ஆகஸ்ட் மாதத்துக்கு எத்தனையோ சிறப்புக்கள் இருந்தாலும் இந்த வருட ஆகஸ்ட் முதல் தேதிச் சிறப்பாக. அத்தி வரதர் காஞ்சியில் இன்று முதல் நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிப்பது மட்டுமே இருக்கிறது. ஜூலை மாதத்தின் 31நாட்களிலும் கிடந்த திருக்கோலத்தில் வணங்கமுடிந்த அத்திவரதனை நின்ற திருக்கோலத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை அன்பர்கள் காணமுடியும் என்பது இந்தநாளின் தனிச்சிறப்பு! இல்லையென்றால் இன்னுமொரு நாற்பதாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்!
தமிழ் சேனல்கள் மீது எனக்கு ஆயிரம் விமரிசனம் மனக்குறைகள் இருந்தாலும் நேரில் சென்று தரிசிக்க முடியாத என்னைப்போன்ற பலருக்கும் இதுமாதிரி, வீட்டிலேயே இருந்து வணங்க ஒரு வாய்ப்பளித்ததற்காக நன்றி சொல்லத்தான் வேண்டும்! நண்பர் VN கேசவபாஷ்யம் முதல் பலநண்பர்கள் இருந்த இடத்தில் இருந்தே அத்தி வரதனை நிதமும் வணங்குகிற வாய்ப்பை முகநூலில் புகைப்படங்களாகவும், சிறுகாணொளிகளாகவும் பகிர்ந்து, உதவியிருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தே ஆகவேண்டும்! இணையம் என்னைப்போல எத்தனையோ பேருக்கு தேடியதைக் கண்டடைகிற வாய்ப்பைத் தந்திருக்கிறது.
அத்தி வரதனைக் கண்ட நிகழ்வைப் பேசவந்த பதிவில் வேறு விஷயங்களைக் கலப்பானேன்? இதுவே இன்றைக்குத் தனிச் சிறப்பாக!
இந்த ஜூலை மாதத்தின் முதல்நாளில் பக்தர்களுக்குக் காட்சிதர வந்திருக்கும் அத்தி வரதரை மானசீகமாக வணங்கிவிட்டு அதைப்பற்றிய ஒரு வீடியோ செய்தித் தொகுப்பை பார்க்கலாம். நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் என்ற குளத்தின் மைய மண்டபத்தின் கீழே நீருக்கடியில் ஒரு பெட்டகத்தில் இருக்கும் அத்தி மரத்தால் ஆன பெருமாள் திருமேனி, வெளியே கொண்டு வரப்பட்டு எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிற நாள் இன்று ஜூலை 1.
இதைப் பற்றி முகநூலில் நண்பர் VN கேசவபாஷ்யம் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அதே போல ஸ்ரீரங்கம் கோவில் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பகிர்ந்து வரும் விஜயராகவன் கிருஷ்ணனும் கொஞ்சம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வந்தாலும், நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டுவருவது ஏன், எப்போது ஆரம்பித்தது என்ற தகவல்கள் முழுமையானதாக இல்லை. 1979 இல் இதே மாதிரி அத்தி வரதர் வெளியே கொண்டுவரப்பட்ட போது இப்போது இருக்கிற கெடுபிடி, பரபரப்பு எதுவுமில்லாமல் தரிசிக்க முடிந்தது என்றும் சொல்கிறார்கள். அறம் இல்லாத இந்துசமய அறநிலையத்துறை, இதை ஒரு வணிகநோக்கிலான விஷயமாக மட்டுமே ஏற்பாடுகளை செய்யும் என்பது தெரிந்த விஷயம் தான்! வருத்தப்படுவதைத்தவிர நம்மால் உடனடியாக வேறென்ன செய்துவிடமுடியும்?
மும்பை வாசிகளைப் பார்த்து நான் வியக்கிற ஒரு விஷயம், என்ன நடந்தாலும் தாங்கிக் கொண்டு முடிந்தவரை இயல்பு வாழ்க்கையைத் தொடர்வது! கடும் மழை இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தாலும் யாரும் இங்கே தமிழக டுபாக்கூர் போராளிகளைப் போல சமூக வலைத்தளங்களில் ஏ கேடு கெட்ட மாநில அரசே! மழையில் நனைகிற ஜனங்களை வந்து பார்க்காத நரேந்திர மோடியே! என்றெல்லாம் கூவுவதில்லை! இயற்கைக் சீற்றங்களுக்கு அல்லது விபத்தில் எவராவது இறந்துபோனால் ஒரு கோடி ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடு என்று திருமாவளவன் கனிமொழி மாதிரி ஒரு ரேட் fix பண்ணி அறிக்கைகளில் அக்கப்போர் செய்வதில்லை. சிறுபான்மையினரை இங்கே சில அரசியல் கட்சிகள் தாங்கள்தான் பெரும்பான்மையினரிடமிருந்து காப்பாற்றுகிற மாதிரி சீன் போடுகிறவர்கள் அங்கேயும்தான் இருக்கிறார்கள்! ஆனாலும் தமிழக டுமீல் போராளிகள், அரசியல் கட்சிகள் அளவுக்கு இதிலெல்லாம் கூவுவதில்லை. ஆந்திரா, ஒரிசா மாநிலங்கள் ஒவ்வொரு வருடமும் புயல் மழையால் சந்திக்கிற சேதங்கள் அவஸ்தைகள் ஏராளம்! அங்கெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் மாதிரி மத்திய, மாநில அரசுகளைக் குறை சொல்வதையே பிழைப்பாக, கட்டப்பஞ்சாயத்து செய்கிற மாதிரி நஷ்டஈடு கேட்டு அறிக்கை விடுகிற நாடகம் எதுவும் இல்லையே! கவனித்து இருக்கிறீர்களா?
இசுடாலின் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான பிறகு திமுக சட்டசபைக்குப் போவதே வெளிநடப்புச் செய்வதற்காக மட்டுமே என்பது இன்று மீண்டும் ஒருமுறை அரங்கேறி இருக்கிறது. ப்பூ! இதெல்லாம் ஒரு செய்தியா என்பவர்களுக்கு இந்த வீடியோவில் வெளிநடப்பு செய்ததற்கு காரணம் என்று ஏதோ சொல்கிறார் பாருங்கள்! ஒப்பந்தப்படி ராஜ்யசபாவுக்கு ஒரு இடம் மதிமுகவுக்கு, மீதம் இரு இடங்களில் தொமுச கோட்டாவாக சண்முகமும் வழக்கறிஞர் அணி / கிறித்தவர்கள் கோட்டாவாக வில்சனும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மன்மோகன் சிங்குக்கு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பு இம்முறை முழுதாய் அடைபட்டுவிட்டது என்பதுதான் இதில் செய்தி.
வைகோ தான் மதிமுக வேட்பாளர் என்று சொல்ல முடியாதா?ஆனாலும் மாவட்ட செயலாளர்கள் (இன்னுமா இருக்கிறார்கள்?) கூடி முடிவெடுக்கிற அளவுக்கு என்ன இருக்கிறதாம்?