வருடந்தோறும் அரசு செய்யும் வெட்டி வேலை! பட்ஜெட்!

முன்னாள் பொருளாதார வித்தகர்,சால்வை அழகர் பானா சீனா  முதன் முதலாக நிதியமைச்சரான போது, அறிவித்த பட்ஜெட் தேனொழுக இருந்தது! 


போதாக்குறைக்கு பக்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றைச் சொல்லித் தமிழை பட்ஜெட் காகித அளவுக்கு உயர்த்திய பெருமையை நாடே அன்றைக்கு ஆவென்று வாய் பிளந்து அதிசயித்துப் பார்த்ததென்னவோ உண்மை!மிகச் சிறந்த பட்ஜெட் என்று சுற்றியிருந்த கூட்டாளிகள்  எல்லாம்  குலவை இட்டார்கள்! கொஞ்ச நாளிலேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்து, உண்மையில் சரக்கு ஒன்றும் இல்லை  என்பது அம்பலமானது!

தற்சமய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை! பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்து கொண்டிருக்கும்போதே இது சும்மாக் கண்துடைப்புத்தான் என்பது வெளிப்பட ஆரம்பித்தது! பிறக்கும் போதே வெள்ளி மூக்குடன்! என்ன செய்வது? பரிகாரமாக, இவரும்  ஏதோஒரு கலரில் சால்வை போர்த்திக் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தால், சரியாகப் போயிருக்குமோ?

நடுத்தர மக்களிலேயே மேல்தட்டு நடுத்தர மக்களுக்கு, வருமான வரி விகிதங்களில் அறிவித்திருக்கிற சலுகை குறைந்த பட்சமாக இருபதாயிரமும் அதிக பட்சமாக ஐம்பதாயிரத்தை ஒட்டியும் இருக்கும் என்பது உண்மைதான்! ஆனால், அந்த அடுக்கில் எத்தனை ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகை பயனுள்ளதாக இருக்கும் என்ற உண்மையான புள்ளி விவரத்தை அரசு தரவில்லை. ஆனாலும், இந்த வருமான வரி உச்சவரம்பில் உத்தேசித்திருக்கும் மாற்றம் இடைச் செருகலாக மட்டும் இருப்பது கொஞ்சம் எல்லோருக்குமே பயன் தரக்கூடியது என்ற மாயை நன்றாகத் தூவப் பட்டிருக்கிறது!

ஆனால், எரிபொருள் விலை உயர்வு விலைவாசியை இன்னும் அதிகமாக எகிறச் செய்யும் என்பது தெரிந்துமே பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரிக்கப் பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி என்று மூச்சுக்கு மூச்சு முழங்குகிறார்களே, அந்த சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இன்னமும் அதிக சுமையை நிதியமைச்சர் ஏற்றி வைத்திருக்கிறார். பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. நிதி வேறெங்கோ ஒதுங்கிவிடுவதைத் தவிர, ஒதுக்கப் பட்ட நிதி குறிப்பிட்ட காரியத்திற்காகத் திறமையாகப் பயன்படுத்தப் பட்டது, இன்னின்ன வேலைகள் திட்டமிடப்பட்டு, இன்னின்ன கால வரையறைக்குள் முடிக்கப் பட்டது என்பது இந்த தேசத்தில் நடந்ததே இல்லை.

அப்புறம் எதற்காக வருடம் தவறாமல் இந்த வெட்டி வேலை ? பட்ஜெட் என்பதே பள்ளத்தை மேலும் படு பள்ளமாக ஆக்குவதற்காகத்  தானா? திட்டமிடுவதிலிருந்து, நிறைவேற்றி, அதைக் கண்காணித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார் செய்வதற்கு துப்பில்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதற்காக? யாருக்காக?


கொடுக்கிற மாதிரிக்கொடுத்து, இருப்பதையும் எடுத்துக் கொள்கிற பட்ஜெட்!    படத்துக்கு நன்றி பிசினஸ் லைன்

பட்ஜெட் குறித்த உங்களது கருத்தை இங்கே பதிவு செய்யுங்களேன்! 

 

6 comments:

 1. பட்ஜெட் என்பது என்றைக்குமே பற்றாக்குறையை , இல்லாத ஒன்றைப் பங்கு வைக்கும் மாயக்கூத்துதான்.

  இல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்பது இங்கு பேச்சு, எழுத்து வடிவில் மட்டுமே பொருந்துகிறது.

  உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்

  டெக்‌ஷங்கர்

  ReplyDelete
 2. they want to american style govt.
  they want money from people . thats all.

  no long planing.doing drama of aam admi bugdet in every year.

  people should do themself.dont exprct from govt. but people to pay tax for everything.- this is mantra.
  this mantra given by WB, IMF,etc.

  ReplyDelete
 3. have you read yesterday dinamani editorial?

  1. what is the your opinion on that?

  2. suppose everything if controlled by MANCHAOTA groups- they able to feed all the peoples?

  3. IN FUTURE ANY GOVT ( BECAUSE OF PUBLIC PRESSURE) ABLE TO REMOVE MANCHANTO LIKE COMPANIES?
  WTO, GOTS WILL ALLOW TO DO ?

  ReplyDelete
 4. திரு பாலு!

  தினமணி தலையங்கத்தைப் படித்தேன். அதை அப்படியே உங்கள் பதிவிலும் பார்த்து விட்டுத் தான் ஒரு பதிலும் அங்கே எழுதினேன்.

  மின்தமிழ் கூகிள் வலைக் குழுமங்களில், இந்தத் தலையங்கத்தை வைத்து ஒரு சுவாரசியமான விவாத இழை ஒன்று தொடங்கியிருக்கிறது.

  எப்போதும் போல, அங்கேயும் சம்பந்தமில்லாததைப் பேசிக் குறுக்குச் சால் ஓட்டும் வேலையையும் பார்த்து ரசித்தேன்.

  வளர்ச்சியின் போக்கு சூறாவளியாகச் சுற்றிக் கொள்ளும்போது, சில விஷயங்களில் இருந்து முழுமையாகத் தப்பித்துக் கொள்ள முடியாதுதான்! ஆனால், முன்னெச்சரிக்கையோடு இருந்தால் சேதத்தைத் தவிர்க்கலாம், கொஞ்சம் புத்தி இருந்தால் அதையே நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தியும் கொள்ளலாம்.

  அமெரிக்கப் பிரஷர் அது இது என்று பேசிக் கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுபோலத் தான்!

  ஆக முதல் கேள்வி, நமக்கு சொந்தமாக அறிவு இருக்கிறதா? முதுகெலும்பு இருக்கிறதா?

  அரசியல்வாதிகளுக்கு அது வேண்டாம், சரி! பாதிக்கப் படும் ஜனங்களும் வேண்டாம் எட்று வாளாவிருந்தால், வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

  ReplyDelete
 5. budget should be DEFICIT-"parraakurai".that is basic priciple of finance to be grown econamy.

  ReplyDelete
 6. வாருங்கள் KASBABY

  பட்ஜெட் என்றால் அது பற்றாக்குறையில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமா என்ன?

  கீனீஷியன் எகனாமிக்ஸ் தியரி ஒரு எல்லை வரைக்கும் தான் வேலை செய்யும்! பலூனை ஊதி ஊதி பெரிதாக்கிக் கொண்டே போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது எது வரை தாங்கும்? அது மாதிரித் தான், கடனை வளர்த்துப் பொருளாதாரத்தை வளர்ப்பது, பற்றாக்குறையை அதிகரித்து பட்ஜெட் போடுவது எல்லாம்!

  இங்கே பட்ஜெட், ஒரு நல்ல காமெடி ஷோ!

  அவ்வளவுதான்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!