தைரியம் புருஷலட்சணம் என்று சொல்வார்கள். தைரியத்தின் உண்மையான பரிமாணம் என்ன தெரியுமோ? ‘ நீ ஓட்டுப்போடு; போடாமல் போ. ஆனால், தேசநலனுக்கு எது விரோதமோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கு எது கெடுதலோ அதற்கு ஒருபோதும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்,’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதுதான்.
பிரிவினைக்குப் பிறகான சுதந்திர இந்தியாவின் இரண்டு நிரந்தரத் தலைவலிகளாக இருந்து வந்தவை - காஷ்மீர் & தெலங்கானா. ஒரு கண்ணில் வெண்ணை; ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற காங்கிரஸின் அற்பத்தனத்தால், தொடர்ந்து இம்சைக்கு ஆளாக்கிய காஷ்மீருக்குத் தொடர்ந்து செல்லம் கொடுத்து, பிரிவினை பேசிக்கொண்டிருந்த ஐந்தாம்படைகளுக்கு அரசு செலவில் வீடு, வாகனம், தொலைபேசி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு, நினைத்தால் வெளிநாட்டுப்பயணம் என்று அயோக்கியத்தனமான சலுகைகளை அளித்து விட்டு, ஒன்றிணைந்த ஆந்திராவுக்குள் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த ஆக்ரோஷத்தை அலட்சியப்படுத்தியது காங்கிரஸ். அதன் விளைவு, பல பாராளுமன்றத்தொடர்கள் சரிவர நடத்த முடியாமல் போனதோடு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிற பெரும் கலவரங்களும், தொடர் போராட்டங்களும் ஆந்திராவை நிலைகுலையச் செய்தன. தெலங்கானா, ஆந்திரா பிரிவின்போது காங்கிரஸ் செய்த குள்ளநரித்தனங்களால், என்.டி.ராமராவ் அரசியல் களத்தில் குதிக்கும்வரை மிகப்பெரிய வலுவோடு இருந்த காங்கிரஸை இன்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
’எந்த மாநிலத்துக்கும் விசேஷ அந்தஸ்து என்பது இனிமேல் இல்லை,’ என்று துணிந்து சொல்கிற பேராண்மை மோடி அரசுக்கு இருந்தது. அரசியல்ரீதியாக இதனால் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு நஷ்டப்பட்டதாகச் சொன்னால்கூட, ஆரம்பத்தில் பீஹாருக்கு விசேஷ அந்தஸ்து வேண்டுமென்று போர்க்கொடி எழுப்பிய நிதிஷ்குமார் இன்று தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமாகியிருப்பதைக் கவனிக்கவும். இதெல்லாம் மோடியால்தான் முடியும்.
எல்லா மாநில அரசுகளும் சட்டசபைத் தேர்தல்களின்போது, ‘விவசாயக்கடனை தள்ளுபடி செய்கிறேன். மின்சாரத்தை இலவசமாகத் தருகிறேன்,’ என்று லாலிபாப் நீட்டிக்கொண்டிருந்தபோது, ‘எந்தக் கடனும் சல்லிக்காசு கூட தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. அதே போல மின்கட்டண பாக்கியையும் வசூலிக்காமல் விட மாட்டேன்,’ என்று தேர்தல் பிரச்சார மேடையில் முழங்கி, அதன் பிறகும் ஜெயித்து, ஆட்சி அமைக்கிற துணிச்சல் எல்லாம் இந்தியாவில் மோடியைத் தவிர வேறு எவருக்கும் இருந்ததும் இல்லை; இனி இருக்கப்போவதும் இல்லை.
’ஆந்திராவின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்,’ என்ற ஒற்றை உறுதிமொழியோடு மக்களை அணுகுகிற தைரியம் பாஜக-வுக்கு இருக்கிறது. இத்தனை பிரச்சினைகளையும் உருவாக்கி, அதில் அரசியல் குளிர்காய்ந்து, மிகமிகக் கசப்பான நிகழ்வுகளுக்குப் பிறகு ஆந்திரா - தெலங்கானா பிரிவுக்கு வழிவகுத்த காங்கிரஸ் தற்போது ‘ நாங்கள் 2019-ல் ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவுக்கு விசேஷ அந்தஸ்து தருவோம்,” என்று பல்டி அடிக்கிறது.
ஆனால்...
2020-ம் ஆண்டுக்குள் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப் பட்டுள்ள விசேஷ அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று தேர்தல் முடிவுகளைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மார்தட்டிச் சொல்கிற துணிச்சல் அமித்ஷாவுக்கு இருக்கிறது. அதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகிற அளவுக்கு மோடிஜியின் அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது.
இரண்டொரு நாட்களாக, மெஹபூபா முஃப்தியும், ஓமர் அப்துல்லாவும் காஷ்மீர் இந்தியாவிடம் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதுபோல மிரட்டல்தொனியில் பேசி வந்து கொண்டிருந்தார்கள்.
‘இதுக்கெல்லாம் பயப்படுற ஆட்சி இல்லை இது. அனாவசியமாக் கூச்சல்போட்டா, உங்களுக்கு இருக்கிற சலுகைகளையெல்லாம் மொத்தமாத் தூக்கிட்டு, எல்லாரைப்போலவும் உங்களையும் வரிசையில் வந்து நில்லுன்னு சொல்ற துணிச்சல் இந்த சர்க்காருக்கு உண்டு,’ என்பதை பாஜக-வின் தேர்தல் அறிக்கை சூசகமாகத் தெரிவித்திருக்கிறது.
இது வெறும் வாய்ச்சவடால் இல்லை. ஏற்கனவே, ஹுரியத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையெல்லாம் விலக்கியாகி விட்டது. அவனுங்க குடுமியைப் பிடிச்சு அஜித் தோவல் உலுக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த ஃபரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தியெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதுதான் நல்லது. அதுவும் பாகிஸ்தான் ட்ரவுசருல ஒண்ணுக்குப் போயிட்டிருக்கிற இந்த சூழலில் ஜாஸ்தியாக் கூச்சல் போட்டா, மண்டையிலே ‘ணங்’னு குட்டுறதுக்கு மோடி ரெடி!
பிரிவினை பேசுற புண்ணாக்குங்க உஷாரா இருங்கடே! திரும்பவும் மோடிதான் வாறாரு! இவ்வளவு உறுதியோடு முகநூலில் R வேணுகோபாலன் எழுதுகிறார் என்றால் காரணங்கள் இல்லாமல் இருக்குமா? திமுக ஐடி விங் செய்கிற தம்பட்டங்கள், திரித்தல்கள், வெறுப்பரசியல் எல்லாவற்றையும் மீறி அவர்களுடைய போலித்தன்மையை அம்பலப்படுத்துகிற மாதிரி இங்கே சும்மா நச்சுன்னு!
நரேந்திர மோடியை வேண்டாமென்று சொல்வது எதற்காக? அங்கே டில்லி பாதுஷாவாக ராகுல் காண்டியும் இங்கே மாநிலத்தின் சர்வ ஆளுமையாக இசுடாலினும் ஆகவேண்டுமென்பதற்காகவா? ஏற்கெனெவே வாய்ப்புக் கொடுத்ததை இவர்கள் எப்படி ஊழல் மெகா ஊழல் என்றே வளர்த்தார்கள் என்பதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா?
திமுக தன்னுடைய வெறுப்பரசியலை வேகமாக நடத்தத் தொடங்கியிருப்பதில் ஏமாந்து விடப் போகிறோமா? இங்கே தமிழகத்தில் இவர்கள் தூண்டிவிடும் மோடி ஒயிக என்ற சத்தம் இந்திய அரசியலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிடப் போகிறது? ராகுல் காந்தி PM ஆகிவிடப் போகிறாரா? அல்லது மூன்றாவது அணிக்கு வாய்ப்பு வந்து மம்தாவோ மாயாவதியோ பிரதமராகிவிடப் போகிறார்களா?
ஒன்று ஒத்துக்கொள்ளவேண்டும். ஓரளவு பாலிசிக்களில், வாக்குகளை மட்டும் நோக்கி நாட்டைக் கெடுக்கும் வாக்குறுதிகள் எதுவும் பாஜக கொடுக்கவில்லை. காங்கிரஸ், திமுக, இஷ்டப்படி அடித்துவிடுகிறார்கள். திமுகவைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கட்சியே ரூபாய்க்கு 3 படி என்ற பொய் வாக்குறுதிலதான் ஆரம்பிக்கப்பட்டது. 20 ரூபாய் ஒரு மாதத்துல சம்பாதித்தா, அவர் ஏழை இல்லை என்று சொன்ன காங்கிரஸ், ஒரு மாதத்துக்கு 6000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்லுது, அதாவது மிகப் பெரிய பணக்காரனாக ஒவ்வொரு ஏழையையும் மாற்றுவோம் என்று. நல்ல நகைச்சுவை.
ReplyDeleteபொதுவாக நான் இந்த தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் இவைகளைக் காமெடி ரகத்தில் வைத்துத்தான் பார்ப்பேன்! நம்புவதில்லை! ஒவ்வொருகட்சியும் நீ ஆகாசப்புளுகு என்றால் நான் அண்டப்புளுகு ரேஞ்சுக்குப் போட்டி போட்டு பொழுது போக்குவது தான் இதுவரை நடந்திருக்கிறது. இதையும் பிஜேபி இந்த முறை உடைத்திருக்கிறது.
Delete