ஐ பாடும் கற்பாறையும்! ஒரு திறனாய்வு! அட நான் இல்லீங்கோ!

வருடக் கடைசி, புது வருடம் என்று வந்து விட்டால் ஆப்பிள் நிறுவனம் எதோ ஒரு புதிய தயாரிப்பைச் சந்தைக்குக் கொண்டு வந்து விடும்! அந்தத் தயாரிப்பைப் பற்றியே, அடுத்து வரும் சில வாரங்கள், சமயங்களில் மாதங்கள் கூட அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது, பதிவுகளில் பார்க்க முடிகிற விஷயம். அந்த அளவுக்கு, ஆப்பிள்  பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை, வெறி பிடித்த ரசிகர்களாகவே ஆக்கி வைத்திருப்பது  அநேகமாகத் தெரிந்த விஷயமாக இருக்கலாம்.

அதே மாதிரி, ஆப்பிள் தயாரிப்பைக் கொஞ்சம் புகைச்சலுடன், அல்லது நக்கலடித்து வரும் பதிவுகள், விமரிசனங்கள் எண்ணிக்கையும் அதிகம் தான்!

ஆப்பிள் தற்சமயம் அறிமுகப் படுத்தியிருக்கும் ஐ பாட் டாப்லெட்  தான் இப்போது அனல் கக்கும் விவாதக் களமாக இருக்கிறது.


ஒரு கற்பாறை, ஆப்பிள் ஐ பாட் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையை இங்கே கிராபிக் வடிவத்தில் நக்கலடித்திருப்பதைப் பாருங்கள்!


அதை விடப் பின்னூட்டமாக
இங்கே கூக்கூ என்ற பெயரில் இப்படி எழுதியதையும் சேர்த்துப் படித்தால்........

என்னுடைய வீட்டுக் கதவின் மீது வீசியடித்தால் உடையாதது!
 

கற்பாறை- ஆமாம்!  ஐ பாட் இல்லை!
 

என்னுடைய புட்டத்தில் வைத்துக் கொள்ளும்போது பொருந்திக் கொள்ளும்!
 

கற்பாறை- இல்லை! ஐ பாட் ஆமாம்!
 

அட, ஐபாட்  ஏதோ ஒன்றில் ஜெயிக்கிற மாதிரி இருக்கிறதே!

ஒரு மாறுதலுக்காக வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட நையாண்டி!

 

1 comment:

  1. Anti Virus: Stone - Not Required
    iPad - Required

    ஹா ஹா ஹா ஏதோ என்னால முடிஞ்சது

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!