மழையின் தாளம் கேட்குது! மனிதா, மனிதா! வெளியே வா!

இணையத்தில் சில நேரங்களில் மிகவும் சுவாரசியமான விஷயங்களைப் படிக்கும்போது, அதே போல ஏற்கெனெவே நமக்குத் தெரிந்த ஒரு விஷயமும்  மிகவும் பொருந்திப் போவதை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஒரே கண்டுபிடிப்பு, சம்பந்தமே இல்லாத இருவேறு மனிதர்களால், வெவ்வேறு இடங்களில் தகவல் தொடர்பு எதுவும் இல்லாமலேயே நிகழ்ந்திருக்கும் விநோதத்தை அறிந்திருக்கிறீர்களா?

தென் கொரியாவை சேர்ந்த ஒரு வடிவமைப்பாளர், டோங் மின் பார்க் என்று பெயர்,  ஒரு குடையை உருவாக்கியிருக்கிறார்!



குடை என்றால், மழையில் தலை நனைந்து விடாமல் பிடித்துக் கொண்டு போகிற, அல்லது நேர் வெய்யில் தலையில்
படாமலிருக்கப் பிடித்துக் கொண்டுபோகும் வெறும் குடை இல்லை! மழை பெய்தால், தாள ஓசை எழுப்பும் குடை இது!



மழை பெய்யும் தருணத்தில் இந்தக் குடையை விரித்துப் பிடித்தால், மழைநீர் குடையின் பகுதிகளில் விழும்போது ட்ரம் வாசிக்கிற மாதிரி மழையின் தாளமாக இசைக்கும்படி வடிவமைத்திருப்பது இந்தக் குடையின் தனிச் சிறப்பு! மழை ட்ரம் என்று பெயரிடப் பட்டிருக்கும்  இதைத் தமிழில் மழையின் தாளம் என்று அழைக்கலாமா!



இன்றைக்கு இணையத்தில் இந்தப் பக்கத்தில் மழையின்தாளமாக ஒரு குடை வடிவில் உருவாக்கிய அந்த தென்கொரிய வடிவமைப்பாளரைப் பற்றிப்  படித்தபோது இங்கே கரிசல் குயில்கள்  கிருஷ்ணசாமியின் பாடலாக  'மழையின் தாளம் கேட்குது! மனிதா, மனிதா! வெளியே வா!' என்று கையைப் பிடித்து மழையில் நனைந்து, மழையின் தாளத்தை ரசிக்க அழைத்த கிருஷியின்  பாடலை, தீராத பக்கங்கள் மாதவராஜின் பதிவில்
படித்து, பாடலைக் கேட்ட அனுபவம் கண்முன்னாலே விரிந்தது.

நான்கைந்து நாட்களுக்கு முன்னால், மதுரையில் இரவு நேரத்தில்  கோடையைக் குளிர்விக்கும் மழை சிறிது நேரம் பெய்தது! மழையின் ஓசை, மனிதனுக்குப் பிடித்தமான, பழகிப்போன  ஒன்றுதான் இல்லையா ! நள்ளிரவு நேரமானபோதிலும், மழைபெய்வதை ஒரு தாலாட்டு மாதிரியே கேட்டுக் கொண்டு, அதை ரசித்தபடியே தூங்கிப் போன அனுபவம் இந்த மழையின் தாளம் எழுப்பும் குடையை பற்றிப் படித்தபோது நினைவு வந்தது.

என்னைக் கவர்ந்த அந்தப் பாடலை நீங்களும் கேட்க இதோ!


திரு மாதவராஜுக்கு நன்றியுடன்!





 

2 comments:

  1. அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

    நிர்வாக குழு,

    தகவல் வலைப்பூக்கள்.....
    http://thakaval.info/blogs/news/

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றி.

    சின்ன வயதில் இந்த பாடல்களை நேரடியாக கேட்கும் வாய்ப்பு பல முறை கிடைத்துள்ளது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!