Showing posts with label படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல். Show all posts
Showing posts with label படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல். Show all posts

வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! படம் பார்த்துப் பதில் சொல்லுங்கள்!


இணையத்தில் த்தூ..த்தூ என்று  துப்பிக் கொண்டு உலா வந்த பெண்ணீயக் காவலர்களுக்கு இந்த செய்தி உவப்பாக இருக்குமோ என்னவோ!? கடைசித் தருணங்களில் கல்கத்தா நகர சபையின் மேயர் பதவியைக் கூடக் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து மம்தா அலையைத் தடுக்க காம்ரேடுகள் முயன்றதாக செய்திகள் வந்தன. தனித்து நின்ற  காங்கிரஸ் மம்தாவின் ஜோல்னாப் பையைத் தூக்கிக் கொண்டு பின்னாலே வருகிற நிலைமைக்கு வந்தது சாபமா வரமா?


அதனால் இன்னொரு வித்தியாசமான படம்! நாயைக் கூட்டிக் கொண்டு போனால் செய்தியல்ல! நாயைத் தூக்கிக் கொண்டு போனால்..!?


இதிலே அரண்டு போனது யார்னுதான் தெரியலே!?

சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!  ஒரு வழியாக எண்ணெயைக் கடலில் கொட்டி, அமெரிக்காவுக்கு கொண்டு வந்தாயிற்று!அப்புறம் சுற்றுச் சூழல், எவர் எப்படி கெட்டுப் போனால் எனக்கென்ன?



ஒபாமா வாங்க! வந்து எதுனாச்சும் செய்யுங்க! 


என்னது! எஸ் எம் கிருஷ்ணா அங்க வந்து கிளாஸ் எடுக்கிறாரா? மீ  தி எஸ்கேப்பு!