Showing posts with label தலைமைப் பண்பு. Show all posts
Showing posts with label தலைமைப் பண்பு. Show all posts

நூற்றாண்டின் தலைசிறந்த நிர்வாகி! ஜாக் வெல்ஷ்!

ஜாக் வெல்ஷ்! அமெரிக்காவின் ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனியின் தலைமை நிர்வாகியாக 1981 முதல் 2001 வரை இருந்து, நிறுவனத்தைத்  தொடர்ந்து ஜெயிக்கிற நிறுவனமாக மாற்றிக் காட்டியவர். நேற்று அவருடைய மரணச்செய்தியைச் சொல்லும் நியூ யார்க் டைம்ஸ்  It was a time when successful, lavishly paid corporate executives were more admired than resented. Mr. Welch received a record severance payment of $417 million when he retired in 2001. Fortune magazine named him the “Manager of the Century,” and in 2000 The Financial Times named G.E. “the World’s Most Respected Company” for the third straight year என்கிறது. 

  
2000 ஆம் ஆண்டில் தன்னுடைய சுயசரிதையை வெளியிடும் உரிமையை ஏலம் விட்டதில், 71 லட்சம் டாலர்கள்கொடுத்து டைம் வார்னர் க்ரூப்பின் புத்தகப் பிரிவு வாங்கியது என்றால் நம்ப முடிகிறதா?

  
இந்தப்புத்தகம் ஒரு கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருக்கிறது என்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஒரு தலைசிறந்த நிர்வாகியின் அனுபவங்களிலிருந்து எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தவிப்பும் ஆர்வமும் புத்தகத்தை வாங்கிய ஒவ்வொருவரிடமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஜாக் வெல்ஷ் பற்றி நான் முதலில் அறிந்து கொள்ள உதவியாக இருந்த புத்தகம், அவரும் அவர் மனைவியும் சேர்ந்து எழுதிய Winning தான்.


ஒரு தலைமை எப்படி இருக்கவேண்டும் என்று ஜாக் வெல்ஷ் இந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்கிறார். 
தலைமை என்பது மேனேஜர்களின் அடுக்குகளால் ஆனது என்றிருந்த 1970 களின் நிர்வாகக் கோட்பாடுகளை உடைத்தவர் வெல்ஷ் என்று கூடச் சொல்லலாம். மேனேஜர்களுக்கு அவர்களுடைய performance அடிப்படையில் கழித்துக் கட்டுவதை ஜெனெரல் எலெக்ட்ரிக்கில் ஆரம்பித்து வைத்தவர் அவர். அதே மாதிரி GE இன் தொழில்பிரிவுகளையும் லாபமீட்டாதவைகளைக் கழித்துக் கட்டவும் தயங்கவில்லை என்பதில் 26 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிக் கொண்டிருந்த GE, 130 பில்லியன் டாலர் வருவாயை எட்டியதும், பங்குச் சந்தையில்  14 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 410 பில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்ந்ததும் நிகழ்ந்தது. அதேநேரம் nonperforming என நிறையப்பேரைத் தயவு தாட்சணியம் இல்லாமல் நீங்கியதால் neutron jack என்று பட்டப்பெயரும் கிடைத்தது. யூட்யூப் தளத்தில் ஜாக் வெல்ஷ் தன்னுடைய நிர்வாகக் கோட்பாடுகளை, தலைமைப்பண்பு பற்றிய கண்ணோட்டத்தை குறித்துப் பேசுகிற வீடியோக்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. Winning புத்தகத்தில் நான்கு பகுதிகளாகப் பிரித்து, அவர் சொல்கிற ஒரு பகுதியை இங்கே படமாகப் பார்க்கலாம்.

ஜாக் வெல்ஷ் மிகக்குறைந்த வார்த்தைகளிலேயே தன்னுடைய கருத்தைச் சொல்லி விடுகிறார் என்கிறது NYT செய்தி: Mr. Welch distilled his management concepts into one-sentence nuggets. 
“Control your destiny, or someone else will.” 
“Be candid with everyone.” 
“Bureaucrats must be ridiculed and removed.” 
“If we wait for the perfect answer, the world will pass us by.”    

ஆனால் நிர்வாகிகளில் சூப்பர் ஸ்டாராகக் கருதப் பட்ட ஜாக் வெல்ஷ், இன்று திரும்பிப்பார்க்கையில், அவருடைய நிர்வகிக்கும் முறை பங்குதாரர்களுக்கு அதிகம் சம்பாதித்துக் கொடுக்கிற, அமெரிக்கர்களுடைய பேராசையின் அடையாளமாகவே இருக்கிறது என்றொரு பார்வையும் அண்மைக்காலங்களில் உருவாகி வருவதையும் மறுக்க முடியாது. இந்த விமரிசனமும் கூட கடந்த 11 வருடங்களில் GE சந்தித்த வீழ்ச்சிகள் காரணமாக எழுந்திருக்கலாம்.

எப்படியிருந்தாலும், இவருடைய நிர்வாகக் கோட்பாடுகளில் எடுத்துக் கொள்ளக்கூடியவை இன்றும் நிறைய இருக்கிறதென்றே எனக்குப் படுகிறது.

மீண்டும் சந்திப்போம். 

    

26/11 மும்பை மீது தாக்குதல் நிகழ்ந்த 11 வது ஆண்டு!

போகும் திசை மறந்து போச்சு! இங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு! இப்படி  இங்கே எழுதிக்கூட 10 வருஷம் ஆகிப்போச்சே நண்பர்களே!


 


மும்பை நகரத்தில் பாகிஸ்தானியத் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் நடந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இதைத் தீவீரவாதிகளின் வெற்றி என்று சொல்வதை விட, பலவீனமான அரசியல் தலைவர்கள், எதற்கெடுத்தாலும் அடித்துக் கொள்வது என்பதைத் தவிர வேறு அஜெண்டா இல்லாத அரசியல் கட்சிகள், ஊழல்மயமான அரசு இயந்திரம், செயல் திறனற்றுப்போன உளவுத்துறை, செயல் பட முடியாத காவல்துறை, இப்படி, நம்மிடம் இருக்கும் பலவீனத்தையே மறுபடி மறுபடி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி இருப்பதை எவரும் இங்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனெவே, இந்தப் பக்கங்களில், தலைமைப் பண்பு, சீனப் பெருமிதம், விமரிசனம் என்ற தலைப்புக்களில், நேரு, சாஸ்திரி இருவரது முடிவெடுக்கும் திறனைப் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.


வெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.


ம்முடைய முன்னுரிமைகள், அல்லது பிரதானமான கவனமெல்லாம் எங்கே இருக்கிறது?


இந்த ஒரு கேள்விக்கு, சரியான பதிலைக் கண்டு கொள்ள முடிந்தாலே, பிரச்சினை என்ன என்பதையும், அதற்குத் தீர்வு என்ன என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ஆங்கில ஊடகங்களில் 26/11-மும்பை மீதான போர்! ஓராண்டு நிறைவு என்று கூவிக் கூவிப் பழைய செய்திகளை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூத்துக்களைப் பார்த்துத் தொலைய வேண்டியிருக்குமே என்பதற்காக, வழக்கமாகப் பார்க்கும் செய்தி சானல்களைக் கூட இன்றைக்குப் பார்க்க வேண்டாம் என்றே இருந்தேன்.

வெட்கம் கெட்ட மும்பை அரசும், அரசியல்வாதிகளும், மும்பை மீதான தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செய்வதாக, வீதிகளில் அணிவகுப்பை நடத்தி, தங்களைப் புனிதர்களாக ஆக்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயம் ரொம்ப என்றால் ரத யாத்திரையும், கம்மி என்றால் அறிக்கைப் போரும், கேள்விகள் எழுப்புவது மட்டுமே என்று வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் அத்வானி பாராளுமன்றத்தில் மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடும், நிவாரணமும் வழங்குவதில் அரசு மெத்தனமாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கிறார்.

பழைய ஞாபகத்தில் ரத யாத்திரை என்றெல்லாம் கிளம்பிவிடாமல் ஏதோ கேள்வியோடு கவலையை முடித்துக் கொண்டாரே என்பதைப் பாராட்டக் கூட நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மனசு வரவில்லை. பதிலுக்குக் கோபத்தில் கடித்துக் குதறியிருக்கிறார்!

மும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான்! இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட  வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான்! அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள்! காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே?"

அலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார்! தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்! மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார்!  உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே  கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு  வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்!

என் ராமைக் குறை சொல்லிக் கொண்டு, ஹிந்துவை வாங்காதே, தினமலரை வாங்காதே என்று பானர் தயாரித்துப் போட்டுக்  கொண்டு பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப் பதிவர்களாவது .......ம்ம்ஹூம்!

தாஜ் ஹோட்டல் மாதிரி ஐந்து நட்சத்திரம் கூட வேண்டாம்! நட்சத்திரம் என்று வெறுமே சொன்னால் போதும்! அவர் ரேட் என்ன என்று புவனேஸ்வரி- பெயர் சொல்லி ரேட் நிலவரம் சொல்கிறார்  என்று தலைப்பும்,சும்மா  ஒரு படமும் போட்டால் போதுமே, மொய்த்துவிட மாட்டார்களா!

அவர்கள் வரிசையாக வருவார்கள்! தாக்குதல் நடத்துவார்கள், நாம் இங்கே ஆண்டு விழா மட்டும் கொண்டாடிக் கொண்டிருப்போம். அப்படித்தானே! 

சிவசேனாக்காரர்கள் சீரியஸாக ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்! மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அஜ்மல் அமீர் கசாபைத் தூக்கில் போட வேண்டுமென்று  ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள்! ஏற்கெனவே கசாப் என்ற அந்த பிடிபட்ட தீவீரவாதி, நம்முடைய நீதித் துறையில் உள்ள ஓட்டைகளை வைத்து செம காமெடி பண்ணிக் கொண்டிருந்தது போதாதென்று,இப்போது இந்தக் கோமாளிகளும்....!

சாமீ! புண்ணியவான்களே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்! உங்களுக்காவது ஏதாவது திக்கு திசை புரிகிறதா?


மீள்பதிவுதான்! இன்றைக்கு மஹாராஷ்டிரா அரசியலில் நடந்து கொண்டிருக்கும் கூத்தை எல்லாம் பார்க்கும்போது, இங்கே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னமும் நேர்மையான பதில் கிடைக்கவில்லையே!  தாவூத் இப்ராஹிமோடு கூட்டாளியாக இருந்து அவனைத் தப்ப விட்ட சரத் பவார், அகமது படேல் இவர்களையெல்லாம்  கூண்டில் நிறுத்த முடிந்ததா? மராத்தா பெருமிதம் பேச சரத் பவாருக்குத் தகுதி இருக்கிறதா? 

 மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தான்! வேறென்ன?!

வெற்றி பெற்ற எந்த ஒரு அரசியல்  தலைவருடைய மிக முக்கியமான துணாதிசயமாகப் பார்த்தாலும்  ஜனங்களுடைய நாடித் துடிப்பை அறிந்து, அதற்கேற்ற மாதிரிக் கொஞ்சம், தங்களுடைய அரசியல் கொள்கையில்  ஒரு தொலை நோக்குப்  பார்வையுடன் கொஞ்சம் என்று ஒரு பக்குவமான கலவையில் ஜனங்களுக்குத் தலைமை தாங்கி நடத்துவதும் தான் என்று சொல்ல முடியும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதைத் தாண்டி ராஜதந்திரி (statesmanship) என்ற நிலைக்கு உயர்கிற தருணம்,  இந்திய அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இங்கே வாய்த்திருக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கள்!


    ட்ரம்ப் பேசுகிறார் 25 நிமிடம் 

நேற்று ஹூஸ்டனில்  நடந்த Howdy Modi நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சராசரி அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு தேர்ந்த ராஜதந்திரியாக உயர்ந்து வருவது தெளிவாகவே வெளிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! டொனால்ட் ட்ரம்ப் ஒரு சராசரி அரசியல்வாதியாக, அமெரிக்கஇந்தியர்கள் வாக்குவங்கியைக் குறிவைத்தே இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வார் என்பதுகூடப் பொது வெளியில் தெரிந்த விஷயம்தான்! ஆனால் ஒரு ரெண்டுங் கெட்டான் அமெரிக்க அதிபரை அடுத்த ஆண்டு வரவிருக்கும் அதிபர்  தேர்தலிலும் வழிமொழிகிற மாதிரிப் பேசியிருக்க வேண்டுமா? இந்த ஒரு உறுத்தல் எனக்கும் முதலில் பார்த்த போது தோன்றினாலும், அமெரிக்க அரசியலில் ட்ரம்ப்பின் Republican Party எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததில்லை. டெமாக்ரட்டுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை என்பதைவிட பாகிஸ்தான் அவர்களுடைய செல்லமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது என்பதை டெமாக்ரட் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெர்னி சாண்டர்ஸ் மறுபடி நிரூபித்திருக்கிறார்! டெமாக்ரட்டுகளுடைய பரிதாப நிலைமையைப் பார்த்தால் 2020 தேர்தல்களில் ஜெயிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்பதில் டொனால்ட் ட்ரம்பைக் குளிர்விக்கிற மாதிரி  மோடி பேசியது  தவறாகப் படவில்லை. அவரா அங்கே வாக்களிக்கப் போகிறார்? 
      

இன்று காலை காங்கிரசின் இடைக்காலத்தலைவர் சோனியாவும் , மன்மோகன் சிங்கும் திஹார் சிறைக்குப் போய் சீனாதானவை சந்தித்துவிட்டுத் திரும்பிய போது இந்தியன் எக்ஸ்பிரெசுக்காக எடுத்த படமாம் இது! After the meeting, Chidambaram expressed his gratitude towards both the leaders. Through his Twitter handle, which is being handled by his family on his behalf, Chidambaram said, “I am honoured that Smt. Sonia Gandhi and Dr Manmohan Singh called on me today. As long as the Congress party is strong and brave, I will also be strong and brave.” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. 


காங்கிரசின் முக்கியமான பணத் தூண்களில் இருவர் சிறையில் அடைக்கப் பட்டதால், காங்கிரஸ் கட்சி மொத்தமுமே ஊழல்கறை படிந்த கட்சியாக பிஜேபி சித்தரிக்க முயல்வதற்கு மாற்றுச் சித்திரமாக இந்த சந்திப்பு நடந்ததாகச் சொல்கிறார்கள்!  ஊழல் கறை போய்விடுமா என்ன? 

மேலே உள்ள இரண்டு செய்திகளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்! ஒரு பக்கம் அரசியல் தலைவர் என்பதிலிருந்து உயர்ந்து ஒரு நல்லத்தலைவராக, சிறந்த ராஜதந்திரியாகவும் வளர்ந்து கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடி! உலகின் எந்தப் பகுதிக்குப் போனாலும் மதிக்கப்படுகிறார்! அவர் பேசுவது கூர்ந்து கவனிக்கப் படுகிறது! ராஜீய உறவுகளை மேம்படுத்த அவர் முனைவதில் ஒவ்வொரு நாடும் மகிழ்வோடு பங்கேற்கிறது! 

இன்னொரு பக்கம் தேசத்தை நீண்ட காலம் ஆண்ட ஒரு கட்சி! 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் அதன் அப்போதைய தலைவரான சோனியா மற்றும் செலெக்டிவாக சீனாதானா  மாதிரியான கைத்தடிகள், கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சி என்று செயல்பட்டதும், திமுக மாதிரியான மாநிலக்கட்சிகளுடன்  கூட்டணி தர்மம் என்பது கூட்டுக கொள்ளை அடிப்பதற்காகவே என்றானதையும் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியுமா? விதைத்ததை அறுவடை செய்தே ஆகவேண்டிய நேரமும் இப்போது வந்திருக்கிறது என்பதில் இப்போது பார்க்கப் போனவர்களும் கூட ஏதோ ஒரு கட்டத்தில் சிறைக்குள் தள்ளப் பட வேண்டிய நபர்களே என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன!!


பிஜேபி ஆதரவாளனாக என்னைச் சிலர் தொடர்ந்து முத்திரை குத்திக் கொண்டிருந்தாலும்  தமிழக பிஜேபியைக் குறித்து எனக்குத் தெரிந்தது மிகச் சொற்பம் தான்! அதுவும் கூட வெளியே சொல்லிக் கொள்கிற மாதிரி நல்ல அபிப்பிராயமும் இல்லை! அவரும் நானும் என்கிற இந்த நிகழ்ச்சியின் வழியாக தமிழிசையைப் பற்றி, ஏதோ கொஞ்சம் நல்லபடியாகச் சொல்கிற மாதிரி ஒரு வீடியோவை பார்த்து, இந்தப் பக்கங்களில் கூட பகிர்ந்திருப்பதாக நினைவு! வானதி சீனிவாசனைப் பற்றியும் கூட எனக்கு அதிகம் தெரியாது! இந்த நிகழ்ச்சி வழியாக அவரை அவரது குடும்பத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரிந்துகொள்கிற மாதிரி இருந்தது அவ்வளவுதான்! 

அபிப்பிராயம்? நான் தனிப்பட்ட குடும்பம், சொந்த விஷயத்தை வைத்து எவர்மீதும் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதில்லை என்பதால், தனி கோஷ்டியாகச் செயல்படுகிறார் என்ற அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளும் அவசியமே எழவில்லை.

மீண்டும் சந்திப்போம்.              

இட்லி வடை பொங்கல்! #42 சந்திராயன் 2! தலைமைப்பண்பு! மருதை லந்து!

தலைவர்கள், தலைமைப்பண்பு குறித்து இந்தப் பக்கங்களில்  விரிவாகவே பேசி வந்திருக்கிறோம். ஒரு மாற்றத்தின் உந்துசக்தியாகவே தலைவர்கள் இருப்பது அல்லது இருக்கத் தவறுவது இவைகளை இந்திய அரசியல் தலைவர்கள், நிகழ்வுகளை வைத்தே விளக்குகிற முயற்சியாக அந்தப்பதிவுகள் இருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிற தருணம்!  

சந்திராயன் 2 பயணம் எல்லாம் திட்டமிட்டபடியே நடந்து வந்ததில் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் என்ற பெயரில் நிலவில் இறங்குகிற கலம்,கடைசி நிமிடத்தில் தொடர்பு விடுபட்டுப் போனது, இரவுபகலாக இதற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று விவரித்துச் சொல்ல வேண்டியதே இல்லை! அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு நல்ல தலைவனுக்குண்டான குணங்களோடு பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளைத் தேற்றிய விதம் இருந்தது. நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதற்கு மேல் ஒரு நல்ல தலைவன் செய்திருக்கக் கூடியது வேறென்ன சொல்லுங்கள்! 


விக்ரம் என்கிற lander வேண்டுமானால் தொடர்பிழந்து போயிருக்கலாம்! ஆனால் அதன் பணி 5% தான்! ஆர்பிட்டர் சந்திரனை மிக அணுக்கமாகப் படமெடுக்க முடியும்! நிலவைக்குறித்த ஆய்வுகளை  இன்னும் செம்மையாக மேற்கொள்ளத்  தேவையான தகவல்களைத் திரட்ட முடியும் என்பதே மிக நல்ல செய்தி! வழக்கம் போல இதையும் கலாய்க்க வந்த பாகிஸ்தானிய அமைச்சர் ட்வீட்டரில் வறுபட்டு வருகிறாராம்! 

Science & Technology Minister of Pakistan doesn't even know the spelling of 'Satellite'. Not only they're illiterate, they're too dumb to even use a feature like auto-correct
🤣
😂
🤣
#Chandrayan2 #ISRO
Quote Tweet
Ch Fawad Hussain
@fawadchaudhry
·
Modi g is giving Bhashan on Sattelite communication as he is actually an astronaut and not politician, Lok Sabha shld ask him QS on wasting 900 crore Rs of a poor nation... twitter.com/ndtv/status/11
3:31 AM · Sep 7, 2019


சிங்கத்தைப்பற்றி பேசுகிற இடத்தில் ஈ கொசு எறும்பைப் பற்றி எல்லாம் பேசலாமா? பொருத்தம் தானா என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா? இது மதுரை திமுகவின் 42வது வட்டக் காமெடி அல்லது லந்து! இந்தப்போஸ்டர் மு.க.அழகிரியை வம்பிழுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதா? அல்லது மதுரை இன்னும் மு.க.அழகிரியின் கோட்டை தான் என்பதை உதயநிதி ஸ்டாலினுக்கு உணர்த்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதா?   மருதைக்காரனான எனக்கே கொஞ்சம் குழப்பம் தான்!  

மீண்டும் சந்திப்போம். 
         

தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள்......?!

2010 ஜூலையில் எழுதிய ஒரு பதிவுக்கு சுமார் ஒன்பது  ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரே ஒரு பின்னூட்டம், ஒரே வரிப் பின்னூட்டமாக வந்தால் எப்படி உணர்வீர்கள்?

முக்கியமான அவசியமான பதிவு இது.  

பதிவை யாரவது வாசித்தார்களா, என்ன நினைக்கிறார்கள் என்பதைத்    தெரிந்து கொள்கிற ஆவல் எனக்கும் இருந்தது.

வலைப்பதிவெழுத வந்த நாட்களில் இங்கே இருந்த சூழ்நிலை கோஷ்டிகள் எதிலும் பட்டுக்கொள்ளாமல், பிரபல பதிவராக ஆகவும் முடியாமல், திரட்டிகள் எதிலும் இணைத்துக் கொள்ளாமல் எழுதிக் கொண்டிருந்த நாட்கள் அவை. என் மனத் திருப்திக்காகவே இன்றைக்கும் எழுதிக் கொண்டு வருகிறேன். அப்படி எழுதிய ஒரு பதிவின் மீள்பதிவாக .....   

தலைமைப் பண்பு, தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்ற தலைப்பில், ஸ்ட்ராடெஜி அண்ட் பிசினெஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில், இன்னும் பத்தாண்டுகளுக்காவது நீடித்து  நிற்கக் கூடியதான மிகச் சிறந்த கருத்துக்கள் என்று ஒரு பத்துக் கருத்துக்களின் பட்டியலில், இந்த முதல் ஐந்தை முந்தைய பதிவில் பார்த்திருக்கிறோம்! இந்தக் கட்டுரையே 2005 இல் வெளி வந்தது தான் என்றாலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதனாலேயே அதன் கருத்தை வைத்து எழுதப் பட்ட பதிவு அது. அந்த முதல் ஐந்து கருத்துக்கள் அல்லது காரணங்கள்!


1. Execution
2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology

இந்த ஐந்தாவதான டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி --Disruptive Innovation! இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் வலைத்தளத்துக்கு லிங்க் இருந்ததைப் பார்த்து, அவர் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலாண்மை இயலின் குரு என்று  அழைக்கப்படும்  C K பிரஹலாத்  மறைவை ஒட்டி அஞ்சலிப்பதிவில், இங்கே கடலூரில் வெல்வெட் ஷாம்பூ அனுபவம், அதையே மேலாண்மை இயலில், பிரமிடின் அடித்தளத்தில் குவிந்து கிடக்கும் வளங்கள் என்று பிரஹலாத் சொன்னதைக் குறிப்பிட்டிருந்ததை, நினைவு படுத்திக் கொள்ள முடியுமானால், பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் சொல்வதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

வெல்வெட் ஷாம்பூ அனுபவம் என்ன?  என்று இந்தப் பதிவில் ஆரம்பித்தது, பின்னூட்டங்களில் கொஞ்சம் விவாதம் திசை மாறிப் போய்விடவே அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.எந்தப் புதுமையானாலும், ஒரு கட்டத்தில் பழசாகிப் போய் வழக்கொழிந்து விட வேண்டியது தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?!

ஒரு சின்னக் கதையைப்  பார்ப்போம்! கதைக்குப் பின்னால் உள்ள முழு செய்தி, தகவல்களைத் தெரிந்து கொள்ள இங்கே.
1904 இல் அமெரிக்காவில் மிசெளரி மாநிலத்தில் செயின்ட் லூயி என்ற இடத்தில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருந்த சமயம். ஒரு கடையில் ஐஸ் க்ரீம் விற்பனை நடந்து கொண்டிருந்தது. அடுத்த கடையில்,. சோளமாவினால் செய்யப் பட்ட வா ஃபர்கள் தயாரிக்கிற கடை ஒன்று.ஐஸ்க்ரீம் விற்பனை செய்கிற கடையில் ஐஸ்க்ரீம் வைத்துக் கொடுக்கிற கண்ணாடிக் கோப்பைகள் தீர்ந்துபோய்விட்டது. பக்கத்துக் கடையில் ஏதாவது செய்து தர முடியுமா என்று கேட்டதில் உருவானது தான் இன்றைக்கும் மிகப் பிரபலமாக இருக்கும் கோன் ஐஸ் க்ரீம்! இந்தக் கோன்களின் வசதி என்னவென்றால்,  அப்படியே ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிட்டு விடலாம்! தனியாக சுவை என்று இல்லாவிட்டாலும், ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிடும் போது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதல்லவா! இன்றைக்கு நமக்குப் பழகிப் போய்விட்டபடியால், இந்த யோசனையில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால், அறிமுகம் செய்யப்பட அந்த ஆரம்ப நாட்களில் இந்த கோன்  ப்ளஸ் ஐஸ் க்ரீம் மிகப் பெரிய சக்சஸ் பார்முலாவாக இருந்தது.  இன்றைக்கும், உலகமெங்கும் ஐஸ்க்ரீம் வர்த்தகத்தில் கோன் ஐஸ்க்ரீம் செக்மென்ட் குறிப்பிடத் தகுந்த சதவீதம் இருக்கிறது.

தனித்தனி சம்பவங்கள், உதாரணங்களைப் பிடித்துக் கொண்டு விவாதத்தைத் தொடர்ந்தால் விவாதம் திசைமாறித் தான் போகும். இதை மனதில் வைத்துக் கொண்டு மீதம் உள்ள ஐந்தையும் பார்த்துவிடுவோமா?

ஆறாவதாகதலைவர்களை உருவாக்குதல்.

இதுவரை நமக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டதெல்லாம்தனக்கொரு பாதை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான் என்ற மாதிரித் தான். இந்த மாதிரி நடந்து நடந்து நிறுவனங்களும் சரி, நாடுகளும் சரி குட்டிச் சுவராகிப் போனது தான் மிச்சம். தலைமை தாங்க என்னவோ சிலருக்கு மட்டுமே தகுதி இருப்பதுபோலவும், அந்த மாதிரி சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் அமர்த்தி வைப்பது என்பது எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை, நாம் தேர்ந்தெடுத்து சட்டசபை, நாடாளுமன்றம் என்று மட்டுமில்லை, தம்மாத்தூண்டு வார்டு கவுன்சிலர் வரை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் இல்லையா? நான் ஆளப் பிறந்தவன், ஆத்திரப் பட மாட்டேன்டைப் ஆசாமிகள் எவருமே உண்மையில் இல்லை. அப்படிச் சொல்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. எவரை வேண்டுமானாலும், தலைமைப் பொறுப்புக்களைச் சுமப்பதற்குத் தயார் செய்ய முடியும்.

தலைமைப் பண்பு என்பது உத்தரவு போட்டு, அதை நிறைவேற்றுகிறார்களா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதல்ல என்பதைப் புரிந்து கொண்டால் போதும். தலைமை என்பது மேல்மட்டம் என்பதாக இல்லாமல், சேர்ந்தே செயல்படும் அங்கமாக, ஒரு குழுவின் உயிரோட்டமாக இருக்குமானால் தலைமைப் பண்பு என்பது-- பொறுப்பை ஏற்றுக் கொள்வது, பொறுப்புடன் செயல் படுவது, தவறுகளுக்குக் காரணம் யார் என்பதைப் பார்த்துத் தலையைச் சீவுகிற கத்தியாக இல்லாமல், தவறை எப்படி சரி செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் புத்தியாக இருப்பது என்று வரிசையாக பாசிடிவான நிறைய விஷயங்களை எல்லோரிடத்திலும் விதைக்கலாம், வளர்க்கலாம் என்பதும் விளங்கும். ஆக முதலில் பார்த்த ஐந்து காரணங்களையும் தொடர்ந்து பற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஆறாவதான இந்தத் தலைமைப் பண்பை உருவாக்குதல் மிகவும் அவசியமானதாக ஆகிறது.

மேலாண்மை, தலைமை பற்றிய கண்ணோட்டங்கள் நிறையவே மாறியிருக்கின்றன. இந்த ஒரு கருத்தை மட்டும் நிறையக் கோணங்களில் இருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. வாசகர்களுடைய கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஏழாவதாக நிறுவனத்தின் பண்புகள், மூலக் கூறுகள் அல்லதுDNA 

ஸ்தாபனம் என்றால் என்ன 
என்ற கேள்வியை இந்தப் பதிவிலேயே முன்பொருதரம் பார்த்திருக்கிறோம். எந்தவொரு நிறுவனமும் சில அடிப்படைகளின் மீது தான் எழுப்பப்படுகிறது. அந்த அடிப்படைகள் அடிபட்டுப் போய்விடாமல், வலுவாக இருக்கின்றனவா என்ற சோதனையே பெரும்பாலான நிறுவனங்களில் நிகழ்வதில்லை. ஏன் தோற்கிறோம் என்பது புரியாமலேயே, தொடர்ந்து பழைய தவறுகளையே செய்து கொண்டு தோற்றுக் கொண்டு இருக்கிற ஒரு புள்ளி ராசா வங்கியைப் பற்றி இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் அதன் தலைமை நிர்வாகியாக இருந்த ஒருவர், வங்கிக்குள் உள்சுற்றுக்கு வெளியிடப்படும் ஹவுஸ் மாகசினில் வெளிப்படையாகவே புலம்பினார். மற்ற வங்கிகளைக் காட்டிலும், வட்டி குறைவு, சேவைக் கட்டணங்கள் குறைவு, வாடிக்கையாளர் காலைப் பிடித்து சேவை செய்வதில் கூட முதலிடம் தான் அப்படியிருந்தும் நம்மால் ஏன் அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியவில்லை, ஏன் இருக்கிற வாடிக்கையாளர்களையுமே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று கேள்விகளை எழுப்பியிருந்தார். கேள்விகளைக் கேட்கத் தெரிந்த அளவுக்கு, விடை தேடத் தெரியவில்லை என்பதாலோ, அல்லது விடை தேடத் தயாராக இல்லை என்பதாலோ, அந்தப் பொதுத்துறை வங்கி இன்னமும் அதே திரிசங்கு சுவர்க்கத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் கண் முன்னாலேயே பூதாகாரமாக இருந்தும் அவர்களுக்கு இன்றைக்கு வரை கண்ணில் படவில்லை!
Consistency! Continuity! Competency! இந்த மூன்றுC'க்களும் அந்த வங்கியில் இருந்ததே இல்லை!  இப்போது Core Banking என்று நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். தொழில் நுட்பம் வந்தாயிற்று! தொழில் நுட்பம் தெரிந்து வேலை செய்கிறவர்கள் இருக்க வேண்டுமே! 
ஆக அந்த நாலாவது C யும் இல்லை!

அந்த வங்கியை நம்பி, வாடிக்கையாளர் எவரும் தங்களுடைய வங்கித் தேவைகளை முடிவு செய்துவிட முடியாது. வாடிக்கையாளர் சேவை என்பது, சமாதானமான வார்த்தைகளில் பூசி மெழுகப் படுகிற செயலற்ற தன்மை மட்டுமே என்ற  நிலைமைதான் அந்த வங்கியில் இன்னமும் நீடிக்கிறது.

இந்த உதாரணத்தை மனதில் வைத்துக் கொண்டு, ஒரு நிறுவனம் ஜெயிப்பதற்குத் தேவையான மூலக் கூறுகளைக் கொண்டிருக்கிறதா  என்பது கொஞ்சமாவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தோன்றுகிற கருத்துக்கள், அல்லது சந்தேகம்  எதுவானாலும் தயங்காமல் கேளுங்கள்!



எட்டாவதாக, காலத்தோடு ஒட்டிய மாற்றத்திற்கான செயல்திட்டம்!
மாற்றங்கள் தவிர்க்கப் பட முடியாதவைதான்.நிறுவனங்களை பொறுத்தவரை மாற்றத்திற்குத் தயாராவதற்கே ஒரு செயல் திட்டம் இருந்தாக வேண்டும்.அப்படி செயல் திட்டமில்லாமல் செய்யப் படுகிற மாற்றங்கள், தலை நகரை மாற்றிய துக்ளக் தர்பார் மாதிரி, நோக்கம் என்னவோ சிறந்தது தான் ஆனாலும் திட்டமிடாமல் செய்யப்பட்டபோது ஏராளமான மக்களைக் காவு கொண்டதாகிப் போன மாதிரி ஆகிவிடக் கூடும். இந்த மாற்றங்களுக்கான செயல்திட்டத்தை வகுக்கும்போது, உத்தேசிக்கும் மாற்றங்கள் ஸ்தாபனத்தில் பணியாற்றும் மனிதர்களைப் பாதிக்கக் கூடியவை என்பதால், அவர்களுக்குப் புரிகிற மாதிரி, அவர்களைப் புதிய சூழ்நிலைக்குத் தயார் செய்கிற மாதிரிப் பக்குவமாகக் கையாள்வது என்பதில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு முதலில் தெளிவு வேண்டும். மாற்றங்கள், தலைமையில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அப்படி மாற்றங்களைப் படிப்படியாக நிறுவனத்தின் ஒவ்வொரு தளத்துக்கும் விரிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தனிநபர்/ஊழியருக்கும், மாற்றங்கள் எப்படி அவசியமானவை, எந்த அளவுக்குத் தயார் செய்து கொள்ளவேண்டும், மாற்றங்களால் சாதிக்க விரும்புவது என்ன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இப்படி மாற்றங்களை நிர்வாகம் செய்வதில், அமுல்படுத்துவதிலேயே நிறையப் பேச முடியும். Change Management என்று கூகிளில் தேடிப் பாருங்கள். உங்களுடைய கருத்துக்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.

ஒன்பதாவது கருத்தாக, சிக்கல்களைப் புரிந்து கொள்வது, நிர்வகிப்பது.
ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள், அதில் எதிர்பார்க்கும் விளைவுகள் என்பவை கொஞ்சம் சிக்கலானவை தான். இரண்டும் இணைந்தும் கூட்டினால் நான்கு என்று தெளிவான விடை கணிதத்தில் கிடைப்பது போல, ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யும்போது கிடைத்துவிடுவதில்லை. தொடர்ந்து கற்றுக் கொள்ளும் நிறுவனமாக, செயல்படுத்துவதில் தெளிவான நிறுவனமாக, அப்புறம் disruptive technology என்று பார்த்தோம் இல்லையா, அப்படிக் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்புக்களைக் கூட சமயோசிதமாகப் பயன்படுத்தத் தெரிந்த நிறுவனமாக இருந்தால், எப்படிப்பட்ட சிக்கலான தருணத்தையும் ஈடுகொடுத்து வெல்ல முடியும். 

இந்த ஒன்பதாவது கருத்தில்,காம்ப்லெக்சிடி  தியரி என்று கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கணிதம் கலந்த ஒரு முறையை வைத்து நிர்வாகம் செயல்படுவதை ஒரு முக்கியமான கருத்தாக முன்வைக்கிறார்கள். Complexity Theory  என்று சொல்லப்படுகிற  இந்த முறை உண்மையிலேயே நம்பத் தகுந்தது தானா, நீடித்து நிற்கக் கூடியதுதானா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அல்லது, இதன் பயன்பாட்டைக் காலம் தான் சரி அல்லது தவறு எனத் தீர்மானிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
பத்தாவதாக, Lean Thinking! டொயோடா கார் தயாரிப்பு முறையை முன்னுதாரணமாக வைத்து சொல்லப் படுகிற இந்த முறையை, ஒரு நிறுவனம், ஊளைச் சதையைக் குறைத்து, கட்டுமஸ்தாக உடலை வைத்திருப்பது போல, விரையங்களை முழுமையாகத் தவிர்ப்பது, தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறுகள் ஆரம்ப நிலையிலேயே களையப் படுவது, ஊழியர்களின் முழுத் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ஒரு விஷயம் இரண்டாண்டுகளுக்கு முன்னால் வரவேற்கப்பட்டது போல இன்றைக்கு இல்லை. டொயோடா நிறுவனம், தங்களுடைய நிறுவனக் கலாச்சாரமாக வைத்திருந்த ஒரு தொழில், நிறுவனப் பண்பு நேற்று வரை ஆதர்சமாகக் கொண்டாடப் பட்டது, அதைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போன மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள், இந்த நிறுவனப் பண்பையே இன்றைக்குக் கேலி செய்யப் படுகிற ஒன்றாக மாற்றிவிட்ட சோகத்தையும், டொயோடா பிரச்சினையைத் தொட்டு  இந்தப் பக்கங்களில் முன்னரே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
1. Execution
2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology
6. Leadership Development
7. Organaisational DNA
8. Strategy based Transformation
9. Complexity Theory
10.Lean Thinking

இந்தப் பத்தும் தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீடித்திருக்கக் கூடிய கருத்துக்களாக, சொல்லப் படுகின்றன.

உங்களுடைய பார்வையில் எப்படித் தோன்றுகிறது என்பதைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்! 

ஒரிஜினலாக இந்தக் கருத்துக்கள் சொல்லப்பட்டது 2005 இல். அடுத்த பத்துவருடங்களுக்கு என்று சொல்லப்பட்டே 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு 21 ஆம் நூற்றாண்டின் முதலிரண்டு தசாப்தங்கள் நிறையப்போகிற தருணத்தில் இவை எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

ஜெயிக்கலாம் வாங்க!