Showing posts with label கனிமொழி. Show all posts
Showing posts with label கனிமொழி. Show all posts

சண்டேன்னா மூணு! ரஜனி அரசியல்! கனிமொழி நாடார்i #டிசம்பர்13 பார்லிமென்ட் மீது தாக்குதல்!

என் கேள்விக்கென்ன பதில்? யாரை வேண்டுமானாலும் இப்படிக் கேட்பதென்னவோ மிக எளிதுதான்! ஆனால் கிடைக்கும் பதில் எல்லா நேரங்களிலும் சரியானதாகவோ, திருப்தி அளிப்பதாகவோ இருப்பதில்லை! தந்திடிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி கூட  பெரும்பாலான நேரங்களில் அப்படித்தான்! ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நடத்தியவிதம், இதை தந்திடிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக ஆக்கியது உண்மை. அவரால் தயார் செய்யப்பட்ட ஹரிஹரன் கூட இந்த நிகழ்ச்சியை அவரால் முடிந்தவரை நன்றாகத்தான் நடத்துகிறார் ஆனாலும்,, ,,,,,,? 

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி உடன் நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி எப்படியென்பதைப் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்! 


ஆடிட்டர் குருமூர்த்தி  நீண்டநாட்களாகவே ரஜனிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக அவர் ஒருவர்தான் இருக்கமுடியும் என்று சொல்வதெல்லாம், அவருடைய ஆசை என்பது தாண்டி நடப்பு நிலவரங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா?சாதாரணமாக ஒரு தடுப்பூசி வெளிவருவதற்கே பலகட்ட பரிசோதனைகளில் ஜெயித்து, நிரூபித்தாக வேண்டும் என்கிற போது, அரசியலில் ஒரு மாற்று சக்தியாக ரஜனிகாந்த் வரமுடியுமென்பதே கோமாளித்தனமான கற்பனை என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. நடிகர் சாருஹாசன் சிலகாலத்துக்கு முன்பு ரஜனி--கமல் இருவர் சேர்ந்தாலுமே 10% வாக்குகளை மட்டுமே பெற முடியும் என்று சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? கமல்காசர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து, ஒரு பொதுத்தேர்தலையும் சந்தித்து விட்டார். சுமார் 4.5% வாக்குகளை வாங்கியது நினைவிருக்கிறதா? ஆனால் இன்னமம் கட்சியே ஆரம்பிக்காத ரஜனிகாந்த், 2021 மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபைத்தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகளை வாங்கிவிடமுடியும்? எந்த அடிப்படையில் ரஜனியை நம்புகிறார்களோ, அதுவே இன்று வரை தெளிவுபடுத்தப்படவில்லையே! 

அதைவிடுங்கள்! ஹரிஹரன் குருமூர்த்தியிடம் என்ன கேட்க விரும்பினார்? எதைத் தெரிந்து கொண்டார் என்ற கேள்விக்காவது விடை கிடைத்ததா? நிகழ்ச்சியில் எந்த ஒரு கேள்வியும், விஷயமும் தெளிவாக இல்லாமல் மிக மேம்போக்காகவே இருந்ததைக் கவனித்தீர்களா?

 ================================================      குருமூர்த்தி பேட்டி ஒருவிதமான நையாண்டி என்றால். முகநூலில்  ஸ்டேன்லி ராஜனுடைய இந்தப் பகிர்வு சூப்பர் நையாண்டி! 


நாடார் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக கனிமொழி எப்போது ஆனார் என்ற சந்தேகம் இந்தப் போஸ்டரைப் பார்த்ததும் எழுந்தால், அது நியாயமே!  

தொடக்கத்தில் பரிசுத்த நாடார் எனும் ஒரு நாடாரை எதிர்த்து வென்றவர் கருணாநிதி, அவரின் அரசியல் நாடார்களை எதிர்த்துத்தான் தொடங்கிற்று.
அரசியலில் பரிசுத்த நாடார், காமராஜ் நாடார், ம.பொ.சி (அப்பக்கம் நாடார்) போன்றோரை எதிர்த்து முழு நாடார் எதிர்ப்பதைத்தான் காட்டினார்
காமராஜருக்கும் கருணாநிதிக்குமான‌ பெரும் போர் உலகறிந்தது
விருதுநகரில் காமராஜரை கருணாநிதி இல்லா பொய் சொல்லி தோற்கடித்தபொழுதுதான் கனிமொழி பிறந்தார்
நாகர்கோவில் வரை அவரை விரட்டியடித்தார் கலைஞர்
நாகர்கோவிலில் "இது நாடாளுமன்ற தேர்தலா? நாடார் மன்ற தேர்தலா?" என முழங்கியவர் கருணாநிதி
நாகர்கோவிலில் காமராஜர் வென்றபின் அந்த தோல்வியில் காமராஜருக்கு பக்கபலமாக இருந்த நாடார் தொழிலதிபர்களை எல்லாம் ஓட ஓட அடித்தவர் கருணாநிதி
அப்பொழுது கனிமொழிக்கு வயது 5
அந்த கனிமொழி இப்பொழுது நாடார்கள் பலமான தூத்துகுடியில் தானும் நாடார் வாரிசு என வந்து நிற்கின்றார்
காலம் எப்படி எல்லாம் விசித்திரமாக காட்சிகளை காட்டுகின்றது..
நாடார்கள் காங்கிரஸில் அதிகம் உண்டு இதனால் நாடார் இனமே திமுக விரோத இனம் என கங்கணம் கட்டி திரிந்த கருணாநிதியின் மகள் இன்று நாடார் இனத்துக்கு காவலாம்
பிணம் இருக்குமிடம் குவியும் கழுகுக்கும், வோட்டு இருக்குமிடம் ஓடிவரும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை
திமுக சாதி ஒழிக்க வந்த புரட்சி கட்சி
ஆனால் கனிமொழி நாடார், கலப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என திமுக ஊளையிட்ட காலத்தில் பிறந்தவர் கனிமொழி
ஆனால் அவருக்கு அவரின் தாய் சாதி உண்டாம், தகப்பன் சாதி கிடையாதாம்
சாதி வேண்டாம் என்றால் பெற்றோரின் இரண்டு சாதியும் வேண்டாம்,
வேண்டும் என்றால் இரண்டு சாதியும் வேண்டும் அல்லவா?
திமுக பெண்கள் உரிமை காக்கும் அமைப்பு, பின் ஏன் தாயின் பெயர் சேர்க்க கூடாது?, தந்தைபெயர் மட்டும் ஏன்?
ஆக திமுகவின் பெண் உரிமைபடியும், தகப்பன் சாதியினை சேர்த்தும் இப்படித்தான் சொல்ல வேண்டும்

"கனிமொழி கருணாநிதி ராசாத்தி இசை வேளாள நாடார்.." வாழ்க..                                        

 ================================================

டிசம்பர் 13, 2001. பாகிஸ்தானின் ISI யால் பயிற்சி அளிக்கப் பட்ட ஐந்து தீவீரவாதிகள்  AK 47 போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஐந்து காவலர்கள் உட்நடைபெறவிருக்கும் பட 7 பேர் பலியானார்கள் 30 நிமிடங்கள் நீடித்த தாக்குதலில் ஐந்து தீவீரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆனாலும் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.LeT, JeM  போன்ற சிலபல பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட தீவிரவாத இயக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சம்பவமாக 2001 டிசம்பர் 13  தாக்குதல் இருந்தது. அதன் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று. On this day in 2001, a five-member suicide squad comprising Lashkar-e-Taiba and Jaish-e-Mohammad terrorists attacked Parliament house, while the Lok Sabha was in session: the Houses were adjourned at the time of the attack, but several parliamentarians and staff were present inside the building.The attackers came in an Ambassador car, and were able to gain entry because of a forged government sticker. But as the car moved inside the Parliament complex, one of the staff members became suspicious. The vehicle was thus forced to turn back and in the course, hit then vice president Krishan Kant’s vehicle.the course, hit then vice president Krishan Kant’s vehicle இது செய்தி. பின்னாட்களில் திரைப்படம், வெப் சீரீசுமாக வந்தன தேடுவோருக்கு இணையத்தில் கிடைக்கும்.



நினைவுதினம், நினைத்துப்பார்ப்பது என்பதெல்லாம் நடந்த சம்பவங்களிலிருந்து சரியான பாடம் கற்றுக் கொண்டோமா மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடக்காமல் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறோமா என்பதில் தான் அர்த்தமுள்ளதாகிறது என்பதை இங்கே நண்பர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். பிக்பாசில் இன்றைக்கு வெளியேறப்போவது யார், டிவி நடிகை சித்ரா தற்கொலை, அவருக்குப்பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கப்போவது யார் என்பதை எல்லாம் குடைந்து பார்ப்பதை விட, இதுமாதிரி விஷயங்களைத் தேடுவது மிகவும் நல்லது என்பதை நான் வேறு தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?!    

      

காத்திருந்து....காத்திருந்து...கலங்கும் வாரிசுகள்! இது திமுக டைம்!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!
காத்திருக்கும் வாரிசுகள்!!

கனிமொழிக்குக் கட்சியில் வேண்டுமானால்முக்கியப் பொறுப்பு, பதவி கொடுத்துக் கொள்ளுங்கள், மந்திரி பதவியெல்லாம் தர முடியாது என்று காங்கிரஸ்காரர்கள்; திட்டவட்டமாக சொல்லி விட்டார்களோ?

கே என் நேரு நேற்று திருச்சி திமுகவினரிடையே பேசும் போது கொஞ்சம் வீராப்பாகப் பேசியதை மேலோட்டமாகப்  பார்த்தால் கூட,திமுக காங்கிரசுக்கு வேறு வழி இல்லாமல் டாட்டா  சொல்ல தயாராகி வருவது போலத்தான் இருக்கிறது.திமுகவில் தலீவரின் கண்ணசைப்பு இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பது தமிழக அரசியல் தெரிந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான்! பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிற கலையில் தேர்ந்தவர் கலீஞர் என்பதும் தெரிந்ததுதான்! பிப்ரவரி மூன்றாம் தேதி திமுக பொதுக்குழு செயற்குழு கூட்டுவது எதற்காக என்பதும், அதற்கு முன்னாலேயே ராசாத்தி தரப்பு சில உள்ளடி வேலைகளை வெளிப் படையாகவே செய்து வருவதும் கூடத் தெரிந்தது தான்.நேரு அப்படி என்னதான் பேசினார், அதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்பதையும் பார்த்து விடலாமே!

இப்படி அவசரப்பட்டு ஊதி ஊதியே மந்திரியாக வேண்டியவரை முதல் குடும்பத்தின் ஆதாயத்துக்காக
திஹார் சிறைக்கு அனுப்பி வைத்தது தான் மிச்சம்!!


திருச்சி மாநகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் நேரு பங்கேற்று பேசியதாவது: "தி.மு.க.,வினர்,தைத்திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதியும், முடிந்தால் புத்தாடை அணிந்தும், வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும், மம்தா அதெல்லாம் முடியாது என்றுகூறி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல், இங்கும் வெகுவிரைவில் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.

விஜயகாந்த் மீது தாக்கு: "நம்முடைய போதாத காலம் அ.தி. மு.க.,வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார். அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க., அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது. தே.மு. தி.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., மேல் வழக்கு போட்டு, அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல, அனைத்தையும் மூடிக்கொண்டுள்ளார்,''

தி.மு.க., தோல்விக்கு காரணம்: கடந்த எம்.பி., தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும் தோற்று, திருச்சி எம்.பி., தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல் போயிருந்தால், ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.க., வும் ஆட்சிக்கு வந்திருக்காது. தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமை பெற்ற, 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம் நம்மைப்பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம் தவறிவிட்டோம். ஆகையால், மாற்றத்தை எதிர்பார்த்த, அந்த இளம் வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர்."

இப்படி நேரு பேசியதை வைத்துப் பார்த்தால்,ஆஹா! திமுகவுக்கு வீரம், சொரணைவந்து விட்டது!மம்தா மாதிரி, காங்கிரசே! கூட்டணியை விட்டு வெளியே போ என்று சொல்லி விடப் போகிறார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு உடனே திமுக அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து விலகி, ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கனவு காண ஆரம்பித்தீர்களானால் உங்களுக்கு தமிழக அரசியல், குறிப்பாகக் கழக அரசியல் கொஞ்சம் கூடப் பிடிபடவில்லை என்று மட்டுமே அர்த்தம்.

இப்படி வெறும் மலர் மகுடம் வைத்தே இத்தனை நாள் ஒட்டி விட்டார்களே! இனிமேலாவது தலைமை மகுடம் தலைக்கு வருமா?

அதே செய்திகளில் இன்னொரு பக்கம் திமுக இளைஞரணி குறித்த சில செய்திகளில், வரலாற்றில் முதல் தடவையாக, நாற்பது வயதுக்கு மேற் பட்டோரெல்லாம் இளைஞர்கள் அல்ல என்பதைத் திமுகவினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணிப் பொறுப்பில் இருக்க முடியும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை அமல்படுத்த  ஆரம்பித்திருக்கிறார்கள். அமல் படுத்தியது தலையில் இருந்தல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்! 

மாற்றங்கள் வந்து சேர்வது தலையைப் பொறுத்தவரை எப்போதுமே கடைசியில் தான்! அதுவும் வேறு வழி இல்லை என்றால் தான் என்பது அரசியல் கட்சிகளில், குறிப்பாக வாரிசு அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் கட்சிகளில் காணப்படும் விசித்திரங்களில் ஒன்று.

விழுப்புரத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது: "தி.மு.க., இளைஞரணி தற்போது மந்தமான சூழலில் உள்ளது, இதில் மாற்றத்தை ஏற்படுத்தி முனைப்புடன் செயல்படுத்திட தலைவர், பொதுச்செயலர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். நகர, ஒன்றிய, பேரூர் பகுதி இளைஞரணி நிர்வாகிகளுக்கு படிவங்கள் வழங்கி தேர்தலுக்கு அழைத்துள்ளோம். ஒவ்வொரு பதவிக்கும், 10 முதல் 20 பேர் வரை பெயர் கொடுத்துள்ளனர். இளைஞரணி பொறுப்பாளர்கள், 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சிப் பொறுப்பிற்கு செல்லுங்கள். மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதே போல் மாநில அளவிலும் வயது நிர்ணயிக்கப்பட உள்ளது. நானே கூட பொறுப்பிலிருந்து விலக வேண்டி வரும்"

அப்புறம் நடந்த தமாஷையும் பாருங்கள்!

விழுப்புரத்தில், தி.மு.க., மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். நகர, ஒன்றிய வாரியாக இளைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேர்காணலின் போது வயது சான்றுகளை வாங்கி பார்த்த ஸ்டாலின், சில கேள்விகளை கேட்டார். 30 வயதை கடந்து ஒரு மாதமான நபரை கூட ஏற்க முடியாதென வெளியே அனுப்பினர். நேர்காணலின் போது, இளைஞரணி அமைப்பாளர் (ஸ்டாலின்) பெயர் தெரியாமல் விழித்தவரை, "நீங்கள் வெளியே போகலாம்" என, ஸ்டாலின் கூறினார்

இளைஞர் அணி அமைப்பாளரிடமே , யார் என்று தெரியாது என்று சொல்கிற அளவுக்குத் தான் அந்தக் கட்சியின் செயல்பாடு இருந்து வந்திருக்கிறது என்பது ஒரு புறம்! ஸ்டாலினிடம் இருந்து, ராசாத்தி வகையறா குறிப்பிட்டுப் பறிமுதல் செய்யக் கண் வைத்திருக்கும் இடமேஇளைஞர் அணி என்பதும், அதைக் காபந்து செய்து கொள்வதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக  இந்த வயது உச்சவரம்பு சீர்திருத்தம் எல்லாம் என்று சொன்னால் மிகையில்லை, தவறுமில்லை.

ஆக நேரு சொன்னதை வைத்து காங்கிரஸ் திமுக உறவு முடிந்து விட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டீர்களானால் அது சரியாக இருக்காது!

இங்கே அரசியல் வெளிப்படையாகத் தெரிகிற விஷயங்களில் இல்லை! திரைமறைவு நாடகங்களிலேயே நடந்து முடிந்து விடுகிறது!


சண்டேன்னா மூணு! கனிமொழி! கபில் சிபல்!பானா சீனா!


லீவு முடிஞ்சு நாளைக்குக் கோர்ட் ஆரம்பம்!மறுபடி கூண்டுல நிக்கணும்! ஆசீர்வாதம் ஆச்சாரி வேற சாட்சியத்துல ஸ்ட்ராங்கா நிக்கறார்! நயினா அகடவிகடத்துல பெயிலில் வந்தாச்சு! அண்ணன்மார் உபயத்துல கட்சிப் பொறுப்புக்கும் பதவிக்கும் இலவு காத்த கிளி கதைதான்! அடுத்ததா என்ன ப்ளான் பண்ணலாம் ?

ஓவரா உளருவாயரா இருந்தாக்க இப்படித்தான்!பாருங்க,இப்ப சத்தத்தையே காணோம்!காலை மொதல்ல மென்னு முழுங்கட்டும்!! அடுத்த உளருவாயருக்கும் இதே கதிதான்! அபிஷேக் மனு சிங்வி!


பானா சீனா பாவம்! ரொம்ப நல்லவர்னு மண்ணுமோகன் சிங்கே வந்து சொல்லிட்டுப் போயிட்டாருங்க! மண்ணுமோகன் ராசி தெரியும் இல்லையா? ஆ.ராசாவுக்கும் மண்ணு இப்படித்தான் ரொம்ப நல்லவர்னு ஆரம்பத்துல சர்டிபிகேட் கொடுத்தாருங்கோ!
 இது ச்சும்மா! அட்டவணை! பயமுறுத்தறதுக்கு இல்லீங்கோ!

மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?

ரைமிங் இருந்தாப் போதாதே! டைமிங் கொஞ்சம் சரியா இல்லையே!
"எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை கைது செய்யவில்லை. என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை""

என்னதான் கூட்டத்தோடு இருப்பதால் இப்படி தைரியமாகப் பதில் சொல்வது போல இருந்தாலும் "தளபதீ" ஸ்டாலினுக்குக் கவலைகள் நிறையவே உள்ளூர இருக்கத்தான் செய்கிறதென்பது வெளிப்படை யாகவே தெரிந்தது.மதுரையில் ஆட்டம் போட்ட அஞ்சா நெஞ்சை வெறும் கோழிக் குஞ்சாக ஒரே அமுக்காக அமுக்கி வைத்திருப்பது போலத் தானும் ஆகிவிடுவோமோ, இத்தனை காலமாக அரசியலில் இருந்தும் தந்தைக்கு அப்புறம் அரசியலில் வாரிசாக ஆக முடியாமலேயே போய்விடுமோ என்று ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது என்னமோ உண்மை.

மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?
பக்கத்து வீடு... பாய்ந்த வழக்கு!

நில மோசடி வழக்குகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஜாமீனில்  வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஒரு அபகரிப்புப் புகார் கிளம்பி இருக்கவே, டென்ஷனில் துடிக்கிறது தி.மு.க.
 கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு  ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.


ந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இதுதான்.''ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள எங்களது குடும்ப இடத்தில் எனது பங்குக்குக் கிடைத்த இரண்டரை கிரவுண்டில் நான் வீடு கட்டி வசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 8-ஏ, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை என்ற முகவரியில் உள்ள அந்த வீட்டை தேவி பழனிச்சாமி என்பவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று பேசி மாத வாடகைக்கு விட்டேன். இது தவிர மீதி உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் இடத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி ஸ்டாலின் குடிவந்ததில் இருந்து, எனது வீட்டையும் வாங்கி தனது வீட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். 

அதற்காக என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை மிரட்டி, காலி செய்ய வைத்தனர். சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு என் வீட்டை நான் விற்றதாக, பத்திரப் பதிவு செய்து கொண்டனர். அந்தத் தொகையை டி.டி-யாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாசன், ஒரு கோடியே 15 லட்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணமும் கணக்கில் வராத பணம் என்றும், இதை வெளியில் சொன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி சோதனை நடத்துவோம் என்றும் மிரட்டினார். அதோடு, எட்டு லட்சம் ரூபாயை தனக்கான கமிஷன் என்றும், அவரே எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வீடு, மாத வாடகை 20,000 ரூபாய் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி பெயருக்கு ஒப்பந்தம் செய்யப்​பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை குடி இருக்கிறார்.


து தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிலரிடம் பேசினேன். அந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், என் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்​னிடம் வாக்குமூலம் எழுதி வாங்கி உள்ளனர். என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், என் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிச் சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்''  என்று விளக்கி இருக்கிறார் சேஷாத்திரி குமார். 

ந்தப் புகார் குறித்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா? என்று விசாரிக்க உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையானஅதிகாரி ஒருவருக்கு தோட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். புகார் கொடுத்து இருந்த சேஷாத்திரி குமாரை தனது அலுவலத்துக்கு வரவழைத்த அந்த உளவு அதிகாரி, குமாரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரித்து இருக்கிறார். அவர் வைத்து இருந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார். அதன்பிறகுதான்,  1-ம் தேதி காலையில் புகார்தாரர் குமாரை விசாரணைக்கு அழைத்து இருக்கிறது, 

சென்னை மத்தியக் குற்றப் பிரிவு. அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை குமாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு பல முறை, குமார் கொடுத்து இருந்த ஆவணங்களை ஆராய்ந்தனர். அதன் பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இப்படிப்போகிறது, இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரை!

இந்த நில அபகரிப்பு விஷயமாக ஸ்டாலின் மீது நடவடிக்கை வரலாம் என்று தகவல்கள் ஏற்கெனெவே வெளிவந்ததுதான்! என்ன, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது மட்டும் தான் தாமதம்.அம்மா போலீஸ் இதை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
அரசு இயந்திரத்தின் ஒரு கணிசமான பகுதி அம்மாவின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதை தா.கிருஷ்ணன் கொலைவழக்கிலேயே பார்க்க முடிந்தது. அதே போல, அ' னாவின் ஆட்கள் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் உள்ளே போன வேகத்திலேயே வெளியே வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஸ்டாலின் ஏடிஜிபி ராஜேந்திரனிடம் வீராவேசமாக வசனம் பேசிவிட்டு வந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லைதான்!
தளபதீ கவலைப்பட இதை விட வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன! 

தயாநிதி மாறன் திறந்தவாய் மூடாமல் அப்படி என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்?



கட் அவுட், தாரை தப்பட்டை, வரவேற்பு  எல்லாம் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று சொல்வதற்காகத்தான்!
இன்னிக்கு, இந்த நிமிடத்தில் மட்டும் மகளே நான் உன்னோடு! என்னால முடிஞ்சது அவ்வளவுதான்!

ஜாமீன்! கொடுத்தவனே(ரே) பறித்துக் கொண்டாண்டி! மானே, கிடைத்ததையும் பறித்துக் கொண்டாண்டி!


என்ன சொல்வது என்றே புரியவில்லை. சட்டம் எப்படி சில விஷயங்களைப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் எழும் குழப்பம் தான் இந்தப்பதிவின் மையமே தவிர, தீர்ப்பு, அல்லது அதன் உள்ளே உள்ள விஷயங்களைப் பற்றி அலசுவது, விமரிசிப்பது இல்லை.

கடந்த பிப்ரவரி மா
ம் ஆ.ராசா கைது செய்யப்பட்டதில் இருந்து, வரிசையாகக் கனிமொழி வரை பதினான்கு தனிநபர்களும், மூன்று நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டதில், ஜாமீன் அனுமதிக்கப்படாமலேயே இருந்த நிலை மாறி, கடந்த சில நாட்களுக்கு முன்தான், மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.

மிஞ்சி இருந்தது, ஆ.ராசா, செயலாளர் சித்தார்த் பெஹுரா, தனிச் செயலாளர் ஆர் கே சந்தோலியா இந்த மூவரும் தான்! இந்த மூவர் தான்
ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டில் அச்சாணியாக இருந்தவர்கள் என்று இவர்களது ஜாமீன் மனுவை சிபி ஐ கடுமையாக எதிர்த்து வந்தது.  கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தன்னை மட்டும்ஜாமீனில் வெளியே விட  மறுப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றுஆர் கே சந்தோலியா தாக்கல் செய்திருந்த மனு சிபிஐ சிறப்பு நீதி மன்றத்திலும், சித்தார்த் பெஹுராவின் மனு டில்லி உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்தன.

நேற்றைக்கு, ஆர் கே சந்தோலியாவை,
அவர் ராசாவின் தனிச் செயலாராக மட்டுமே இருந்தவர், இந்த விவகாரத்தில் எந்த விதமான ஆதாயத்தையும் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படாத நிலையில் மற்ற இருவருடன்(ராசா, பெஹுரா) ஒப்பிட முடியாது என்று கருதுவதால், அவருக்கு ஜாமீன் அளித்து சிபி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு ஒ பி சைனி உத்தரவிட்டிருந்தார். 

ஒரேமாதிரிக் குற்றம் சாட்டப் பட்டிருந்தவர்களில் ஏற்கெனெவே பதினோரு பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டதையும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். . அதன்படி நேற்று மாலையே சந்தோலியா ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால், சந்தோஷம் நேற்று (வெள்ளி) ஒருநாள் வரை கூட நீடிக்கவில்லை!

காரணம் அங்கே டில்லி உயர்நீதிமன்றத்தில் பெஹுராவின் ஜாமீன் மனு மீது, நீதிபதி திரு ஷாலி தன்னுடைய  தீர்ப்பை ரிசர்வ் செய்து வைத்திருந்த  நிலையில், இன்று டில்லி உயர்நீதிமன்றம் ஒரு விசித்திரமான தடை உத்தரவை அளித்திருக்கிறார். ஆர் கே சந்தோலியாவுக்கு அளிக்கப் பட்ட ஜாமீன், பெஹுராவின் வழக்கையும் பாதிக்கும் என்பதால், அவர் ஜாமீனில் வெளியே விடப் படாமல் இருந்தால், அந்த ஜாமீன் மீது தடை பிறப்பிப்பதாகத் தீர்ப்பு. அளிக்கப்பட்டிருப்பது தான் மிக ஆச்சரியமாக இருக்கிறது.

சந்தோலியாவின் ஜாமீன் மனு, சிபிஐ தரப்பில் சொல்லப்பட்ட ஆட்சேபங்கள் மற்றும் ஆவணங்கள்,அதுபோக ஜாமீன் அளிக்கப் படுவதற்கான காரணங்களாக விசாரணை நீதிபதி கருதிய காரணங்களை, நீதிமன்றப் பதிவாளர் வழியாக, உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி திரு. ஷாலி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நீதிபதி முன்தான் கனிமொழி, சரத்குமார் முதலானவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்ற வியாழனன்று விசாரிக்கப்பட்டு, நான்கு  நாட்களுக்குப் பின் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.


கனிமொழி முதலானவர்கள் ஜாமீன் மனு மீது சென்ற திங்களன்று, உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காமல் மறுப்பதைக் கண்டித்திருந்த தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், உச்சநீதிமன்றம், கனிமொழி உள்ளிட்டு குற்றம்சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீதான கடுமையான குற்றச் சாட்டுக்களைக் குறித்து ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருப்பதாக நீதிபதி திரு ஷாலி குறிப்பிட்டிருந்ததையும் நினைவு படுத்திக் கொண்டால், என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் என்ன, இந்தப்பதிவு எதற்காக என்பதும் புரியும். குறிப்பிட்ட அந்தப் பகுதி மட்டும் கீழே, முழுமையான செய்தி இங்கே.

“But that is not the case. Section 409 and Section 120B (criminal conspiracy), when read together, carries the maximum punishment of life imprisonment. Criminal breach of trust is also a substantive charge. However, Section 409 does not find mention in the Supreme Court order. Either the court was not made aware of this charge or if we take this is a substantive charge, the maximum punishment is life term and not seven years, as was noted by the Supreme Court,” observed Justice Shali. 


சந்தோலியாவின் தரப்பில், இந்த உத்தரவை எதிர்த்து, வருகிற திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் படலாம் என்று சொல்லப்படுகிறது.
 
உச்சநீதிமன்றமும் இதே மாதிரி நிலையை எடுத்தால்..........

பதிவின் தலைப்பை மறுபடி படித்துக் கொள்ளுங்கள்! 

நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத,அந்த சக்தி!


பெயில் கெடச்சவுடனே அடுத்தது இதுதானே!

அப்படி இப்படி வசனம் எடுத்து உட்டாத்தானே அனுதாபம் பெருகும்!


அம்மாவை ஆறுதல் படுத்தி, மகனுக்கு தைரியம் சொல்லி, கட்சிக் காரர்களை நம்பிக்கையூட்டி, வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி நிமிர்கிற கனிமொழியை ஆச்சரியமாகப் பார்க்கிறோம். வாட்சைக் காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல, ''ஓ... தாராளமாகக் கிளம்பலாமே...'' என்றபடி கோர்ட்டுக்கு அருகே நிற்கும் வேனில் ஏறச் சென்றார். குழுமி இருந்த கட்சிக்காரர்களை வணங்கியபடி, மாறாத புன்னகையோடு திகாருக்கு கிளம்பினார்  

நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத அந்த சக்தி!
என்று டெல்லியில் இருந்து இரா.சரவணன்கள் தொடர்ந்து பரப்புரை செய்துகொண்டிருந்தது நினைவிருக்கிறதா?


இப்படித் தொடர்ந்து கனிமொழிக்கு அனுதாபம் தேடித் தருகிற மாதிரி செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி! என்று போஸ்டர் அடித்துத் திருவிழாக்கள் சங்கமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்னால்,தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிப் போயிருக்கிறது, கனிமொழி ஜாமீன் விவகாரம்!

அடுத்த நிகழ்ச்சி, நவாப் நாற்காலி!

நிகழ்ச்சிக்குப்போகுமுன் ஒரே ஒரு கேள்வி!

ஒரே நாற்காலிக்கு எத்தனை வாரிசுகள்? எத்தனை போட்டிகள்?

  •  

சண்டேன்னா மூணு! கேடிகள்,கேலிச் சித்திரங்கள், கமெண்டுடன் !

Sandeep Adhwaryu is a political cartoonist. 

He considers himself an ‘extremist’ who is out to destroy the extremities of Indian democracy 

இப்படி ஒரு வித்தியாசமான அறிமுகத்துடன் சந்தீப் அத்வர்யு என்பவருடைய கருத்துப்படங்களை சண்டே கார்டியன் இதழில்  பார்த்தபோது, மிகவும் ஆச்சரியப்பட்டேன். வித்தியாசமான கண்ணோட்டத்தோடு ஒவ்வொரு படமும்...! சண்டே கார்டியன் இதழுக்கும் ஓவியருக்கும் மனமார்ந்த நன்றியுடன், சண்டேன்னா கொஞ்சம் (கருத்து) சண்டை போடுகிற படங்களாக...! ஒவ்வொரு படத்துக்கும் என்னுடைய விமரிசனக் குத்துகளுடன்!  

இதற்குத் தனிவிளக்கம் அவசியமில்லைதான்! ஆனாலும்,இது தமிழில் எழுதப்படுகிற வலைப்பதிவு என்பதால்,தமிழினத்தலீவராகத் தன்னை சொல்லிக் கொள்பவரிடத்தில் இருந்து ஆம்பிப்பதில் தவறேதும் இல்லையல்லவா?
காங்கிரஸ்காரர்கள் தங்களை மாதிரியே ஆம் ஆத்மிக்கும் முதுகெலும்பு இருக்காது என்று தான் நினைக்கிறார்கள்! பரிணாம வளர்ச்சியில் சாமானியனுக்கும் முதுகெலும்பு மிக வலுவாக வளர்வது தவிர்க்க முடியாததுதான் இல்லையா!
நேரு பரம்பரை வாரிசை, அடுத்த ஆண்டு மத்திக்குள் எப்படியாவது பிரதமர் நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிடவேண்டும் என்று இத்தாலிய மம்மிக்கு ரொம்பவே ஆசை! டம்மிப் பீசை விட்டே அறிவிப்பு வெளியிடவும் நாள் குறித்தாயிற்றாம்! ஆசை,தோசை, அப்பளம் வடை என்று, புத்து (budhdhu) இன்னும் வளராமல், கொள்ளுத் தாத்தாவின் செருப்பு சைசுக்குக் கூட உயராமல் இருக்கிறேனே மம்மி என்று ராவுல் விஞ்சி தவழ்ந்து கொண்டிருக்கிறாரே! பாவம், மம்மியின்  ஆசை அம்பேல்தானா?
கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களா?
ஆமாம்!
 
விரக்தியின் உச்சகட்டத்திற்கே போய் விட்டீர்களா?
ஆமப்பா, ஆமாம்!
 
என்ன செய்வது என்றறியாமல் திகைக்கிறீர்களா?
அட ஆமாம்பா ஆமாம்!
 
அப்படியானால், என்ன செய்வது என்று எனக்கு வழிகாட்டுங்கள்!
...................
(....
மன்மோஹனுக்குச் சொன்ன பதில் சென்சார் செய்யப்பட்டது!
அதற்காக யாரும் நாண்டுக்கிடவோ, நாக்குத் தள்ளவோ வேண்டாம்!)

சீசரா இருப்பதற்கும் சீசரின் முகமூடியாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை!சீசருக்கு, ஒரே ப்ரூடஸ், ஒரே கத்தி! முகமூடிக்கு,சந்து கிடைத்த இடத்தில் எல்லாம்கத்தி!

டம்மிப் பீஸ்களுக்கு அனுதாபப் பட இங்கே எவருமில்லை!இது தான் முக்கியமான வித்தியாசம்!
பூனை இளைச்சுதுன்னா, எலியே,ஓடைப்பக்கம் ஒதுங்கிக்கலாம் வாரியா என்று கூப்பிடுமாம்!பவார், கருணா பெருச்சாளிகள் என்ன என்ன செய்திருக்கும்?

பானாசீனா தானா சால்வை அழகர்தானா தாளம் வரும் தானா எகத்தாளம்வரும் தானா ......

தந்தனாப் பாட்டு பாடோணும்! துந்தனாத் தாளமும் போடோணும்! தந்தனா அடத் தந்தனா....
உன்னைக் கண்டு நான் பாட.......வாத்து மடையா வாத்து மடையா
என்னைக் கண்டு நீ ஆட .............
வாத்து மடையா வாத்து மடையா 
காங்கிரஸ்காரர்களின் கோஷ்டி கானம்!! 
காங்கிரசே!கலைஞரின் இளைஞனை சிறைக்குள் அடைத்து விட்டு சீனாவுடன் போட்டியா? ஆ.ராசாவை வெளியே விட்டுப் பார்!
இல்லையென்றால் கனிமொழிக்கு  மத்திய அமைச்சர் பொறுப்பை கொடுத்துப் பார்!!


ராசி நல்ல ராசி-அப்போது பெயில், இப்போது இடமாற்றமா?

 
"In exercise of the powers conferred by section 9 (6) of the CrPC 1973, the acting Chief Justice and judges of this court (Delhi High Court) have been pleased to order that the trial of the 2G spectrum cases shall be held in Tihar court complex, New Delhi, according to law"

ப்படி டில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த அறிவிப்பை வாசித்து,வருகிற வியாழக்கிழமை முதல்,ஸ்பெக்ட்ரம் ஊழல்  வழக்கு விசாரணை, திஹார் சிறை வளாகத்திலேயே நடக்கும் என்று சிபி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திரு ஒ பி சைனி அறிவித்த போது,குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் என்று கூடியிருந்த அத்தனை பேருமே அதிர்ந்து தான் போனார்கள்.


ன்ன காரணத்துக்காக, வழக்கு விசாரணை நடக்கும் இடம் மாற்றப்படுகிறது என்பதை இந்த அறிவிப்பு வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், விஐபிக்களின் பாதுகாப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ஊகம் எழுந்தது.

ந்த வழக்கு விசாரணை கடந்த பதினொன்றாம் தேதி ஆரம்பித்த போது, சந்தைக்கடை மாதிரி ஒரே இரைச்சலாக, யார் என்ன பேசுகிறார்கள், என்னநடக்கிறது என்பதே புரியாமல் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.


குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள், ஒரே புழுக்கமாக இருக்கிறது, குளிர்சாதனம் சரியாக வேலை செய்யவில்லை என்றெல்லாம் நீதிபதியிடம் குற்றம் சொன்னார்கள். நீதிமன்றமா அல்லது வேறு பொது நிகழ்ச்சியா என்பதேகூடத் தெரியாத அளவுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிறையப் பேர் நீதி மன்றத்துக்குள் இருந்தார்கள்.குற்றம் சாட்டப் பட்டவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

த்திரிகைகளும் கூட முதல்நாள் விசாரணையை ஏகத்துக்கும் பரபரப்பாகக் கவர் செய்து செய்திகளை வெளியிட்டன. டிவிட்டரில் வெவ்வேறு தலைப்புக்களில் இந்த வழக்கு விசாரணையின் உடனடி நிலவரம் பரிமாறிக் கொள்ளப்பட்டன. எல்லாம் அந்த ஒரே நாள் முதல் நாள் தான்! அதற்கடுத்த இரண்டாம் நாள், அதற்கடுத்தவாரம், அப்புறம் நேற்றும் இன்றும் என்ன நடந்தது என்பதை எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ப்புச்சப்பில்லாத விசாரணை, சாட்சியம் பதிவு செய்யப்படுகிற சடங்கு மட்டுமே நடந்ததில் பத்திரிகைகளுக்கு என்ன பரபரப்புச் செய்தி கிடைத்து விடும்? கனிமொழியைப் பெரிய வில்லி, சதிகாரியாகச் சித்தரித்த அதே ஊடகங்கள், இப்போது ட்ராக்கை மாற்றி, விஐபி குற்றவாளிகளிடம் நீதிமன்றம் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள்கிறது, கனிமொழிக்கு ஜாமீன் வழங்காமல் தொடர்ந்து மறுத்து வருவது, அடிப்படை உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம் என்ற ரீதியில் கொஞ்சம் அனுதாபத்தோடு உச்சுக் கொட்டி செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

னங்களுடைய எண்ணவோட்டமோ வேறு மாதிரியாகத்தான் இருந்தது.ஊடகங்கள் இதே ரீதியில் இன்னும் கொஞ்சம் அனுதாபத்தை வளர்க்க முயன்றிருந்தால், இப்போது கூடங் குளத்துக்கு எதிர்ப்பு என்ற நிலை மாறி, அணு உலைக்கு ஆதரவாகப் போராட்டம் என்று ஆரம்பித்திருக்கிறார்களே அது போல விஐபி குற்றவாளிகளை வெளியே விடாதே என்று போராட்டம் கூட ஆரம்பித்திருக்கக் கூடும்.

ழக்கம்போல, இந்த இடமாற்றத்தை முதலில் எதிர்த்ததும் ஆ.ராசாதான்! "இந்த தேசத்தில் என்ன நடக்கிறது  என்றே புரியவில்லை!" என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்!அவரது வழக்கறிஞர் திரு சுஷில் குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய கருத்தைக் கேட்டறிந்து, அவர்களுடைய சம்மதத்துடன் தான் இடமாற்றத்தை முடிவு செய்திருக்க வேண்டும், இது முழுக்க முழுக்க  சட்டவிரோதம் என்று கொதித்திருக்கிறார். ஆகக் கலைஞரின் இளைஞன், ரொம்பத்தான் சுறுசுறுப்பாக இருக்கிறார்!  

ப்புறம் மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஷாஹித் பால்வாவின் வழக்கறிஞர் மேமன், இது தகுந்த காரணமே இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். இந்த இட மாற்றம், இப்போது அவர்கள் அனுபவித்து வரும் சுதந்திரக் காற்று, தகவல் பரிமாற்றங்கள், இன்ன பிற விஷயங்கள் எல்லாமே அடை பட்டுப் போய்விடும் என்பது மிகவும் வெளிப்படை.

கனிமொழி, தனக்காகக் கூடக் கவலைப்படவில்லையாம்!  


ழக்கறிஞர்கள் அங்குமிங்கும் அலைந்து சிரமப்படவேண்டி இருக்குமே என்று தான் கவலைப்பட்டாராம்! திஹார் சிறைக்குள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களைத் தவிர, பத்திரிகையாளர்கள் உட்பட வெளியாட்கள் எவரையும் அனுமதிக்க ப்போவதில்லை. ஆக, நீதிமன்ற வளாகத்துக்குள், முன்புபோல உறவினர்கள், ஆதரவாளர்கள் எவரும் பக்கத்தில் அமர்ந்து ஆதரவாக அரட்டை அடிக்க முடியாது. ஆர்ப்பாட்டமாக வெளியே வந்து பேட்டியும் கொடுக்க முடியாது. கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும், என்ன செய்ய?

யர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து நாளை உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி திரு ஏ.கே சிக்ரியிடம்   முறையிட்டு, இந்த மாற்றத்துக்குத் தடை கோர இருப்பதாக செய்திகள் மேலும் சொல்கின்றன.ஆனால், இந்த அறிவிப்பை மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் உண்மையிலேயே கம்மிதான்! இதில், குற்றம் சாட்டப் பட்டிருக்கிறவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆதாயம், ஊடகங்களில் பரபரப்புக்காக, இப்படி அல்லது அப்படி என்று ஊகங்களை அள்ளி இறைத்து வருகிற கற்பனைகள் இனிமேல் குறையலாம்!

"துவரை, தலைவர் டில்லிக்குப் போனார், மகளைப் பார்த்தார் ஜாமீன் மட்டும் தான்கிடைக்கவில்லை! இப்போது தளபதி போனார், சகோதரியைப் பார்த்தார், விசாரணை நடக்கும் இடமே மாறி விட்டது!ஆதரவாளர்கள், கட்சி எம்பிக்கள் கூட்டம் கூட்டமாகப்போய் ஆதரவு தெரிவிக்க இனி அங்கே போக முடியாது. இப்போது திமுகவின் நேரம் என்ன நேரமோ தெரியவில்லை, என்ன செய்தாலும் தலைவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது!" நேற்றைய பதிவைப்பார்த்துவிட்டு ஒரு வழக்கறிஞர் நண்பர் வருத்தப் பட்டுச் சொன்னது இது.வருத்தப்பட்டது எதற்காக  என்றால், அவர் ஒரு தீவீர உடன்பிறப்பு!!

வரால், அவரது கட்சித்தலைமையின் இன்றைய நிலைமையை பார்த்து வருத்தப்படத்தான் முடியும்.

வருத்தம் தந்த செய்தி ஒன்று    இரண்டு 


ஜெயிலா பெயிலா அப்டேட்ஸ்! 23.11.2011 11.10 am

யுனிடெக், ஸ்வான் டெலிகாம், அணில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் மூன்று பேர், ஆக மொத்தம் ஐந்துபேருக்கு மட்டும்  உச்ச நீதிமன்றம் இன்று காலை ஜாமீன் வழங்கி இருக்கிறது.


இது முதல் இன்ஸ்டால்மென்ட் தானா? இன்னும் வருமா?

அடுத்த (கனிமொழி, சரத்குமார்) இன்ஸ்டால்மென்ட் டிசம்பர் ஒண்ணாந்தேதி விசாரணைக்கு வரும்போது தெரியும்!

சிறை மீட்க ஸ்டாலின் வருகிறார்....! ஜாமீன் அப்டேட்ஸ்!


கனிமொழி ஜாமீன்: தில்லியில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

தினமணி இன்றைய செய்திகளில் ......

அப்டேட் அப்டேட்டுன்னு சீரியசாகவே இருந்தா எப்படி? கொஞ்சம் சிரிக்கவும் வேண்டாமா? விகடன் உபயத்தில்....

புதுதில்லி, நவ.20: கடந்த ஆறு மாத காலமாக திகார் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு ஜாமீன் விடுதலை பெறுவது தொடர்பாக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தார்.

கனிமொழி சார்பில் இப்போது வாதாடுபவர்களைவிடத் திறமை சாலியான வழக்கறிஞர்களை ஆஜராகச் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் வந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டி.வி. யின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரைத் திங்கள்கிழமை சிறையில் சந்தித்துப் பேச உள்ளார் ஸ்டாலின்.


"2 ஜி அலைக்கற்றை' ஒதுக்கீட்டில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நவம்பர் 3-ம் தேதி நிராகரிக்கப்பட்டன.

கனிமொழியைச் சாதாரணப் பெண்மணி என்று கருத முடியாது என்றும், வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்க உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி காரணம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கனிமொழிக்கு ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஆதரவாக உள்ள விவகாரங்கள் குறித்து வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை தில்லி வந்தார். இந்த வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆஜராகி வாதாடினார். அப்போதும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

அதன் பிறகு கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு மூத்த வழக்கறிஞர் அல்டாப் அஹமது வாதாடியும் ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த நவம்பர் 3-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணக்கு வந்தபோது அல்டாப் அஹமத் ஆஜரானார்,

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்' என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவித்த பின்னரும் ஜாமீன் பெற இயலாதது வழக்குரைஞர்களின் குறைபாடு என்று தி.மு.க. தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனால் கனிமொழிக்கு ஆதரவாக வாதாடும் வழக்குரைஞர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்று கனிமொழியின் தாயார் ராசாத்தியம்மாள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் தி.முக.வுக்காக நீண்ட காலமாக வாதாடிவரும் வழக்குரைஞரான சண்முகசுந்தரம் போன்றவர்களை மாற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி தயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.


ராசாத்தி அம்மாள் தரப்புக்குப் பிடிக்காதவர் என்று கூறப்பட்டாலும் வழக்குரைஞர் சண்முகசுந்தரம் இல்லத் திருமணத்தில் கருணாநிதி சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு ஜாமீன் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தத்தான் தில்லிக்கு ஸடாலின் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது பயண நோக்கம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஒரு தனியார் ஹோட்டலில் ஸ்டாலின் தங்கியிருக்கிறார்.

கட்சி சார்பில்லா வழக்குரைஞர்?

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 1-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்தில் வருகிறது. ஓரிரு வாரங்களுக்கு பின்னர் நீதி மன்றம் கிறிஸ்துமஸ், புது வருடத்துக்காக விடுமுறை விடப்படும். அதற்கு முன்பே கனிமொழி ஜாமீன் பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

கனிமொழிக்கு ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் "இன்று ஜாமீன் கிடைத்து விடும்; இன்று விடுதலை ஆகிவிடுவார் என்று தவறான தகவல்களை தி.மு.க வழக்குரைஞர்கள் கருணா நிதிக்குத் தெரிவித்து வருவது, அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆகையால் கனிமொழிக்காக வாதாடும் வழக்குரைஞர்கள், கட்சி சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அவரைக் கனிமொழியின் தாயார் ராசாத்தியம்மாள் வலியுறுத்தி வருகிறார் என்று தெரிகிறது.

கேடி பிரதர்ஸ் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சுமார் இரண்டு மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை. கேடி ப்ரதர்சுக்கு இத்தாலியமம்மியின் ஆலோசகர் அஹமது படேலிடம் செல்வாக்கு நிரம்ப இருப்பது ஊரறிந்த ரகசியம். ஜூலை இறுதியில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக சொல்லப்பட்ட மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை.அதில் யார்யார் பெயரை சேர்ப்பது என்பதை விட, யார் யார் பெயரை விடுவது என்ற தலைவலியே சிபிஐக்குப் பெரிய தலைவலியாக இருக்கும் போல!

நாளை நாடாளுமன்றம் கூடவிருக்கும் தருணத்தில் சிதம்பரத்தின் மீதான நெருக்கடி முற்றிவருகிறது! டாக்டர் சுப்ரமணிய சுவாமி ஒருபுறமும், நாடாளு மன்றத்தில் சிதம்பரத்தைப் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதும் பரபரப்பைக் கூட்டிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, சிபி ஐ, மறைந்த பிரமோத் மகாஜன் மீதும் குற்றம் சாட்டி ஒரு புதுக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் சோதனையை நடத்தியிருக்கிறது. சிதம்பரத்தைக் காப்பாற்றக் கடைசி முயற்சி என இதை எதிர்க்கட்சியான பிஜேபி சாடி இருக்கிறது.

ஒருமாதம் நடைபெறவிருக்கும் இந்தநாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின்னால், ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு தாக்குப் பிடிக்குமா அல்லது இடைத்தேர்தலை சந்திக்கவேண்டி வருமா என்ற கேள்வியின் பின்னணியில் ஸ்டாலின் கனிமொழி ஜாமீன் பிரச்சினையில் டில்லிக்கு விசிட் அடித்திருப்பது, கொஞ்சம் வித்தியாசமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.