தேதிமுக தலைவர் தேர்தல் பிரசாரத்துக்கு நிச்சயம் வருவாரென்று பிரேமலதா சொல்லிவருகிற நிலையில் விஜய் காந்த் வாக்கு கேட்கிற ஒரு வீடியோ நேற்றைக்கு வெளியாகி இருக்கிறது.
வாரிசுகளுடைய யோக்கியதை இந்த லட்சணத்தில் இருந்தால் எப்படி ஆதரிப்பது? எதை நம்பி சோனியாG காங்கிரசுக்கு வாக்களிப்பது? கொஞ்சம் சொல்லுங்களேன்!
அனேகமாக இந்தத் தேர்தலுடன் தேதிமுகவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும் என்பது போலத்தான் தெரிகிறது. வெள்ளந்தியான இந்த மனிதர் நல்ல உடல் நலத்தோடு நீண்டநாள் வாழவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மனைவி மச்சான் சுயநலத்துக்காக சரியாகப் பேச்சுவராத நிலையிலும் தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்துவருவது என்னமாதிரி அரசியல்? ஒற்றை மனிதர், குடும்பத்தை மட்டுமே நம்பி இனிவரும் காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியுமே பிழைத்திருக்க முடியாதென்ற காலம் விரைந்து நெருங்கி கொண்டிருக்கிறதோ?
நேரு பாரம்பரியம் என்பது தங்களை டில்லி பாதுஷா என்றே நினைத்துக் கொண்டிருப்பது என்பதை இந்தப் பக்கங்களில் பலமுறை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன்! பாதுஷா என்பதால் மட்டுமே எதிர்க்கவில்லை.
யாருக்கு வாக்களிப்பது? - ஹரன் பிரசன்னா சொல்வது
* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.
* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.
* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.
* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.
* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.
* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.
* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.
* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.
* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.
மாரிதாசும் அதைத்தான் சொல்கிறார்! கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!
Dont vote BJP. Vote for Makkal needhi maiyam or Naam tamilar Katchi.
ReplyDeletehttps://newsigaram.blogspot.com/
ஏன் கமல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று காரணங்கள் சொல்ல முடியுமா? மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தல் தாண்டி சட்டசபைத் தேர்தல் வரையிலாவது நீடிக்குமா?
Delete//சுயநலத்துக்காக சரியாகப் பேச்சுவராத நிலையிலும் // - விஜயகாந்த், ஜெ. வால் நடக்க முடியாததையும் கருணாநிதி வீல் சேரையும் எவ்வளவு கிண்டல் செய்தார். தனக்கு வரும்போது இயற்கை அவருக்குப் புரியவைத்திருக்கும். விஜயகாந்த், எம்ஜியார் அல்ல... வீடியோ வெளியிட்டு மக்களைக் கவர்வதற்கு. தேர்தல் ரிசல்ட் அதனைத் தெரிவிக்கும்.
ReplyDeleteவிஜய் காந்த் எம்ஜியார் அல்லதான்! ஆனால் ஜெ, கருணாநிதியோடு ஒப்பிடுகையில், பரவாயில்லை ரகம். ஏசிப் பேசியவர்கள் என்ற ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் அநேகமாக எந்த அரசியல்வாதியும் மாட்டாமல் இருக்க முடியாது.
Deleteகிருஷ்ணமூர்த்தி சார்... திட்டிப் பேசுவது தவறல்ல. கொஞ்சம் அதீதமாகப் பேசுவதும் அரசியல் என்று மன்னித்துவிடலாம். ஆனால் ஒருவரின் நோயையோ, முதுமையினால் ஏற்படும் சிக்கல்களையோ நையாண்டியாகப் பேசினால், தனக்கு அது வரும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும். விஜயகாந்த் அப்படிப் பேசிய காணொளி பார்த்திருக்கிறேன்
Deleteஇங்கே அப்படிப் பேசாத, ஏசாத திராவிட அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்! இதில் விஜய்காந்த் மட்டும் விதிவிலக்கா? ஆனால் கருணாநிதி வகையறாக்களோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.
Deleteஎல்லாக் கட்சிகளையும் அனலைஸ் செய்ததில் எனக்கு, பாஜக கட்சிதான் இந்தியாவிற்கு நல்லது என்று நிச்சயமாகத் தோன்றுகிறது (தமிழகத்தில் காங்கிரஸ்+திமுகதான் 33க்கும் அதிகமான சீட்டுகள், ஒருவேளை 37ம் வெல்லும் என்று நினைக்கிறேன். இது அடுத்த தேர்தல் முதல் நிச்சயம் மாறும்)
ReplyDeleteஇருப்பதற்குள் தேவலை என்று மட்டுமே எனக்குத் தோன்றுகிறது. மட்டத்துல ஒசத்தி என்று சொலவடை சொல்வார்களே அந்த மாதிரித்தான்! ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளைக் குறை சொல்லிப் பயனில்லை. நம்மிடம் தான் citizenship என்றால் என்ன nationhood என்றால் என்ன நம்முடைய கடமை என்னவென்றே தெரியாத அவலம் இருக்கிறது.
Deleteஹரன் பிரசன்னா சரியானபடி எழுதியிருக்கிறார். ஆனால் சட்டசபைத் தேர்தல் வரை, இது நடக்காது. அதற்குப் பிறகு நிச்சயம் நடக்கும். இந்துக்கள் வாக்குகள் பாஜக எனவும், கிறிஸ்துவ, இஸ்லாமிய வாக்குகள் காங்கிரஸுக்கு எனவும் பிளவுபடும் காலம் வரும்.
ReplyDeleteகாங்கிரசுடைய காலம் முடிந்துவிட்டது. பிஜேபிக்கு மாற்றாக ஒரு இடதுசாரி கட்சி வளர்வது நல்லது என்று ராமச்சந்திர குஹா சொன்னது நினைவுக்கு வருகிறது. திமுகவின் ஊடகத் தம்பட்டங்களில், தேர்தல் முடிவுகளைக் கணிப்பது மிகவும் கடினம்.
Delete