சண்டேன்னா மூணு! தந்திடிவி அரசியல்! யார் கோமாளி?

அதிமுக அமைச்சர்கள் என்றாலேயே இங்கே பல சேனல்கள்  ஊடகங்களுக்கு செம குஷி வந்துவிடும்! அதிமுக என்றாலே கேணையர்கள் கட்சி, அதிமுக அமைச்சர்கள் என்றால் கோமாளிகள் என்றமாதிரி சித்தரிப்பதில் அவர்களுக்கொரு மாதிரி, அலாதிப் பிரியம்! ஆனால் இந்த நேர்காணலைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்! யார் கோமாளியாகி நிற்கிறார்கள் என்பது புரிகிறதா?


ஹரிஹரன் கேட்கிற குத்தலான கேள்விகளுக்கெல்லாம் பளீர் பளீரென்று சிக்சரும் பவுண்டரியுமாக அடித்துத் தள்ளி தந்திடிவியை கோமாளி டிவியாக்கின அதிசயம் இங்கே நடந்திருக்கிறது!  இதே ஹரிஹரனோ தந்திடிவியோ கனிமொழி எதற்காக வேலூர் தொகுதிப் பிரச்சாரத்துக்கு அழைக்கப் படவில்லை என்பது முதலான கேள்விகளை திமுக ஆசாமி எவரிடமாவது தைரியமாகக் கேட்டு விடுவார்களா? தந்தி ஆதித்தன்களுடைய ஊடக அறம்,ஆதாய அரசியல்  இன்னதென்பது இன்னுமொரு முறை மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது! அவ்வளவுதான்! அமைச்சர் KT ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு சபாஷ்!  


காம்ரேடுகள் டாக்கீசுகளும் (talkies) நடத்துகிறார்கள் என்பது எனக்கு சமீபத்தில் தான் தெரியவந்த விஷயம். அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் இந்த நேர்காணலை இங்கே பகிர்ந்து இருக்கிறேன் என்பதை நம்புவீர்களா? நிச்சயமாக ஜென்ராம் என்ன சப்பைக்கட்டுக் கட்டுகிறார் என்பதில் நிஜமாகவே எனக்கு அக்கறை இல்லை. சிந்தன்! மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விவாதங்களில் தடுமாறாமல் பேசுகிற இளந்தோழர் என்கிற அபிமானத்தில் காவேரி நியூஸ் சேனலில் இருந்து ஜென்ராம் வெளியேறிய கதையை அவர் ஒரு நேர்காணலாக நடத்தியதைப் பார்த்தேன்! பகிர்ந்து கொள்கிறேன்! அம்புடுதேன்!

          
இந்த ஆறுநிமிட வீடியோவில் 500,600 IT ஊழியர்கள் சென்னை பெங்களூருவிலிருந்தெல்லாம், தாமாகவே முன்வந்து சீமான் கட்சி     வேட்பாளர் தீபலட்சுமிக்காக வேலூர் தொகுதியில் தங்கி பிரசாரம் செய்வதைப் பற்றி மிகவும் அதிசயித்துச் சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள்  நாம்தமிழர் கட்சி உறுப்பினர்களாகக் கூட இல்லை என்று வேறு சொல்கிறார்கள்!

இந்தச் செய்தியில் அதிசயிக்கிறமாதிரி, அல்லது தேர்தலில் சீமான் கட்சி வேட்பாளருக்கு உண்மையிலேயே பயன்படுகிற மாதிரியான அம்சம் ஏதாவது இருக்கிறதா? கொஞ்சம் யோசித்து ஒரு பதிலைச் சொல்லுங்களேன்!  அரசியல் புரிதல் எனக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அளவிட உதவும் பதில்கள் அவை!

மீண்டும் சந்திப்போம்.
     

2 comments:

  1. வெளிநாடுகளில் பணிபுரியும் பலரும் சீமான் மேல் ஆர்வம் ப்ளஸ் அக்கறையுடன் இருக்கின்றார்கள். பல நகர்வுகள் திட்டமிடுதல்கள் அங்கிருந்து வருகின்றது. உடனே நம் மக்கள் புலி ஆதரவு என்பார்கள். இல்லை அதையும் கடந்து பல நிகழ்வுகளை அறிந்தேன். ஆனால் சீமான் இரண்டாம் மூன்றாம் கட்ட அமைப்பில் இன்று வரையிலும் கவனம் செலுத்தவே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி! சீமானை ஒரு சீரியசான அரசியல்வாதி என்று நினைக்கிறீர்களா? அல்லது பிழைப்புவாதி, காசுபணத்துக்காகவே யாருடைய அஜெண்டாவையோ இங்கே முன்னெடுக்கிறார் என்று நினைக்கிறீர்களா?

      சீமான் மட்டுமல்ல கமல் காசர் கூட தன்னுடைய கட்சியைக் கட்டமைப்பதில் அத்தனை ஆர்வம் காட்டுகிற மாதிரித் தெரியவில்லை. இங்கே ஊடகங்களில் அடிக்கடி முகம்காட்டும் உதிரிகள், வேல்முருகன் ஒரு உதாரணம், கூட தங்களது அமைப்பை வலுவான அடித்தளத்தின் மீது நிறுத்த முனைவது இல்லை என்பது தற்செயலானதுதானா?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!