Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

ஷி ஜின்பிங்கும் பிளாக்செயின் டெக்னாலஜியும்!

இங்கே நேற்றைக்குக் கொஞ்சம் மேம்போக்காக எழுதி விட்டேனோ?  அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட செய்தியை எல்லாம் தாண்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று மத்திய கமிட்டி கூட்டத்துக்கு முன்னாலேயே ஒரு பூகம்பத்தைப் போல ஏகப்பட்ட அதிர்வலைகளை உண்டாக்கி விட்டார் என்று சொல்வதில் கொஞ்சமும் பொய்யில்லை. எங்கெங்கெல்லாம் அது எதிரொலித்திருக்கிறது என்றால்  bitcoin 10000 டாலரைத் தாண்டி விட்டு இப்போது கொஞ்சம் இறங்கி நிதானத்துக்கு வந்திருக்கிறது.  அதே போல blockchain technology நிறுவனங்களுடைய பங்குகள் உச்சத்தை தொட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. கவனித்தீர்களா?      


Xi Jinping, President of the People’s Republic of China and General Secretary of the Communist Party of China, said the country needs to “seize the opportunity” afforded by blockchain technology. Speaking as part of the 18th collective study of the Political Bureau of the Central Committee on Thursday in Beijing, Xi said blockchain technology has a wide array of applications within China, listing topics ranging from financing businesses to mass transit and poverty alleviation. “We must take the blockchain as an important breakthrough for independent innovation of core technologies,” Xi told committee members என்று இங்கே சொல்வது வெறும் அறிவிப்போ வெட்டிப் பேச்சோ இல்லை. சீனா இணையத் தொழில் நுட்பத்தில் ஒரு புலிப்பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதையே இந்தப்பேச்சு காட்டுகிறது. ஆக, சீனா இந்த விஷயத்தில் தெளிவான முன்தயாரிப்பு, ஆராய்ச்சிகளுக்குப் பிறகே சீன அதிபர் அதைக் குறிப்பிட்டு வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.  

More than 500 blockchain projects have been registered with the Chinese government since March.The filings reveal some of the largest Chinese banks and tech companies working with the technology.Several government offices, including courts and tax bureaus, are testing blockchain platforms to execute administrative tasks, the filings show.Chinese president Xi Jinping announced his support for blockchain technology, while Congress passed a cryptography law one day after Xi’s comment. என்று இங்கேயே இன்னொரு செய்தியும் அதை உறுதி செய்கிறது.


அது என்ன blockchain டெக்னாலஜி? நமக்nகெல்லாம் torrent தெரியும் டவுன்லோட் செய்யத் தெரியும், அதன் பின்னணியில் எப்படி ஒரு விஷயம் ஒரே இடத்தில் இல்லாமல் ஏகப்பட்ட  peers, seedersகளிடமிருந்து பகுதிபகுதியாக வந்து சேருகின்றன என்பதைப் பற்றி என்ன ஏது என்று தெரிந்து வைத்திருக்கிறோமா? கிட்டத்தட்ட torrent மாதிரித்தான் என்று blockchain technology என்று எளிமைப்படுத்தி விட முடியாது. கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள.     இணையத்தை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா என்ன? 

இங்கே உள்ளூர்ச் செய்திகளில் ஒன்றையும் ரசிக்கவே முடியவில்லை என்கிற போது எங்கிருந்து என்ன விமரிசனம் எழுதுவதாம் சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.    

இன்றைக்கு ஒரு சிறப்பு! #அத்திவரதன்

ஆகஸ்ட் மாதத்துக்கு எத்தனையோ சிறப்புக்கள் இருந்தாலும் இந்த வருட ஆகஸ்ட் முதல் தேதிச் சிறப்பாக. அத்தி வரதர் காஞ்சியில்  இன்று முதல்  நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிப்பது மட்டுமே இருக்கிறது. ஜூலை மாதத்தின் 31நாட்களிலும் கிடந்த திருக்கோலத்தில் வணங்கமுடிந்த அத்திவரதனை  நின்ற திருக்கோலத்தில்  இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை அன்பர்கள் காணமுடியும் என்பது இந்தநாளின் தனிச்சிறப்பு! இல்லையென்றால் இன்னுமொரு நாற்பதாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்!



தமிழ் சேனல்கள் மீது எனக்கு ஆயிரம் விமரிசனம் மனக்குறைகள் இருந்தாலும் நேரில் சென்று தரிசிக்க முடியாத என்னைப்போன்ற பலருக்கும் இதுமாதிரி, வீட்டிலேயே இருந்து வணங்க ஒரு வாய்ப்பளித்ததற்காக நன்றி சொல்லத்தான் வேண்டும்! நண்பர் VN கேசவபாஷ்யம் முதல் பலநண்பர்கள் இருந்த இடத்தில் இருந்தே  அத்தி வரதனை நிதமும் வணங்குகிற வாய்ப்பை முகநூலில் புகைப்படங்களாகவும், சிறுகாணொளிகளாகவும் பகிர்ந்து, உதவியிருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தே ஆகவேண்டும்! இணையம் என்னைப்போல எத்தனையோ பேருக்கு தேடியதைக் கண்டடைகிற வாய்ப்பைத் தந்திருக்கிறது.  

அத்தி வரதனைக் கண்ட நிகழ்வைப் பேசவந்த பதிவில் வேறு விஷயங்களைக் கலப்பானேன்? இதுவே இன்றைக்குத் தனிச் சிறப்பாக! 

மீண்டும் சந்திப்போம்.
              

வந்தேனே! வலைப்பதிவெழுத மீண்டும் வந்தேனே!



ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 
*****

ஊடகங்களில் நல்ல செய்தி அல்லது கெட்ட செய்தி என்று பிரித்துப் பார்க்க முடியுமா? இது நேற்றைக்கு எழுந்த கேள்வி. முதலில் செய்தி என்ன, யார் பார்வையில் இருந்து, எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது என்பதெல்லாம் அந்த நல்லது அல்லது கெட்டது என்கிற அடைமொழியைத் தீர்மானிக்கின்றன.

#WashingtonPost இதழுக்கு பாகிஸ்தானிய பிரதமர் #இம்ரான்கான் அளித்திருக்கிற இந்தப் பேட்டியைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்! அமெரிக்க அதிபர் #டொனால்ட்ட்ரம்ப் புடன் #இம்ரான்கான் நடத்திய ட்வீட்டர் அக்கப்போரை ஏற்கெனெவே படித்து இருப்பீர்கள்.. இந்தப் பேட்டி அமெரிக்காவுடனான பாகிஸ்தானிய உறவுகள் மிகவும் கீழேபோய்க் கொண்டிருக்கும் நேரத்தில் துல்லியமான கேள்விகள் அதிக மழுப்பல் இல்லாத பதில்கள் என்றிருப்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

Imran Khan, a onetime cricket star, led the life of a glamorous playboy before he turned to Pakistani politics. This summer, after years in the opposition and then as a member of the coalition government in Islamabad, he finally captured the premiership. He inherits it with a daunting list of challenges for his country, including poverty, terrorism and corruption. This past week, President Trump — who has traded Twitter barbs with Khan and cut military assistance to Pakistan — asked him to help bring the Afghan Taliban to peace talks


இப்படி இம்ரான் கானுடைய பூர்வோத்தரங்களை மிகச்சுருக்கமாக சொல்லிவிட்டு பேட்டியை ஆரம்பிக்கிறார் சீனியர் அசோசியேட் எடிட்டர் லாலி வேமௌத்  முழுப்பேட்டியும் இங்கே   #TheWashingtonPost என்ற தலைப்புக்கு கீழே Democracy dies in Darkness என்று இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? 

இந்தப் பேட்டியைப் படித்த பிறகு ஒரு நண்பருடன்  இந்தப் பக்கங்களிலேயே  உரையாடியது நினைவுக்கு வந்தது. நினைவுகள் இங்கே    அதில் எழுதிய ஒரு பின்னூட்டம் 

இது அறியாமை தான்! அலட்சியப்போக்கு இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்பது தெரியாமலேயே ஏமாந்துகொண்டிருப்பது ஒருவகையான அறிவின்மைதான்! அதே மாதிரி, நாம் எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றும் ஆகப் போவதில்லை,ஏதோ கிடைக்கிறதே அதையாவது வாங்கிக் கொள்வோம் என்ற அவலம், அதுவும் கூட ஒருவகையில்,அறியாமைதான். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்துத் தட்டுக் காசு சம்பாதிக்கத் தெரிந்த சாமர்த்தியம், ஓட்டுக்கு எத்தனை தருவீர்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிற சாமர்த்தியம், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, ஏதோ ஒரு நாளைக்குத் தானே வருகிறது. அதுவும் கூட அனைவருக்கும் கிடைப்பது இல்லை! Winner takes all என்ற பிரிட்டிஷ் தேர்தல் முறைகூட ஊழல் செய்கிறவனுக்குத் தான் உபயோகமாக இருக்கிறது.

ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான், ஆனால் என்ன செய்வது என்பதில் தெளிவில்லாத, அறியாத ஜனங்கள் தான், இவர்கள் தான் இந்த தேசத்து இனமானத் தலைவர்களுக்கும், ராஜசேகர ரெட்டி மாதிரி தண்ணீரில் கூட சம்பாதிக்கத் தெரிந்த அரசியல் வாதிகளுக்கும், சிபுசோரென், மது கோடா போல எல்லாவிதமான பெருச்சாளிகளுக்கும் நாலாவது தூண்! சாய் நாத் மாதிரி ஒருவர் மட்டும் எழுதி என்ன பயன்? 

எப்போதெல்லாம் சர்குலேஷன் சரிந்து விழுகிறதோ அப்போதெல்லாம் அரசை எதிர்த்து பரபரப்புச் செய்திகளை வெளியிடுவார் என்று அந்த நாட்களில் எக்ஸ்பிரஸ் கோயன்காவைப் பற்றி ஒரு கிண்டலான விமரிசனம் உண்டு. ஹிந்து வேறுரகம்!

அரசுக்கு எதிரான செய்திகளை,ஹிந்து ராம்களும், தங்களுக்குவசதி படுகிற வரை பிரசுரிப்பார்கள்! விளம்பரவருமானம் குறைவில்லாமல் கொடுத்தால், அவர்களும் ஒரு கட்டத்தில், முன்பு எழுதியதையே மறக்கடிக்கும் விதமாக சாதனை மலர்கள் வெளியிடுவார்கள். வேறென்ன?

வாஷிங்டன் போஸ்டில் வந்த பேட்டிக்கும் 2009 இல் எழுதிய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

ஒன்றுமே இல்லை என்பதுதான் விசனம் தருகிற உண்மை.  Democracy dies in Darkness என்று வாஷிங்டன் போஸ்ட் சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. நிக்சன் காலத்தைய வாட்டர்கேட் சமாசாரத்தை அம்பலப்படுத்திய நாளிதழ் அது என்பதில் இருந்தே அந்த வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் இல்லை என்பது புரிந்திருக்கும்.

சுதந்திரம், உரிமைகள் அவைகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்பதாவது புரிகிறதா?

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?
         

சுயபுராணம்



   ஏர்டெல் இணைப்பு வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து, பிஎஸ்என்எல் இணைய இணைப்பைத் தற்சமயம் உபயோகித்து வருகிறேன்.

ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படித் தள்ளாடுகிறது, தள்ளாட வைக்கிறார்கள் என்பதை இன்னொரு பொதுத்துறை நிறுவனத்தில் முப்பது வருடம் பணியாற்றிய அனுபவத்தில் நிறையவே பார்த்திருக்கிறேன்-அனுபவித்திருக்கிறேன்.  முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது, பி எஸ் என் எல் நிறையவே மாறியிருக்கிறது! ஆனாலும் வாடிக்கையாளருக்குத் திருப்தி ஏற்படுகிற விதத்தில் இருக்கிறதா என்றால், இன்னமும் இல்லை என்பதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

யாகூ அஞ்சலைத் திறக்க முடியவில்லை. பலதளங்கள் திறக்க மாட்டேன் என்று பிரவுசரில் மேலே சுற்றிக் கொண்டே அடம் பிடிக்கின்றன. சிலதளங்கள் அதைவிடப் பரிதாபம் ஐபிஎன் லைவ், தினமணி தளங்களின் முகப்பில் ஒருபகுதி லோடாகிறது. செய்திகளைக் காணோம். இரண்டு தெரு தள்ளி இருக்கும் நண்பருக்கும் ஆரம்ப காலத்தில் இதே பிரச்சினை இருந்திருக்கிறது. இப்போது இல்லை எக்ஸ்சேஞ்சில் இணையத் தொடர்புகளில் எழும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்கென்றே இரண்டு எண்கள் இருக்கின்றன. ஒன்றில் தொடர்பு கொண்டபோது, மிகக் கூலாக நாங்கள் வெறும் சர்வீஸ் ப்ரொவைடர் தான்! முப்பதாயிரம் சந்தாதாரர்களில் ஒருவர் நீங்கள்! மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அது உங்களுக்கும் கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் சொன்னாரோ எனக்குத் தெரியாது! அவர் சொன்னபடி கிடைக்கவில்லை என்பதை, அப்போது கோளாறைப் பார்ப்பதற்காக வந்த தொழில்நுட்பப் பணியாளர் முன்னிலையிலேயே காண்பித்தாயிற்று!உதவி அந்த மட்டோடு அவர்கள் பக்கலில் நின்றுபோனது!

கூகிள் பஸ்ஸில் பகிர்ந்து கொண்ட போது நண்பர்கள் ஆர் போகனும் ஜீவ்சும்,பாலாஜி கிருஷ்ண மூர்த்தியும் சில தீர்வுகளைச் சொன்னார்கள். 
 ஓபன் டிஎன்எஸ்ஸுக்கு மாறியும் பலனில்லை!  கூகிள் டி என் எஸ் உபயோகித்துப் பார்த்தும் பலன் இல்லை. இன்றைக்கு பி எஸ் என் எல் எக்ஸ்சேஞ்சுக்குப் போய் நேரடியாக முறையிட்டு வந்ததில், JTO அம்மாவும் இன்னொரு தொழில் நுட்பப் பணியாளரும் நேரடியாகவே, அவர்களுடைய லேப்டாப்பையும் எடுத்துக் கொண்டு சோதனை செய்து பார்த்தார்கள். இன்னமும் சரியாகவில்லை. இணையத்தை பி எஸ் என் எல் வழியாகத் தொடர்பு கொள்வதில் ஏகப்பட்ட தடங்கல்கள் இருப்பதைக் கொஞ்சம் பொறுமை யிழந்துகொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொருநாளும் வெவ்வேறு விஷயங்களை விவாதிக்கும் தளங்களுக்குப் போய் நேரடியாக வாசிக்கும் பழக்கத்துக்கு, பி எஸ் என் எல் தற்காலிகமாகத் தடை விதித்திருக்கிறது.  
 
ஒரு பொதுத்துறைவங்கியில் இத்தனை நாள் பணியாற்றிவிட்டு, பொதுத் துறையை இங்கே எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதுதான் மிக வேதனைப்பட வைக்கிற விஷயம்! ஊழியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஊழியர்கள், முன்பை விடப் பொறுப்போடு செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்!பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள். ஆனாலும் குறைகளைத் தீர்க்க முடியவில்லை.தங்களுடைய நிறுவனத்தில் என்ன நடக்கிறதென்றே அவர்களுக்கும் புரிவதில்லை.

பதினைந்துநாட்கள் தான் ஆகிறது!அதற்குள், என்னுடைய ஸ்கீமில் தரவிறக்க லிமிட்டாக இருக்கும் எட்டு ஜிபி தீர்ந்துவிட்டதாம்.இணைப்பு இப்போது கட்டைவண்டி போகிற வேகத்துக்கும் சற்றுக் கீழாக, 256kbps என்ற பெயரில் அதிலும் முக்கால் பங்கு வேகத்தோடுதான் இருக்கிறது. ஸ்கீம் மாற விண்ணப்பித்திருக்கிறேன்.

அதாவது, இணையத்தில் உலாவ எனக்கிருக்கும் குறைகளைத் தீர்த்து வைக்கும் பட்சத்தில்......!
  இணையத்தின் பக்கமே வராமல், இயல்பான வாழ்க்கைக்கு மாற முயற்சித்துப் பார்த்து...............

முடியவில்லை! 
 
இணையம் அந்த அளவுக்கு வாழ்க்கையின் அன்றாட செயல்பாடுகளில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது.

நமக்கும் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது.........!



சிலகாலத்துக்கு முன்னால், இணையப்பயன்பாட்டின் மேல் இந்திய அரசு விதிக்க உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் குறித்து, ஒரு எச்சரிக்கைக் குரல் சில வலைக்குழுமங்களில் ஒலித்தது. வழக்கம் போலவே, எவராலும் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாமலேயே, பத்தோடு பதினொன்றாகக் காணாமலும் போய்விட்டது.

குழும விவாதங்கள், இணையம் ஆரம்பித்தகாலத்தில் இருந்த வெற்று அரட்டை, நான் இங்கிட்டு யார் அங்கிட்டு என்று கேட்டு வாங்கும் சுய சொறிதல்கள்,மண்ணெண்ணைய் விட்டு ஓட்டும் ஆட்டோ எழுப்புகிற டர்ர்..க்ர்ர்ரர்ர்ர்ரர்ர்ர்ர் சத்தம் மாதிரிக் கொஞ்சம் ஓவராகவே எழுப்புவது,அடைப்பான்களுக்குள் ஏகப்பட்ட கேள்விக் குறி அல்லது ஆச்சரியக் குறிகளைப் போட்டு வெற்றுப் பின்னூட்டங்களாகவே நிரப்புவது,ஏகப்பட்ட ஸ்மைலி அல்லது அன் ஸ்மைலி ஐகான்களை மட்டும் வைத்து நிரப்புகிற ஆதிகாலத்து  இணையப் பயன்பாட்டுக் கலாச்சாரங்களில் இருந்து விடுபட்டு, ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம், அல்லது விவாதம் நிகழ்கிற களமாக, எழுதுகிறவருக்கும் வாசிக்கிறவருக்கும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் நிகழ்கிற களமாக உயரவேண்டாமா?

தை எழுதுவதே "நான் அப்படித்தான் இருப்பேன்' என்று இருப்பவர்களுக்காக இல்லை மாற்றத்தின் விதையாக இருக்க சம்மதிக்கும் சில தனிநபர்களே, மாற்றத்தை சாதிக்கிறார்கள்.அப்படிக் கொஞ்சம் பேர் கிடைத்தாலும் போதும்! குழுமங்கள், வலைப்பதிவுகள்  ஒரு ஆரோக்கியமான சிந்தனை, மாற்றுச் சிந்தனைகளுக்கான  களமாக உருவாகும் நேரமும் வரும்!

ந்தவகையில், இன்றைய தினமணி இதழில் வெளியாகியிருக்கும் இந்தத் தலையங்கம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறது. முதலாவது, ஆரம்ப வரிகளில் சொன்ன இணையப் பயன்பாட்டின் மீது அரசு உத்தேசித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தானது. அடுத்தது, நம்மிடம் வளர்த்துக் கொள்ளவேண்டிய பண்பு-  தேசீய உணர்வு (நேஷனாலிடி, நேஷன்ஹூட் ) குடிமைப்பண்பு (சிடிசன்ஷிப்). ஜனநாயகம் என்பது இந்த இரண்டு அடிப்படைகளின் மீது கட்டப்படுவதாக இருந்தால், நீடித்து நிலைக்கும்.

தினமணி தலையங்கம்: நமக்கும் தேவை அக்கறை!

First Published : 25 May 2011 02:09:59 AM IST

ணையதளப் பயன்பாடு தொடர்பாக அரசு விதித்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது எதிர் பார்த்ததே. ஆனால், இந்த விஷயத்தில் தவறு முழுக்க முழுக்க அரசின் தரப்பில் மட்டும் அல்ல என்பது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர்.சந்திரசேகரின் விளக்கத்திலிருந்து தெரிகிறது. மக்களாகிய நாம் உரிய  காலத்தில் அரசின் உத்தேச யோசனைகளைப் படித்துப் பார்த்து கருத்துத் தெரிவிக்கத் தவறிவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

ணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்திரிகை வாசகர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உயர்ந்து வருவதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளைக் கண்காணிப்பதும், பொது நலனுக்கும் சில வேளைகளில் தனிநபர்களுக்கும் எதிராக ஒருதலைப்பட்சமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளைப்படித்துப் பார்த்து உடனுக்குடன் அகற்ற வேண்டியதும் சமுதாயக் கடமையாகும்.

பாசமான, அருவருக்கத்தக்க வர்ணனைகள், உரையாடல்கள், கருத்துகள் போன்றவற்றையும் அழிக்க வேண்டியது அவசியம்.

எனவே இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டும் இந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துவிட்டதாக அரசைக் குற்றம் சாட்டுவது ஒருதலைப்பட்சமானது என்பதில் சந்தேகமே இல்லை. அதே வேளையில் அரசின் சில கட்டுப்பாடுகள் தேவைக்கு அதிகமாகவோ, அதன் உள் நோக்கத்தைச் சந்தேகிப்பதாகவோ இருப்பதை மறுக்க முடியாது. ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு எப்படிக் கையாள்கிறது என்று பார்த்து எதிர்காலத்தில் அவற்றைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் சாத்தியமே.

னவே, ஒரேயடியாக இதை எதிர்ப்பதும் கண்டிப்பதும் இப்போதைக்கு அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.

தற்கும் முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ள சில கருத்துகள் அனைவரும் கவனிக்கத் தக்கவை.

ணையதளப் பயன்பாட்டாளர்களைக் கண்காணிக்கவும், சட்ட விரோதமான செயல்களுக்கு அதைப் பயன்படுத்துகிறவர்களை அடையாளம் காணவும், அவர்கள் மீது நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் இந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் அவசியமானவை என்பதால் இதைச் சட்டத்தின் மூலமாகவே அமல் படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ரசின் ஒப்புதலுடனோ அல்லது நீதிமன்றங்களிடம் தெரிவித்து அவற்றின் ஆணைப்படியோதான் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ணையதளத்தைத் தவறான செயல்களுக்கு அல்லது தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் யார், அவர்களுடைய பாஸ்வேர்டு, பாலினம், கல்வி, வயது,தொழில், முகவரி போன்ற தகவல்களைத் திரட்டவும் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதி மன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களுடைய செய்கை தேச விரோதமாகவோ சமூகத்தில் பதற்றத்தையும் பகைமையையும் ஏற்படுத்தும் விதத்திலோ இருந்தால் உரிய போலீஸ் அமைப்புகள் மூலம் விசாரிக்கவும் இந்த விதிகளும் வழிகாட்டு நெறிகளும் உருவாக்கப் பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

புதிய விதிகளை அமல் செய்வதற்கு முன்னால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அறியவும், அதைப்பற்றி விவாதிக்கவும், உரிய திருத்தங்களைக் கூறவும், ஆட்சேபங்கள் இருந்தால் உரிய வகையில் தெரிவிக்கவும் வரைவு வாசகங்களை வெளியிட்டிருந்ததாகவும், 2 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் சந்திரசேகர்.

ங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் நம் நாட்டில் படித்தவர்களும் அமைப்பு ரீதியாகத் திரண்டவர்களும் பொது விஷயத்தில் அக்கறையோடு செயல்படுவது இல்லை என்பதில் உண்மை இருக்கிறது என்பதுதான். எல்லோருமே சுயநலவாதிகளாக இல்லை என்றாலும் பொதுநலன் பேசுகிறவர்களும் செயல்பாடு என்று வரும்போது சோம்பல் மிகுந்தவர்களாகவோ, அதிகாரிகளிடம் பேச அச்சமோ, கூச்சமோ உள்ளவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இப்படி "திண்ணைப் பேச்சு வீரர்களாகவே'' பெரும்பாலானவர்கள் இருப்பதால் மக்களைப் பாதிக்கும் பல சட்டங்கள் போதுமான விவாதம் இல்லாமல் மாற்றுக்கருத்துகள் கூறப்படாமல் அரசின் நோக்கத்துக்கேற்பவே தயாராகின்றன.

ட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உள்ள ஆய்வுக்குழுக்கள் அல்லது ஆலோசனைக் குழுக்கள் இந்தச் சட்டங்களை உரிய வகையில் ஆய்வு செய்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் நடைபெறும் விவாதங்களைக் கவனிக்கும்போது முக்கியமான அம்சங்கள் குறித்து ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஆழ்ந்த கவனத்துடன் விவாதிப்பது இல்லை என்பதை நேரிலேயே பார்க்கிறோம். இன்னும் பல சந்தர்ப்பங்களில் விவாதமே இல்லாமல் "கில்லட்டின்'' என்ற முறையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 40 அல்லது 50 மசோதாக்களை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதையும் பார்க்கிறோம்.

வ்வளவு ஏன், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜயந்தி போன்ற நாள்களில் எல்லா ஊர்களிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அரசியல் கட்சி அதிலும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்பதையும், அதிகாரிகள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் தீர்மானங்களை வாசித்து, உரிய விவாதம் இன்றி ஏற்பதையும் பெரும்பாலான ஊர்களில் பார்க்கிறோம்.


தெல்லாம் அரசியல்வாதிகளின் வேலை என்று விட்டுவிடாமல் நமக்குள் ஓர்  அமைப்பை உருவாக்கி விவாதித்து, அரசுக்கு ஆலோசனை கூறி, கண் காணிப்பதையும் ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும். தவறான சட்டங்கள் அமலுக்கு வராமல் தடுப்பதில் நமக்கல்லவோ அக்கறை தேவை?

அதற்குப் பெயர்தானே மக்களாட்சி?

--------------------------------------------

தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்




 

உள்ளங்கைகளில் உலகம்! கவனம்!


 உலகம் உங்கள் கைகளில்! கொஞ்சம் கூடுதல் கவனம்!


கூகிள் சீனாவில் இருந்து வெளியேறத் தயாராகிறது!

இந்த செய்தி கொஞ்சம் பழைய செய்திபோலத் தெரியலாம்!ஆனால், பின்னணியில் நடந்து வரும் விஷயங்கள், நிறையப் புதிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதாக இருக்கிறது. ஏற்கெனெவே, நாம் சீனப் பூச்சாண்டி, சீனப் பெருமிதம் என்ற தலைப்பிலும், தலைமைப் பீடத்துக்கு அருகதை இல்லாதவர்கள் கையில் இந்த நாடு சிக்கியிருக்கும் அவலத்தை, தலைமைப் பண்பு, நேரு, சாஸ்திரி என்ற தலைப்பிலும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்! சீனாவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை கொஞ்சம் இருப்பதாகக் கூட ஒரு பதிவின் கடைசி வரி  இருந்திருக்கிறது.

 2008 இல் அமெரிக்க வங்கி, நிதித்துறை பெரும் சரிவைச் சந்தித்ததும், சீட்டுக் கட்டு சரிவது போலத் தொடர்ந்து துபாய் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், மஞ்சள் கடிதாசி கொடுக்காமலேயே நிறையப் பேருக்கு பேதி மாத்திரை கொடுத்ததுமாகப் பொருளாதாரத்தைத் தொட்டும் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.பேராசைப் பட்டவனும் கெட்டான்! கெட்டவனைத் தொட்டவனும் கெட்டான்! என்ற தொடர் விளையாட்டு, உலகப் பொருளாதாரத்தை அங்குமிங்குமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம்! இப்படி ஒரு தகவலைச் சொன்ன பொருளாதார அளவீடு ஒன்றைப் படித்தபோது, உண்மையிலேயே ஆச்சரியப் பட்டுப் போனேன்.

சென்ற ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஏழாவது இடத்தில் இருந்த சீனா, விறுவிறுப்பாக  முன்னேறி, மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டது மட்டுமல்ல, நடப்பு ஆண்டிலேயே, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு  இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும், இன்னும் பதினேழே ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றெல்லாம், மதிப்பீடுகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், சீனப் பொருளாதாரம், விரைவிலேயே பன்க்சர் ஆகிவிடக்கூடிய சூழலுமே தயாராக இருக்கிறது.

நெருப்பைக் கக்கும் டிராகன் பயமுறுத்தல், சீனப் பூச்சாண்டி  எல்லாம் வெறும் உள உளாக்காட்டிக்குத்தான், சீனத் திரைப்படங்களில் பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடுகிற மாதிரி வரும் ஸ்டன்ட் காட்சிகளைப் போலவே, கொஞ்சம் செட் அப் சமாசாரம் தான்! ஓவர் பில்டப், மேக் அப்பைக் கலைத்துக் காட்டுவதாக, கூகிள், எடுத்திருக்கும் முடிவு ஒரு புதிய போக்கின் ஆரம்பமாகத் தொடங்கியிருக்கிறது.

என்ன நடந்தது?

கூகிள் தேடல் சீனாவைப் பொறுத்தவரை சீன அரசு நினைத்து நினைத்து சென்சார் செய்யப் படவேண்டியவை எவை என்பதைப் பொறுத்து மட்டுமே  இருக்கவேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டதாக, பச்சையாகச் சொல்வதானால் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே தான் சீனாவுக்குள் நுழைந்தது. இன்னும் தோலுரித்துச் சொல்ல வேண்டுமானால், சீனாவுக்குள், மனித உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் எவர் தேடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை சீன அரசு அறிந்துகொள்ளத் தோதாகத் திறவு கோள்களைக்  கொடுத்ததே கூகிள் தான்! திறவுகோல்கள், கூகிளின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்து விடும் அளவுக்கு,  கூகிளின் செர்வர்களுக்குள் உளவறியும் நிரலிகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தது. எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்த கூகிள், சீன அரசு இதன் பின்னணியில் இருப்பதை உறுதி செய்த பிறகு, சீனாவுக்கென்று பிரத்தியேகமான தணிக்கை செய்து கொடுக்கும் தேடுபொறி வசதியை நிறுத்திக் கொள்வது என்ற முடிவையும், சீனாவில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாகவும் செய்தியை வெளியிட்டது.

இந்தச் செய்தியை பாருங்கள்!

/Google has “evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists,” according to a posting by the company’s Chief Legal Officer David Drummond on Jan. 12. He said Google now plans to stop censoring results at its Chinese search engine, a move that may lead to the company shuttering its local Web site and offices, pending talks with the government./

சீன அரசு இதைப் பற்றிப்  பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! காரணம், சீனாவோடு வணிகம், அமெரிக்க நிறுவனங்களுக்கு மிக அவசியமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வணிகத்தில் கிடைக்கும் உபரி வருமானத்தை சீனா அமெரிக்க ட்ரஷரி பத்திரங்களில் தான் முதலீடு செய்து வைத்திருக்கிறது!

படத்தின் மீது கிளிக்கினால், பெரிதாக, அமெரிக்காவை குடுமியைப் பிடித்து ஆட்டும் கடன் எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்!

அமெரிக்கா  உலகத்திலேயே அதிக அளவு கடன்பட்டிருப்பது சீனாவுக்குத் தான்! குடுமி மட்டுமே அல்ல, தலையுமே சேர்ந்து சீனப் பிடியில் மிக இறுக்கமாகச் சிக்கியிருக்கிறது.ரொம்பவும் ஆட முடியாது, ஆட்ட முடியாது!

உலகத்தின் ஜனநாயகக் காவலன் வேஷம் சீனாவில் கிழிந்து தோரணமாகப்  பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே மட்டுமல்ல! ஒரு சின்னஞ்சிறிய பாகிஸ்தான், ஒரே நேரத்தில் அமெரிக்காவின் தோழனாகவும், தீவீரவாதக் குழுக்கள் அத்தனைக்கும்  காவலனாகவும் பாவலாக் காட்டிக் கொண்டிருப்பது தெரிந்தாலுமே கூட, ஒன்றுமே செய்ய முடியவில்லை! இரண்டு பக்கமும் ஆதாயமடைந்து கொண்டிருப்பது என்னவோ பாகிஸ்தானிய ராணுவமும், குறிப்பாக ஐ எஸ் ஐ எனப் படும் உளவுத்துறையும் தான்!

இணையத்தின் உபயோகம் சீனாவில் வளர்ந்து வரும் வேகம்இன்னொரு காரணம்!

இன்னும் பத்தாண்டுகளில்  ஏற்கெனெவே பயன்படுத்திவரும் இதர நாடுகளுக்கு இணையாக இருக்கும். ஆனால், சீன அரசு, ஆரம்பத்தில் இருந்தே, இணையம், இணையப் பயன்பாடுகளைத் தன்னுடைய சௌகரியத்திற்கேற்ற மாதிரி, ஒரு தனித்தீவாக வைத்திருக்கவே விரும்புகிறது சீனா மாதிரி, அமேரிக்கா, இணையத்தைத் தனித்தீவாக வைத்திருக்கவில்லை என்றாலும், இ என்று நீங்கள் ஆரம்பிக்கும் போதே அமெரிக்கக் கண்காணிப்பின் கீழ் வந்துவிடுகிறீர்கள், அதே மாதிரி, மேற்கத்திய நாடு ஒவ்வொன்றுமே இணைய சுதந்திரத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தாலுமே கூடக் கடுமையான கண்காணிப்பின் கீழ் அந்த சுதந்திரத்தை  விட்டு வைத்திருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மொட்லி ஃபூல் வலைத்தளத்தில், இது குறித்து வெளியான செய்தி இங்கே! மேலே உள்ள படம் கூட அங்கிருந்த குறிப்பிலிருந்து தான்  பெறப்பட்டது!

இவ்வளவு பேசிய பிறகு, முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லாமல் விட்டு வைத்தால் எப்படி?

இப்போதெல்லாம், கணினிகளை, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறமாதிரியான நிரல்கள், வைரஸ், Worms, Trojans எல்லாம், படிப்பதற்கு வசதியாக இருக்கிறதே என்று பிடிஎப்  கோப்புக்களாக ஐத்துக் கொள்கிறோம் இல்லையா, அதில் தான் சமீபகாலத்திய ஊடுருவல்கள் அதிகமாக இருந்ததென்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

புரியாத எழுத்துவடிவம், நம்பகமில்லாத தளங்கள் எதில் இருந்தும்  பிடிஎப் கோப்புக்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டாம்! தரவிறக்கம் செய்தவைகளையும், அண்டி வைரஸ் மென்பொருள் கொண்டு சோதித்துப் பார்த்துக் கொள்வது மிக மிக நல்லது. அடோப் அக்ரோபாட் உபயோகிக்கிறீர்களா, இன்னும் கொஞ்சம் அதிகக் கவனம்! அடோப் தளத்திலேயே, மேலதிக விவரங்களைப் பார்க்கலாம்!

இணையம், இதயங்களை இணைக்கும் பாலம் தான்! எவ்வளவு அருமையான விஷயங்களை, உங்களுடைய உள்ளங்கைகளில் கொண்டு வந்து சேர்க்கிறது! எத்தனை நண்பர்களை உருவாக்கித்தருகிறது! அதே நேரம்,  காமக் கதை சொல்லிக் காசு பிடுங்குவதில் இருந்து, இந்த மாதிரி ஆபத்தான விளையாட்டுக்கள், விபரீதங்களுமே கூட இணையத்தின் இன்னொரு கோர முகமாக இருக்கிறது!

எச்சரிக்கையாக இருப்பது நம் கைகளில் தான் இருக்கிறது!


சண்டேன்னா மூணு! கதை கேளு! கதைகேளு!

சந்தேகம் இல்லே! சந்தேகம் இல்லே! உண்மையான வளர்ச்சி எதில் என்றால்........!


2009 இன் சந்தேகமே இல்லாத வளர்ச்சி எதில் என்று பார்த்தால், சோஷல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் இணையம் வழி வளரும் தொடர்புகள் தான்! கணினி அறிவு இருப்பவர்கள் தான் பங்குகொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, இன்றைக்கு  கணினிக் கைநாட்டான நான் கூடப் பதிவுகள் எழுதிக் குவிக்கிற அளவுக்கு, அதுவும் என் தாய் மொழியிலேயே என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது!

ட்விட்டர்,  ஃபேஸ்புக் என்று தொடர்ச்சியாகப் புதுப் புது வடிவங்களோடு, இத்தகைய சமூகத் தொடர்புகள் வளர்ந்து கொண்டிருப்பதைப் பற்றிய செய்திக் கட்டுரை இங்கே!  

இணையம் ஒரு பரந்தவெளி! இந்தப் பரந்தவெளியில், எந்த அளவுக்குப் பரந்த மனதோடு, மாற்றுக் கருத்து இருந்தாலுமே அதையும் மிக நாகரீகமாக மறுத்துச் சொல்வதிலும், அடுத்தவர் சிந்தனையோட்டத்தைப் புரிந்துகொள்ளவும், இணையம் வழி வளரும் தொடர்புகள், இணையம் வழி வரும் உறவுகளாகவுமே மாறுவதில் நமக்கும்பொறுப்பிருக்கிறது.

பதிவர் உண்மைத்தமிழனுக்கு அவரது வலைப் பதிவுகள் மீண்டும் கிடைத்து விட்டன. ஆனாலும், இந்த மாதிரி அனுபவத்தில் சுட்டுக் கொண்ட பிறகுதான் ஞானியாக வேண்டும் என்பதில்லையே! இந்த மாதிரிக் கணக்குகள் முடக்கப் படுவது, திரும்பப் பெறுவது ஒரு ரகம் என்றால், யாரோ ஒருவர் உங்களுடைய கணக்கை ஹாக் செய்வது,  அந்தரங்க விஷயங்கள், படங்கள், வங்கிக் கணக்குகள் முதலானவற்றைத் திருடுவதுமே அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருப்பது தான்.

உங்களுடைய கூகிள் பயனர் கணக்கை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்! 


பரந்த மனதோடு, அடுத்தவரைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை, மனம் நோகும் படி பின்னூட்டங்களோ, விமரிசனங்களோ இல்லாதபடி  பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உற்சாகப் படுத்துகிற வார்த்தைகளை எழுதுங்கள்!  இதை எழுதும் போது என் முகத்தை, மின்னெழுத்துக்களால் ஆன மாயக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தான், எனக்காகவுமேஎழுதுகிறேன்! 


பரந்த மின்வெளியில் பாதுகாப்புடன் புத்தாண்டைத் தொடங்குங்கள்!
 oooOooo


 இந்தப் பக்கங்களில் கொஞ்சம் அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம், தலைமைப் பண்பு என்று பல தலைப்புக்களிலும் பேசியிருக்கிறோம்! எல்லாவற்றிலுமே ஒரே ஒரு அடிப்படைக் கேள்வி தான்! ஆதார சுருதியாக இருப்பதைப் படிக்க வருகிறவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தால் தான், எதற்காகப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது லட்சியமாக, இப்போதிருப்பதை விட அடுத்த வளர்ச்சிக்கு இருப்பதே புரிய வரும்! எங்கே போக வேண்டும் என்பதில் கவனம், எப்படிப் போக வேண்டும் என்பதில் தெளிவு, தொடர்ந்து வரும்!

இல்லையென்றால், போன பதிவில் சொன்ன மாதிரி,

"உங்களுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை, எங்கே போகவேண்டும் என்பது கூடத் தெரியவில்லை! ஆனால், நான் உங்களுக்காக அதைத் தெரிந்து சொல்ல வேண்டுமென்று  நினைக்கிறீர்கள்! என்னை பார்ப்பதற்கு முன்னால் என்ன நிலையில், தெளிவில்லாமல் இருந்தீர்களோ அதே நிலையில் தான் இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால், குறை சொல்வதற்கு ஒரு ஆள் கிடைத்தவுடன், என் மேல் குற்றம் சொல்கிறீர்கள் பாருங்கள் அதிலிருந்து தான் !"  என்றாகிவிடக் கூடும்!

என்ன நினைக்கிறீர்கள் என்பதை, நீங்கள் தான் சொல்ல வேண்டும்! சொல்வீர்கள்தானே?

 oooOooo

கதை கேளு! கதை கேளு!

மைகேல் மதன காமராஜன் படத்தில், டைட்டில் பாட்டிலேயே, முன்கதைச் சுருக்கத்தை சொல்லுகிற டெக்னிக் நினைவிருக்கிறதா? குறைந்தபட்சம் அந்த டெக்னிக்? ஐம்பதிலும் ஆசை வரும் என்று கூட ஒரு பாட்டு உண்டு! எண்பதைத் தாண்டிவிட்டால் ஏத்தம் வரும் போல! எண்பதைத் தாண்டி  ஏத்தத்தோடு அலைந்த ஒருத்தர் வேறு வழியில்லாமல், பதவியில் இருந்து ராஜினாமாசெய்திருக்கிறார்!

தெலுங்கானா விஷயத்தில்,ஆந்திரா பற்றி எரிந்து கொண்டிருக்கும்  நேரத்தில், ஆந்திர மாநில ஆளுநர் என் டி திவாரி பாவம் ரொம்பவே  "காய்ந்து" போயிருப்பார் போல! காய்ந்ததைக் கொஞ்சம் குளுமைப் படுத்திக் கொள்ள, என்னமோ செய்யப் போக அது என்னமோ ஆகிவிட்டது! மூன்று முறை உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்தவர்! உத்தராகண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட போது அதன் முதல் முதல் அமைச்சர்! பாராளுமன்றங்களின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்! மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ராஜீவ் காந்திக்குப் பின்னால், பிரதமர்  பதவிக்குக் கூட காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளராக முன்னிலையில் இருந்து, எப்படியோ நரசிம்ம ராவிடம் வாய்ப்பைஇழந்தவர்!

காங்கிரஸ் கலாச்சாரப்படி,  அடிமை விசுவாசி என்றால் வீட்டுக்கு அனுப்பவேண்டிய கிழடுகளுக்கும் உற்சாக டானிக், கவர்னர் பதவி தருவது! ரொம்ப வயதாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி,  2006 இல் ஒய்வு பெற விரும்பினாராம்! அடுத்த வருடமே காங்கிரஸ் அவரை ஆந்திர மாநிலத்தின் கவர்னராக்கி அழகு பார்த்தது! 

மானோடும் மயிலோடும்  ஓவராக ஆடினார் என்று வீடியோ ஆதாரங்களுடன் ABN செய்திச் சானலில் செய்தியை போட, கவர்னர் தரப்பு வேக வேகமாக மறுத்துப் பார்த்தது, நீதிமன்றத்திலும் வீடியோவை ஒளிபரப்புவதற்குத் தடை உத்தரவும் வாங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்னாலேயே ஆர்ப்பாட்டங்கள் அது இது என்று கிளம்பவே, மேலிடம் கழற்றி விட முடிவு செய்து விட்டது.. இன்றைக்கு யூட்யூபில் சூப்பர் ஹீரோ யார் என்று பார்த்தால்  என் டி திவாரி தான்! கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்!  சுமார் எட்டு நிமிடங்கள் தான்! என்ன நக்கல்!


ஆல் இன் ஆல் அழகு ராஜா!  கதையை அருமையான பாடலோடு சொல்லியிருக்கும் இந்த வீடியோவை வலையேற்றம் செய்திருப்பவரைப் பாராட்டியே ஆகவேண்டும்! ஐயே! வேறு வில்லங்கமான பிட்டுப் படம் இருக்கும் என்று நினைத்து ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!

ஞாயிற்றுக் கிழமை காலை, இப்படி அமர்க்களமான காமெடியோடு, இந்த வாரம் சண்டேன்னா மூணு!

அப்புறம், காங்கிரஸ் கட்சிக்கு இது 125 ஆவது ஆண்டு! 2009-2010 ஒரு ஆண்டு முழுவதும் விழா எடுத்து, காங்கிரஸ் கட்சியின் அருமை பெருமைகளைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் வைத்திருந்தார்கள். பாவம்! நம்மூர் அரசியல் வித்தகர் பானா சீனா கொளுத்தி போட்ட ஒரு அறிவிப்பில் ஆந்திரா கொழுந்து விட்டு எரிகிறது! பானா சீனாவுக்கு இன்னும் கொளுத்திப் போடுகிற ஆசை போகவில்லை போல! உள்துறை அமைச்சகத்தையும் பிரிக்க வேண்டுமாம்! சொல்வார்களே, ஆக்கமாட்டாதவன் இடுப்பிலே அம்பத்தெட்டு கருக்கறுவா! அந்தமாதிரி!


ஆளுநர் களைப்புத் தீர, ராஜ் பவனில் ராஜ லீலையை நடத்திக் கொண்டிருக்கிறார்! இதற்கெல்லாம் உதவியாக இருந்தது, ஆளுநரின் சிறப்பு அதிகாரி! Officer on Special Duty! என்று ABN சானல் சொல்கிறது! ஸ்பெஷல் டூட்டி என்பது  இது தான் போல இருக்கிறது !

இயக்குனர் ராஜசேகர்! இருக்கிறீர்களா? உங்களுக்கு அடுத்த படத்திற்குத் தலைப்பு ரெடி!

இது தாண்டா ஸ்பெஷல் டூட்டி!

காங்கிரசுக்கு மக்கள் சொல்ல வேண்டிய தகவல் ஒன்றே ஒன்று தான்!

விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் இலக்கு எட்டி விட்டது, கலைத்து விட வேண்டியது தான் என்று ஆலோசனை சொன்னார்! இப்போது கூட காந்தியின் சொல்படி நடப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கலைத்துவிடுங்கள்!