இதுக்குப் போயி இவ்வளவு அலட்டிக்கலாமா.............!

http://img51.imageshack.us/img51/1737/pigrider.gif



கையில் பீர் பாட்டிலோடு இந்த அய்யா பன்னி மேல சவாரி செய்கிற அழகைப் பார்த்தீர்களா?

மூன்று நாட்களுக்கு முன்னால் இதன் தொடுப்பைக் கொடுத்த போது, என்ன காரணமாக இருக்கும் என்று ரொம்ப யோசிக்கவில்லை! இன்றைக்கு, ஒரு படத்தைப் பார்த்ததும்,  இது தான் காரணமோ என்ற கேள்வி எழுந்தது!

அவனும் அவளும் சந்தித்தார்கள்.செலவு, தொப்பை இரண்டையும் குறைக்க  பீர் குடிப்பதை நிறுத்தி விடும்படி யோசனை சொன்னாள் அவள்.

 
அழகு படுத்திக் கொள்வதற்காக, மேக் அப் அது இது என்று ஆயிரம் ஆயிரமாக செலவு செய்கிறாயே அதை நிறுத்தினால் என்ன என்றான் அவன்.

 
உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போவதற்காகத் தானே அத்தனை மேக் அப் செய்துகொள்கிறேன் அதை ஏன் நிறுத்த வேண்டும் என்றால் அவள்!

 
அந்தக் கொடுமை தாங்க முடியாமல் தானே நான் பீர் குடிக்கவே ஆரம்பித்தேன் என்றானாம் அவன்!

அதற்கு அப்புறமும் அவள் வருவாளா, உடைந்து போன  அவன்  உள்ளத்தை ஓட்ட வைக்க அவள் வருவாளா?

அய்யா பன்னியோட சவாரி செய்யறதைப் பாத்தாக்க, மாட்டான்னு தான் தோணுது!


இந்த வாலன்டைன்  டே! பிடி கத்திரிக்காய் டே என்றெல்லாம் கூத்தடிப்பதைப் பார்க்கும் போது எரிச்சல் வந்தது என்றால் சென்ற வருடம் ஸ்ரீராம் சேனா மங்களூரில் நடத்திய கூத்து மகா எரிச்சல்! கலாசாரக் காவலர் முத்தாலிக்குக்கு இளஞ்சிவப்பு ஜட்டி அனுப்பும் போராட்டத்தை கொஞ்சம் முத்திப்போன கேசுகள் நடத்தின கூத்தும் நினைவிருக்கலாம்!

இப்போது காங்கிரஸ் குரங்குகளின் முறை! கலாசாரக் காவலர் முத்தாலிக்  முகத்தில் கருப்பு மையைப் பூசி, வம்பை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

ஆக குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இருப்பது எது என்பதை உங்கள் சாய்சிற்கே விட்டு விடுகிறேன்  பின்னூட்டத்தில் உங்கள் சாய்ஸ் என்ன என்பதை மட்டும் சொல்லி விடுங்கள்!

திருமதி எம் ஏ சுசிலா, கல்லூரியில் தமிழ் பேராசிரியையாகப் பணியாற்றி ஒய்வு பெற்று, தற்சமயம் தில்லியில் வசித்து வருகிறார். சங்க இலக்கியத்தில் காதல் பற்றி அவரது பதிவு ஒன்றைப் படிக்க

தமிழ் இலக்கியங்களைக் கொஞ்சம் அதிகமாகப் புரட்டினால், களவொழுக்கம் என்பது அந்த நாளில் இருந்தே எப்போதும் கொஞ்சம் எல்லை மீறினதாகவே இருப்பதும் தெரிய வரும். சிலப்பதிகாரம்  சொல்லும் விவரங்கள்  ஒரு உதாரணம்.

என்னைப் பொறுத்தவரை, இன்றைய இளைய தலைமுறை, எல்லாவற்றையும் பார்த்து விட விரும்புகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு கலாசாரக் காவலர்கள், அல்லது பிங்க் கலர் ஜட்டி அனுப்புவோர் இயக்கம் கவலைப் படுகிற அளவுக்கு விபரீதமாக இல்லை என்பதும் உண்மை.

உண்மையிலேயே காதல் வயப்பட்டவர்கள், இந்த மாதிரி ஸ்டிமுலேஷன், உற்சாகப்படுத்தும் தினம் என்று எதுவுமில்லாமலேயே, எப்போதும்  போலக் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

வாலன்டைன் டே! தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள்,  தங்களுடைய வணிகத்தைப் பெருக்கிக் கொள்ள வழக்கம் போல ஜனங்களை முட்டாளடிக்கிற இன்னுமொரு தினம்! டிவி, செய்தித் தாட்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் எந்த வித்தியாசமுமே இல்லாத இன்னும் ஒரு நாள்! அவ்வளவுதான்!


இதுக்குப் போயி  இவ்வளவு அலட்டிக்கலாமா.............!





 

8 comments:

  1. அவரவர்க்கு அவரவர் சாய்ஸ்...எல்லா நாளும் ஒரே நாள் சிலருக்கு
    நாளெல்லாம் நல்ல நாளே...

    ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள் வைத்துக் கொண்டாடி விட்டால் மறந்து போகாமல் இருக்கும்...

    நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே...

    ReplyDelete
  2. வாருங்கள் ஸ்ரீ ராம்!

    இடது௮ பக்கத்திலேயே, மெரீனா எழுதிய காதல் என்ன கத்தரிக்காயா கதைச் சுருக்கத்தைப் போட்டிருக்கிறேனே, பார்த்தீர்களா?

    காதல் என்பது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது.

    பாஸ்ட் புட் மாறி மாறி சுவைக்கக் கிளர்ச்சியூட்டும் ருசி சம்பந்தப்பட்டது.

    ReplyDelete
  3. இதெல்லாம் பாசத்தை காட்ட நேரமில்லாத வெளிநாட்டுக்காரர்கள் தனியாக அம்மா தினம் அப்பா தினம்
    என்று ஏற்படுத்தி அன்று (மட்டும் பொய்) பாசத்தை காட்டும் முறையிலேயே ஏற்படுத்தியதே காதலர் தினம் .
    மனதில் எப்போதும் பிரியம் இருந்தால் தினந்தோறு காதலர் தினமே.
    இன்று காதலை விட பொருளாதார கணக்குகளே முன்னுக்கு வருவதால் உண்மையான காதலை பார்பாது அரிதாகத்தான் உள்ளது.

    //உண்மையிலேயே காதல் வயப்பட்டவர்கள், இந்த மாதிரி ஸ்டிமுலேஷன், உற்சாகப்படுத்தும் தினம் என்று எதுவுமில்லாமலேயே, எப்போதும் போலக் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!//
    ரொம்ப சரி.


    நினைவிருக்கிறதா சார்.? திருமணத்திற்கு புறப்பட்டு வந்த ஒரு ஊரே கருகி எல்லோரும் ராசியில்லாத பெண் என்று ஊரை விட்டு தள்ளி வைத்தாலும் அதற்கு காரணமான அரசு, போக்குவரத்து கழகத்தின் சார்பில் வேலையும் பண உதவியும் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தபடி துளி கூட செய்யாவிட்டாலும் உறுதியாக அதே பெண்ணையே திருமணம் செய்த அந்த நபரே உண்மையான காதலர்.
    அதுபோல பல காதலர்கள் நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. என் பதிவைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாருங்கள் கைலாஷ்!

    மிக விரிவாகவே சிந்தித்திருக்கிறீர்கள்! அன்பை வெளிக் காட்டுவதில் எல்லா நாடுகளிலும் மனிதன் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறான்.

    வெளிப்படுத்துகிற விதம் தான், மதங்கள், கலாசாரம் என்பதற்கும் மேலாகத் தற்சமயம், வணிக நிறுவனங்களால் மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்ளப் படுகிற வியாபார உத்தியாக ஆனதில், குறுகிப்போய் அதன் வீரியத்தை இழந்து நிற்கிறது.

    காமம் என்பதும் காதலின் ஒரு வகை வெளிப்பாடுதான் என்றாலும், காமம் மட்டுமே காதலாகிவிடுவதில்லை.

    சிலப்பதிகாரம் முதற்கொண்டு, அகத்திணைப் பாடல்களைத் தமிழில் படித்தீர்களானால், இங்கே உள்ளூரிலேயே இப்போதிருப்பதை விடப் பெருங்கூத்து நடந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    என்ன, அன்றைக்கு இந்தக் கூத்துக்களை ஸ்பான்சர் செய்வதற்கு எந்த தனியார் தொலைக் காட்சி நிறுவனங்களும், செய்தி ஊடகங்களும் இல்லை, அவ்வளவுதான்!

    ReplyDelete
  6. வணக்கம் அம்மா,

    நேற்றைக்கு உங்கள் பதிவுக்குச் சுட்டி கொடுத்தபோது நானே உங்களுக்குத் தகவல் சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். தவிர, ப்ளாக்கரில் அவ்வப்போது நிகழும் விந்தைகளில் ஒன்றாக, உங்களுடைய பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. கருத்துரை இடுக என்ற வார்த்தைகளில் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து எழுதுவது இயலாமல் போனது.

    தவிர, உங்களுடைய இரண்டு பதிவுகளிலும் சங்க இலக்கியங்களில் காதல் மிக நளினமாக வெளிப்படுத்தப் பட்டிருப்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். அது முழுமையானது இல்லை என்பது, சிலப்பதிகாரத்தைப் படித்தாலே தெரிய வரும் என்பது எனது கருத்தாக இருக்கிறது.

    இன்னும் சில எண்ணங்களை இது விஷயமாகப் பதிவெழுத இருப்பதாக உங்கள் மாணவிக்குத் தகவல் சொல்லியிருப்பதையும் கவனித்தேன்.

    ReplyDelete
  7. everything motivate , promoted as the business point only.

    now voting also converted into business.

    only our will power to save from like these business weapons

    ReplyDelete
  8. நல்லா எழுதி இருக்கீங்க. பீர்,அழகு சாதனம் ஒப்பீடு அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!