வடிவேலு அடி வாங்கினா நமக்குக் காமெடி! டொயோடா சரிந்தால்.....!

டொயோடா கார் நிறுவனம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் பலவிதமான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு முன்னாள் அப்டேட் செய்யப்பட்ட செய்தி, இந்தப் பிரச்சினையால், அமெரிக்க ஜப்பானிய உறவுகளில் எந்தவிதமான பாதிப்பும் வராது என்று ஜப்பானியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவிக்கிற அளவுக்கு விவகாரம் ஊதி ஊதிப் பெரிதாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழில், நேற்று நான் சின்னச் சின்னச் செய்தியாய் போட்ட பிறகு வேறு எவரும் இதைத் தொட்டு எழுதியிருக்கிறார்களா என்று தேடியதில் இரண்டு பதிவுகள், ஒன்று ஆர்வி எழுதியது, ஆறாம் தேதியே வந்திருக்கிறது, இன்னொன்று ரவி ஆதித்யா எழுதியது இன்றைக்கு வெளியாகி இருக்கிறது. 

ஆர்வி கிடைத்த செய்திகளை வைத்து அவசர அவசரமாக ஒரு முடிவு பண்ணிவிட்ட மாதிரியே, டொயோடா ஒரு சகாப்தத்தின் முடிவா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அடுத்த பதிவோ, ஜப்பானிய நிர்வாக, மேலாண்மைமுறைகளைக் கொஞ்சம் நக்கலடிக்கிற மாதிரிப் போகிறது!

Financial Times நாளிதழில் மேலாண்மை குறித்த பதிவுகளில் ஒன்று கொஞ்சம் நிதானமாக, இந்தப் பிரச்சினைக்கு  நீங்களாக இருந்தால் எப்படித் தீர்வு காண்பீர்கள் என்ற கேள்வியை எழுப்பி, தவறு எந்த இடத்தில் நடந்திருக்கலாம், அதை எப்படி சரி செய்ய முடியும்  என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறது.

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில், கார்தயாரிப்புத் துறையை பற்றிப் பதிவுகள் எழுதும் மாத்யூ டிபோர்ட்ஒட்டு மொத்தமாக டொயோடா தயாரிப்பு முறை (Toyota Production System) என்று ஆச்சரியத்தோடு இது வரை கொண்டாடப்பட்டதையே, நடைமுறை  சாத்தியமில்லாதது, அதன் தற்போதைய  முடிவு அதன் முறைகளிலேயே விதைக்கப் பட்டு விட்டது என்று சொல்வதை இந்த மேலாண்மைப் பதிவு மறுத்துச் சொல்கிறது.

மாத்யூ டிபோர்ட் தன்னுடைய பதிவில் சொல்கிறார்:


"The Toyota Way broke from 20th-century mass-production methods and a rigid, Western-style bureaucracy in favor of an equally rigid insistence on doing everything with maximum efficiency. Ruthlessly eliminate waste. Fix problems immediately. Think long-term. Not exactly a stick-on-the-bumpers-and-roll-’em-out-the-door strategy. 

But Toyota doesn’t just build cars and trucks. It creates a state of mind, and that state of mind enables absolute trust in Toyota. 

You could call it bad luck or bad timing that this spate of recalls arrived just as Toyota finally surpassed its longtime rival, General Motors, to seize the prize of being the world’s top automaker that it long coveted. But the reality is that its management and manufacturing culture was ideally prepared to get to No. 1, but stunningly ill suited to actually be No. 1.

Comfortably preoccupied with rooting out internal weakness, the Toyota Way is lost when it comes to contending with outside threats. For such an intense system to function properly, employees have to blindly adhere to it; overconfidence is the natural outcome of this arrangement. Yes, any worker is empowered to stop the assembly line because he spots a flaw. But if a flaw does get through, the company as a whole is loath to admit that the system broke down."

மாத்யூவின் வார்த்தைகளைக் கவனித்தால், டொயோடா உருவாக்கிய ஒரு உற்பத்திக் கலையை அப்படியே, அமெரிக்கச் செருக்கில் மறுக்கும் போக்கு தான் தென்படுகிறதே தவிரவேறு சரியான விமரிசனமாகவோ, காரணங்களைத் தேட வேண்டுமென்ற முனைப்போ இல்லை.  
கைஜென் என்பது தொடர்ந்து முன்னேறுவது! முன்னேறும் வேகத்தை இழந்தால் கீழே விழ வேண்டியது தான்!
ரவிசங்கர்! கைஜென் மீது உங்களுக்கு ஏன் அத்தனை கோபம்?
 
கடந்த பத்து வருடங்களில் டொயோடா  விரிவாக்கம் செய்து கொண்டே போனதில் அதன் முன்னணி நிர்வாகிகள் தரம் பற்றிய சிந்தனையை மறந்து போனது, நிறுவனத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. டொயோடா உற்பத்தி முறையின் தாரக மந்திரமான தவறு தெரிய வந்தால், தவறைக் கண்டுபிடித்துக் களைகிற வரையில் உற்பத்தியை நிறுத்துவது என்ற முக்கியமான நடைமுறை காற்றில் விடப்பட்டது கூடக் காரணமாக இருக்கலாம். 

இந்தப் பிரச்சினையில் இருந்து டொயோடா நிறுவனம் எப்படி மீண்டு எழுகிறது  என்பதே மேலாண்மை, நிர்வாகம், சிக்கல்கள் சவால்களைச் சந்திப்பது முதலான துறைகளில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பாடமாகக் கூட இருக்கலாம்!.

ஆனால், ஜப்பானிய நிறுவனங்கள், தரம் ஒன்றை முக்கியமாக வைத்தே தங்களுடைய பொருட்களுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்களைத் தேடிக் கொண்டன.இன்றைய சந்தையில், நிலவும் கடுமையான போட்டி, தரத்தில் கை வைக்காமலேயே உற்பத்திச் செலவுகளைக் குறைப்பது, வாடிக்கையாளர்களுடைய திருப்தியை முதன்மையாகக் கொண்டு இயங்குவதில், மேற்கில் இருந்து கடன் வாங்கிய நிர்வாக, தரக் கட்டுப்பாட்டு முறை தான் என்றாலும், கீழைய நாடுகளின் அனுபவ அறிவும், முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய உழைப்புமே ஜப்பானியர்களை இந்த அளாவுக்கு முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இதற்கு நேர் மாறாக, சீனாவின் ஈயடிச்சான் காப்பி, தரத்தைப் பற்றிய எந்தக் கவலையுமே இல்லாமல் உற்பத்தி செய்து, அதை அண்டை நாடுகளின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கக் கொண்டுபோய்க் கொட்டுவது போல இல்லை என்பதைத் தெளிவாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முயற்சியே இல்லாமல்,அடுத்தவர்களுடைய உழைப்பை, அறிவை அப்படியே லபக்கிக் கொள்வது சீனர்களுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது.

ஜப்பான் தன்னுடைய தொழில் துறையை நவீனப் படுத்தி இந்த அளவுக்கு முன்னேறி, உலகின் இரண்டாவது பொருளாதார உச்சமாக இன்றைக்கு இருக்கிறது என்றால், அது, அந்த மக்களுடைய உழைப்பு, ஈடுபாடு, டொயோடா முறை போல, தர உத்தரவாதம், நம்பிக்கையைப் பெற முடிந்ததன் பின்னணியாக இருக்கிறது என்பது தான்.

அமெரிக்க நிறுவனங்களின் தன்மையே வேறு. என்ரான் நிறுவனம்  கணக்கில் தில்லு முல்லு செய்து, முதலீட்டாளர்களுக்கு நிறைய ஆதாயம் தருவது போல ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கடைசியில் கரைந்து போனது போல அல்ல. 

ஆயிரக்கணக்கான மக்களைப் பலி வாங்கி, லட்சக்கணக்கான மக்களை முடமாக்கி, ஒரு கையாலாகாத அரசு இங்கே இருப்பதைப் பயன்படுத்தி, யூனியன் கார்பைடின் நிர்வாகி ஆண்டர்சன் இன்னும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருப்பதைப் போல அல்ல.

ஜப்பானியர்கள் ஒன்றும் புத்தர்கள் அல்ல.
உண்மை தான்! இரண்டாம் உலகப் போரில் செமத்தியாக அடி வாங்கி இருக்கவிட்டால், மிகப் பெரிய கொடூரமான சமூகமாகக் கூட இருந்திருக்கக் கூடும்!  

ஜப்பானியத் தொழிற்சாலைகளில் வேலைக்கு எடுக்கப்படும் பயிற்சியாளர்கள், வெளிநாட்டு வேலையாட்களை ஈவு இரக்கமில்லாமல் நடத்துவது, சம்பள வேறுபாடு போன்ற பல பிரச்சினைகளும் ஜப்பானியத் தொழில் துறை, பழைய மேட்டிமை மனப்பான்மையோடு இயங்குவதையும் ஒரு பக்கம் பார்க்கத் தான் முடிகிறது.

அது வேறு!

டொயோடா முறை ஒரு நல்ல முறை தான்! அதைக் கடைப்பிடிப்பதில் ஏற்படுகிற கோளாறுகள், அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதைக் கவனிப்பது வேறு.

தரத்தை வைத்துத் தன்னை ஸ்திரப் படுத்திக் கொள்ள முனைகிற ஜப்பானிய முறைக்கும், தரத்தைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல், குப்பை கூளங்களை மிரட்டியே அடுத்த நாடுகளில் குவித்து வருகிற சீன முறைக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது, மிக மிக அவசியமான ஒன்றாக, மேலாண்மை, நிர்வாகம் சம்பந்தப் பட்ட விஷயமாக மட்டும் பார்க்காமல்,உலகம் எந்தத் திசையில் நகருகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

ஸ்தாபனம் Organisation என்றால் என்ன என்ற ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு எழுதிய ஒரு பழைய பதிவு, இது தொடர்பாக வேறு சில விஷயங்களையும் தெளிவு படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.


5 comments:

  1. டெயோட்டா பிரச்சனையால் பென்னகரத்தில் வரும் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு எதாவது பிரச்சனை வருமா!?

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கள். இந்திய நிறுவனங்களும் இது போல தரத்துக்கு முன்னூரிமை தருகின்ற நாள் என்று வரும். நன்றி.

    ReplyDelete
  3. வால்ஸ்!
    இடைத்தேர்தல்களுக்கு கவர் தான் முக்கியம்! பிரச்சினைகளோ, தீர்வுகளோ அல்ல!

    பித்தனின் வாக்கு!

    இங்கே தரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் நிறைய உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஜப்பானிய நிர்வாக முறைகளைப் பின்பற்றும் பிரபலமான பிராண்டுகளும் இங்கே உண்டு. ஆக, என்று வரும் என்று அல்ல, ஏற்கெனெவே வந்தாயிற்று என்பது தான் பதில்.

    சர்வதேச சந்தையில் போட்டி போடா வேண்டும் என்றால் தரத்தை முன்வைக்காமல் முடியாது.

    ReplyDelete
  4. Quality,Safety பற்றி இப்போது யாரும் கவலை படுவதாக தெரியவில்லை. சீனாவின் கார் விற்பனை ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் என முன்னே சென்று கொண்டிருக்கிறது. இது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த விடயம் கார் தயாரிப்பில் மட்டுமல்ல, மற்ற உற்பத்தியிலும் தான். சீனாவில் இருந்து வருகின்ற பல பெருட்கள் தரமற்றவை. இவை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  5. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே!

    தவிர, டொயோடா தனது கோட்பாடுகளில் கொஞ்சம் தளர்ந்து விட்டதோ என்னவோ?

    ஸ்தாபனம் என்றால் என்ன என்ற கடைசி வரியில் இருக்கும் லிங்கில் இந்தப் பிரச்சினையைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருப்பதைப் படிக்கலாம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!