ரெண்டுமுருகனும் IT ரெய்டும்! சொரணை டெஸ்ட்! ரங்கராஜ் பாண்டே!

இதெல்லாம் ஒரு செய்தி என்றே ஊடகங்கள் இங்கே குதித்துக் கொண்டிருக்குமானால் நானும் எங்கள் Blog மாதிரி வடுமாங்காய் ரெசிப்பி புளியோதரை ரெசிப்பி என்று மாறவேண்டி வருமோ? 😋😋😋 அரசியல் கட்சிகளுக்குத் தனியாக வழக்கறிஞர் அணி ஒன்று வலுவாக இருந்தால் இப்படி எல்லாம் ஸ்டன்ட் அடிக்கலாமாம்! துரைமுருகன் வீடு கல்லூரிகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனு! நாளையே விசாரணைக்கு வருகிறதாம்! 


சட்டம் ஒரு இருட்டறை! அதில் வக்கீல்களுடைய வாதம்  ஒளிவிளக்கு என்று யாரோ அந்தநாட்களில் வசனமாக எழுதியதை எல்லாம் இப்போது நினைத்தே பார்க்கக் கூடாது! 

துரைமுருகன் வீட்டிலிருந்து பெரும் பணம் சிக்கியிருக்கின்றது
அவர் ஒரு சாதரண தொண்டன் என்றால் விட்டுவிடுவார்கள், ஆனால் கட்சியின் பொருளாளர் எனும்பொழுது திமுக வாய் திறந்தே தீரவேண்டும். ஸ்டாலின் இதுசம்பந்தமாக இன்னும் ஒன்றும் சொல்லவில்லை (ஏதோ கண்டனம் தெரிவித்ததாக செய்திகள் வந்தனவே! இது என்னோட மைண்ட்வாய்ஸ்) 
கலைஞரை போல தனித்து ஆடுபவர் அல்ல ஸ்டாலின் , எல்லாமும் துரைமுருகனிடம் கேட்டுத்தான் முடிவெடுப்பார்
இப்பொழுது துரைமுருகனுக்கே சிக்கல் என்றால் யாரிடம் கேட்பார்? "ஆக. அவர் வீட்டில் ரெய்டு நடக்கின்றது, கட்சிக்கு அவர் கருத்து தேவை இரு நிமிடம் ஒதுக்கமுடியுமா?" என வருமானவரி துறையிடம் ஸ்டாலின் கேட்க முடியாது
வழக்கமாக எந்த சர்ச்சை கட்சிக்காரன் மேல் வந்தாலும் உடனே சஸ்பென்ட் செய்வது ஸ்டாலின் ஸ்டைல்
துரைமுருகனையும் அப்படி செய்துவிடுவாரோ
அதெல்லாம் இருகட்டும், ரெய்டு கடுமையாக நடக்கின்றதாம், ஏதோ ஆங்கிலம் நன்றாக பேச தெரிந்ததால் துரைமுருகன் பையன் சமாளித்துகொண்டிருக்கின்றார் என்கின்றன செய்திகள்
ஆகாகா! அசத்திப்புட்டாய்ங்களே! என்று நம்மூர் அரசியல்வாதிகளுடைய பேச்சு, அறிக்கை, வழக்கு, வாய்தா என்று  ஒவ்வொன்றிலுமாக மயங்கி நின்று அடுத்த 5 ஆண்டுகளுக்கும் முட்டாள்களாகவே இருந்து விடப்போகிறோமா? இந்தக் கேள்வியை எழுப்பும் தினம் இன்று ஏப்ரல் ஒன்று!

சொரணை         டெஸ்ட்! நடத்துகிறார் அல்லது அடடே! மதி விவரிக்கிறார்! 

அமீரகத்தில் இருக்கும் சில நண்பர்கள் (நான் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் என்ன நினைத்துக் கண்டிருக்கிறார்களோ?) நான் எப்போது மதி கார்டூன்களைப் பகிர்ந்தாலும், இது கார்ட்டூனா? கார்டூன் என்றால் கோடுகள் பேசவேண்டும் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளக்  கூடாது என்று வம்பு வக்கணை பேசிய கூகிள் ப்ளஸ் பக்கங்கள் இன்று ஒருநாளுடன்  காணாமல் போகிறது. கோடுகளோடு எழுத்தும் சேர்ந்து பேசவேண்டிய தருணங்களும் உண்டே! அடடே! மதி தான் சொல்ல வந்ததைக் குழப்பம் இல்லாமல் தெளிவாகச் சொல்வதற்கு, எதைத் தேர்வு செய்யவேண்டுமென்பது அவருடைய சுதந்திரம் என்று தான் நான் இப்போதும் நினைக்கிறேன்! 

நேற்றிரவு இந்த நிகழ்ச்சியின் முழுத்தொகுப்பும் வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைத் தாமதமாகத்தான் கண்டேன், இங்கே திருமா கூட சான்றிதழின் படி தான் ஒரு இந்து என்றுதான் சொல்கிறாரே தவிர உணர்வால் நம்பிக்கையால் இந்து என்று சொல்லவில்லை!  

பத்திரிகையாளர் ரமேஷுடன் ரங்கராஜ் பாண்டே  உரையாடும் துருவங்கள் 2 நிகழ்ச்சியின் ஒரு பகுதி நேற்று சாணக்யா தளத்தில் வெளியாகியிருக்கிறது. பிட்டுப் பிட்டாகப் போடுவதோ, வேந்தர் டிவியில் ஒளிபரப்பானபிறகும் காலம்தாழ்த்தி வெளியிடுவதோ என்ன மாதிரியான உத்தி என்று எனக்கு விளங்கவில்லை. ஆனாலும் வித்தியாசமாக இருக்கிறது என்ற காரணத்துக்காக இங்கேயும் பகிர நினைக்கிறேன்!  

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதல்லவா ரொம்ப முக்கியம்!!🙏🙏🙏🙏  
                

2 comments:

 1. பணம் சிக்கியிருக்குன்னா, இந்த நம்பர் எந்த பிராஞ்சுலேர்ந்து கிடைத்தது, யார் வாங்கிட்டுப் போனாங்கன்னு உடனே செக் பண்ண முடியாதா? அப்புறம் அந்த கோடவுன் ஓனருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்ததுன்னு பார்த்து உடனே உள்ளே தள்ள முடியாதா?

  என்ன சட்டமோ... என்ன நிர்வாகமோ

  ReplyDelete
  Replies
  1. //என்ன சட்டமோ... என்ன நிர்வாகமோ//

   திமிங்கிலங்களைத் தப்பிவிட்டு சிறுமீன்களை மட்டுமே பிடிக்கிற விசித்திரமான வலை! தன்னை நீராராதி என்று நிரூபித்துக் கொள்ள சட்டம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வழிவகை செய்திருப்பதை, திருடர்களே வெகுசாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!