இட்லி வடை பொங்கல்! #21 தேர்தல் ஸ்பெஷல்

இந்தத் தேர்தலின் அதிசயமாக, மூன்று தனிநபர்களை மையம் கொண்டு தமிழக அரசியல் களம் இயங்குவது தெளிவாகத் தெரிகிறது. பழந்தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதிகளே, இந்த மூவர் என்ன மாதிரி எந்த அளவு சேதாரத்தை அவர்களுடைய ஓட்டு வங்கியில் ஏற்படுத்தப்போகிறார்கள் என்பது புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்!

   
அமமுகவின் டிடிவி தினகரன், நாம்தமிழர் கட்சி சீமான். மக்கள்நீதி மய்யம் கமல் காசர் இந்த மூவர்தான் அவர்கள் என்பதை முந்தைய பதிவுகளிலேயே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். அப்படியானால் ஒரு மாற்று உருவாகிவிட்டதா என்றால் இல்லை! இவர்கள் அரசியல் இந்தத் தேர்தலைத் தாண்டி, அடுத்து வருகிற சட்டசபைத் தேர்தல்வரையிலாவது தாக்குப்பிடிக்குமா என்பது பெருத்த சந்தேகமே! ஒரு மாற்று அரசியலுக்கான வெற்றிடம் தொடர்கிறது என்பதுதான் வேதனை.


சுப்பு அவர்கள் எழுதிய திராவிடமாயை புத்தகத்தைப் பற்றிய சிறு விமரிசனம் மேலே காணொளியில்.

வெறுப்பு அரசியல் மட்டுமே  செய்து கொண்டு  தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே கவனம் செலுத்திவந்த திராவிடங்கள், தங்கள்  சாயம் வெளுத்துப் போய்ப்  பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. திராவிடம் வெறும் மாயை மட்டுமே என்றாகிப்போனதில் இளைஞர்களை ஈர்க்க முடியாமல் கிழட்டுத் தலைமையின் கீழ் உளுத்துப் போன ஸ்தாபனக்  கட்டுமானங்களோடு, எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழுகிற நிலையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய படம்

உலகத்தையே புரட்டிப் போட்டுவிடக் கூடிய வல்லமை உள்ள தத்துவம் கம்யூனிசம் அதன் செயல்வடிவமே கம்யூனிஸ்ட் கட்சி என்றெல்லாம் ஒரு மாற்று அரசியலைப் பேசிவந்த இந்தியக் கம்யூனிஸ்டுகள் என்ன ஆனார்கள்? இந்தப்புத்தகத்தை வாங்கிவிட்டு அமேசான் தளத்தில் நிதின் என்பவர் விமரிசனம் இப்படி! 

fools n fraud  20 September 2016
Format: Paperback
Communist master in nothing knowledge is imperialism so hate knowledge love fraud n propaganda its classic communism book  

என்ன செய்வது? சர்வதேசியம் பேசிய  காலம் போய் இப்போது இசுடாலின் வைகோ திருமாவளவன் பேசுகிற பகூத்அறிவு வாந்தியை அல்லவா சேர்ந்து எடுக்க வேண்டியிருக்கிறது! இடதுசாரிகள் பீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டெழ முடியாத அளவுக்கு அழுகிப்போய் விட்டார்கள்.
       

முன்பு அலட்சியமாகப் பேசிய வார்த்தைகளை மறைக்க முடியாமல் பனைமரங்கள் படம் போட்டுப் பதுங்கிக் கொண்டாலும், ஓட்டுக்கள் விழுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் இங்கே 
   

ஆனால் இவர்கள் மட்டும் இந்துமத நம்பிக்கைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பார்களாம்! நாமும் எத்தனைநாள் சகித்துக் கொண்டிருப்போமாம்?

பாடம் புகட்ட வேண்டிய நேரமும் நெருங்குகிறது.

ஏப்ரல் 18 இந்துமத விரோதிகளை, அவர்களை ஆதரிப்பவர்களையும் சேர்த்து நிராகரிக்க வேண்டிய நாள்! போலிமதச்சார்பின்மைக்கு முடிவு கட்டுவோம்!

திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் எவருக்கும் எங்கள் வாக்குகள் இல்லையென்ற முடிவு எடுப்போம்!  
             

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!