என்னத்த பதிவெழுதி ..என்னத்த அரசியல் பேசி......!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர் விரும்பியோ விரும்பாமலோ இங்கே இந்திய அரசியல்கட்சிகள், சில ஊடகங்களின் பேசுபொருளாக ஆகியிருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதைவிட்டுவிட்டு, தங்கள் மனம் போனபோக்கில் திரிப்பது காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பு ஊடகங்களுடைய வாடிக்கையாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. அதை பற்றிய சின்னக் குறிப்போ விவாதமோ கூட இங்கே நடப்பதில்லை என்ற சூழலில் காவேரி செய்திகள் சேனலில் ஒரு விவாதம்.


கொஞ்சம் பார்த்துவிட்டு, மனதில் என்ன தோன்றுகிறது என்பதைக் கொஞ்சம் மனம்திறந்து சொல்லுங்களேன்!


இந்த வீடியோவை யூட்யூப் தளத்தில் அதற்கு வந்திருக்கிற பின்னூட்டங்களோடு சேர்த்துப் பாருங்கள்! எவ்வளவு வக்கிரமான ஆபாசமான வார்த்தைகளில் ஒரு வித வன்மத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். யார் இது மாதிரியான வெறுப்பரசியலை  வளர்த்துக் கொண்டிருப்பது என்பதைக் கண்டுகொள்வது கடினமானதில்லை. இதே கோஷ்டிகள்தான் கருத்துசுதந்திரம் பறிபோச்சு சகிப்புத் தன்மை அத்துப் போச்சு பாசிசம் ஒயிக என்றும் கூவியவர்கள் என்பதும் புரிகிறதா? காங்கிரஸ் திமுக கூட்டணியைத் தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதில் உள்ள நியாயம் புரிகிறதா? என்ன செய்யப் போகிறீர்கள்?  

      
கொஞ்சம் பழசுதான்! இசுடாலினுடைய கறுப்புப் பக்கங்கள் என்று ஆனந்தவிகடனே சொல்வது கொஞ்சம் அல்ல கொள்ளை கொள்ளையாக அதிசயம். இசுடாலினுடைய நிர்வாகத்திறமை கூட இதில் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறதே, கவனியுங்கள்!


கஸ்தூரி பேட்டியைப் பார்த்தீர்களா? இந்தப் பேட்டி மீதான அபிப்பிராயங்கள் எப்படியாம்?

மத்தியில் மாற்றம் வாய்ப்பு இல்லை- கஸ்தூரி BJP பேனாமி அரசுக்கு தோல்வி - DMK சொம்பு நாம் தமிழர் மட்டுமே பெண்களுக்கு 20 சீட் கொடுத்துள்ளது- கஸ் NTK ராஜ்சத்யன் நல்லவர் - ADMK பீரங்கி புதியர்களை தேர்தெடுங்கள்- MNM கொபசெ பேட்டி என்னவோ ஒண்ணுதான். பிரிச்சு மேயறீங்களே யப்பா !
11:04 AM - 9 Apr 2019   

இவ்வளவு நீட்டி முழக்கியும் கூட, பதிவை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே புரியாமல் இருப்பது, அப்போ  நான் மட்டும்தானா?        

6 comments:

 1. ஊடகங்களுக்கு வேற வேலை இல்லை. விட்டால் காக்காமுட்டை பாட்டிட்டகூட பேட்டி எடுத்து வெளியிடுவாங்க. கஸ்தூரிக்கு என்ன தெரியும்னு அவங்ககிட்ட பாஞ்சு பாஞ்சு பேட்டி எடுக்கறாங்க?

  விகடன், அரசியல் சார்பு எடுத்து பேட்டிகள்லாம் வெளியிடும்போது, முன்பு வெளியிட்ட பேட்டி பல்லிளிக்கும். முன்பு, கேடி பிரதர்ஸ் சார்பில், அவர்களுக்கு ஏற்றமாதிரி வெளியிட்ட பேட்டிகள் இப்போது பல்லிளிக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. ஊடகக் கேவல்களை விடுங்கள்! இதெல்லாம் ஒரு பிழைப்பு!

   தந்தி டிவி KDbrothers வசம் கைமாறிவிட்டதாக அங்கங்கே சில பகிர்வுகள்! அதென்னவென்று ஏதாவது தெரியுமா?

   Delete
  2. Unknown என்று ஒரு அனாமதேய blogger IDயிலிருந்து ஸ்ம்ருதி ஈரானியுடைய கல்வித்தகுதி பற்றி எழுதுங்களேன் என்று இரண்டு பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் வந்திருப்பது நீக்கப்பட்டது. பின்னூட்டப் பெட்டியின் கீழேயே அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்! என்று தெளிவாகச் சொன்ன பிறகும் கூட இப்படி!

   அடுத்து, இங்கே என்ன எழுதவேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? எனக்கு யோசனை சொல்கிற இவர்களே எழுதவேண்டியதுதானே? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்போவது இல்லை. இவர்கள் இங்கே வந்து இப்ப்டிக் கேள்வி எழுப்புவது எதற்காக என்பதை ஒருதரம் யோசித்துப் பார்க்கட்டும் என்பதற்காக!
   அனாமதேயங்களுடைய பின்னூட்டங்களை ஏற்பதற்கில்லை என்று மீண்டும் சொல்வதற்காக.

   Delete
  3. கல்வித் தகுதி - இது பெரிய விஷயமில்லை. அதிலும் அமைச்சர்களுக்குத் தகுதி வேணும்னா, நம்ம ஊர்ல 90%, கட்சித் தலைவர்கள், அவர்களுக்குத் தெரிந்த வேறு வேலையைப் பார்க்கப்போகவேண்டியதுதான், ஸ்டாலின் முதல் கொண்டு. மின்சாரத் துறையைக் கையாடிய (சாரி..கையாண்ட) வீராசாமி, பொதுப்பணித்துறை துரை முருகன், துணை முதலமைச்சர் ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம் -இவங்களோட கல்வித் தகுதி என்ன?

   Delete
  4. 80% பங்குகள் வாங்குவதற்கு வசதியாகத்தான் பாண்டேவைக் கழற்றிவிட்டதாகப் பேச்சு.

   Delete
  5. ஏற்கெனெவே அவர்களிடம் செய்தி சேனல் இருக்கிறபோது சன் நெட் ஒர்க் கைகளுக்குப் போயிருக்கிறது என்பது கொஞ்சம் ஆச்சரியமான செய்தி.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!