ஊமைச் சனங்களும்...சுரமும்....!

பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான்! மாவு ராகவன்களை வால் பையன்கள் மிரட்டின மாதிரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

நீண்ட நாட்களுக்கு
முன்னால் நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்து கொடுத்த புத்தகம், மருந்துக் கம்பனிகளின் தில்லுமுல்லு வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியே கொடுத்த புத்தகம் தி ஃபீவர்!  (The Fever by Dr.Robin Cook)

ப்போது படிக்கிற மாதிரிக் கற்பனை செய்தாலே கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், போரிஸ் பாஸ்டர்நாக் இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை, படிக்கப் படிக்க வெறுப்பேற்றிய புத்தகம் அது

ழுதியவர் ஒரு மருத்துவர்! நிறைய தொழில்நுட்ப விவரங்களை, சாதாரணமாகப் படிக்க வருகிறவர்களுக்குக் கொஞ்சமும் புரியாத வகையில் அடுக்கிக் கொண்டே போனது தான் கோளாறு! தவிர, விவரங்களைச் சொல்லிவிட்டு நாசூக்காகத் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்வதற்குப் பதிலாக நேரடியாகவே ஒரு பிரச்சாரம் மாதிரி இருந்ததும் ஆரம்பநிலை வாசகருக்குப் புரிவதும், பிடிப்பதும் மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

பொதுவாகவே துறை சார்ந்த கதைகளை எழுதுவதில் ஆங்கில எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். மிகக் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சி, அடிப்படை விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, புறம் அதில் இருந்து ஒரு கதைக் களம், கதாபாத்திரங்கள் உருவாக்குவது என்பது மேற்கே கதை எழுத முனையும் அத்தனை எழுத்தாளர்களுக்குமே உரித்தான ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது.  

ர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதும்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள், இயங்கும் விதம், நடைமுறைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அப்புறம் கதைக் களத்தை உருவாக்கிய விதத்தைச் சொல்லியிருக்கிறேன். புத்தகத்தைப் படிக்கும்போதே, ஒரு கதையைப் படிப்பதோடு, வங்கித் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிற மாதிரி இன்றைக்கும் பொருத்தமாக அந்தப் புதினம் இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் சொல்ல முடிகிறது!

முதலாவதாக, கதாசிரியர் வெறும் கதைதானே என்று அலட்சியமாக நம்மூர் பாலகுமாரன்கள் மாதிரி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகாமல், எழுத  எடுத்துக் கொண்ட துறையைப் பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, கதையோட்டத்தில் பொருத்தமான இடங்களில் அந்தத் தகவல்களை வாசகர்களும் தெரிந்து கொள்கிற மாதிரிக் கொடுத்திருந்தது!

ரண்டாவதாக, அவர் அந்தப் புதினத்தில் எடுத்துக் கொண்ட வங்கித் துறையின் பேராசை, நிர்வாகக் குளறுபடிகள், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும்  சாதாரண மக்கள் என்பது இன்றைக்கும் மாறாமல் அச்சு அசலாக அப்படியே திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பது!

க, அறிவியல் அல்லது ஏதாவது ஒரு துறை சார்ந்த புதினத்தை எழுதும் கதாசிரியருக்கு வெறும் கற்பனை மட்டுமே இருந்தால் போதாது! அவருக்கு அந்தத் துறையை பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்! தெரிந்து கொண்ட அத்தனை விஷயத்தையும் கதையில் அப்படியே கோர்த்து விட முடியாது,  துறை சார்ந்த விஷயங்களை மைஒயமாக வைத்து ஒரு சுவாரசியமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிற கதாபாத்திரங்களை உருவாக்கவேண்டும், உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமோ, அதேமாதிரி, துறை சார்ந்த தகவல்களைக் கதையின் ஓட்டமாகவும் அவசியமாகக் கலந்து படைக்க வேண்டும். அதில் வெற்றி காணும் போது, துறைசார்ந்த ஒரு புதினம் வெற்றிகரமாக, வாசகர்களால் கொண்டாடப் படுகிற விதத்தில் உருவாகிறது.

வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதையே மறந்து விட்டு எழுதிய மாதிரியிருக்கும் இந்தப் புதினத்தில், இந்த அடிப்படைக் கோளாறை மறந்து விட்டு வாசித்தால், உண்மையிலேயே மிடவும் அருமையான புத்தகம் தான்! சொல்லப் பட்ட விதம், உபயோகிக்கப் பட்ட தொழில்நுட்பச் சொற்கள், ரசாயனப் பெயர்கள் அதிகமாக இருப்பது, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது.

The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

சாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

ன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.



"This is without question one of the scariest books I’ve read in recent times. Ethan Watters, a San Francisco-based journalist and author who explores social trends for publications such as Wired and The New York Times Magazine, has written a chilling book on how multinational pharmaceutical companies export ideas about mental illnesses common in the US to make a killing from marketing the drugs for such conditions in countries which had no concept of such things as depression.

Mental illnesses popular in the US, such as post-traumatic stress disorder (PTSD), anorexia and depression, in particular, are now spreading across the world with the speed of contagious diseases, says Watters, who went about investigating why this was happening although different cultures view mental illnesses through a complex prism of religious, scientific and social attitudes. In short, the West, primarily the US, has been homogenising the way the world goes mad."

Even if you’ve read The Truth About the Drug Companies, The $800-Million Pill or Selling Sickness, Watters’ book comes as an eye-opener. Among the more disturbing disclosures is his detailing of GSK’s dishonesty on Paxil. In-house assessments of the drug that have come to light through lawsuits and government inquiry reports show the drug has not been effective. He quotes a company memo that reported that results of Paxil were “insufficiently robust” and urged GSK to “effectively manage the dissemination of these data in order to minimise any potential commercial impact”.

பிசினெஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் மூன்று நாட்களுக்கு முன்னால், வியாதிகளை  ஏற்றுமதி செய்து கொழுத்த லாபம் சம்பாதிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களைப் பற்றி எழுதப் பட்ட இன்னொரு புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் இது.


முழுதாய்ப் படிக்க இங்கே.

ந்தப் பக்கங்களில்  போலி மருந்து, கலப்படம் செய்யப்பட மருந்துகளை அரசு மருத்துவ மனைகளிலேயே வழங்கப்பட்டதை மத்தியப் புலனாய்வுத் துறை திடீர் சோதனை நடத்தியதில் கண்டுபிடித்த விவரத்தைப் பற்றிய  பதிவாக எழுதிய பிறகு, சேகரத்தில் இருந்த ராபின் குக் எழுதிய  The Fever  புதினத்தை தேடியெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

யிர் காக்கும் மருந்துகள் என்று நம்பித்தான், மருத்துவர்கள், மருந்துக் கடைக் காரர்கள் சொல்வதை நம்பித்தான், என்னவென்றே தெரியாத ரசாயனக் கலவைகளை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். கலப்படம் செய்யப் படாத சுயம்பிரகாசமாக இருக்கும் நிலையிலேயே, இந்த ரசாயனக் கலவைகள், ஒரு
வலியைக் குணப் படுத்தி வேறு பல திருகுவலியைக் கொண்டு வந்து சேர்ப்பதாகத் தான் இருக்கின்றன.

தாரணமாக, இதய நோய்க்குப் பரிந்துரை செய்யப் படும் மருந்துகளில் பெரும்பாலானவை, காலப் போக்கில் சிறுநீரகத்தைக் காலி செய்து விடுவதாகத் தான் இருக்கின்றன. மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காகக் கொடுக்கப் படும் ஆஸ்பிரின், வயிற்றில் ஓட்டை போட்டு விடுவது  சர்வ சாதாரணமான பக்க விளைவு. 

ப்படி அலோபதி மருத்துவத்தில், ரசாயன மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி எந்த மருந்துக் கம்பனியும், பரிந்துரை செய்யும் மருத்துவரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் எச்சரிக்கை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, தடுப்பு வழிகளைச் சொல்வதே பெரும் பாலான தருணங்களில் இல்லை. மாறாக  கொசு அடிக்க பீரங்கி மாதிரி, ஓவர் டோஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதே நிறைய இடங்களில் நடக்கிறது.

ந்த லட்சணத்தில், இந்தத் திருநாட்டில், அரசின் அலட்சியத்தால், காலாவதியான மருந்துகளை மறுபடி தேதி பேக்கிங் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்புவதும், மருந்துகளிலுமே கூடக் கலப்படமும், போலி லேபிள்களும் நிறையவே புழக்கத்தில் இருப்பதை ஏதோ அந்த நேரத்துத் தலைப்புச் செய்தியாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடாமல் எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறோமா?

மைச் சனங்களாகவே இருந்துவிடுவது தான் சௌகரியமாக இருக்கிறது என்று  இலவச டீவீக்களில், காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி, மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்ப்பதிலேயே பிறவிப் பயனை அடைந்து விட்ட திருப்தியில் இருந்துவிடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்? ங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 



 

8 comments:

  1. என்னை கவர்ந்த நாவல்களுள் இதுவும் ஒன்று. என் தொகுப்பில் கூட உள்ளது. ஒரு மருத்துவராய் இருந்து அவர் தம் துறை,அதனை சார்ந்த நிறுவனங்கள் பற்றி தரும் விளக்கங்கள் பிரமிப்பை தரும் உண்மை. மிக்க ஈடுபாட்டுடன் அவர் தரும் விஷயங்கள் மற்றும் விளக்கங்கள்,கதையை விட என்னை கவர்தவை.

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    துறை சார்ந்த விஷயங்களை எழுதுவதில், எழுதுபவருடைய நிபுணத்துவம் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி வாசகருக்கும் புரிவதும மிக மிக முக்கியமில்லையா?

    டாக்டர் ராபின் குக்கின் நிபுணத்துவத்தைப் பற்றியோ, அவர் கொடுத்த தகவல்களைப் பற்றியோ இங்கே விமரிசிக்கவில்லை. அவர் சொன்ன விதம் புரிந்துகொள்வதற்கு இன்னமும் கடிதாக இருக்கிறதென்றே கருதுகிறேன். அவருடைய இன்னும் இரண்டு நாவல்களையும் படித்திருக்கிறேன்.

    இப்போது ராபின் குக் எழுதிய இந்தப் புத்தக விமரிசனத்தைத் தொட்டது, இங்கே அம்பலமாகிவரும் மருந்துக் கம்பனிகளின் மோசடிகள், கலப்படக்காரர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான்! பிசினெஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கை லிங்கில் கிளாக்சோ ஸ்மித் கிளீன் நிறுவனத்தின் திருவிளையாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் பற்றி, மருந்துக் கம்பனிகள் எப்படி வியாதியை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரையைப் படித்தீர்களா?

    நாம் செய்யக் கூடியதெல்லாம், எவ்வளவு முடியமா அவ்வளவு பேருக்கு இந்த விழிப்புணர்வை எடுத்துச் செல்வது தான்! இங்கே உள்ள அரசையோ, மருந்துக் கட்டுப் பாட்டுத் துறையையோ, ஊழல் அரசியல்வாதிகள்-அரசு ஊழியர்கள்-தரங்கெட்ட தொழிலதிபர்களுடைய மெகா கூட்டணியை எளிதாக சீர்திருத்திவிட முடியும் என்று அல்ல!

    விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் - உன்போல்
    குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்

    என்றாகி விடக் கூடாதே, அதற்காகத் தான்!

    ReplyDelete
  3. உங்கள் ஒவ்வொரு பதிவையும் படிகின்றவன் என்ற வகையில் சொல்கிறேன்.
    நிற விஷயங்களில் இதுபோல ஆதங்களும், வேதனைகளும் உண்டுதான்.
    இங்குள்ள அனைவரின் மனப்போக்கு என்வென்றால் "எப்படியாவது தங்களின் காரியம் நடந்தால் சரி "
    என்பதுதான். அத விடுத்து யார் என்ன செய்தால் என்ன ? என்ற 'ஜனநாயக மனபோக்கு " நன்றாக
    வளர்ந்து வேருன்றி விட்டதால் யார் எக்கேடு கேட்டபோகட்டும் , நாம் நன்றாக இருந்தால் சரிதான்
    என்ற போக்கு நீக்கமற நிறைத்துவிட்டது.

    அவரவர்களுக்கு வந்தாலன்றி பொதுவாக யாரும் இவைகளை பற்றி சிந்திக்கவோ, செயல்படவோ
    தயாரில்லை. இது நன்றாக புரிந்துகொண்டதால் தான் நீங்கள் பட்டியலிட்ட அணைத்து குழுக்களும்
    மிக எளிதா செய்யல பட முடிகிறது.

    //அரசையோ, மருந்துக் கட்டுப் பாட்டுத் துறையையோ, ஊழல் அரசியல்வாதிகள்-அரசு ஊழியர்கள்-தரங்கெட்ட தொழிலதிபர்களுடைய மெகா கூட்டணியை எளிதாக சீர்திருத்திவிட முடியும் என்று அல்ல!//

    எனக்கு என்னவோ "இந்திய ஜன நாயகம் " பம்மாத்து தான் அடிபடைகாரணம் போல உள்ளது.
    தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன். யாரையும் எதையும் கேட்க முடியாது.

    ReplyDelete
  4. //அவர் சொன்ன விதம் புரிந்துகொள்வதற்கு இன்னமும் கடிதாக இருக்கிறதென்றே கருதுகிறேன். //


    நீங்கள் சொல்வது உண்மைதான்

    வேதியல் அல்லது மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு சற்று இது எளிதுதான்.
    நிறைய துறை சார்ந்த சொற்றொடர்கள், பதங்கள், வார்த்தை பிரயோகங்கள் இருக்கும்.
    இது, அவர் அத்துறையில் நிபுணராக இருப்பதால் உண்டான ஒரு தாக்கம் என்றே நான் நினைக்கிறன்.

    ReplyDelete
  5. ராபின் குக் எழுதியது சரியானது என்றாலும், வாசகர்களுக்குப் புரிகிற அளவில் இல்லை என்பதற்காகத் தான், இன்னொரு துறை சார்ந்த புதினம், ஆர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers பற்றியும் சொல்லியிருந்தேன். வங்கித்துறையைப் பற்றிய ஞானம் இல்லாதவர்களுக்கும், வங்கிகள் எப்படி இயங்குகின்றன, கடன் அட்டைகளினால் ஏற்படும் சீரழிவு, வங்கித் துறையின் பேராசை இவைகளைத் தெளிவாகக் கதையோட்டத்தொடேயே விவரங்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திய கதாசிரியரின் திறத்தை ஒப்பிட்டுச் சொல்லியிருந்த பகுதிய அருள்கூர்ந்து மறுபடி படித்துப் பாருங்கள்!

    ரசாயனக் கழிவுகள், மருந்துக் கம்பனிகளின் அலட்சியப் போக்கு இவற்றை மேற்கத்திய வாசகர்கள் ஒப்புக் கொண்டாலும், அவர் மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிப் பேசியதை எவரும் ஒப்புக் கொள்ளவில்லை.

    இங்கே நிலைமையே கொஞ்சம் தலைகீழாக இருக்கிறது! உலகத்தின் மிகப் பெரிய நஞ்சுக் கழிவுகளை , மின்னணு சாதனக் குப்பைகளைக் கொட்டுகிற இடமாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது என்று ஐ.நா சபையே எச்சரிக்கும் அளவுக்குப் போன பின்னாலும் கூட, இங்கே உள்ள அரசு இயந்திரங்கள் தூங்கி வழிந்துகொண்டுதான் இருக்கின்றன.

    ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளைக் கொட்டி சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது. அதை அகற்றுகிற வேலையில் அந்த நிறுவனத்தைப் பொறுப்பாக்கவோ, சேதங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய பொறுப்புக்கு உள்ளாக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அந்த நிறுவனத்தை சுமையில் இருந்து விடுவிக்கிற மாதிரி சலுகைகளை வழங்கியிருக்கிற கொடுமையை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  6. I loved reading Robin Cook's Fever and partly because of some familiarity with the industry i guess - i worked as a Medical Representative long back -. Your blog is one of the first one i check every day. your worries about the future of India are so true. I think it is the focus on the fake "இந்திய ஜன நாயகம் "

    ReplyDelete
  7. வாருங்கள் ரவி!

    என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் நிறைய மருத்துவர்கள் உண்டு! கதையை புரிந்து கொள்வதிலோ, அதில் சொல்லப் பட்ட ரசாயனக் கழிவுகளால் ஏற்படும் பக்க விளைவுகளைப் புரிந்து கொள்வதிலோ எனக்குச் சிக்கல் இருந்ததே இல்லை. பதிவை மறுபடி கவனித்துப் பார்த்தால் இதை எனக்குப் படிக்கும் படி சிபாரிசு செய்தவரே ஒரு மருத்துவர் தான் என்பதும், படிக்கச் சொன்னதே இந்தத் துறையில் என்னென்ன தகிடுதத்தங்கள் நாக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் என்பதையுமே சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்!

    அப்புறம், "போலி ஜன நாயகம்!"

    போலிகளாக இருப்பது தலைவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் தான்! அவர்களை நம்புகிறவர்கள் ஏமாந்த சோணகிரிகளாகவே இருந்து விடுகிறார்கள். தவிர ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கூறே, அதில் அத்தனை பேருக்குமே பொறுப்பு, கடமை இருக்கிறது என்பது தான்! விழிப்புடன் இல்லாதவர்களாக, ஒரு தவறு ஆரம்பிக்கும்போதே தட்டிக் கேட்கத் துணிவில்லாதவர்களாக இருந்துவிடும்போது, ஜனநாயகம், சுதந்திரம், உரிமைகள் எல்லாம் போய்விடுகிறது!

    இலவச டீவீயில் மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்த்துக் கொண்டு, போய்ச் சேர வேண்டியது தான்!

    ReplyDelete
  8. ராபின் குக் எழுதிய The Money Changer பற்றி சொல்லியிருந்தீர்கள். சரிதான். இன்னொன்றும் நினைவு வருகிறது ஜெப்ரி ஆர்ச்சர் தன்னுடைய Not a Penny more, Not a Penny less நாவலில் கூட ஷேர் மார்க்கெட்
    தகிடு தித்தங்களை மிக எளிதாக எழுதிருப்பார். இவைகள் எல்லாம் நமக்கு எளிதாக விளங்கிக்கொள்ள முடிவது நாம் தின சரி வாழ்வில் இந்த பணம்,வங்கி, ஷேர் மார்கெட் என்று அனைவராலும் பயன்படுத்தபடுவாதல் எல்லோருக்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் மருத்துவ , வேதியியல் நுட்பங்களை நாம் தினமும் தினசரி வாழ்கை நடைமுறைகளில் பயன்படுத்துவதில்லை. தேவையான நேரங்களில் மட்டும் அவைகளில் மீது கவனம் வருவதால் மட்டுமே இதுபோன்ற விபரங்கள் நாவல்களில்
    வரும்போது படிபவர்கள் சற்று எரிச்சலடைய வாய்ப்பு உள்ளது.

    ஹிந்துஸ்தான் லீவர் நிறுவன "பாதரச கழிவு விஷயம்" பல வருடங்களாக பேச்சில் மட்டுமே தான் உள்ளது. எபோதாவது செய்திகள் வரும் பின்னர் மறக்கப்படும்.தேர்தல் நிதி கொடுத்தால் போதும். அதிகம் வேண்டாம்.போபால் விழ வாயு விபத்து அதன் பின் நடந்த நிகழ்வுகள் தங்களுக்கு தெரியும்தானே !
    மறந்து போய்விடுவதே இந்தியாவில் "ஜனநாயகம் " தழைக்க முக்கிய காரணமோ?!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!