இட்லி வடை பொங்கல்! #22 முழிபெயர்ப்பு,சுப்ரமணியன் சுவாமி, ,அரசியல் களம்!

இங்கே சோனியா காங்கிரசுக்குப் போதாதகாலம் மொழிபெயர்ப்பு பிரச்சினையாகவும் தொடர்கிறது.
இரண்டாவது தொகுதியாக வயநாடு தொகுதியிலும் ராகுல் காண்டி போட்டியிடுகிறார் என்பதால், பப்பி பிரியங்கா வாத்ரா பிரசாரம் செய்துவருகிறார். ஏற்கெனெவே ராகுல் காண்டி பேச்சை பத்தனம்திட்டாவில் மொழிபெயர்த்த முன்னாள் ராஜ்யசபா துணைசபாநாயகர் பி ஜே குரியன் முழி பெயர்த்தபோது காது கேட்காமல் ஒவ்வொரு வாக்கியத்தையும் ராகுல் பொறுமையாக இரண்டு மூன்று முறை சொல்லவேண்டி வந்தது கேலிக்கு உள்ளானது தெரியுமில்லையா? பிஜே குரியனுக்கு 78 வயதாகிவிட்டது காது கேட்கவில்லை, கேலி செய்யலாமா என்றெல்லாம் மல்லுசனம் சப்பைக்கட்டு கட்டியது வேறுவிஷயம்! 


அதற்குப்பிறகு ராகுல் பேச்சை முழிபெயர்க்கிற வேலை ஒரு பெண்மணியிடம் வந்தது. ஜோதி விஜயகுமார் என்ற வழக்கறிஞர் மேலே வீடியோவில் பிரியங்கா வாத்ரா பிரசாரத்தையும் முழிபெயர்க்கிறார். வாங்கின காசுக்கு மேலேயே கூவுகிற ரகம் தான்! தேவையே இல்லாத ஆவேசத்தோடு ஆரம்பித்து மெயின்டைன் செய்யமுடியாமல் கொஞ்சம் தணிந்து மறுபடியும் உச்சத்துக்குப் போவது வேடிக்கை காங்கிரசுக்கோ இது வாடிக்கை என்றாகிவிட்டது.  

ராகுல் காண்டியை வயநாடு தொகுதிக்கும் துரத்தி  வந்து ஸ்ம்ருதி ஈரானி பிரசாரம் செய்கிறார் என்பது வாரிசுகளைத் தொடரும் சோகம்! போதாதென்று அமேதி தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் சுருவ் லால் என்பவர் ராகுல் காண்டியின் பிரிட்டிஷ் குடியுரிமை விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பியதில், ராகுலின் வேட்பு மனு மீதான பரிசீலனை  நிறுத்தி வைக்கப்பட்டு, நாளைமறுநாளுக்குள் ராகுல் காண்டி விளக்கம் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. கல்வித்தகுதி    உள்ளிட்ட விவகாரங்களிலும் ராகுல் பொய் சொல்லியிருக்கிறார் என்ற விவகாரமும் தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபிக்கப் பட்டிருக்கிறது.


சோனியா குடும்பத்தை  நீதிமன்ற வாசற்படியேற வைத்து, சோனியாவும் ராகுலும் மாப்பிள்ளை வாத்ராவும் ஜாமீனில் வெளியே வந்து உலாத்துகிற அளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி! ராகுல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றதாக ஆவணங்களையும் முதன்முதலில் வெளியிட்டவர் டாக்டர் சுவாமிதான்! இன்றைய விவகாரம் குறித்து என்ன சொல்கிறார் என்பதையும் கொஞ்சம் கேளுங்கள்! ராகுல் காண்டிக்கு 4 பாஸ் போர்ட்டுக்கள் இருக்கிறதென்றும் டாக்டர் சுவாமி சொன்னதாக இங்கே சேதி சொல்கிறார்கள்!   


கேரள  வயநாடு திருநெல்லி மகாவிஷ்ணு கோவிலில்  ராகுல் காண்டி ராஜீவ் காண்டிக்கு  திவசம் கொடுத்ததாகத்தானே சொன்னார்கள்? மாறிக் காங்கிரசுக்கும் கொடுத்து விட்டாரோ?
       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!