இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக காவேரி நியூஸ் சேனல் ஒரு தனிப்பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, அதுவும் அப்படிக் கூவுகூவென்று கூவாமலேயே! தடம் நிகழ்ச்சியில் துணை ஆசிரியர் மதன் ரவிச்சந்திரன் சுபவீ செட்டியாரை, அவருடைய யோக்கியதை இப்படித்தான் என்று அடையாளம் காட்டுகிற மாதிரி சிலகேள்விகளில் மடக்கினார். சுபவீ, ஆம் நான் தோற்றுத்தான் போனேன் என்று விசனப்பட்டு முகநூல் பதிவொன்றை எழுதினார் என்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம் நிர்வாக ஆசிரியர் ஜென்ராம், மதனைக் கண்டித்தார் என்பதும் சக ஊழியர்களில் சிலரே கறுப்புத் துணி அணிந்து மதனுக்கு எதிராகக் கொடி உயர்த்தினர் என்பதும் ஊடகங்களில் என்னமாதிரியானவர்கள் ஆதிக்கம் நிலவுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியது. எல்லாவற்றையும் விட காவேரி நியூஸ் சேனல் நிர்வாகம் இந்த ஒழுங்கீனத்துக்கு எதிராக உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஜென்ராம் உள்ளிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் அனைவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஊடக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.
தடம் நிகழ்ச்சியில் மதன் ரவிச்சந்திரன் திமுக ஆதரவு உளறு வாயரான எஸ்ரா சற்குணத்தைக் கொஞ்சம் கேள்வி கேட்பதில், இந்தப்பாதிரி எப்படித் தடுமாறுகிறார் உளறுகிறார் என்பதைக் கொஞ்சம் பார்க்கும்போதே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
மேலே ஒரு செய்தியை வைத்து உங்கள் அரசியல் அறிவைச் சோதிக்கிற மாதிரி ஒரு சின்னக் கேள்வி?! எஸ்ரா சற்குணம் என்கிற இந்தப் பாதிரி, திமுக மேடைகளில் ஏறியேறியே உளறுவாயராக ஆனாரா? OR உளறுவாயர்கள் தேவைப்பட்டதாலேயே இவர் திமுகவின் மேடைகளில் ஏற்றப்பட்டாரா? ( நாராயணசாமி என்கிற ஒரு ஆசாமி நெடுஞ்செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டார், பேச்சு அத்தனை சுத்தமாக வராது, உளறலாக இருக்கும்!அப்படிப்பட்டவருக்கே நாவலர் பட்டம் கொடுத்தது திமுக என்பது உங்களுக்கான உதவிக்குறிப்பு)
சிறுபான்மைக்காவலர்களாகக் காட்டிக் கொள்வதில் இங்கே கழகங்கள் எக்ஸ்பெர்ட் என்றால், அதே வேடத்தை காங்கிரஸ் உள்ளிட்டுப் பல கட்சிகளும் அவ்வப்போது செய்வதுண்டு. உத்தரப் பிரதேச அரசியலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி அதில் காங்கிரசையே ஓரங்கட்டுகிற அளவுக்கு எக்ஸ்பெர்ட்! அதன் இஸ்லாமிய முகமாக இருப்பவர் ஆசம் கான்! முலாயம் மந்திரி சபையில் செல்வாக்கு மிகுந்த (என்றால் தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டன்) மந்திரியாக இருந்தவர், இப்போது மக்களவை எம்பி. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் ரமாதேவியைப் பார்த்து கொஞ்சம் தகாத வார்த்தைகளைப் பேசியதற்காக, பெண் உறுப்பினர்கள் கொந்தளித்ததில், பருப்பு இனிமேல் வேகாது என்ற ஒரே காரணத்தால் மன்னிப்பும் கேட்டவர்!
ஆசம் கானுடைய சாகசங்களைப் பற்றிச் சொல்வதென்றால் புத்தகம் புத்தகமாக எழுதலாம்! முலாயம்சிங் உ.பி. முதல்வராக இருந்த சமயம், அமைச்சர் ஆசம் கானுடைய பண்ணையில் இருந்த 4 எருமைமாடுகள் காணாமல் போனதில் மாநிலக்காவல் துறை முழுமையாகப் பயன்படுத்தப் பட்டது. நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, அந்த எருமை ஒவ்வொன்றும் இங்கிலாந்து ராணியை விட மதிப்பு மிகுந்ததாக்கும் என்று ஜம்பமடித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது. ஜெயப்ரதாவின் உள்ளாடை கலர் காக்கி என்று சொன்னது சமீபத்தைய திமிர். ஆசம் கானை வெறும் உளறுவாயர் என்று அலட்சியப்படுத்திவிட்டுப் போய்விட முடியாது,
முன்னால் செய்த சாகசங்களுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல வேண்டிய நேரம் ஆசம் கானுக்கு நெருங்கிவிட்டது என்று இந்த 45 நிமிட செய்தித் தொகுப்பில் விவரமாகச் சொல்கிறார்கள்.ராம்பூரில் விவசாயிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களை வைத்து 5000 ஹெக்டேர் நிலத்தில் பல்கலைக் கழகம் ஒன்றை நடத்திவருவதில் ஒவ்வொரு முறைகேடாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்! புத்தகங்கள் திருட்டு, 11.5 கிலோமீட்டர் பொதுப்பாதையையே சுருட்டியது என்று பலவிதமாக!
முலாயம்சிங் மாதிரிக் காவலர்கள் இருக்கிற தைரியத்தில் ஆசம்கான்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?
மீண்டும் சந்திப்போம்.
//நிர்வாக ஆசிரியர் ஜென்ராம், // - யாரு இந்த ஆளு? விகடனைக் கெடுத்தவரில் ஒருவரா?
ReplyDeleteஆவியைக் கெடுத்தாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது! இதற்கு முன் News18 , புதியதலைமுறை இரண்டிலும் இருந்திருக்கிறார்! காவேரியின் நிர்வாகத்தை இப்போது கவனிப்பவர் புதியதலைமுறையில் இருந்தவர், அந்தப்பரிச்சயத்தில் இங்கே வந்து ஒட்டிக் கொண்டிருக்கலாம்! ஜென் ராம் தன்னைப் பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர். இப்போதுகூடப் பிரச்சினை முழுமையாக முடிந்துவிடவில்லை. மதனைத் தூக்குகிற வரை காவேரி நிகழ்ச்சியில்கலந்து கொள்ள மாட்டோம் என்று விசிக முதலில் ஆரம்பித்திருக்கிறது. சுபவீ செட்டியார் ரொம்பக் குஷியாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள்! .
Deleteவிசிகவுக்குத்தான் அமித்ஷா வேணும். அமித்ஷாவுக்கு விசிக வேண்டாம். ஹா ஹா.
Deleteஇவங்க தொலைக்காட்சில பேசிட்டாலும்... திமுக அடிமைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாவிட்டால் என்னா ஆகிடும். எப்படியும் திமுகவுக்கு கூஜா தூக்குவாங்க. அதனை திமுகவே செய்துகொள்ளட்டுமே
அடிமைகளாக இருப்பதற்கும் ஒரு ரேட் இங்கே இருக்கிறதே! அந்த ரேட் கிடைக்கிற வரையில் யாரும் மூச்சுக் காட்டமாட்டார்கள்!
DeleteUAPA மசோதாவை மக்களவையில் திமுக ஆதரித்ததை விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் விமரிசித்ததில் விசிக மீது திமுக ஏற்கெனெவே கடுப்பில் இருக்கிறது. இங்கே ஒவ்வொருவருடைய முகமூடியும் ஒவ்வொரு விஷயத்தில் கழன்று கொண்டே இருப்பதை கவனிக்கிறீர்களா?
//மக்களவையில் திமுக ஆதரித்ததை // - இந்தச் செய்தியை ஒரு நாள் செய்தியாக மட்டும் வெளியிட்டுவிட்டு, அதிமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் விதமாக முத்தலாக்கில் இருவேறு நிலை எடுத்தார்கள் என்பதை மட்டும் நெடுநாட்கள் பலவித வடிவங்களில் செய்தியாகப் போடுவதைக் கவனித்தீர்களா?
Deleteசெய்திச் சேனல்கள் (பத்திரிகைகள், இணைய பத்திரிகைகள் உட்பட) காசு வாங்கிக்கொண்டு ஆளுக்கேற்ற செய்திகள் வெளியிடுவதில் ஊடகத்தின் மதிப்புதான் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
மேலே வீடியோவில் எஸ்ரா சற்குணமே கூட அப்படி ஒன்று நடந்ததா என்று தெரியாத மாதிரித்தானே பேசுகிறார்! கழகங்கள் தாம் சிக்கலில்மாட்டிக் கொள்கிற நேரங்களில் எல்லாம் பிரச்சினையை வேறுபக்கம் திருப்பிவிட்டு எஸ்கேப் ஆவதில் சமர்த்தர்கள்!
Delete//உளறலாக இருக்கும்!அப்படிப்பட்டவருக்கே நாவலர் பட்டம் கொடுத்தது திமுக // - முன்னப்பின்ன கல்லூரிப் படிப்பு இல்லாதவருக்கே பேராசிரியர் என்று பேர் கொடுத்ததும் அந்தக் கட்சிதானே. தனக்குத்தானே டாக்டர் பட்டம் வழங்கிக்கொண்டு, டாக்டர் பட்டம் இல்லாத அரசியல்வாதிகளே இல்லை என்று ஆக்கியதும் திமுக தானே
ReplyDeleteஅந்த நாட்களில் காட்டாகுஸ்தி என்று ஊருக்கு ஊர் நடக்கும். இல்லாத பட்டங்கள், அடைமொழிகள் கொடுத்து ஆசாமிகளைக் கோதாவில் இறக்குவார்கள். அந்த மாதிரி திமுகவும் கூடத் தன்னுடைய தொடக்க நாட்களில் நாவலர் அறிஞர் பேரறிஞர் கலீஞர் பேராசிரியர் என்று பட்டங்களைத் தாங்களே வாரிவழங்கிக் கொண்டார்கள் என்பதற்குமேல் இந்தப்பட்டங்கள் அடைமொழிகளுக்கு மரியாதை ஏதாவது இருந்ததா என்ன? !!
Delete//அடைமொழிகளுக்கு மரியாதை ஏதாவது இருந்ததா என்ன?// - அப்படி அல்ல. அந்தத் தலைவர்களே, தங்கள் சொந்தப் பெயருக்கு குப்பைக்குக் கிடைக்கும் மரியாதைகூட கிடைக்காது என்பதால், அடைமொழியிலேயே எல்லோரும் அழைக்கணும் என்று சொல்லி, அதிலேயே மனமகிழ்ந்திருந்தார்களே..அது போதாதா? அதேபோல தங்கள் கூட்டத்தில் உள்ளவரை அடைமொழியிலேயே அழைத்துக்கொண்டிருந்தாங்களே.. எம்.ஏ படித்தவரை 'அறிஞர்' என்றும், வசன கர்த்தாவை 'முத்தமிழ் அறிஞர்' என்றும்... ஹா ஹா
Deleteசாக்கடையில் புரள்வதை பெருமையாக நினைக்கும் பன்றிகள்! அதற்குமேல் என்ன சொல்ல?
Delete