சண்டேன்னா மூணு! மண்ணுமோஹனும் அழகிரி, தயாநிதி, பின்னே ஜெயலலிதாவும்!

கவர்னரா  நான் எதுக்கு இருக்கேன்! டோன்ட் ஒர்ரி மன்மோஹன்னு சொல்றாரோ ரோசையா!


 ஏதோ நீங்க இருக்கீங்கன்ற தைரியத்துல தான் நானும் இருக்கேன்னு சொல்றாரோ அழகிரி!


சிரிசிரி தயாநிதி!என்னை ஒண்ணும் பண்ண முடியாதேன்னு சொல்றாரோ!

திமுக தலைவர் கருணாநிதி திங்களன்று காலையில் ராஜ்பவனில் பிரதமரை சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து மனு ஒன்றைக் கொடுத்தாராம்! அது வெளியில் சொல்லப்படுகிற தகவல்!ஆனால், இந்த வருடத்தின் அதிகம் அறியப்பட்ட முகமாக, அதாவது மிகவும் பிரபலமான கைதி என்று இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழால் வர்ணிக்கப்பட்ட கனிமொழியையும் உடன் அழைத்துப் போனாராம்! அதற்கு  எத்தனை உள்ளர்த்தம் இருக்கிறதோ?

தோட்டத்தில் சசிப் பெயர்ச்சி தொடங்கி  ராஜ்பவனில் கனிப்பெயர்ச்சி இரண்டும்  மண்ணுமோகன் பெயர்ச்சியில் வந்து முடியுமோ? 


 ஆனாக்க அஞ்சாதே மண்ணுமோஹன்னு ஒருத்தர் கூட சொல்ல மாட்டேங்கறாங்களே!

சால்வை அழுகர், பானா சீனா, தேதிமுக, கறுப்புக் கொடி, முல்லைப்பெரியாறு விவகாரம் இவைகளை அப்டேட்சில் விரிவாகப் பார்க்கலாம்!  

3 comments:

 1. இது எப்படி நிகழ்ந்தது? அம்மாவின் முன்னாலேயே "மண்ணு மோகனுடன்" கைகுலுக்கி சிரித்து மகிழும் தி.மு.க தலைகள்!!
  நாளைக்கு பார்க்கலாம் நம்ம பிள்ளைகள் இந்த அபூர்வ படங்களை வித விதமாக கார்டூன் பண்ணி டயலாக் அடித்து வெளியிடுவார்கள்.
  சால்வை அழகர், பானா. சீனா. .....பாவாம், இவர்களை அழ வைப்பதே உங்களுக்கு வேலையாய் போனது.

  ReplyDelete
 2. முழு புகைப் படங்கள், காணொளி எந்த இணையத்தளத்தில் (இலவமாக) கிடைக்கிறது

  ReplyDelete
 3. வாருங்கள் மாணிக்கம்!

  //கைகுலுக்கி சிரித்து மகிழும்// :-))))

  "கை"யுடன் கைகுலுக்கி சிரித்து மகிழ்ந்தவர்கள் எவருமில்லை!ராஜபார்ட் வேஷம் கட்டி, நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல, நான் அழுகிறேன் அழுகிறேன் அழுகை வரலன்னு பாட்டு வேணாப் பாடலாம்! மண்ணு மோகன் மூஞ்சியப் பாருங்கள்!

  மனுஷன் சிரிக்கிறாரா, அழுவுறாரா எதையும் கண்டு பிடிக்க முடியாது! அந்த அளவுக்கு டம்மி!

  வாருங்கள் ராம்ஜி!

  எல்லாம் தேடிக் கண்டு பிடித்ததுதான்! தேடுங்கள் கண்டடைவீர்கள்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!