படங்களோடு வரும் பதிவு! அரசியல் செய்திகள் இன்று!

இன்றைய தலைப்புச்செய்தி இது! சுப்ரமணியன் சுவாமியின் கலகமும்  நன்மையில் முடியட்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்! நம்மூர் விசாரணை நடைமுறைகளில் ஒரு தெளிவான முடிவு எடுப்பதென்பது குதிரைக்கொம்புபோல என்பதால்!  

பிரிட்டன் குடியுரிமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அந்த நோட்டீசில் கூறப் பட்டுள்ளதாவது : இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட பேக்காப்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி உள்ளதாகவும், அதன் இயக்குனராக நீங்கள் இருப்பதாகவும் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சாமி புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 10.10.2005 மற்றும் 31.10.2006 ல் பதிவு செய்யப் பட்ட கம்பெனியின் வரவு செலவு அறிக்கையில், உஙகளின் பிறந்த தேதி 19.06.1970 எனக் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனக்கூறப்பட்டுள்ளது. 17.02.2009 ல் அந்த நிறுவனத்தை கலைக்க அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும், உங்களது குடிரிமை பிரிட்டன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த நோட்டீஸ் கிடைத்த பின் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் . இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. 




என் அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவின் கிண்டல் கேலி நிரம்பிய கார்டூன் இல்லாமல் பதிவு சோபிக்க மாட்டேன் என்கிறதோ? பிரியங்கா வாத்ரா வாராணசியில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது பற்றி என்ன சொல்கிறாராம்?
   


பாட்டி மூக்கு அச்சு அசலாக இருக்கிறதென்று தானே முதலில் சொன்னார்கள்? இப்போது என்ன ஆயிற்றாம்? பாட்டி மூக்கைப்போல  டிங்கரிங் செய்ய வேண்டியிருக்கிறதோ? 


ரிபப்லிக்  டிவியில் மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்த விவாதம் இது. கொஞ்சம் சுவாரசியமான கூச்சல்! சுமந்த் சி ராமன் காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவுகிறார். வாங்கியும் கட்டிக்  கொள்கிறார். 

தமிழக அரசியல் நிலவரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிற நக்கல்டூன் இது!



நக்கல்டூனில் இசுடாலின் மட்டுமல்ல, ரஜனி, கமல், சீமான் என்று ஒருத்தரையும் விட்டுவைக்கவில்லை. யாராவது விடுபட்டிருக்கிறார்களா? கொஞ்சம் பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்! இதற்கு என்ன அவசியம் என்கிறீர்களா? 

     
சூலூர் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ரெண்டு முருகன் திடீரென கிங் மேக்கர் ரேஞ்சுக்குப் பேசியதன் பின்னணி இன்றைய முக்கிய செய்தியாக அம்பலத்துக்கு வந்திருக்கிறது.


கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் ஆடாத ஆட்டம் ஆடித் தான் மார்க்சிஸ்ட்டுகள் மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். அவர்களைக் குறைசொல்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த மம்தா பானெர்ஜி, மார்க்சிஸ்டுகளை விட ஓவராக ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கிறார்.
     


ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க  மண்ணுக்குள்ளே போன கதை ஒனக்குத் தெரியுமா? என்று பாட்டுப் பாடுகிற நேரமல்ல, மண்ணில் இருக்கும்போதே மண்ணைக் கவ்வ வைக்க வேண்டிய நேரம் இது. 

  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!