தமிழ் வளர்த்த பெரியோர்கள்!

கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கிறது!

எத்தனையோ நல்ல தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள அவசியம் இருக்கையில், வேறு  எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறாமே!

பாராட்டவும், நன்றியோடு நினைத்துப் பார்க்கவும் எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பூமியில், தமிழகத்திலுமே கூடக் காணக் கிடைக்கையில், வேறு கழிசடையான விஷயங்களிலேயே மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்த்து வாய் பிளந்திருந்தோமே!

தன் கையே தனக்குதவி என்று சுய முயற்சியை ஊக்குவித்த தமிழ் மண்ணில் நமக்கு நாமே என்று இளிச்சவாயர்கள் பட்டத்தை நமக்களித்துத் தன்னைத் தானே பாராட்டி விழா எடுத்துத் தனக்கே விருது கொடுத்துக் கொள்ளும் அவலத்தை இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

நேற்றைக்கு, பிப்ரவரி 19, தமிழ்த் தாத்தா என்று பரிவோடு அழைக்கப் படும், தமிழர் காப்பியங்களையும், மரபுச் செல்வங்களையும் ஊர் ஊராகத் தேடித் தேடி, அலட்சியமாய் அடுப்பிலிட்டது போக எஞ்சியிருந்த ஓலைச் சுவடிகளைத் திரட்டி, தமிழ் நூல்களை,நமக்கு இது எங்கள் பாட்டன் சொத்து  என்று உரிமை கொண்டாட வகை செய்த ஒரே காரணத்தால், தமிழ் வளர்த்த தாத்தா, தமிழ்த் தாத்தா என்று உரிமையுடன் அழைக்கப்பட்ட  உ வெ சாமிநாத ஐயர் அவர்களுடைய பிறந்த நாள்! நூற்றைம்பத்தைந்தாவது பிறந்த நாள்!

 
உ வெ  சா அரும்பாடு பட்டுச் சேகரித்த பனை ஓலைச் சுவடிகள்! ஐந்து வருடங்களுக்கு முன் பிரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரையைப் படிக்க இங்கே


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் புதுவை ஏ. சுகுமாரன் ஆரம்பித்து வைக்க, திரு ஹரி கிருஷ்ணன் உவேசா தேடிக் கண்டுபிடித்ததோடு, பாட பேதங்களை சரி பார்த்து, திருத்தம் செய்து வெளியிட்ட நூல்களின் பட்டியலை வெளியிட்ட ஆண்டு வாரியாகக் கொடுத்திருந்த தகவலைப் படித்த போது, தமிழ்மொழி செம்மொழியானது உவேசா மாதிரியான தமிழ் ஆர்வலர்களுடைய உழைப்பினால் தானே அன்றி வீணே தமிழ் தமிழ் என்று வெறும் பேச்சுப் பேசுகிறவர்களால் அல்ல என்பது நன்றாகவே புரிந்தது! 


உண்மையை ஒத்துக் கொள்ளத் தயங்குகிற, கண்ணை இருக்க மூடிக் கொண்டு வெளிச்சம் என்பது இல்லவே இல்லை என்று கூவிக் கொண்டிருக்கிறவர்கள் பின்னாலேயே இன்னமும் போய்க் கொண்டிருக்கிற அவலமும்  புரிந்தது! !



இந்த நல்லதகவலை அறியத் தந்த மின்தமிழ் வலைக் குழுமத்திற்கு, இழையை ஆரம்பித்து வைத்த புதுவை ஏ. சுகுமாரன் அவர்களுக்கும், நூல் பட்டியலை முழுமையாகத் தொகுத்துத் தந்த திரு ஹரி கிருஷ்ணன்  அவர்களுக்கும் நன்றியுடன் !

 

தமிழ்த் தாத்தா பதிப்பித்த நூல்களில் ஒரு நூறைப் பார்ப்போமா?





புத்தகத்தின் பெயர்
பதிப்பித்த ஆண்டு

1 அழகர் கிள்ளை விடு தூது
1938
2 ஆற்றூர்ப் புராணம்
1935
3 iயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை
1936
4 உதயண குமார காவியம்
1935
5 உதயணன் சரித்திரச் சுருக்கம்
1924
6 ஐங்குறு நூறு
1903
7 கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது
1888
8 கடம்பர் கோயிலுலா
1932
9 கபாலீசுவரர் பஞ்சரத்தினம்
1940
10 கலைசைக் கோவை
1935
11 களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை
1932
12 கனம் கிருணயைர்
1936
13 குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு
1939
14 குறுந்தொகை
1937
15 கோபால கிருஷ்ண பாரதியார்
1936
16 சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
1928
17 சங்கர நயினார் கோயிலந்தாதி
1934
18 சங்கரலிங்க உலா
1933
19 சிராமலைக் கோவை
1937
20 சிலப்பதிகாரம்
1892
21 சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
1932
22 சிவசிவ வெண்பா
1938
23 சீகாழிக் கோவை
1903
24 சீவக சிந்தாமணி
1887
25 சூரைமாநகர்ப் புராணம்
1904
26 செவ்வைச் சூடுவார் பாகவதம்
1941
27 தக்கயாகப் பரணி
1930
28 தண்டபாணி விருத்தம்
1891
29 தணிகாசல புராணம்
1939
30 தமிழ்நெறி விளக்கம்
1937
31 தமிழ்விடு தூது
1930
32 தனியூர்ப் புராணம்
1907
33 திரு இலஞ்சி முருகன் உலா
1935
34 திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
1933
35 திருக்கழுக்குன்றத்துலா
1938
36 திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை
1938
37 திருக்காளத்தி நாதருலா
1904
38 திருக்காளத்திப் புராணம்
1912
39 திருக்குடந்தைப் புராணம்
1883
40 திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
1940
41 திருத்தணிகைத் திருவிருத்தம்
1914
42 திருநீலகண்டனார் சரித்திரம்
1936
43 திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
1908
44 திருப்பூவண நாதருலா
1904
45 திருப்பெருந்துறைப் புராணம்
1892
46 திருமயிலைத் திரிபந்தாதி
1888
47 திருமயிலை யமக அந்தாதி
1936
48 திருமலையாண்டவர் குறவஞ்சி
1938
49 திருவள்ளுவரும் திருக்குறளும்
1936
50 திருவாரூர்க் கோவை
1937
51 திருவாரூர்த் தியாகராச லீலை
1905
52 திருவாரூருலா
1905
53 திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
1906
54 திருவாவடுதுறைக் கோவை
1903
55 தேவையுலா
1907
56 நல்லுரைக் கோவை பகுதி 1
1937
57 நல்லுரைக் கோவை பகுதி 2
1937
58 நல்லுரைக் கோவை பகுதி 3
1938
59 நல்லுரைக் கோவை பகுதி 4
1939
60 நன்னூல் சங்கர நமச்சிவாயருரை
1925
61 நன்னூல் மயிலை நாதருரை
1925
62 நான் கண்டதும் கேட்டதும்
1936
63 நினைவு மஞ்சரி - பகுதி 1
1937
64 நினைவு மஞ்சரி - பகுதி 2
1942
65 நீலி இரட்டை மணிமாலை
1874
66 பத்துப் பாட்டு மூலம்
1931
67 பத்துப் பாட்டு மூலமும் உரையும்
1889
68 பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது
1932
69 பதிற்றுப் பத்து
1904
70 பரிபாடல்
1918
71 பழமலைக் கோவை
1935
72 பழனி இரட்டைமணி மாலை
1935
73 பழனி பிள்ளைத் தமிழ்
1932
74 பாசவதைப் பரணி
1933
75 புகையிலை விடு தூது
1939
76 புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்
1898
77 புதியதும் பழையதும்
1936
78 புறநானூறு
1894
79 புறநானூறு மூலம்
1936
80 புறப்பொருள் வெண்பா மாலை
1895
81 பெருங்கதை
1924
82 பெருங்கதை மூலம்
1936
83 மகரநெடுங் குழைக்காதர் பாமாலை
1939
84 மகாவைத்தியநாதையைர்
1936
85 மண்ணிப்படிக்கரைப் புராணம்
1907
86 மணிமேகலை
1898
87 மணிமேகலைக் கதைச் சுருக்கம்
1898
88 மத்தியார்ச்சுன மான்மியம்
1885
89 மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை
1932
90 மதுரைச் சொக்கநாதர் உலா
1931
91 மான் விடு தூது
1936
92 மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1
1933
93 மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2
1934
94 மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு
1910
95 வலிவல மும்மணிக் கோவை
1932
96 வித்துவான் தியாகராச செட்டியார்
1942
97 வில்லைப் புராணம்
1940
98 விளத்தொட்டிப் புராணம்
1934
99 வீரவனப் புராணம்
1903
100 வேணுவனலிங்க விலாசச் சிறப்பு
1878


இது இந்தப்பக்கங்களில், 250 ஆவது பதிவு!


9 comments:

  1. /// கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கிறது!
    எத்தனையோ நல்ல தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள அவசியம் இருக்கையில், வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறாமே! ///

    ஐயா அருமை தெளிவு வந்து விட்டதா? எனக்கும் இது கொஞ்சம் லேட்டாதான் வந்தது இருப்பினும் அருமை...

    idukai badichittu karuththa thirumba vanthu solren.

    ReplyDelete
  2. நேற்று ஜெயா டிவியில் "இன்று" பகுதியில் பார்த்தபோது நானும் நினைத்தேன்.

    ReplyDelete
  3. முதலில் இட்ட பின்னூட்டத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன். அதை வெளியிட வேண்டாம் தவறு இருந்தால்...

    ReplyDelete
  4. உ.வே. சாமிநாத அய்யனின் அடி போற்றி ! அயராது ஓடிய தாள் போற்றி !!

    ReplyDelete
  5. திரு கேசவன்!

    Better late than never!

    போத்திப் பாடடி பொண்ணே! அய்யன் காலடி மண்ணே என்று கும்மி எல்லாம் அடிக்க வேண்டாம்!

    தமிழைத் தமிழாகப் பேசுவது, எழுதுவது என்று இருந்தாலே போதும்!அதற்கு முக்கிப் பேசுபவர்கள், மூக்கால் பேசுபவர்களிடமிருந்து விடுபட்டாலே போதும்!

    ஸ்ரீராம்!

    எங்கள் ப்ளாகிலும் எழுதியிருக்கலாமே!

    ReplyDelete
  6. tamil already changed to other way.

    now no one going to lisen or read real original tamil.

    we can keep in liberay.

    this problem started in which year onwards?

    ReplyDelete
  7. நல்ல கேள்வி, திரு பாலு!

    செம்மொழி என்று சொல்லும் போதே செம்மையில்லாத பகுதியும் ஒன்று இருக்கத் தானே வேண்டும்! இது ஆரம்ப நிலையில் இருந்தே இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்க முடியும்!

    உதாரணமாக, சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டு எனப்படும் வகையில் முதலாவதாகத் திருமுருகாற்றுப்படை, இப்படித் தொடங்குகிறது:

    "உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
    பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
    ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
    உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
    செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
    மறு இல் கற்பின் வாணுதல் கணவன்!"

    இயற்றமிழை பேச முயன்று பல் சுளுக்கிக் கொண்ட காலத்தில் இருந்தே, கொச்சை அல்லது வழக்கு மொழி ஆரம்பித்திருக்கலாம்!

    கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்துச் சொல்கிறேன்!

    ReplyDelete
  8. தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே
    துடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த
    சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம்
    எங்கள் தமிழ்த்தாத்தா தான்.


    காண்க: தமிழ்த் தாத்தா பஞ்சகம்
    link: http://kuzhalumyazhum.blogspot.com/2011/02/110.html

    ReplyDelete
  9. நன்றி திரு முரளி!

    ஓராண்டுக்கு முன்னாள் எழுதியதைத் தேடிப்பிடித்துப் பின்னூட்டமும் எழுதியதற்கு! உங்கள் பதிவில் தமிழ்த்தாத்தா பஞ்சகம் படித்துப் பார்த்தேன்.

    "தமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்
    அமிழ்தான நூல்களினை அரித்தொழித்து தின்றுவந்த
    சூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த
    வாழ்வே தமிழ்த்தாத்தா தான்."

    சரிதான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!