கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கிறது!
எத்தனையோ நல்ல தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள அவசியம் இருக்கையில், வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறாமே!
பாராட்டவும், நன்றியோடு நினைத்துப் பார்க்கவும் எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பூமியில், தமிழகத்திலுமே கூடக் காணக் கிடைக்கையில், வேறு கழிசடையான விஷயங்களிலேயே மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்த்து வாய் பிளந்திருந்தோமே!
தன் கையே தனக்குதவி என்று சுய முயற்சியை ஊக்குவித்த தமிழ் மண்ணில் நமக்கு நாமே என்று இளிச்சவாயர்கள் பட்டத்தை நமக்களித்துத் தன்னைத் தானே பாராட்டி விழா எடுத்துத் தனக்கே விருது கொடுத்துக் கொள்ளும் அவலத்தை இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!
நேற்றைக்கு, பிப்ரவரி 19, தமிழ்த் தாத்தா என்று பரிவோடு அழைக்கப் படும், தமிழர் காப்பியங்களையும், மரபுச் செல்வங்களையும் ஊர் ஊராகத் தேடித் தேடி, அலட்சியமாய் அடுப்பிலிட்டது போக எஞ்சியிருந்த ஓலைச் சுவடிகளைத் திரட்டி, தமிழ் நூல்களை,நமக்கு இது எங்கள் பாட்டன் சொத்து என்று உரிமை கொண்டாட வகை செய்த ஒரே காரணத்தால், தமிழ் வளர்த்த தாத்தா, தமிழ்த் தாத்தா என்று உரிமையுடன் அழைக்கப்பட்ட உ வெ சாமிநாத ஐயர் அவர்களுடைய பிறந்த நாள்! நூற்றைம்பத்தைந்தாவது பிறந்த நாள்!எத்தனையோ நல்ல தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள அவசியம் இருக்கையில், வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறாமே!
பாராட்டவும், நன்றியோடு நினைத்துப் பார்க்கவும் எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பூமியில், தமிழகத்திலுமே கூடக் காணக் கிடைக்கையில், வேறு கழிசடையான விஷயங்களிலேயே மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்த்து வாய் பிளந்திருந்தோமே!
தன் கையே தனக்குதவி என்று சுய முயற்சியை ஊக்குவித்த தமிழ் மண்ணில் நமக்கு நாமே என்று இளிச்சவாயர்கள் பட்டத்தை நமக்களித்துத் தன்னைத் தானே பாராட்டி விழா எடுத்துத் தனக்கே விருது கொடுத்துக் கொள்ளும் அவலத்தை இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!
உ வெ சா அரும்பாடு பட்டுச் சேகரித்த பனை ஓலைச் சுவடிகள்! ஐந்து வருடங்களுக்கு முன் பிரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரையைப் படிக்க இங்கே
உண்மையை ஒத்துக் கொள்ளத் தயங்குகிற, கண்ணை இருக்க மூடிக் கொண்டு வெளிச்சம் என்பது இல்லவே இல்லை என்று கூவிக் கொண்டிருக்கிறவர்கள் பின்னாலேயே இன்னமும் போய்க் கொண்டிருக்கிற அவலமும் புரிந்தது! !
இந்த நல்லதகவலை அறியத் தந்த மின்தமிழ் வலைக் குழுமத்திற்கு, இழையை ஆரம்பித்து வைத்த புதுவை ஏ. சுகுமாரன் அவர்களுக்கும், நூல் பட்டியலை முழுமையாகத் தொகுத்துத் தந்த திரு ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியுடன் !
தமிழ்த் தாத்தா பதிப்பித்த நூல்களில் ஒரு நூறைப் பார்ப்போமா?
புத்தகத்தின் பெயர் | பதிப்பித்த ஆண்டு |
1 அழகர் கிள்ளை விடு தூது | 1938 |
2 ஆற்றூர்ப் புராணம் | 1935 |
3 இiயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை | 1936 |
4 உதயண குமார காவியம் | 1935 |
5 உதயணன் சரித்திரச் சுருக்கம் | 1924 |
6 ஐங்குறு நூறு | 1903 |
7 கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது | 1888 |
8 கடம்பர் கோயிலுலா | 1932 |
9 கபாலீசுவரர் பஞ்சரத்தினம் | 1940 |
10 கலைசைக் கோவை | 1935 |
11 களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை | 1932 |
12 கனம் கிருணயைர் | 1936 |
13 குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு | 1939 |
14 குறுந்தொகை | 1937 |
15 கோபால கிருஷ்ண பாரதியார் | 1936 |
16 சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் | 1928 |
17 சங்கர நயினார் கோயிலந்தாதி | 1934 |
18 சங்கரலிங்க உலா | 1933 |
19 சிராமலைக் கோவை | 1937 |
20 சிலப்பதிகாரம் | 1892 |
21 சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் | 1932 |
22 சிவசிவ வெண்பா | 1938 |
23 சீகாழிக் கோவை | 1903 |
24 சீவக சிந்தாமணி | 1887 |
25 சூரைமாநகர்ப் புராணம் | 1904 |
26 செவ்வைச் சூடுவார் பாகவதம் | 1941 |
27 தக்கயாகப் பரணி | 1930 |
28 தண்டபாணி விருத்தம் | 1891 |
29 தணிகாசல புராணம் | 1939 |
30 தமிழ்நெறி விளக்கம் | 1937 |
31 தமிழ்விடு தூது | 1930 |
32 தனியூர்ப் புராணம் | 1907 |
33 திரு இலஞ்சி முருகன் உலா | 1935 |
34 திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா | 1933 |
35 திருக்கழுக்குன்றத்துலா | 1938 |
36 திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை | 1938 |
37 திருக்காளத்தி நாதருலா | 1904 |
38 திருக்காளத்திப் புராணம் | 1912 |
39 திருக்குடந்தைப் புராணம் | 1883 |
40 திருக்குற்றாலச் சிலேடை வெண்பா | 1940 |
41 திருத்தணிகைத் திருவிருத்தம் | 1914 |
42 திருநீலகண்டனார் சரித்திரம் | 1936 |
43 திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் | 1908 |
44 திருப்பூவண நாதருலா | 1904 |
45 திருப்பெருந்துறைப் புராணம் | 1892 |
46 திருமயிலைத் திரிபந்தாதி | 1888 |
47 திருமயிலை யமக அந்தாதி | 1936 |
48 திருமலையாண்டவர் குறவஞ்சி | 1938 |
49 திருவள்ளுவரும் திருக்குறளும் | 1936 |
50 திருவாரூர்க் கோவை | 1937 |
51 திருவாரூர்த் தியாகராச லீலை | 1905 |
52 திருவாரூருலா | 1905 |
53 திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் | 1906 |
54 திருவாவடுதுறைக் கோவை | 1903 |
55 தேவையுலா | 1907 |
56 நல்லுரைக் கோவை பகுதி 1 | 1937 |
57 நல்லுரைக் கோவை பகுதி 2 | 1937 |
58 நல்லுரைக் கோவை பகுதி 3 | 1938 |
59 நல்லுரைக் கோவை பகுதி 4 | 1939 |
60 நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | 1925 |
61 நன்னூல் மயிலை நாதருரை | 1925 |
62 நான் கண்டதும் கேட்டதும் | 1936 |
63 நினைவு மஞ்சரி - பகுதி 1 | 1937 |
64 நினைவு மஞ்சரி - பகுதி 2 | 1942 |
65 நீலி இரட்டை மணிமாலை | 1874 |
66 பத்துப் பாட்டு மூலம் | 1931 |
67 பத்துப் பாட்டு மூலமும் உரையும் | 1889 |
68 பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது | 1932 |
69 பதிற்றுப் பத்து | 1904 |
70 பரிபாடல் | 1918 |
71 பழமலைக் கோவை | 1935 |
72 பழனி இரட்டைமணி மாலை | 1935 |
73 பழனி பிள்ளைத் தமிழ் | 1932 |
74 பாசவதைப் பரணி | 1933 |
75 புகையிலை விடு தூது | 1939 |
76 புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் | 1898 |
77 புதியதும் பழையதும் | 1936 |
78 புறநானூறு | 1894 |
79 புறநானூறு மூலம் | 1936 |
80 புறப்பொருள் வெண்பா மாலை | 1895 |
81 பெருங்கதை | 1924 |
82 பெருங்கதை மூலம் | 1936 |
83 மகரநெடுங் குழைக்காதர் பாமாலை | 1939 |
84 மகாவைத்தியநாதையைர் | 1936 |
85 மண்ணிப்படிக்கரைப் புராணம் | 1907 |
86 மணிமேகலை | 1898 |
87 மணிமேகலைக் கதைச் சுருக்கம் | 1898 |
88 மத்தியார்ச்சுன மான்மியம் | 1885 |
89 மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை | 1932 |
90 மதுரைச் சொக்கநாதர் உலா | 1931 |
91 மான் விடு தூது | 1936 |
92 மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 | 1933 |
93 மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 | 1934 |
94 மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு | 1910 |
95 வலிவல மும்மணிக் கோவை | 1932 |
96 வித்துவான் தியாகராச செட்டியார் | 1942 |
97 வில்லைப் புராணம் | 1940 |
98 விளத்தொட்டிப் புராணம் | 1934 |
99 வீரவனப் புராணம் | 1903 |
100 வேணுவனலிங்க விலாசச் சிறப்பு | 1878 |
இது இந்தப்பக்கங்களில், 250 ஆவது பதிவு!
/// கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கிறது!
ReplyDeleteஎத்தனையோ நல்ல தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள அவசியம் இருக்கையில், வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறாமே! ///
ஐயா அருமை தெளிவு வந்து விட்டதா? எனக்கும் இது கொஞ்சம் லேட்டாதான் வந்தது இருப்பினும் அருமை...
idukai badichittu karuththa thirumba vanthu solren.
நேற்று ஜெயா டிவியில் "இன்று" பகுதியில் பார்த்தபோது நானும் நினைத்தேன்.
ReplyDeleteமுதலில் இட்ட பின்னூட்டத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன். அதை வெளியிட வேண்டாம் தவறு இருந்தால்...
ReplyDeleteஉ.வே. சாமிநாத அய்யனின் அடி போற்றி ! அயராது ஓடிய தாள் போற்றி !!
ReplyDeleteதிரு கேசவன்!
ReplyDeleteBetter late than never!
போத்திப் பாடடி பொண்ணே! அய்யன் காலடி மண்ணே என்று கும்மி எல்லாம் அடிக்க வேண்டாம்!
தமிழைத் தமிழாகப் பேசுவது, எழுதுவது என்று இருந்தாலே போதும்!அதற்கு முக்கிப் பேசுபவர்கள், மூக்கால் பேசுபவர்களிடமிருந்து விடுபட்டாலே போதும்!
ஸ்ரீராம்!
எங்கள் ப்ளாகிலும் எழுதியிருக்கலாமே!
tamil already changed to other way.
ReplyDeletenow no one going to lisen or read real original tamil.
we can keep in liberay.
this problem started in which year onwards?
நல்ல கேள்வி, திரு பாலு!
ReplyDeleteசெம்மொழி என்று சொல்லும் போதே செம்மையில்லாத பகுதியும் ஒன்று இருக்கத் தானே வேண்டும்! இது ஆரம்ப நிலையில் இருந்தே இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்க முடியும்!
உதாரணமாக, சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டு எனப்படும் வகையில் முதலாவதாகத் திருமுருகாற்றுப்படை, இப்படித் தொடங்குகிறது:
"உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்!"
இயற்றமிழை பேச முயன்று பல் சுளுக்கிக் கொண்ட காலத்தில் இருந்தே, கொச்சை அல்லது வழக்கு மொழி ஆரம்பித்திருக்கலாம்!
கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்துச் சொல்கிறேன்!
தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே
ReplyDeleteதுடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த
சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம்
எங்கள் தமிழ்த்தாத்தா தான்.
காண்க: தமிழ்த் தாத்தா பஞ்சகம்
link: http://kuzhalumyazhum.blogspot.com/2011/02/110.html
நன்றி திரு முரளி!
ReplyDeleteஓராண்டுக்கு முன்னாள் எழுதியதைத் தேடிப்பிடித்துப் பின்னூட்டமும் எழுதியதற்கு! உங்கள் பதிவில் தமிழ்த்தாத்தா பஞ்சகம் படித்துப் பார்த்தேன்.
"தமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்
அமிழ்தான நூல்களினை அரித்தொழித்து தின்றுவந்த
சூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த
வாழ்வே தமிழ்த்தாத்தா தான்."
சரிதான்!