சீழ்த்தலைச் சாத்தனார் அல்லது கருத்துச் சொல்ல வாங்க!


பதிவர் வட்டம், பதிவர் சதுரம், முக்கோணம் என்றெல்லாம் நிறையப் படித்திருப்பீர்கள்! இப்போது ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு என்று பதிவர் கூட்டங்கள் நடந்து கொண்டிருப்பதாகத்தெரிகிறது!
கொஞ்சம்பேர், பதிவர் சந்திப்பென்றால், எங்கு நடந்தாலும் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு தவறாமல் ஆஜராகி விடுவதுமுண்டு!

எப்படித்தான்  பதிவர்கள்  எல்லாம் கூடித் தேர் இழுக்கிறார்களோ அல்லது தெருவோரத்து டீக்கடையில், ஆறிப்போன மசால்வடையும் டீயும் குடித்து விட்டு பதிவர் கடமையைச் செய்கிறார்களோ எனக்குப் புரிவதில்லை, அதிகப் பரிச்சயமுமில்லை!


தமிழோ, ஆங்கிலமோ, உலகமெங்கும் பதிவர்கள் சில விஷயங்களில் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள் போல இருக்கிறது! இருட்டுச் சந்தில் கூப்பிட்டு மூக்கில் குத்துவிடுவதை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்! அது தலைநகரப் பதிவர்களின் தனி ஆட்டை! 

மேலே உள்ள படம் சொல்லும் கதையின் நீதியாக என்ன புரிந்து கொண்டீர்கள் என்று அருள் கூர்ந்து சொல்ல முடியுமானால், தொடர்ந்து பேசுவோம்  நண்பர்களே!

பேசுவோம் என்பதை மறுபடி அழுத்தியே சொல்கிறேன்! மூக்கில் குத்து வாங்குகிற வயசெல்லாம் தாண்டி விட்டது!

வால்பையன் சொல்கிற, குத்து விடுகிற வயசும் கூட  இல்லை!


 


15 comments:

 1. அது இருக்கட்டும்...மதுரையில் 31 /1 அன்று அமெரிக்கன் கல்லூரியில் நடந்த சந்திப்புக்கு போனீர்களா?

  ReplyDelete
 2. சார்,
  இடுகை என்பது மனதில் தோன்றுவதை சொல்வது. பல தடவை முரணான கருத்து வேறுபாடுகள் ஆக்க பூர்வமான முடிவில் செல்வதில்லை. இந்தியர்கள் பொதுவாக நான் சமுதாயத்திற்கு அதை செய்தேன், இதை செய்தேன் என்று சொல்லிக்கொள்வாகள். ஆனால் நடைமுறையில் அப்படி இருந்தால் வீடு, நாடு என்று மாற்றம் ஏற்பட்டு பல பிரச்சனைகள் ஓய்ந்திருக்கும். ஓய்ந்ததா ? இன்னும் நாலாயிரம் வருடம் ஆகும்.

  ReplyDelete
 3. சில நல்ல விஷயங்களும் பதிவர்கள் மூலம் நடக்கத்தான் செய்கிறது சார்.

  இந்த லின்க்கை கொஞ்சம் பாருங்களேன்

  http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/02/blog-post_03.html

  ReplyDelete
 4. //கொஞ்சம்பேர், பதிவர் சந்திப்பென்றால், எங்கு நடந்தாலும் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு தவறாமல் ஆஜராகி விடுவதுமுண்டு!//

  கொஞ்ச பேரெல்லாம் கிடையாது! நான் மட்டும் தான் அப்படி!
  செய்யுறதுக்கு வேலை ஒண்ணும் இல்லை, பதிவில் கருத்து சொல்லும் அளவுக்கு வயதும் இல்லை, அப்படியே(யார்) சொன்னாலும் ஒருபய மதிக்கப்போறதில்லை. இப்படி கூட்டதிற்கு போனா பொழுது போன மாதிரியும் இருக்கும், வார வேலை இறுக்கமும் கொஞ்சம் குறையும், அதெல்லாம் வயசானவங்களுக்கு புரியாது சார்!
  முக்கியமா ரிட்டயர்டு ஆனவங்களுக்கு!

  ReplyDelete
 5. //பதிவர்கள் எல்லாம் கூடித் தேர் இழுக்கிறார்களோ, அல்லது தெருவோரத்து டீக்கடையில், ஆறிப்போன மசால்வடையும் டீயும் குடித்து விட்டு, பதிவர் கடமையைச் செய்கிறார்களோ எனக்கு, அதிகப் பரிச்சயமில்லை!//


  அடடே, உங்களுக்கு பரிட்சியமில்லையா!? எங்களுக்கு மூணாங்கிளாஸ் படிக்கும் போதே சொல்லி கொடுத்துட்டாங்க!

  ReplyDelete
 6. //மேலே உள்ள படம் சொல்லும் கதையின் நீதியாக என்ன புரிந்து கொண்டீர்கள் என்று அருள் கூர்ந்து சொல்ல முடியுமானால், தொடர்ந்து பேசுவோம் நண்பர்களே!//

  தமிழில் யாராவது மொழி பெயர்ந்து சொன்னால் தன்யனாவேன்!

  ReplyDelete
 7. //மூக்கில் குத்து வாங்குகிற வயசெல்லாம் தாண்டி விட்டது!//

  குத்து விடும் வயசு!?

  ReplyDelete
 8. ஸ்ரீராம்!

  எனக்குத் தகவல் தெரிந்திருந்து, அங்கே போயிருந்தேன் என்றால், நிச்சயமாக எனது பக்கங்களில் ஒரு குறிப்பாவது இருந்திருக்கும்.

  தகவலுமில்லை! போகவுமில்லை!

  ReplyDelete
 9. பாகற்காய் என்று கூப்பிட சங்கடமாக இருக்கிறது நண்பரே! ஏற்கெனெவே இதை ஒரு பதில் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேனே!

  பதிவுகளைப் பற்றிய பல பார்வைகள்இருந்தாலும், நான் முரண்பாடுகளைத் தொட்டுச் சொல்லவில்லை. முந்தைய பதிவில் ஒரு பின்னூட்டம், அமெரிக்க-இந்திய தகவல் தொழில் நுட்ப வேலை செய்கிறவர்களுக்கு ஒரு நிமிடத்தைய வருமானத்தைப் பற்றிய கணக்கு தவறு என்று மொட்டையாக இருந்தது!

  கொஞ்சம் யோசிக்கக் கூடத் தயங்குகிறார்கள்! ஆனால் இது தப்பு, அது தப்பு என்று சொல்வதற்குக் கூடத் தயங்குவதில்லை! அதற்கும் முந்தைய பதிவுக்கு, ஜெயகாந்தனைத் தொட்டு எழுதிய பதிவில், சென்னை அல்லது சுற்றுப் புறத்தில் இருந்து, ஒருவர் "போடா லூசுக்....." என்று பின்னூட்டத்தை எழுதியிருந்தார்.

  ஒரு விஷயத்தை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ தவறே இல்லை. கண்மூடித்தனமான அபிமானங்களை எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக இன்னொருவருக்கும் அதே போல இருக்க வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.

  இந்த கிராபிக் படத்தை வைத்து, அதற்கு சீத்தலை/சீழ்த்தலைச் சாத்தானார் என்று தலைப்பு வைத்ததற்குக் காரணமே, எங்கே தப்புக் கண்டுபிடிப்போம், எங்கே சந்து கிடைத்தால் சொருகுவோம் என்று அலையும், மனித இயல்பின் கீழ்த்தரமான உணர்வு நிலையைப் பற்றி!

  வேறு உள்குத்து, வெளிக் குத்து சைடு குத்து, மூக்கில் குத்து எதுவுமே இல்லை!

  திரட்டியில் இணைப்பதற்கு முன்னாலேயே நான்கு நண்பர்களிடமிருந்து கருத்து வந்திருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாகத் தான் இருக்கிறது!

  ஆனாலும், படம் பார்த்து, மனதில் என்ன தோன்றியது என்ற கேள்விக்கு இன்னும் யாரும் பதில் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை!

  ReplyDelete
 10. வாருங்கள் நவாஸுதீன்!

  ஊருக்கு நலமாக வந்து சேர்ந்தீர்களா?

  நீங்கள் கொடுத்த தொடுப்பைப் பார்த்தேன். ஒரு முயற்சி ஆரம்பமாகி இருக்கிறது என்ற அளவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லத் தான் வேண்டும்.

  எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதைப் பார்வையாளர்கள், கலந்துகொண்டவர்களிடமிருந்து திரட்டியிருந்தால், தகவல் இன்னமும் முழுமையாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 11. வால்ஸ்! கொஞ்சப் பேர் கிடையாது, நான் மட்டும்தான் அப்படி என்று மொத்தக் குத்தகை அல்லது ஆக்கிரமிப்பு செய்கிறீர்களே, இது நியாயமா?

  வேலையில்லை, கருத்துச் சொல்ல வயசு இல்லை, சொன்னாலும் ஒரு பய மதிக்கப் போவதில்லை, ஆனாலும் இந்த மாதிரிக் கூட்டத்துக்குப் போனாப் பொழுது போகும், இறுக்கம் குறையும்!

  என்ன இது! சரக்கு இல்லா வால் மாதிரி நீண்டுகொண்டே போகிறது

  :-))

  ReplyDelete
 12. //சரக்கு இல்லா வால் மாதிரி நீண்டுகொண்டே போகிறது //

  இரண்டாவது படம் ரிலீஸாக இருப்பதால் சரக்குக்கு தடா!

  ReplyDelete
 13. /* http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/02/blog-post_03.html */

  நம் இளைய தலைமுறைக்கு நன்மை வந்தால் எல்லா நல்ல செயல்களும் வரவேற்கத்தக்கவை தான்.

  நானும் பெயரை வைத்தே இடுகையை சுற்றிவர ஆசை. However it will take little bit time (=2 weeks)

  ReplyDelete
 14. /*ஆனாலும், படம் பார்த்து, மனதில் என்ன தோன்றியது என்ற கேள்விக்கு இன்னும் யாரும் பதில் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை!*/
  என் பதில் : உலகில் உள்ள எந்த நாட்டினர் ஆனாலும் "தான் தப்பு கண்டுபிடித்து விட்டேன் அல்லது சொல்லியது தவறு" என்று நினைத்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தான் அதிகம். மேலும் "நாம் என்ன நேரிலா சொல்கிறோம், யாரோ எவருக்காகவோ எதையோ சொல்வோம்" என்று சொல்வதுதான்.

  ReplyDelete
 15. நண்பர் பாகற்காய் சொலவதுதான் எனக்கும் சரி என்று தோன்றுகிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!