இன்றைக்கு ஒரு சிறப்பு! #அத்திவரதன்

ஆகஸ்ட் மாதத்துக்கு எத்தனையோ சிறப்புக்கள் இருந்தாலும் இந்த வருட ஆகஸ்ட் முதல் தேதிச் சிறப்பாக. அத்தி வரதர் காஞ்சியில்  இன்று முதல்  நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிப்பது மட்டுமே இருக்கிறது. ஜூலை மாதத்தின் 31நாட்களிலும் கிடந்த திருக்கோலத்தில் வணங்கமுடிந்த அத்திவரதனை  நின்ற திருக்கோலத்தில்  இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை அன்பர்கள் காணமுடியும் என்பது இந்தநாளின் தனிச்சிறப்பு! இல்லையென்றால் இன்னுமொரு நாற்பதாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்!தமிழ் சேனல்கள் மீது எனக்கு ஆயிரம் விமரிசனம் மனக்குறைகள் இருந்தாலும் நேரில் சென்று தரிசிக்க முடியாத என்னைப்போன்ற பலருக்கும் இதுமாதிரி, வீட்டிலேயே இருந்து வணங்க ஒரு வாய்ப்பளித்ததற்காக நன்றி சொல்லத்தான் வேண்டும்! நண்பர் VN கேசவபாஷ்யம் முதல் பலநண்பர்கள் இருந்த இடத்தில் இருந்தே  அத்தி வரதனை நிதமும் வணங்குகிற வாய்ப்பை முகநூலில் புகைப்படங்களாகவும், சிறுகாணொளிகளாகவும் பகிர்ந்து, உதவியிருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தே ஆகவேண்டும்! இணையம் என்னைப்போல எத்தனையோ பேருக்கு தேடியதைக் கண்டடைகிற வாய்ப்பைத் தந்திருக்கிறது.  

அத்தி வரதனைக் கண்ட நிகழ்வைப் பேசவந்த பதிவில் வேறு விஷயங்களைக் கலப்பானேன்? இதுவே இன்றைக்குத் தனிச் சிறப்பாக! 

மீண்டும் சந்திப்போம்.
              

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!