தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சிகளின் சாடல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துக் கொண்டே வருவதைக் கவனிக்கிறீர்களா? முதலில் ரங்கராஜ் பாண்டே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பற்றி ஏதோ சொல்கிறார்!
தேர்தல் அறிக்கைகளே லுலுலாயிக்குத்தான்! இதற்குப் போய் இத்தனை அக்கப்போரா?
திருப்பதி உண்டியலை கேலி செய்தவர்கள் இன்று திருச்செந்தூர் உண்டியலையும் கேலி செய்வரா அல்லது தொகுதி ஓட்டு வேண்டி choice-ல் விடுவரா? @KanimozhiDMK
நல்ல பேசத் தெரிந்தவர்கள், எதையும் புரிந்துகொண்டு விளக்கத் தெரிந்தவர்கள், துரதிருஷ்டவசமாக கட்சி அரசியலில் இருப்பதால், 'களை களையும், வெட்டிப் பேச்சுக்களையும்', 'வெட்டி ஆட்களையும்' ஆஹா ஓஹோ என்று புகழும் நிலையில் கிட்டத்தட்ட கையறு நிலையில் இருப்பது வருந்தத்தக்கது
ReplyDeleteநன்றாகப்பேசுகிறார்கள் என்று வெறும்பேச்சுப்பேசியவர்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடி ஐம்பது அறுபது வருஷங்களாக திராவிடங்களை வளர்த்து விட்டது போதாதா?
Deleteவிடுதலை முரசொலியில் வரும் அரசியல் அபத்தங்களுக்குச் சுடச்சுட தீக்கதிரில் பதிலடி எழுதிய அந்தநாளைய அருணனை நினைத்து இப்போது பெருமூச்சு விடத்தான் முடிகிறது!
சூரியன் சின்னத்தில் நின்றால் திமுக செலவு செய்யும், தனிச் சின்னத்தில் நின்றால் நீங்களே உங்கள் செலவைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னதால், ஒரு தொகுதி சூரியன் சின்னத்தில் இன்னொரு தொகுதி பானையில் நிற்கும் ஜோக்கர்கள் அரசியலில் இருப்பது நகைச்சுவையாத்தான் இருக்கு.
ReplyDeleteஅதனால் தான் விசிக பாமக இடதுசாரிகள் என்று எல்லா உதிரிகளையும் இந்தத் தேர்தலில் நிராகரிக்க வேண்டுமென்று தொடர்ந்து சொல்லிவருகிறேன்!
Deleteநாங்க ஆடுறதும் பாடுறதும் காசுக்கு!..
ReplyDeleteபல ஆளைக் குல்லா போடுறதும் காசுக்கு!.
நாங்க கூடுறதும் குழைறதும்
காசுக்கு.. காசுக்கு.. காசுக்கு!...
அலிபாபாவும் நாற்பது திருடர்கள் படத்தில் வரும் பாடலின் வரிகள்...
வாங்க துரை செல்வராஜூ சார்! உண்மைதான்! இந்தப் பாட்டு உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட பாடல் போல இருக்கிறதே! http://thambattam.blogspot.com/2018/09/blog-post_17.html இங்கே இதே பாடலை மேற்கோள்காட்டி போலி நாத்திகம் போலி ஆத்திகம் பற்றி பேசியதுமே மிக நன்றாக இருந்தது!
Delete