ஆ.ராசா!மாட்டிக் கொண்ட மாப்பிள்ளையா...மாட்டி விட்ட மாப்பிள்ளையா?

ஆ. ராசா, பெகுரா, சண்டோலியாதான் பிரதான எதிரிகள்: சிபிஐ

புது தில்லி, நவ.30: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தொலைத்தொடப்புத் துறைச் செயலர் பெகுரா, தனிச் செயலர் சண்டோலியா ஆகியோர்தான் பிரதான எதிரிகள் என்று சிபிஐ குறிப்பிட்டது.புதன்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்.கே. சண்டோலியாவின்  ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. 

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கில் பிரதான எதிரிகள் ஆ. ராசா, பெகுரா, சண்டோலியா ஆகியோர்தான். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப் பெரிய முறைகேடு நடப்பதற்கு திட்டமிட்டதில் இவர்கள் மூவர்தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் இவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள். எனவே இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு வழக்குரைஞர் யு.யு. லலித் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 நிறுவன அதிகாரிகள் மற்றும் கனிமொழி உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் இவர்களுக்குப் பொருந்தாது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் மாறுபட்டது. ஜாமீனில் விடுதலையானவர்களுடன் இவர்களை சம்பந்தப் படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான தேதியை மாற்றியவர் சண்டோலியாதான். இதனால் தனியார் நிறுவனங்கள் பயனடைந்தன. தேதியை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்ததாக சண்டோலியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விருப்ப கடிதம் (எல்ஓஐ) அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுத்தியதும் சண்டோலியாதான் என்று லலித் வாதாடினார்.

இந்த வழக்கில் இரு வேறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர் என்பதால் ஜாமீன் மறுப்பது சரியானதல்ல என்று சண்டோலியா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வால் குறிப்பிட்டார். இந்த வழக்கில் ஆதாயமடைந்தவர்கள் ஜாமீன் பெற்று வெளியே இருக்கும்போது கடந்த 10 மாதமாக தனது கட்சிக்காரர் சிறையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர் கேள்வியெழுப்பினார். 

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஏனிந்த பாரபட்சம் என்று அகர்வால் கேட்டார். மேலும் இழப்பை ஏற்படுத்திய ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஜாமீன் அளிக்கப் பட்டுள்ளது என்றும் ஆனால் சண்டோலியா சிறையில் இருக்கிறார் என்றும் அகர்வால் சுட்டிக்காட்டினார். மேலும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக சிபிஐ குற்றச்சாட்டு எதையும் சண்டோலியா மீது பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.இதைக் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு குறித்து வியாழக்கிழமை தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.

தினமணியில் இன்றைய காலை செய்தி இது!நேற்றைக்கு, ஆர் கே சந்தோலியாவின் வழக்கறிஞர் எழுப்பிய  தர்மசங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், எங்கோ எவரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை அப்படியே பிசகாமல் ஒப்புவிக்க வேண்டிய நிலை சிபி ஐ வழக்கறிஞர் யு யு லலித்துக்கு!மனிதர் தன் தலைவிதியை நொந்து கொண்டு தான் பதில் சொல்லியிருப்பார் என்பதும் தெரிந்தது தான்.

இன்றைக்கு சிபி ஐ சிறப்பு நீதிமன்றம் சந்தோலியாவுக்கும் ஜாமீன் அளித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அடுத்து இதேமாதிரி சித்தார்த் பெஹுராவும் வெளி வந்து விடுவார்.



இந்த இடத்தில் ஒரு சிறு அப்டேட்: வியாழன் இரவு கிடைத்த செய்தி கொஞ்சம் சுருக்கமாக இருந்ததை ஒட்டியே இந்த வரிகள் எழுதப் பட்டன. இன்று கொஞ்சம் விரிவாகத் தகவல்கள் வந்திருப்பதில் சந்தோலியா ஆ.ராசாவின் தனிச் செயலாளராக இருந்தவர் மட்டுமே, ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா இருவருடனும் இவரை ஒப்பிட முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, ஜாமீன் வழங்கி ருக்கிறார்.


பெஹுராவும் கூட, உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் செய்ததில் வினோதமான வாதம் ஒன்றை சிபி ஐ எடுத்து வைத்திருப்பதாக இந்த செய்தி சொல்கிறது.

குற்றத்தின் தன்மை எந்த அளவுக்குப் பெரியது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இப்படி பொது ஊழியர்கள் எல்லோரும் எல்லோரும் "சமம்"  என்ற அடிப்படையில் ஜாமீன்கேட்கத் தொடங்கினால், அது ஆ.ராசாவும் ஜாமீன் கேட்பதற்கு கதவைத் திறந்து வைத்து விடுவது போலாகி விடுமாம்!





ஆ.ராசா மட்டும் வெளியே விடப் படுவாரா என்பது இன்னமும் ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித் தான் விடைதெரியாத கேள்வியாக மிஞ்சியிருக்கிறது.செலாவணியானால் தான் உண்டு!


கனிமொழி வெளியே வந்ததில் சந்தோஷப்பட்ட கருணாநிதி, ஆ.ராசா விவகாரத்தைப் பற்றிப்பேசிய விதம், ஆ.ராசாவைக் காவு கொடுப்பது என்ற முடிவுக்கே வந்துவிட்ட மாதிரித்தான் தோன்றுகிறது.

இங்கே காங்கிரஸ் கட்சியின்நிலை வேறு ரகம்! எவ்வளவு அசிங்கப் பட்டாலும் சரி ப சிதம்பரத்தைக் காப்பாற்றியே தீருவது என்ற முடிவில் இருப்பதாகத்தான் தகவல்கள் சுட்டுகின்றன. கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த சூட்டோடு சூடாகக் காமன்வெல்த் விளையாட்டுக் கல்மாடியும் ஜாமீனுக்கு விண்ணப்பித்திருக்கிறார். அவருக்கும் மட்டும் parity கிடைக்காதா என்ன!




கல்மாடியோ சிதம்பரமோ, குற்றம் செய்யாதவர்கள் என்பதற்காக அல்ல. இவர்கள் சிக்கினால், இத்தாலிய மம்மியும் குடும்பத்தோடு அடுத்து சிக்க வேண்டிவரும் என்ற அச்சமோ என்னவோ,இவர்களைக் காப்பாற்றக் காங்கிரஸ் ஆலாய்ப் பறக்கிறது.

இப்போது வெளிவந்திருக்கும் செய்தியைப் பார்த்தால், ஸ்டாலினும் கூட முன்ஜாமீனுக்கு மனுப்போட வேண்டிய நிலைக்கு வந்து விட்டார் போலத் தெரிகிறது.  

நாளை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!
 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!