பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர் விரும்பியோ விரும்பாமலோ இங்கே இந்திய அரசியல்கட்சிகள், சில ஊடகங்களின் பேசுபொருளாக ஆகியிருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதைவிட்டுவிட்டு, தங்கள் மனம் போனபோக்கில் திரிப்பது காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பு ஊடகங்களுடைய வாடிக்கையாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. அதை பற்றிய சின்னக் குறிப்போ விவாதமோ கூட இங்கே நடப்பதில்லை என்ற சூழலில் காவேரி செய்திகள் சேனலில் ஒரு விவாதம்.
கொஞ்சம் பார்த்துவிட்டு, மனதில் என்ன தோன்றுகிறது என்பதைக் கொஞ்சம் மனம்திறந்து சொல்லுங்களேன்!
இந்த வீடியோவை யூட்யூப் தளத்தில் அதற்கு வந்திருக்கிற பின்னூட்டங்களோடு சேர்த்துப் பாருங்கள்! எவ்வளவு வக்கிரமான ஆபாசமான வார்த்தைகளில் ஒரு வித வன்மத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். யார் இது மாதிரியான வெறுப்பரசியலை வளர்த்துக் கொண்டிருப்பது என்பதைக் கண்டுகொள்வது கடினமானதில்லை. இதே கோஷ்டிகள்தான் கருத்துசுதந்திரம் பறிபோச்சு சகிப்புத் தன்மை அத்துப் போச்சு பாசிசம் ஒயிக என்றும் கூவியவர்கள் என்பதும் புரிகிறதா? காங்கிரஸ் திமுக கூட்டணியைத் தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதில் உள்ள நியாயம் புரிகிறதா? என்ன செய்யப் போகிறீர்கள்?
கொஞ்சம் பழசுதான்! இசுடாலினுடைய கறுப்புப் பக்கங்கள் என்று ஆனந்தவிகடனே சொல்வது கொஞ்சம் அல்ல கொள்ளை கொள்ளையாக அதிசயம். இசுடாலினுடைய நிர்வாகத்திறமை கூட இதில் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறதே, கவனியுங்கள்!
கஸ்தூரி பேட்டியைப் பார்த்தீர்களா? இந்தப் பேட்டி மீதான அபிப்பிராயங்கள் எப்படியாம்?
மத்தியில் மாற்றம் வாய்ப்பு இல்லை- கஸ்தூரி BJP
பேனாமி அரசுக்கு தோல்வி - DMK சொம்பு
நாம் தமிழர் மட்டுமே பெண்களுக்கு 20 சீட் கொடுத்துள்ளது- கஸ் NTK
ராஜ்சத்யன் நல்லவர் - ADMK பீரங்கி
புதியர்களை தேர்தெடுங்கள்- MNM கொபசெ
பேட்டி என்னவோ ஒண்ணுதான். பிரிச்சு மேயறீங்களே யப்பா !
11:04 AM - 9 Apr 2019
இவ்வளவு நீட்டி முழக்கியும் கூட, பதிவை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே புரியாமல் இருப்பது, அப்போ நான் மட்டும்தானா?