சண்டேன்னா மூணு! குருமூர்த்தி! டாக்டர் திருமாவளவன்! அரசியல்!

சிதம்பரமோ மகன் கார்த்தியோ ஊழல், மோசடிப் புகார்களில் சிக்குவது ஒன்றும் புதிதல்லதான்! ஆனால் அவர்களைத்  தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் ஆடிட்டர் எஸ் குருமூர்த்தியும் தான் என்பதை ஏனோ மறந்து விடுகிறோம்! ஊழல் மோசடிகளில் சிக்கும் ஆசாமிகள் மீது சமூகத்துக்கு இருக்கும்  பிரமிப்பு நம்முடைய கண்களை மறைத்துவிடுகிறதா? நம்முடைய கையால் ஆகாத் தனத்தை இந்த மாதிரி அண்ணாந்து பார்த்தே மறந்துபோய் விடுகிறோமா?


அப்பனும் மகனுமாகச் செய்த மோசடிகளை இங்கே விரிவாகச் சொல்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. வாசன் ஐ கேர் நிறுவனத் தில்லுமுல்லுகளை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களில் ஆறுபகுதிகளாகத் தொடர்கட்டுரை எழுதிய குருமூர்த்தி மீதோ, ஏர் செல் மேக்சிஸ் விவகாரத்தைத் தோண்டி எடுத்து நீதிமன்றங்களில் போராட்டத்தை தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி மீதோ சிதம்பரம், கார்த்தியால் செய்ய முடிந்ததென்ன? கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள்! இங்கே அதற்கு அதிக ஊடகவெளிச்சமோ கேள்விகளோ எழாமல் பார்த்துக் கொண்டது ஒன்றைத்தவிர அவர்களால் என்ன செய்ய முடிந்தது? அர்னாப் கோஸ்வாமி  இது போல ஒரு  கேள்வியை ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேட்டது ஒன்றரை வருடத்துக்கு முன்னால் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு  இந்த 40 நிமிட வீடியோவைப் பாருங்கள்! விசாரணை, குறுக்குவிசாரணை எதையும் சந்திக்கத் திராணி இல்லாதவர்கள், இங்கே வீரத்தமிழர்களாக உலா வந்தது தான் ஆகப்பெரிய அரசியல் காமெடி!


கார்டூனில் சொல்கிறபடி அடி வெளுத்து  என்றெல்லாம் ஏதுமில்லை! அப்படியெல்லாம் எதுவுமில்லாமலேயே ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, சசிதரூர் போன்றவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்? இப்படி ஒரு விசித்திரமான நிலைமையை கார்டூனில் அக்ஷய் சந்தர் அழகாக வரைந்திருக்கிறார்!  


Shoba Sakthi
இலண்டனில் இன்று, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில் இதுவரை அதிகமும் அறியப்படாத ஒரு செய்தியைத் தெரிவித்தார்:
”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து 'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள்..நீங்கள் ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“
(https://www.facebook.com/kanagasabai.krishnarajah/videos/1563682247115149/?t=5074 ந்தக் காணொளியில் முழுமையான உரை. 1மணி 22வது நிமிடத்தில் மேலே குறிப்பிட்ட செய்தி. )  


எந்த ஆளுநரை திமுகவுடன் சேர்ந்து இழிவாகப் பேசினாரோ அதே பன்வாரிலால் புரோகித் கையால் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் திருமாவளவன். கிரிமினாலஜி கிரிமினல் ஜஸ்டிஸ் துறையில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் மீனாட்சிபுரம் மதமாற்றம் என்பதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் பதிவில் பேசமுடியாதவை.

தெரியாதவங்க தெரிஞ்சவுங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க!

மீண்டும் சந்திப்போம்.
    
            

1 comment:

  1. i come to your blog to know more about issues ... so please share things about issues you know .. i have no one else !!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!