ஊமைச் சனங்களாக இருக்கும் வரை எந்த ஒரு தீர்வும் இல்லை....!


Ape not monkey தளத்தில் இன்று காலை, எந்த ஒரு பிரச்சினையிலும் பெரும்பான்மை ஜனங்கள் வாய்மூடி ஊமைகளாகச் செயலிழந்து நிற்கிற அவலத்தை எடுத்துச் சொல்லும் ஒரு பதிவைப் படித்தேன். இப்படி வாய்பேசாது, செயலிழந்து பெரும்பான்மை ஜனங்கள் இருப்பதால் தான் உலகில் இன்றைக்கு நாம் காணும் கொடுமைகளில் பெரும்பாலானவை தட்டிக் கேட்கஆள் இல்லாததால் மட்டுமேதம்பிகள் சண்டப் பிரசண்டர்களாக இருக்க முடிகிறது.

லார்ஸ் வில்க்ஸ் என்ற ஸ்வீடிஷ் கார்டூனிஸ்ட், ஸ்வீடனில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசப்போனபோது மிக மோசமான முறையில் தாக்கப் பட்டிருக்கிறார். அவரது வலைத் தளமும் ஹேக் செய்யப் படு, வீட்டிலும் வன்முறைத் தாக்குதல் நடந்திருக்கிறது.

 

டேவிட் ப்ரம் சி என் என் தளத்தில் இந்த நிகழ்வைப் பற்றி எழுதும்போது, அங்கே கூடியிருந்தவர்கள் வன்முறையில் ஈடு பட்டவர்களோடு ஒப்பிடுகையில் பத்துக்கு ஒன்று என்று பெரும்பான்மையாக இருந்த போதிலும், ஊமைச் சனங்களாகவே வேடிக்கை பார்த்த அவலத்தைத் தொட்டு எழுதுகிறார். 

இப்படி வன்முறை, தவறுகள், ஊழல்கள் நடக்கும்போதெல்லாம் இந்தப் பெரும்பான்மை, ஊமைச் சனங்களாகவே நின்று விடுவதால் தான், தடி எடுத்தவன்  எல்லாம் தாண்டவராயனாகி விட முடிகிறது! வாரிசுகள் அஞ்சா நெஞ்சர்களா முடிகிறது! 



இன்றைக்கு இரவுச் செய்திகளில் பாகிஸ்தான் அரசு பேஸ்புக் தளத்தைத் தடை செய்திருக்கிற விஷயத்தைப்பார்க்க முடிந்தது. காரணம், நாளை மே இருபதாம் தேதியை "முகமதை வரையுங்கள்" தினமாக அனுசரிக்கும்படி அதில் ஒருதனித் தளம் இயங்க ஆரம்பித்திருப்பது தான்! இதற்கு முன்னால் யூட்யூப் தளத்தில் இஸ்லாமுக்கு எதிராக நிறைய வீடியோக்கள் இருக்கிறதென்ற காரணத்தைக் காட்டி, யூட்யூப் தளத்தையும் ஓராண்டுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசு தடை செய்து வைத்திருந்தது.

அமெரிக்காவில் சவுத் பார்க் என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியை விமரிசித்து வந்த பகுதிக்குக் கடுமையான எதிர்ப்பும், வன்முறையும் தொடரவே,
மோலி நோரிஸ் என்ற பெண் கார்டூனிஸ்ட் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் மதத் தீவீர வாதத்தைக் கண்டித்து, முகமது நபியின் உருவத்தை வரையும் இயக்கமாக அனுசரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தவர், விளைவுகள் விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்து,  முகமதை வரைவதற்குப் பதிலாக முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோரே படத்தை வரையும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனாலும், மத அடிப்படைவாதிகளின் போக்கை எதிர்த்துத் தொடங்கப் பட்ட இந்தமுயற்சி கடந்த பத்து நாட்களாக வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. செய்தி இங்கே! விக்கி தளத்தில் இதன் முழு விவரமும் தெரிந்துகொள்ள இங்கே!

எந்த ஒரு நம்பிக்கையையும்  மத உணர்வுகளையும் சீண்டுகிற போக்கு வரவேற்கத் தக்கது இல்லைதான்! அதற்காக மதவுணர்வுகள் மனிதனை மிருகத்திலும் கீழாக மாற்றிவிடுகிற போக்கும் நிச்சயமாக ஆதரிக்கப் படவேண்டியவை அல்ல. 
சகிப்புத்தன்மை இல்லாதவர்களை உலகமும் சகித்துக் கொள்ளாது என்பதை ஏனோ நம்மில் பலரும் மறந்து விடுகிறோம்.

ஒருவருடைய நம்பிக்கை அவரவர் சொந்த விஷயம். 


அந்த எல்லையோடு நின்றுகொள்வது, நாம் வாழும் சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான அமைதிக்கு மிகவும் முக்கியம்.

ஸ்ரீ அரவிந்த அன்னை ஒரு தருணத்தில் தெளிவாகவே சொன்னார். மதங்களின் தேவை முடிந்து விட்டது. அதையும் தாண்டிய ஆன்மீகச் சிந்தனை ஒன்று தான், ஆன்ம நேய ஒருமைப்பாடுதான் மனித குலத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லக் கூடியது.


 

9 comments:

  1. மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை . எப்பொழுதுதான் புரிந்துகொள்ளுமோ .இந்த சமுதாயம் ?

    ReplyDelete
  2. //ஒருவருடைய நம்பிக்கை அவரவர் சொந்த விஷயம்.

    அந்த எல்லையோடு நின்றுகொள்வது, நாம் வாழும் சமுதாயத்தின் ஒட்டு மொத்தமான அமைதிக்கு மிகவும் முக்கியம்.
    //

    இதுதான் சார் வாழ்க்கையின் மிக முக்கியமான உண்மை. ஆனால் மற்றவரின் மதம் சார்ந்த எண்ணங்களை மற்றவர் கிண்டல் செய்யும்போதோ,மற்றவரிடம் திணிக்கும்போதோதான் பிரச்சனை ஆரம்பிக்குதுன்னு நான் நெனைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. //எந்த ஒரு நம்பிக்கையையும் மத உணர்வுகளையும் சீண்டுகிற போக்கு வரவேற்கத் தக்கது இல்லைதான்! அதற்காக மதவுணர்வுகள் மனிதனை மிருகத்திலும் கீழாக மாற்றிவிடுகிற போக்கும் நிச்சயமாக ஆதரிக்கப் படவேண்டியவை அல்ல//

    well said :)

    ஆனால் இஸ்லாமியர்களை போல ஒரு சூழ்நிலை வந்தால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது ஒரு கேள்விக்குறியே.

    கருத்து சுதந்திரம் மற்ற விசயங்களில் பரவலாமே?

    ஆனாலும் வன்முறை என்பது ஒரு காலத்திலும் ஒத்துகொள்ள முடியாத ஒன்று.

    நான் இதைப்பற்றி பதிவு எழுத நினைத்திருந்தேன் :)

    ReplyDelete
  4. பனித்துளி ஷங்கர், யாசவி, மயில்ராவணன்!

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    @ஷங்கர்.

    மிருகத்திலிருந்து மனிதனாக உயர்வதற்கு சிந்தனையும், சகமனிதர்களுடைய கூட்டுறவும் உதவியது.பொதுவான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குப் பின்னால்,நம்பிக்கைகள் தான் மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் கருவியாகவும் இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொது, மதங்களின் தேவை ஒரு கால கட்டம் வரை தேவையாக இருந்தது என்றே கொள்ள முடியும்.

    ஆனால், அதையும் தாண்டிப் போகவேண்டிய கட்டத்திற்கு இப்போது மனிதகுலம் வந்தடைந்திருக்கிறதென்றே
    சொல்லவேண்டும்!

    @யாசவி,

    உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கும்போது ப்ளாகரில் கோளாறு இருக்கும் பிழைச் செய்தி தொடர்ந்து மூன்று நான்கு முறை வந்தது. வெப்மாஸ்டர் டூல்சிற்குப்போய் மால்வேர் எதுவும் உங்கள் தளத்தில் இருக்கிறதா என்று ஒருதரம் பார்த்துவிடுங்கள்!

    /ஆனால் இஸ்லாமியர்களை போல ஒரு சூழ்நிலை வந்தால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?/

    யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் நடந்து கொள்வதற்கு அடிப்படையாக இருக்கும் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் சித்தாந்தம் தான் இப்போது இந்த அளவுக்கு ஒரு ரத்த வெறியாக மாறியிருக்கிறது. இணையத்தில் தேடினால் நிறைய விஷயங்கள் இது குறித்துக் கிடைக்கும்.

    மயில்ராவணன்!

    யாசவியின் பின்னூட்டம் ஒருவழியாக அனுமதிக்கப் பட்டது என்று பார்த்தால், அதற்குமுன் அனுமதிக்கப் பட்ட உங்களது பின்னூட்டம் எங்கேயோ காணாமல் போனது! ப்ளாகர் பூதம் கூட இந்த விஷயத்தில் ரொம்பவும் பயப் படுகிறதோ என்னவோ!

    :-)))

    ReplyDelete
  5. நன்றி

    வெப் மாஸ்டர் சென்று சோதித்து பார்த்துவிட்டேன்.

    ReplyDelete
  6. bX-6t5z2i

    யாசவி! உங்களுடைய இரண்டாவது பின்னூட்டத்தை அனுமதித்தபோது, முதலில் வந்த மாதிரியே பிழைச் செய்தி வருகிறது.

    ஒரு பின்னூட்டத்தை அனுமதித்து, பதில் எழுதினால், பின்னூட்டமோ, பதிலோ காணாமல் போய்விடுகிறது.

    இன்றைக்கு ப்ளாகர் கள் குடித்த குரங்கைத் தேளும் சேர்ந்து கொட்டின நிலையில் இருக்கிற மாதிரித் தான் நடந்து கொள்கிறது!

    உதவிப்பக்கங்களில் நிறையச் சொல்கிறார்கள்!

    ReplyDelete
  7. பிரச்சிணையே கார்டூன்களில் கருத்து ரீதியாக எதிர்ப்பதில் உள்ள குளறுபடி தான் என நினைக்கிறேன்.

    இது ஆரம்பித்தது Danish பத்திரிக்கை கார்டூன், அந்த பத்த்ரிக்கையாளரை கொல்ல முயன்றது, லண்டனில் வெளிப்படையாக கொல்ல வேண்டும் என பிரச்சாரம் செய்தது, ஜெர்மனில் குண்டு வைத்தது என தொடர்ந்து இப்போது பாகிஸ்தான் அரசாங்க தடையில் போய் நிற்கிறது.

    http://en.wikipedia.org/wiki/Muhammad_cartoons_controversy

    http://en.wikipedia.org/wiki/Amir_Abdur_Rehman_Cheema

    http://en.wikipedia.org/wiki/Descriptions_of_the_Jyllands-Posten_Muhammad_cartoons

    http://upload.wikimedia.org/wikipedia/en/7/75/Jyllands-Posten-pg3-article-in-Sept-30-2005-edition-of-KulturWeekend-entitled-Muhammeds-ansigt.png

    http://en.wikipedia.org/wiki/Islamist_demonstration_outside_Danish_Embassy_in_London_in_2006

    ReplyDelete
  8. சபரிநாதனின் பின்னூட்டத்தை அனுமதித்த போதிலும் முன் சொன்ன அதே பிழைச் செய்தி தான் வருகிறது. அதனால் காபி அண்ட் பேஸ்ட் செய்து...

    Sabarinathan Arthanari has left a new comment on your post "ஊமைச் சனங்களாக இருக்கும் வரை எந்த ஒரு தீர்வும் இல...":

    பிரச்சிணையே கார்டூன்களில் கருத்து ரீதியாக எதிர்ப்பதில் உள்ள குளறுபடி தான் என நினைக்கிறேன்.

    இது ஆரம்பித்தது Danish பத்திரிக்கை கார்டூன், அந்த பத்த்ரிக்கையாளரை கொல்ல முயன்றது, லண்டனில் வெளிப்படையாக கொல்ல வேண்டும் என பிரச்சாரம் செய்தது, ஜெர்மனில் குண்டு வைத்தது என தொடர்ந்து இப்போது பாகிஸ்தான் அரசாங்க தடையில் போய் நிற்கிறது.

    http://en.wikipedia.org/wiki/Muhammad_cartoons_controversy

    http://en.wikipedia.org/wiki/Amir_Abdur_Rehman_Cheema

    http://en.wikipedia.org/wiki/Descriptions_of_the_Jyllands-Posten_Muhammad_cartoons

    http://upload.wikimedia.org/wikipedia/en/7/75/Jyllands-Posten-pg3-article-in-Sept-30-2005-edition-of-KulturWeekend-entitled-Muhammeds-ansigt.png

    http://en.wikipedia.org/wiki/Islamist_demonstration_outside_Danish_Embassy_in_London_in_2006

    ReplyDelete
  9. வாருங்கள் சபரிநாதன்!

    இன்றைக்கு ப்ளாகரில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.ஒரு பின்னூட்டத்தை அனுமதித்த பின்னால், அதற்கு முந்தையது காணாமல் போவது என்று தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருந்தது.

    நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. கண்ணுக்கு முன்னால் இருப்பதையே இல்லையென்று வாதிட்டுக் கொண்டிருக்கும் வலையுலகில், எத்தனை பேர், அதையெல்லாம் தேடிப் பிடித்துப் படிக்கப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

    ஆரூடம், ஜோசியம் இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றபோதிலுமே கூட நோஸ்ட்ரோ டாமஸ் இதுவிஷயமாகச் சொன்ன ஆரூடம் பலித்துவிடுவதற்கான முன்னோட்டமாகத் தான் இவைகளைப் பார்க்க முடிகிறது!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!