சின்னச் சின்ன செய்திகள்! கொஞ்சம் சிரிக்க! கொஞ்சம் கொதிக்க! இங்கே பின்னூட்ட வம்புகள் வாங்கப்படும்!

போதை தலைக்கேறினால் இதுவும்  நடக்கும்! இன்னும் கூட நடக்கும்!

இந்த வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்! ஒன்றரை நிமிடங்கள் தான், அம்மணி போதையில் சாய்ந்திருக்கிறார். நாய் என்னமாக அம்மணிக்கு பிரெஞ்சு கிஸ் கொடுக்கிறது! 


பிரெஞ்சு கிஸ் என்றால் என்னவென்று சகலகலா டாக்டர் டாக்டர் கமலஹாசன் உபயத்தில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்! 

ஆமாம், அதுவே தான்! செட் அப் வீடியோ என்று வைத்துக் கொண்டால் கூட, அம்மணியை விட சரக்கு நாற்றம், கெட்ட வாடை இல்லாமல்   நன்றாக இருந்திருக்கும் போல இருக்கிறது!

 


போதையில் உருண்டு புரண்டால் நாய் நக்குவது கூடத்  தெரியாது தான்!
******

தெளிவாகவே, திட்டமிட்டு, தரக் கட்டுப் பாட்டுடன் செயல் பட்டால் கூட அங்கேயும் ஏதாவது ஒரு குற்றம், கோளாறு எப்படியோ வந்து புகுந்து கொள்கிறதே! என்னவென்று பார்ப்போம்! 

Toyota Production System, The Toyota way என்றெல்லாம் உற்பத்தித் திறன், ஒப்பிட முடியாத அளவுக்கு உயர் தரம், தொடர்ந்து லாபம் ஈட்டுகிற நிறுவனமாக இருந்த டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. 

2008  இல் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை முந்தி உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்த டொயோடா, இன்னமும் முதல் இடத்தில் இருந்தாலுமே கூட, சமீபத்தில் ஆக்சலரேடர் பெடல்களில் இருந்த குறைபாடு காரணமாக, 436000 கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது. இது வரை மொத்தம் எண்பது லட்சம்  கார்கள், காஸ் பெடல் கோளாறு காரணமாகத் திருப்பியழைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.இந்த ஒரு முடிவால் மட்டும்  நானூறு கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பைச் சந்திக்கவும் நேரிட்டிருக்கிறது.

டொயோடா உற்பத்தி முறையின், மிக முக்கியமான அம்சமே, உற்பத்தி நிலையிலேயே, குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டு, குறை நிவர்த்தி செய்யப்பட பின்பே, கடுமையான தரக் கட்டுப் பாட்டுச் சோதனைகளைத் தாண்டி, கார் வெளியே வரும் என்பது தான்.  

ஊழியர்களின்  பங்கை, வேறெந்த முறையையும் விட அதிகமாகப் பயன்படுத்தும், அற்புதமான உற்பத்தி முறையாக, மேலாண்மைத் துறையில் ஒரு நிர்வாகம், அதன் அங்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணமாக, டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் இன்றைக்கும் இருக்கிறது

இன்றைக்கும் கூட நடைமுறையில்,டொயோடா உற்பத்திமுறை  முன்னுதாரணத்தில் எந்தப் பிழையும் இருப்பதாகத் தெரியவில்லை.
மனித உழைப்பும், தொழில் நுட்பமும் சேரும்போது, வளர்ச்சி இருப்பது உண்மை தான்! ஆனால், நல்ல நிறுவனங்களும், நடைமுறைகளுமே தன்னைப் புதுப்பித்துக் கொண்டாக வேண்டிய அவசியத்தையும், இதுவே போதும் இதற்கு மேல் தரத்தை எட்ட முடியாது என்ற தேக்கம் (complacency) ஏற்படுவது எந்த நிலையிலுமே சாத்தியம் என்பதையே  இந்த செய்தி வலியுறுத்துவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

 ******

லோகல் அரசியலைப் பார்த்துச் சலித்துப் போய்விட்டதே என்கிறீர்களா! வாருங்கள் கொஞ்சம் அமெரிக்க அரசியலையும் பார்ப்போம்!
  


நாஷ்வில் என்ற இடத்தில் ரிபபிளிகன் கட்சி ஒரு தேநீர் விருந்து மாதிரியான மாநாட்டை நடத்தியது! அலாஸ்கா கவர்னராக இருந்து அந்தக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்ற சாரா பாலின், அதிபர் ஒபாமா பேசும்போது டெலி ப்ராம்ப்டரைப் பயன் படுத்திப்  பேசுகிறார் என்று குற்றம் சொல்லி  அப்ளாஸ் வாங்கினார்.  அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

அம்மணி அப்படி நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரிப் பேசியதில், 2000 ரிபப்ளிகன் கட்சியினரிடம் கருத்துக்  கணிப்பை நடத்திய போது 53 சதவீதம் பேர் ஒபாமாவை விட பாலின் ஜனாதிபதியாக இருக்கத் தகுதி உள்ளவர் என்று சொன்னார்களாம்! ஒபாமாவைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று 39 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்தார்களாம்!  

நினைவு வைத்துக் கொள்ளுங்கள், கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது எதிர்க் கட்சியாகிப் போனவர்களிடம்!


கழகங்களின் கலாசாரம் அமெரிக்கா வரை  பரவியிருக்கிறது போல! இதற்காகவே இன்னொரு பாராட்டு விழா நடத்தினாலும் கூடத் தப்பே இல்லை!

இந்த ரிபப்ளிக் கழகக் கண்மணிகளிடம் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் சூடாக இடம் பெற்றிருந்த கேள்விகள் கடைசி இரண்டைப் பாருங்கள்! 


** கருத்தடை சாதனங்கள் தடை செய்யப் பட வேண்டுமா?
** கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவது கருச்சிதைவு செய்வதைப் போலத் தானா?



ஒ அமெரிக்கா! ஒ அமெரிக்கா! ஒ அமெரிக்கா!

( ஏ  தாழ்ந்த தமிழகமே, சொரணை கெட்ட தமிழன் என்று தோற்கும் போதெல்லாம்  ஒருமாதிரிக் கரகரத்த   குரலில்  சொல்வது மாதிரிச் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்!)


என்ன பேச வேண்டும் என்பதை அம்மணி உள்ளங்கையில் எழுதி வைத்துக் கொண்டு தான் ஒபாமா மீது குற்றம் சொன்னார் என்பது இப்போது வெளியாகி இருக்கிறது!
 

அமெரிககா போனாலும் அரசியல் ஒரே மாதிரித் தான் இருக்கிறதென்று உச்சுக் கொட்டி விட்டு, வாருங்கள்! உள்ளூர் செய்திக்கும் கொஞ்சம் இடம் வேண்டாமா?



சின்னச் சின்ன செய்திகள்! கொஞ்சம் சிரிக்க! கொஞ்சம் கொதிக்க! என்னவாயிருந்தாலும்,இங்கே பின்னூட்ட வம்புகள் வரவேற்கப்படும்!






1 comment:

  1. நாய்க்கு செம ட்ரைனிங் போல!
    மேலை நாடுகளீல் பூனை, நாயை ”அதற்கு” பயன்படுத்துவாதாக கேள்வி பட்டிருக்கிறேன்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!