Showing posts with label காதல் என்ன கத்தரிக்காயா. Show all posts
Showing posts with label காதல் என்ன கத்தரிக்காயா. Show all posts

இதுக்குப் போயி இவ்வளவு அலட்டிக்கலாமா.............!

http://img51.imageshack.us/img51/1737/pigrider.gif



கையில் பீர் பாட்டிலோடு இந்த அய்யா பன்னி மேல சவாரி செய்கிற அழகைப் பார்த்தீர்களா?

மூன்று நாட்களுக்கு முன்னால் இதன் தொடுப்பைக் கொடுத்த போது, என்ன காரணமாக இருக்கும் என்று ரொம்ப யோசிக்கவில்லை! இன்றைக்கு, ஒரு படத்தைப் பார்த்ததும்,  இது தான் காரணமோ என்ற கேள்வி எழுந்தது!

அவனும் அவளும் சந்தித்தார்கள்.செலவு, தொப்பை இரண்டையும் குறைக்க  பீர் குடிப்பதை நிறுத்தி விடும்படி யோசனை சொன்னாள் அவள்.

 
அழகு படுத்திக் கொள்வதற்காக, மேக் அப் அது இது என்று ஆயிரம் ஆயிரமாக செலவு செய்கிறாயே அதை நிறுத்தினால் என்ன என்றான் அவன்.

 
உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போவதற்காகத் தானே அத்தனை மேக் அப் செய்துகொள்கிறேன் அதை ஏன் நிறுத்த வேண்டும் என்றால் அவள்!

 
அந்தக் கொடுமை தாங்க முடியாமல் தானே நான் பீர் குடிக்கவே ஆரம்பித்தேன் என்றானாம் அவன்!

அதற்கு அப்புறமும் அவள் வருவாளா, உடைந்து போன  அவன்  உள்ளத்தை ஓட்ட வைக்க அவள் வருவாளா?

அய்யா பன்னியோட சவாரி செய்யறதைப் பாத்தாக்க, மாட்டான்னு தான் தோணுது!


இந்த வாலன்டைன்  டே! பிடி கத்திரிக்காய் டே என்றெல்லாம் கூத்தடிப்பதைப் பார்க்கும் போது எரிச்சல் வந்தது என்றால் சென்ற வருடம் ஸ்ரீராம் சேனா மங்களூரில் நடத்திய கூத்து மகா எரிச்சல்! கலாசாரக் காவலர் முத்தாலிக்குக்கு இளஞ்சிவப்பு ஜட்டி அனுப்பும் போராட்டத்தை கொஞ்சம் முத்திப்போன கேசுகள் நடத்தின கூத்தும் நினைவிருக்கலாம்!

இப்போது காங்கிரஸ் குரங்குகளின் முறை! கலாசாரக் காவலர் முத்தாலிக்  முகத்தில் கருப்பு மையைப் பூசி, வம்பை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

ஆக குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இருப்பது எது என்பதை உங்கள் சாய்சிற்கே விட்டு விடுகிறேன்  பின்னூட்டத்தில் உங்கள் சாய்ஸ் என்ன என்பதை மட்டும் சொல்லி விடுங்கள்!

திருமதி எம் ஏ சுசிலா, கல்லூரியில் தமிழ் பேராசிரியையாகப் பணியாற்றி ஒய்வு பெற்று, தற்சமயம் தில்லியில் வசித்து வருகிறார். சங்க இலக்கியத்தில் காதல் பற்றி அவரது பதிவு ஒன்றைப் படிக்க

தமிழ் இலக்கியங்களைக் கொஞ்சம் அதிகமாகப் புரட்டினால், களவொழுக்கம் என்பது அந்த நாளில் இருந்தே எப்போதும் கொஞ்சம் எல்லை மீறினதாகவே இருப்பதும் தெரிய வரும். சிலப்பதிகாரம்  சொல்லும் விவரங்கள்  ஒரு உதாரணம்.

என்னைப் பொறுத்தவரை, இன்றைய இளைய தலைமுறை, எல்லாவற்றையும் பார்த்து விட விரும்புகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு கலாசாரக் காவலர்கள், அல்லது பிங்க் கலர் ஜட்டி அனுப்புவோர் இயக்கம் கவலைப் படுகிற அளவுக்கு விபரீதமாக இல்லை என்பதும் உண்மை.

உண்மையிலேயே காதல் வயப்பட்டவர்கள், இந்த மாதிரி ஸ்டிமுலேஷன், உற்சாகப்படுத்தும் தினம் என்று எதுவுமில்லாமலேயே, எப்போதும்  போலக் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

வாலன்டைன் டே! தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள்,  தங்களுடைய வணிகத்தைப் பெருக்கிக் கொள்ள வழக்கம் போல ஜனங்களை முட்டாளடிக்கிற இன்னுமொரு தினம்! டிவி, செய்தித் தாட்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் எந்த வித்தியாசமுமே இல்லாத இன்னும் ஒரு நாள்! அவ்வளவுதான்!


இதுக்குப் போயி  இவ்வளவு அலட்டிக்கலாமா.............!