அரசியல் களம்! வேடிக்கை பார்க்கலாம்! வாங்க!

கண்ணில் படுகிற சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கையில் வேடிக்கை என்று தோன்றினாலும் நிஜமாகவே நடந்து விடக்கூடியவைதான் என்றானால் என்ன சொல்வீர்கள்? என்ன செய்வீர்கள்?
இங்கே நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் கள நிலவரங்களும், அதேபோல மாறக்கூடியவைதான்!

நான் பனங்காட்டு நரி! இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்! என்றெல்லாம் வீர வஜனம் பேசினாலும்,  ஆடிப்போய் இருக்கிறமாதிரித் தான்  செய்திகள் தெரிவிக்கின்றன.  

சிச்சுவேஷன் சாங் மாதிரியே சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரிப்  படம்போட்டு முகநூலில் கலக்கல்!


ப.சிதம்பரம்! பெயர் சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே அப்பச்சியின் வாய்க்கொழுப்பு முன்னால் வந்து நிற்கும் என்பது ஊரறிந்த ரகசியம்!

தன்னுடைய கணக்கையே ஒழுங்காகப் போடத் துப்பில்லாத பானாசீனா அதிமுகவின் கூட்டணிக் கணக்கைப் பேசுவானேன்?  அமைச்சர் ஜெயக்குமார் சரியாகத்தான் பதிலடி கொடுத்திருக்கிறார்!  

வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதைப் பற்றித் தமிழ் சேனல்களில் கூட விவாதிக்கிறார்களே! #வியப்பு #மகிழ்ச்சி 
   
இசுடாலின் என்ன செய்தாலும் எப்படிப்பேசினாலும் வளைத்து வளைத்து எதிர்க்கேள்வி கேட்பதே முகநூலில் சிலருக்கு வாடிக்கையாகிப்போன வேடிக்கை!
ஸ்டாலினின் ஹிந்துக்களின் ஆதரவு வேண்டிய நவீன பராசக்தி 2019
--------------------------------------------------------
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.
ஆக... நான் ஹிந்துக்கடவுள்களுக்கு எதிரி என்ற இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் யோக்கியனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு பாவப்பட்ட துண்டுச்சீட்டு ஜீவன் நான்.
நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தேன், ஹிந்துக்களின் திருமண மந்திரங்களை அசிங்கமாகப் பேசினேன், என் மனைவியை கோவில் கோவிலாக அனுப்புகிறேன்... குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.
குங்குமத்தை அழித்தேன். குங்குமம் கூடாது என்பதற்காக அல்ல. அதற்கு என் நெற்றிக்கு தகுதி இல்லை என்பதற்காக.
திருமண மந்திரங்களை பழித்தேன், எனக்கு புரியும் படி சொரியான் தமிழில் விளக்கமளிக்கப்படவில்லை என்பதை கண்டிப்பதற்காக.
என் மனைவியை கோவில் கோவிலாக அனுப்பினேன், நான் செய்த பாவங்களுக்கு பிராச்சித்தம் தேடுவதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்...அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் படிக்கத் திணறிய துண்டுச் சீட்டுக்கள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.
அண்ணன் அழகிரியின் மிரட்டல் உங்களுக்குப் புரியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் வைகோ போல பாம்புகள் நெளிந்திருக்கின்றன.
தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீ போல துரைமுருகனை அருகிலேயே வைத்துள்ளேன்.
கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
62 வயதுவரை இளைஞர் அணித் தலைவனாக இருந்தேன். கடைசி வரை என் தகப்பன் என்னை ஆட்சி கட்டிலில் அமர்த்த விருப்பப்படாமல் காலம் தாழ்த்தினார்.
அண்ணன் அழகிரி மிரட்டினான். ஓடினேன்.
தங்கை கனிமொழி காயப்படுத்தினாள். ஓடினேன்.
வைகோ மறுபடியும் வந்து சேந்தான். ஓடினேன்.
வீரமணி எச்ச பிரியாணி கேட்டு நச்சரித்தான். ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்.
அவன் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும். வைகோவால் நிகழ்ந்த வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.
இதன் மூலம் இந்த நீதிமன்றத்திற்கு நீங்கள் சொல்லவரும் கருத்து...?
உங்களுக்குமா புரியவில்லை...8 வருடங்களாக காய்ந்து கிடக்கிறது கழக கஜானா. அதனால் தேவை ஹிந்துக்களின் ஓட்டு.
அதுவே கழகத்திற்கு
டெவெலப்மெண்ட்...டெவெலப்மெண்ட்...டெவெலப்மெண்ட்.

இசுடாலின் தடுமாறாமல் பேசுகிற மாதிரி கற்பனைபண்ணக்கூட விடமாட்டேனென்கிறார்கள்!

Ramakrishnan Mahadevan கற்பனைக்கு ஒரு அளவேயில்லையா? துண்டுச் சீட்டைப் பார்த்தும் தப்பும் தவறுமாக தினசரி உளறுபவருக்கு இவ்வளவு பெரிய வசனமா?  

அதற்கும் ஒரு பதில் வருகிறது! இன்றைக்கு ஏப்ரல் 1

        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!