ஜாமீன்! கொடுத்தவனே(ரே) பறித்துக் கொண்டாண்டி! மானே, கிடைத்ததையும் பறித்துக் கொண்டாண்டி!


என்ன சொல்வது என்றே புரியவில்லை. சட்டம் எப்படி சில விஷயங்களைப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் எழும் குழப்பம் தான் இந்தப்பதிவின் மையமே தவிர, தீர்ப்பு, அல்லது அதன் உள்ளே உள்ள விஷயங்களைப் பற்றி அலசுவது, விமரிசிப்பது இல்லை.

கடந்த பிப்ரவரி மா
ம் ஆ.ராசா கைது செய்யப்பட்டதில் இருந்து, வரிசையாகக் கனிமொழி வரை பதினான்கு தனிநபர்களும், மூன்று நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டதில், ஜாமீன் அனுமதிக்கப்படாமலேயே இருந்த நிலை மாறி, கடந்த சில நாட்களுக்கு முன்தான், மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவராக ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.

மிஞ்சி இருந்தது, ஆ.ராசா, செயலாளர் சித்தார்த் பெஹுரா, தனிச் செயலாளர் ஆர் கே சந்தோலியா இந்த மூவரும் தான்! இந்த மூவர் தான்
ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டில் அச்சாணியாக இருந்தவர்கள் என்று இவர்களது ஜாமீன் மனுவை சிபி ஐ கடுமையாக எதிர்த்து வந்தது.  கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தன்னை மட்டும்ஜாமீனில் வெளியே விட  மறுப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றுஆர் கே சந்தோலியா தாக்கல் செய்திருந்த மனு சிபிஐ சிறப்பு நீதி மன்றத்திலும், சித்தார்த் பெஹுராவின் மனு டில்லி உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்தன.

நேற்றைக்கு, ஆர் கே சந்தோலியாவை,
அவர் ராசாவின் தனிச் செயலாராக மட்டுமே இருந்தவர், இந்த விவகாரத்தில் எந்த விதமான ஆதாயத்தையும் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படாத நிலையில் மற்ற இருவருடன்(ராசா, பெஹுரா) ஒப்பிட முடியாது என்று கருதுவதால், அவருக்கு ஜாமீன் அளித்து சிபி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு ஒ பி சைனி உத்தரவிட்டிருந்தார். 

ஒரேமாதிரிக் குற்றம் சாட்டப் பட்டிருந்தவர்களில் ஏற்கெனெவே பதினோரு பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டதையும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். . அதன்படி நேற்று மாலையே சந்தோலியா ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால், சந்தோஷம் நேற்று (வெள்ளி) ஒருநாள் வரை கூட நீடிக்கவில்லை!

காரணம் அங்கே டில்லி உயர்நீதிமன்றத்தில் பெஹுராவின் ஜாமீன் மனு மீது, நீதிபதி திரு ஷாலி தன்னுடைய  தீர்ப்பை ரிசர்வ் செய்து வைத்திருந்த  நிலையில், இன்று டில்லி உயர்நீதிமன்றம் ஒரு விசித்திரமான தடை உத்தரவை அளித்திருக்கிறார். ஆர் கே சந்தோலியாவுக்கு அளிக்கப் பட்ட ஜாமீன், பெஹுராவின் வழக்கையும் பாதிக்கும் என்பதால், அவர் ஜாமீனில் வெளியே விடப் படாமல் இருந்தால், அந்த ஜாமீன் மீது தடை பிறப்பிப்பதாகத் தீர்ப்பு. அளிக்கப்பட்டிருப்பது தான் மிக ஆச்சரியமாக இருக்கிறது.

சந்தோலியாவின் ஜாமீன் மனு, சிபிஐ தரப்பில் சொல்லப்பட்ட ஆட்சேபங்கள் மற்றும் ஆவணங்கள்,அதுபோக ஜாமீன் அளிக்கப் படுவதற்கான காரணங்களாக விசாரணை நீதிபதி கருதிய காரணங்களை, நீதிமன்றப் பதிவாளர் வழியாக, உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி திரு. ஷாலி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நீதிபதி முன்தான் கனிமொழி, சரத்குமார் முதலானவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்ற வியாழனன்று விசாரிக்கப்பட்டு, நான்கு  நாட்களுக்குப் பின் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.


கனிமொழி முதலானவர்கள் ஜாமீன் மனு மீது சென்ற திங்களன்று, உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுக்காமல் மறுப்பதைக் கண்டித்திருந்த தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், உச்சநீதிமன்றம், கனிமொழி உள்ளிட்டு குற்றம்சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீதான கடுமையான குற்றச் சாட்டுக்களைக் குறித்து ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருப்பதாக நீதிபதி திரு ஷாலி குறிப்பிட்டிருந்ததையும் நினைவு படுத்திக் கொண்டால், என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் என்ன, இந்தப்பதிவு எதற்காக என்பதும் புரியும். குறிப்பிட்ட அந்தப் பகுதி மட்டும் கீழே, முழுமையான செய்தி இங்கே.

“But that is not the case. Section 409 and Section 120B (criminal conspiracy), when read together, carries the maximum punishment of life imprisonment. Criminal breach of trust is also a substantive charge. However, Section 409 does not find mention in the Supreme Court order. Either the court was not made aware of this charge or if we take this is a substantive charge, the maximum punishment is life term and not seven years, as was noted by the Supreme Court,” observed Justice Shali. 


சந்தோலியாவின் தரப்பில், இந்த உத்தரவை எதிர்த்து, வருகிற திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் படலாம் என்று சொல்லப்படுகிறது.
 
உச்சநீதிமன்றமும் இதே மாதிரி நிலையை எடுத்தால்..........

பதிவின் தலைப்பை மறுபடி படித்துக் கொள்ளுங்கள்! 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!