வெட்கம் கெட்டவர்கள்!



வெட்கம் கெட்டவர்கள்! 

பழியைச் சுமத்தி வெளியே போ என
இப்படியும் சொல்வார்களாம்!
செத்துப் போனபின் முக்காடுபோட்டு
ஒப்பாரி வைக்கவும் வருவார்களாம்!
தோழருக்கு அஞ்சலி! மூன்று நாள் துக்கம்!
கொடிகள் அரைக் கம்பத்தில் இறக்கி வை!
வாழ்க்கை முழுவதும் செங் கொடிக்கே என
வாழ்ந்தது எல்லாம் வீண் தானோ?

உழைத்தது எல்லாம் வீண் தானோ? விழலுக்கிறைத்த நீர் தானோ?
உழைப்பவன் முகத்தில் மலர்ச்சியைக் கண்டிடச்
சங்கமும் வேண்டும், அரசியலுக்குச் செங்கொடி வேண்டும்
உழைப்பவர் கைகளில் ஆட்சியும் மாட்சியும் பெறுவதற்கே!
அதுவரை  ஓயுதல் செய்யோம் தளர்ந்து தலை சாயுதல் செய்யோமென
சொந்த நலன்களை  ஒதுக்கிவைத்து ஊருக்குழைக்க முன்வந்தால்........

பழியைச் சுமத்தி வெளியே போ என
இப்படியும் சொல்வார்களாம்!
செத்துப் போனபின் முக்காடுபோட்டு
ஒப்பாரி வைக்கவும் வருவார்களாம்!

கம்யூனிசத்தை தூக்கிப் பிடிக்க களையெடுப்பு, கட்சிக்குள் சீரமைப்பு!
கம்யூனிசமே செத்தாலும், அழித்தல் ஒழித்தல் நிற்காது! இதென்ன
இங்கே தலையெழுத்து? பழியைச் சுமத்திக் குழிக்குள் புதைத்து,
தவற்றைத் திருத்தக் குழியைத் தோண்டிப் பிணமாய்ப் போனபின்  புனிதர் பட்டம்!
உலகம் எங்கிலும்  பொதுவாய்க் காணும்
காம்ரேடுகளின்   திருத்தும் வாதம்! களையெடுப்பு!

யாருக்காக? இங்கே, இத்தனை கருவறுப்பும் எவருக்காக? எதற்காக?

சுதந்திர அடிமைகள் போர் தொடுத்தால் இதுதான்  வருமா? இன்னும் வருமா?
கதைக்குப் பின்னால் காரணங்கள்! அதுவும் மெல்ல வெளி வருமா?
கதையாய்ச்  சொல்லத் தேவையில்லை! சிலப்பதிகாரம் தெரிந்தது தான்!
கோவலன் செய்த தவறுக்கு கண்ணகிகள் அவனை  எரித்ததில்லை!
காவலனோ நீ என  ஊரை எரித்தவள் கதை  தெரியும்! சிலை தெரியும்!

வெட்கம் கெட்டவர்கள்!

சினிமாக் கூத்திலும் பெருங்கூத்தாய்,
ஊர்வலம் நடத்தும், கொடி தாழ்த்தும்!
அஞ்சலி செலுத்துகிறார்களாம்!!

என்னுடைய தோழனுக்கு..........
நான் அஞ்சலி செலுத்தப் போவதில்லை!

அஞ்சலி செலுத்தி அப்புறம் மறக்கப் போவதில்லை!
தோழமை என்பது நேசிப்பதில்.... புரிந்து கொள்வதில்!
விமரிசனம் என்பது திருத்துவதற்காகத் தான்!
ஆளையே  தீர்ப்பதாக ஆனதும்  இந்தக் கட்சியில் மட்டும் தான்!

இதையும் கொஞ்சம் பாருங்க!

பழியும் சொல்வார்கள்.....அப்புறம் இதையும் சொல்வார்கள்!




Many said the Varadarajan episode had showed that the rectification drive, which started towards the end of last year to root out ‘non-Communist’ trends that had crept into the party, should be undertaken with great care. 

“Rectification is becoming elimination. The idea is to point out errors and give comrades a chance to correct themselves. We should be helping them rather than washing our hands of the matter after having taking action,” said a Politburo member.




14 comments:

  1. எனது வருத்தங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்!

    ReplyDelete
  2. வருத்தம் பகிர்வதில் தோழமை பார்க்கக் கூடாது. உங்கள் தூக்கம் ...எல்லாருடையது .வருந்துகிறோம்.

    ReplyDelete
  3. உங்கள் உள்ளத்து கொதிப்பு புரிகிறது.
    மானமுள்ள தமிழன் என்று கவிதையிலேயே காட்டியிருக்கிறீங்க.
    நல்ல கவிதை.பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  4. @விடிவெள்ளி!

    ஒரே பின்னூட்டத்தை ஏழு தரம் அனுப்பும் அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டிருக்கிறீர்கள். பதிவுக்குப் பின்னால் உள்ள வலியை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது!

    உங்கள் பிரச்சினை உங்களுக்கு....!

    நேசமுள்ள மனிதன், தோழமையோடு இருக்கும் இந்தியன் என்று சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?

    ReplyDelete
  5. முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில் இந்த மரணம் உங்களை பெரிதும் பாதித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. உலகத்தின் நன்மையைக் கோருவதில், அதன் அமைதியில், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் இன்றைக்கும் நான் ஒரு கம்யூனிஸ்டாகவே தான் உணருகிறேன்.

    முந்தின பதிவின் பின்னூட்டத்தில் சொன்னபடி, தோழரின் மரணச் செய்திகூட என்னைப் பாதிக்கவில்லை.

    அதையும் தாண்டி நான் கேள்விப்படுகிற சில விஷயங்கள்...!

    இங்கே தோழர் மோகன் இறந்த போது, நான் இப்படிப் பதிவு எதுவும் எழுதவில்லையே! முன்னாள் கம்யூனிஸ்ட் என்பதை விட, இப்போது நடந்ததில் இருந்த சில அம்சங்கள் என்னை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

    இதுவும் கடந்துபோகும்.

    ReplyDelete
  7. //முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில்//
    அது என்னா முன்னாள் கம்யூனிஸ்ட், இந்நாள் கம்யூனிஸ்ட்?
    கம்யூனிஸத்தை மிகச்சரியாக உள்வாங்கியவர்கள் சாகும்வரை கம்யூனிஸ்டாகத்தான் இருப்பார்கள்.
    எதயாச்சும் உளரவேண்டியது..

    Tts a heart-felt ode to comrade varatharajan.

    ReplyDelete
  8. /அது என்னா முன்னாள் கம்யூனிஸ்ட், இந்நாள் கம்யூனிஸ்ட்?/

    கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலை என்று சொல்லிக் கொள்பவர்களிலேயே பலர் கம்யூனிசத்தின் அடிப்படைக் கூறுகளை உள்வாங்கிக் கொள்ளாமல் இருப்பதை நானறிவேன்.

    உங்களுடைய அபிமானம் புரிந்தாலும், உளறல், உளற வேண்டியது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துமுன் கொஞ்சம் யோசனை செய்து எழுதுவது நல்லது என்றே எனக்குப் படுகிறது.

    ReplyDelete
  9. //உங்களுடைய அபிமானம் புரிந்தாலும், உளறல், உளற வேண்டியது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துமுன் கொஞ்சம் யோசனை செய்து எழுதுவது நல்லது என்றே எனக்குப் படுகிறது. //

    ஆமாம்!
    அந்த உரிமை காப்பிரைட் செய்யப்பட்டிருக்கிறது!

    ReplyDelete
  10. வால்ஸ்! காப்பிரைட்ஸ் என்னிடமில்லை, உங்களிடமிருக்கிறதா?

    இந்தப் பதிவில் கூடவா அரசியல்?

    கோவி கண்ணனின் வார்த்தைகளை அவர் விமரிசித்த விதத்தை,நான் ஆதரிக்கவில்லை.

    கருத்தை வெளிப்படுத்துவதில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

    ReplyDelete
  11. //வால்ஸ்! காப்பிரைட்ஸ் என்னிடமில்லை, உங்களிடமிருக்கிறதா?//

    எங்கிட்டயும் இல்லை!
    யாரிடமிருக்கோ, அவுங்க மட்டும் உளரலாம்!

    ************

    பதிவை நகைச்சுவை போக்கில் கொண்டுபோகும் நோக்கம் எதுவுமில்லை!

    முதல் வருத்தமே என்னுடயது தான்!

    கோவி.கண்ணனாகட்டும், மயில்ராவணனாகட்டும் அவர்களது அரசியல் கோட்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்!, இதோ வேறு ஒரு தோழர் இறந்து மற்றவர்கள் இதே கேள்வியை எழுதிப்பினால் தோழர் வரதராஜன் அவர்களே கேள்விகளாளே வேள்வி பிறக்கும் என்பார்!

    ReplyDelete
  12. //மயில்ராவணன் said...

    //முன்னாள் கம்யூனிஸ்ட் என்ற முறையில்//
    அது என்னா முன்னாள் கம்யூனிஸ்ட், இந்நாள் கம்யூனிஸ்ட்?
    கம்யூனிஸத்தை மிகச்சரியாக உள்வாங்கியவர்கள் சாகும்வரை கம்யூனிஸ்டாகத்தான் இருப்பார்கள்.
    எதயாச்சும் உளரவேண்டியது..

    Tts a heart-felt ode to comrade varatharajan.//

    மயில்ராவணன்,
    உளரல் அளக்கும் மீட்டர் கைவசம் உள்ளதோ ? அதுவும் தப்பாகத்தானே காட்டுது.


    கிருஷ்ணமூர்த்தி ஐயா தன்னை முன்பு கம்யூனிச இயக்கத்திலும் தொழிற்சங்கத்தில் இருந்தவர் என்று குறிப்பிட்டு இருந்தார், அதனால் தான் முன்னாள் கம்யூனிஸ்ட் என்றேன். இப்போது கம்யூனிசத்தை அவர் பேசுவது இல்லை. நான் எழுதிய முன்னாளுக்கு விளக்கம் இது தான். உங்க ஓட்டை மீட்டரை மாற்றுங்கள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!