாட்களாகி விட்டதே என்று செய்திகளைக் கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்.  

அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது சென்ற வருடம், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 'உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் நிறுத்த முடியும்-அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால்!"  என்ற வாசகத்தைப் பார்த்தேன்!  சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான பக்கம் இது! இந்த விவகாரமான படத்தை ஒரு டி ஷர்ட்டில் போட்டு இந்த வலைத் தளத்தில் சொல்லப்பட்ட காரணம்  இது!

"
GFCSUCKS.COM aims to stop incessant talking about the Global Financial Crisis and believes it is only making matters worse."

சரிதானா என்று கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்!


 

7 comments:

  1. மிகவும் சிறப்பான பதிவு !
    கதை , சிந்தனை , பொருளாதாரம் என பலவற்றை கதம்பமாக இணைத்து தந்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பரிணாமத்தை நான் டார்வினடமிருந்து ஆரம்பிக்கவில்லை! என் புரிதலிருந்து ஆரம்பித்திருக்கேன்! கோர்வையற்று செல்வதால் பிராண்டுவது போல் தான் தோன்றும்! எனது புரிதலில் தவறு இருந்தால் தயை கூர்ந்து சுட்டிகாட்டும் படி கேட்டு கொள்கிறேன்!

    டார்வின் புத்தகங்களையும் ஏனைய பிர புத்தகங்களையும் படித்து விளக்க முடியாமல் புத்தகங்களை நம்பும் மதவாதிகளை போல் அல்லாமல் நானக புரிந்து அதன் சாத்தியகூறுகளை ஆராய்ந்து பின் பதிவிடுவது விளக்குவதற்கும் ஏதுவாக இருக்கும் என கருதுகிறேன்!

    எனக்கு தேவை உணவு, அதை பிராண்டியோ, கிழித்தோ, உடைத்தோ அடைய வேண்டியது என் ஆர்வத்திற்கு கட்டாயம் போட வேண்டிய தீனி!, என்ன செய்ய இப்படி மூடனாக பிறந்து விட்டேன்! ஆனால் பாருங்களேன் அக்பரை கூட மூடன் என்று தான் நீங்கள் சொல்கிறீர்கள்!

    ReplyDelete
  3. வால்ஸ்!

    என்னுடைய பார்வையில் நீங்கள் இன்னமும் பரிணாமத்தைப் பற்றிப் பேசவே ஆரம்பிக்கவில்லை! டார்வினைத் தொட்டுத் தான் பரிணாமத்தை விளக்க முடியும் என்றும் நான் சொல்லவில்லை. சம்பந்தமே இல்லாத விஷயங்களை வைத்துப் பரிணாமக் கொள்கையைப் பற்றி எப்படிப் புரிந்து கொண்டீர்கள், எப்படிப் பதிவில் கொண்டுய் செல்கிறீர்கள் என்பதை நிறையப் பெசியிருக்கிறோமே, நினைவிருக்கிறதா?

    அறிவியல் கோட்பாடுகளைத் தமிழில் சொல்ல முயற்சியை ஆரம்பித்திருப்பது வரவேற்கத் தக்கதுதான் என்பதில் எனக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் கிடையாது. அதே நேரம், எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு வெகுதூரம் விலகிப் போய்விடுகிற விடலைத்தனம் நீங்கி நல்ல முதிர்ச்சியோடு பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆசையையும் பல முறை தெரிவித்த பிறகும், நான் சொல்ல நினைக்காத அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்!

    அக்பரையும் மூடன் என்று தான் சொல்வதாக....!

    பீர்பால் கதைகளை, நடப்பு நிலவரங்களோடு பொருத்திக் கொஞ்சம் நையாண்டியோடு எழுதப் பட்ட பதிவுகளை, சரித்திரத்தைப் பிரேத பரிசோதனை செய்யும் பதிவுகளாக ஏன் நினைக்கிறீர்கள்? சரித்திரத்தை அதன் right perspective இல் பார்க்கப் பழகினவன் நான்.

    ReplyDelete
  4. உங்களிடம் மிக ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.
    கிண்டல் இல்லை. தோன்றியதை சென்னேன்.
    "நுனிப்புல் " மேய்ந்தால் ஆள் அம்பேல்.
    Just a joke.

    ReplyDelete
  5. மாணிக்கம்! என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்!!

    நுனிப்புல் மேய்வதற்காகத் தானே நிறையப் பேர் இணையத்துப் பக்கமே வருவது! நீங்கள் இத்தனாவது ஆளாக ஏற்கெனெவே பத்துலட்சம் பேர் மேய்ந்து முடித்துவிட்ட பக்கத்தில் மேய வந்திருக்கிறீர்கள் என்று பந்தா காட்டின கதை எல்லாம் தெரியுமா?

    நான் பீர்பாலோ, நீங்கள் அக்பராகவோ இல்லை! அப்புறம் என்னத்துக்கு இந்தக் கவலை எல்லாம் ?!

    ReplyDelete
  6. // நான் பீர்பாலோ, நீங்கள் அக்பராகவோ இல்லை! அப்புறம் என்னத்துக்கு இந்தக் கவலை எல்லாம் //
    :):):):)

    ReplyDelete
  7. பரிணாமம் அல்லது உயிர்தளிர்ப்பில் என்ன பிரச்சினை? எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது?

    அதை நான் விளக்கி எழுதிய பதிவுகள்
    http://rajasankarstamil.blogspot.in/search/label/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

    புரியவில்லை அல்லது ஏதேனும் சந்தேகம் விளக்கலாம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!