தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டாலும் தேர்தல் ஜுரம் விட்டுப்போகவில்லை என்பதை வெவ்வேறு பகிர்வுகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இங்கே ஒரு திமுக ஆசாமி போட்ட கணக்கை முகநூலில் பார்த்துவிட்டுக் கொஞ்சமல்ல நிறையவே தலைசுற்றியதில், நாமெல்லாம் கணக்கில் எவ்வளவு வீக்காக இருக்கிறோம் என்பது மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது.
இங்கே அடுத்த பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருப்பவர்களில் ராகுல் தவிர, தீவீரமாக மிதப்பது முலாயம்சிங் யாதவ், மாயாவதி, மம்தா பானெர்ஜி என்ற வரிசையில் வருகிறார்கள்.
தெற்கே சந்திரபாபு நாயுடு, கே சந்திரசேகர் ராவ் எல்லாம் தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுங்கி விட்டார்கள். தேவே கவுடாவுக்கு இன்னும் நப்பாசை இருக்கத்தான் செய்கிறது என்ற நிலையில் .......
வைகோ நிலைமை இவ்வளவு கேவலமாகப் போயிருக்க வேண்டாம்தான்! ஆனால் மனிதர் தானே தேடிக்கொண்ட வினை என்கிறபோது பரிதாபப்பட்டு என்ன செய்ய?
மனிதர் தானாகவே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டு ரிடையர் ஆகிவிடுவது தமிழ்நாட்டுக்கும் அரசியலுக்கும் மிகவும் நல்லது!
இங்கே அடுத்த பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருப்பவர்களில் ராகுல் தவிர, தீவீரமாக மிதப்பது முலாயம்சிங் யாதவ், மாயாவதி, மம்தா பானெர்ஜி என்ற வரிசையில் வருகிறார்கள்.
சதீஷ் ஆசார்யா கார்டூன் நிலவரத்தை படம்பிடித்துக் காட்டுவதாக! என்னதான் கூட்டணி என்றாலும் ஒருகட்சி வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இன்னொரு கட்சிக்கு விழுமா? #டவுட்டு
ஒரு வெளம்பரத்துக்கு இத்தனை அக்கப்போராய்யா? என்று கேட்கிற அப்பாவியா நீங்கள்?
#அரசியல்களம் என்று தலைப்பில் சொன்ன மாதிரி எதையும் காணோமே என்று தேடுகிறவர்களுக்காக மட்டும்!
மோடி அரசு சாதித்ததென்ன? ஒப்பிட்டுச் சொல்கிறார்கள். புரிஞ்சவுங்க புரிஞ்சுக்குங்க! புரியாதவங்க புரிஞ்சவுங்ககிட்ட கேட்டுப் புரிஞ்சுக்குங்க!
.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!