சண்டேன்னா மூணு! படங்கள்!

ஒபாமாவைக் கிண்டல் செய்யும் கார்ட்டூன்  இது!  சரியான ஐயம் பேட்டை வேலையாக இருக்கிறதே என்கிறீர்களா ?

பொறுங்கள்! திருவாரூர், திருக்குவளை வேலைக்கு முன்னால் அய்யம்பேட்டை வேலை எல்லாம் எம்மாத்திரம்? வெறும் 75 கோடிக்கு ஒரு காங்கிரஸ் அமைச்சர் ராஜினமா செய்ய வைக்கப் படுகிறார்! 340 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியை கைது செய்திருக்கிறார்கள்! மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கி 1800 கோடி ரூபாய் ரொக்கம்.1500 கிலோ தங்கம், ஏகப்பட்ட சொத்துக்கள் என்று ஒரு நபர் கைதாகி இருக்கிறார்! பிரதமர் அலுவலகம் நேரடியாக உத்தரவு பிறப்பித்திருக்காவிட்டால் இந்த ஊழல் பெருச்சாளியின் மீது கை வைப்பதை நினைத்தே பார்த்திருக்க முடியாது என்று இன்றைக்கு செய்திப் பத்திரிகைகள், பிரதம மந்திரியை  புகழ்ந்து தள்ளிருக்கின்றன. ஆகா எவ்வளவு நல்ல காரியம் என்று  துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடாதீர்கள்! சிக்கினதெல்லாம் சின்ன மீன் தான்!

ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நாளொருதடையம், விவகாரம் கிளம்பி பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போனாலும்  அமைச்சர் ராசா மீது கைவைக்க முடியவில்லை! ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை  படுத்தும் பாட்டில்,இந்த டம்மிப் பீஸ்   பிரதம மந்திரிக்கு அவ்வளவு தான் தெம்பு போல இருக்கிறது!


ஆ! ராசா! ஆ! ராசா!


oooOooo


அடிக்கற  வெய்யிலுக்கு ஆனையார் மாதிரி அருவியில் குளியல் போட்டாக்க சந்தோஷம் தான்! குடிக்கறதுக்கு, கழுவறதுக்குமே தண்ணியை காணோமே! படம் பார்த்து, மனசைத் தேத்திக்குங்க!
oooOooo 
பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி!

வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேனடா கிஸ்தி என்று சக்தி கிருஷ்ண சாமி எழுதிய வசனம் கட்டபொம்மன் படத்தோடேயே போய் விட்டது! வான் மழை இல்லை! குளங்கள், கண்மாய்  எல்லாம் பட்டாப் போட்டு மனைகளாகி விட்டன! நிழல் கொடுக்க மரம் ஏதாவது இருந்தால் கண்ணை உறுத்துகிறது! என்ன இல்லை என்றாலும், அரசுக்கு கிஸ்தி கட்டுகிறோமோ இல்லையோ, கேபிளுக்கு கிஸ்தி, அரசு ஊழியர்களுக்குக் கப்பம் இப்படி கட்ட வேண்டிய நிலை மட்டும் மாறவில்லை! வரி கொடா இயக்கம் என்று காந்தீய வழியைப் பேசினால் முதுகு வீங்குவது மட்டும் தான் மிஞ்சும்!

இந்த தேசத்தின் மிகப் பெரிய சாபக் கேடே ஊழலும் அரசியல் வாதிகளும், தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு, மெகா கூட்டணி அமைத்துச் சுரண்டிக் கொண்டிருப்பது தான்!

பச்சைப் பசேல் என்ற பசுமை, இதமான சூரிய ஒளி,ஊழல் இல்லாத  பசுமைத் தாயகமாக இந்த மண்ணை மீண்டும் காணும் நாளும் வருமா? அதுவரை, இந்தப் பசுமையைப் படத்தில் பார்த்துக் கனவு காணுங்கள்! செயல்படுங்கள்!

இப்போது  படித்துக்  கொண்டிருப்பது   


உரிமையைப் பறிப்போ ரில்லை உரிமையை யிழப்போ ரில்லை
சிறுமைக ளிழைப்போ ரில்லை சீர்மையைத் துறப்போ ரில்லை
வறுமையை  யழைப்போரில்லை தொழிலினை மறப்போரில்லை
திறமைசால் அறிவும் வீறுந் திருவுட னோங்கு  நாடே!

-கவியோகி சுத்தானந்த பாரதியார்
பாரத சக்தி மகா காவியம்
பாரத புண்ணிய பூமிப் படலம், வரிகள் 61-64
கையில் சிறு உபாதை இருப்பதால், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தினசரி பதிவுகள் எழுதவோ, நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதோ சாத்தியமில்லை. 

 

4 comments:

 1. ராசா உண்மையிலே ராசாதான்..! தலைவரே சிபாரிசுக்குப் போறாரே...!

  ReplyDelete
 2. வாருங்கள் ஸ்ரீராம்!
  ஆ! ராசா என்றால் ஆதாயம் தரும் ஆசாமி என்று ஒரு புது அர்த்தம் படைக்கப்பட்டிருக்கிறது!......குடுமி சும்மா ஆடாது என்று தெரியாமலா சொன்னார்கள்!

  அப்புறம் ஷபீர் என்ற பெயரில் முகம் காட்டாமல் சூப்பரப்பு என்று ஒரு வரி கமென்ட் நிராகரிக்கப் பட்டிருக்கிறது.

  தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடிகிறவர்களது பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிப்பது என்பது கொள்கை முடிவு!

  ReplyDelete
 3. நல்ல விடயங்களின் தொகுப்பு. என் செய்ய ராசா...ராசாதி ராஜாவாச்சே...
  சரி விடுங்க.அந்த போட்டி முடிவு என்னாச்சு? வோட்டு போட்டோமே?

  ReplyDelete
 4. நினைவு வைத்து விசாரித்ததது மிக சந்தோஷம்.

  போட்டியில் பத்து டிசைன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அப்புறம் அதற்குள் முதல் மூன்றுக்கான வாக்களிப்பு நடக்கும். வீப்ளிடாட்காமில் பதிவு செய்துகொண்டவர்கள் அல்லது பதிவு செய்துகொள்பவர்கள் மட்டுமே இந்த இரண்டாம் கட்டத் தேர்வில் வாக்களிக்க முடியும். இன்னமும் முதல் கட்டத் தேர்வு ரிசல்டை வெளியிடவில்லை என்று மகன் தகவல் சொன்னான்.

  ரிசல்ட் வந்ததும் என்னவாயிற்று என்று சொல்கிறேன்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!