பதிவர்வட்டம்! பானு கோம்ஸ்! மாரிதாஸ்! என்ன சொல்கிறார்கள்?

நம்மூர்ச் சூழலுக்கு  தலைமைப்பண்பு, மேலாண்மை என்பதெல்லாம் முந்தையபதிவில் சொன்ன மாதிரி செந்தில் பாலாஜிகள் க்ளாஸ் எடுப்பது மாதிரி இருந்தால் தான் ஒத்து வருமோ? BSNL மாதிரி ஒரு பொதுத்துறை நிறுவனம் மீண்டுவருமா என்பதை ஒரு விவாதப் பொருளாகவே எடுத்துக்கொள்ள இங்கே வருகிற எவருமே தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல்கள் நிகழ்வதென்பது குதிரைக் கொம்புதான் என்பதை தமிழில் எழுத வந்த இந்தப் பத்தாண்டுகளில் நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம். வலைப்பதிவுகளில் எதற்கும் உதவாத வெட்டி  அக்கப்போர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, நாம் பார்க்கும், படிக்கும் விஷயங்களில் கொஞ்சம் யோசித்து ஒரு கருத்தை முன்வைக்கவோ, முன்வைக்கப்படும் கருத்துகள் மீது கருத்துகள் சொல்லவோ முனைகிற   நல்லதொரு மாற்றமும் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இங்கே எழுதுவதில் மாற்றுக்கருத்து இருந்தால் அதையும் guest post ஆக வெளியிடத்தயார் என்று ஒரு தனிப்பதிவாகவே சொல்லியிருந்ததை நண்பர்களுக்கு நினைவூட்டி #பதிவர்வட்டம் இதையும் கவனிக்கும் என்றும் கூட நம்புகிறேன்.


எதில்தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தை இல்லையா என்று பதிவு எழுதியபோதே, ஒரு இளம் பெண்ணின் தடகளப்போட்டியில் தங்கம் வென்ற சாதனை இங்குள்ள சில அரசியல்கட்சிகளால் குறுகிய ஆதாயத்துக்காக அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டதையும் இங்கே எழுதியதை நினைவு படுத்திக் கொள்கிற மாதிரி ஒரு தொலைகாட்சி விவாதம். கண்டுகொள்வோம் கழகங்களை என்று நெல்லை ஜெபமணி அந்த நாட்களில் எழுதிய ஒரு தொடரும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது. கழகங்களோடு கூட்டாளிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது  அவசியம் என்பது  காலம் செய்திருக்கிற மாற்றம்!   இன்று மாறியிருக்கிற காட்சிகளைக் கண்டித்து எழுத நெல்லை ஜெபமணி இல்லையே என்ற குறை தெரியாமல் முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில் நிறையப்பேர் எழுதுகிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று 

Bhaskar S 

டிராஃபிக் ராமசாமியை ஒரு வழி பண்ணியாச்சு....
அம்மண ....... ஐயாகண்ணுவை தில்லிக்கு அனுப்பி பைத்தியமா மாத்தி புலம்ப விட்டாச்சு....
சிக்னல் டவர்ல ஏற்றி விட்டு தற்கொலை செய்ய தூண்டி விட்டாச்சு....

நீட் தேர்வு அனிதாவை வைத்து தற்கொலைக்கு தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடியாச்சு....
ஜல்லிக்கட்டு மெரினா கடற்கரையில் அமைதியை கெடுத்து, நக்சல்களை நுழைத்து விட்டு பிணம் கிடைக்குமான்னு முயற்சி செய்து பார்த்தாச்சு.....
தூத்துக்குடில கலவரத்தை தூண்டி விட்டு, பதிமூன்று உயிர் பறித்து அரசியல் செய்தாச்சு....
பொள்ளாச்சி சம்பவத்தை முன்னிருத்தி போராட்டம் என்று ஆரம்பித்து, அது தனது மற்றும் தனது கூட்டணி கட்சிகளின் கைவரிசை என்று தெரிந்தவுடன் எதுவுமே நடக்காத மாதிரி ஒதுங்கியாச்சு....
பஜ்ஜி கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர், டீக்கடை,...... என்று கடை கடையாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்டாச்சு.....
இப்போது என்ன பண்ணுறது....
வரும் 2 வருடத்தில் இன்னும் இரண்டு மூன்று பிணம் கிடைத்தால்தான் 2021 தேர்தல் வரை பிண அரசியல் செய்து காலத்தை ஓட்டலாம்.....
யாராவது சாதனை செய்தது பற்றி பேசினால் உடனே போய் ஒரு போட்டோ எடுத்துட்டு, பெரியார் சிலையை கையில் கொடுத்துட்டு, மத்திய அரசு தமிழினத்தை வஞ்சிக்கிறது என்று புலம்பிட்டு, மாநில அரசு தேவையான ஆதரவு தரவில்லை என்று புரளியை கிளப்பி விட்டுட்டு,
ஐயன் வள்ளுவ பெருந்தகை சொல்லி இருக்கிறார்... முயற்சி திருவினையாக்கும்-னு....
துண்டு சீட்டு எழுதி தர ஆள் இருக்கு...
முயற்சி பண்ணி பார்த்துட வேண்டியதுதான் இன்னும் இரண்டு மூன்று பிணம் கிடைக்காமலா போய் விடும்.    

இது ஒருவிதம்!  மாரிதாஸ் மாதிரி தரவுகளோடு முக்கியமான விஷயங்களை விவாதிப்பது இன்னொருவிதம்!      

வெனிசுலா நாட்டின் வீழ்ச்சி வறுமைக்குக் காரணம் விவசாயம் கைவிட்டது தான் என்று நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்கிறார்கள் மீம்ஸ் எல்லாம் பரப்புகிறார்கள், அத்துடன் நம்ம இணைய விவசாயப் போராளிகள் பிரச்சாரம் வேறு..
எதையும் முழுமையாகத் தேடிப் படிக்க வக்கு இல்லாத இந்த நாம் தமிழர் என்ற முட்டாள்களின் கூடாரம் மேற்கொள்வது முழுக்க முழுக்க Populism. வெகு ஜன மக்களைச் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டுப் பேசும் பேச்சு மட்டுமே இவர்களுடையதாக உள்ளது, அதே தான் எந்த விசயம் என்றாலும் செய்கிறார்கள். அனைத்து விசயத்தையும் விவசாயத்தை ஒப்பிட்டுப் பேசி தூண்டிவிட்டது போதாது என்று இப்போது இன்னொரு நாட்டின் நடக்கும் வறுமைக்கு நேரடியாக விவசாயத்தைக் கைவிட்டது தான் காரணம் என்று பரப்புகிறார்கள்.
வெனிசுலா இந்த நிலைக்குக் காரணம்
1.சுமார் 15வருடம் மேலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்த அரசு முன் வைத்த  தவறான பொருளாதார திட்டங்கள்.
2.அடுத்து இன்று இருக்கும் ஆட்சியர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை.
இந்த இரண்டு காரணமாக உருவாகியுள்ள வறட்சி, வறுமை , வேலையில்லா திண்டாட்டம் , விலைவாசி உயர்வு மற்றும் இதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் உருவாகியுள்ளன. இதை முழுமையாக விளக்கி ஒரு ஆய்வுக் கட்டுரை மற்றும் ஒரு வீடியோ பதிவினை மாணவர்கள் கேட்டுக் கொண்டதால் அடுத்த வாரங்களில் வெளியிடுகிறேன்.
அதுவரை கண்ட மீம்ஸ் எதையாவது பரப்பாதீர்.
நான் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகிறேன் உலகத்திலேயே ஒரு வடிகட்டின முட்டாள் அரசியல்வாதி ஒருவன் இருக்கிறான் என்றால் அது சீமான் என்ற செபாஸ்டீன் தான். இவன் வாயில் வந்தது எல்லாம் வசனம் அது தான் நிர்வாகம் பொருளாதாரம் என்றும் அவன் இஷ்டத்திற்குக் கதையை அடித்துவிடுகிறான் வசனமாக, கொஞ்சம் தேடிப் படிக்கும் குணம் இல்லாத இளையவர்கள் கொஞ்சம் பேர் இவன் பேச்சை ரசிக்கிறார்கள். அது ஒரு வியாதி என்று அவர்கள் புரியவேண்டும்.. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பரப்பும் மீம்ஸ் அது இன்னொரு வியாதி...
இவன் போன்ற மேடைப் பேச்சாளர்கள் பேச்சைக் கேட்டு சமூகம் அது தான் கருத்தியல் என்று நினைத்தால் அதை விடத் தவறு வேறு எதுவும் இல்லை. எனவே கொஞ்சம் தேடிப் படிக்கப் பழகுங்கள் என்கிறார் மாரிதாஸ். 


அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

மீண்டும் சந்திப்போம்.
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!