இங்கே பானாசீனாக்களும் இசுடாலின்களும் பேசி முடித்த அதே உளறல்களை மீண்டும் நியாயப்படுத்த தந்திடிவிக்கு ஒரு விதமான உள் அரசியல் இருக்கிறது போல! கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை ரங்கராஜ் பாண்டே நடத்திய விதம் வேறு! முதலாளிகளுக்கு அன்றைய நாட்களில் அதில் உடன்பாடும் இருந்தது. எப்போதிலிருந்து ஆதித்தன் குடும்பம் பழையபடி திமுக சார்பு நிலை எடுக்க ஆரம்பித்தது என்பதுகூட, இங்கே பெரும்பாலானோருக்குத் தெரிந்த விஷயம் தான்!
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்
ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை நேற்று ஆரம்பித்த விதமே தமிழ்நாட்டையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற திட்டம் இருக்கிறதா என்ற குத்தலான கேள்வியோடுதான்! இதே மாதிரி அப்பச்சி சொன்ன ஒரு அதிமேதாவித்தனமான ஸ்டேட்மென்ட் : கச்சத் தீவு இந்தியாவுடையது அல்ல, அதனால் இலங்கைக்குத் தாரை வார்த்ததில் தவறே இல்லை என்பதையும் இங்கே உள்ள ஊடகங்கள் பானாசீனாவிடம் துணிந்து கேட்பார்களா? H ராஜா என்றால் வருகிற இளப்பம், மற்றவர்களிடமும் வருமா?ஊடக அறம் என்பதே காசுக்குக் கூவுவது மட்டும்தான் என்று சோனியாG UPA chairperson என்ற ஹோதாவில் நிழல் பிரதமராக ஆட்டிப்படைக்க ஆரம்பித்த நாட்களில் தான் என்பது இங்கே நண்பர்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமா? இங்கே பெரும்பாலான ஊடகங்கள் திமுகவோடு அமைத்துக் கொண்ட கூட்டணி இன்னும் தொடர்கிறதே, எதனால் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!
அரசியலைப் பேசும்போது, தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக தொல்.திருமாவளவன் ஆகிவருகிறார் என்பதே இங்கு திராவிடங்களின் வீழ்ச்சிக்கான பல அடையாளங்களில் ஒன்று மட்டும்தான்! களத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் படுகிற பாடு இருக்கிறதே! அது தான் என்னை ஆச்சரியப்படுத்துகிற ஒரே விஷயம்! காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமியர்களுடைய ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அம்பேத்கரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதான விசித்திரம் இந்த 44 நிமிட நேர்காணலில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இசுடாலின் போல காஷ்மீர் விவகாரம் என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே பேசுவது ஒருவிதம்! திருமாவளவன் பேசுவது வெறுரகம்! ராஜா ஹரிசிங்குக்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே காஷ்மீர் இந்த தேசத்தின் ஒருபகுதியாக, கல்விகேள்விகளுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது என்பது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல! முஸ்லிம் மெஜாரிட்டி எப்படி வந்தது என்பதைப்பற்றியும் அவருக்கு கவலை இல்லை. தான் பேசுவது தேசத்துக்கு எதிரான கருத்து இல்லை என்பதற்கு அவர் சொல்லுகிறவிளக்கம் இருக்கிறதே, அபாரம்!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்
பாரதி கவிதைகளில் புதிய கோணங்கி என்ற பாடலில் இந்த நாட்டோருக்காகச் சொன்ன செய்தி இது. இங்கே ஊடகங்களுக்கும், தெரிந்தே தவறுகள் செய்கிற அரசியல்வியாதிகளுக்கும் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய செய்தி இதுதான் என்று இந்த ஞாயிற்றுக்கிழமை எனக்குப் படுகிறது
மீண்டும் சந்திப்போம்.
திருமாவளவன் பேச்செல்லாம் சுத்த வேஸ்ட். காசு வாங்கிக்கொண்டு அவர் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார். சமீபத்தில் அமித்ஷாவிடம் போய் நின்றதுபோல. உள்ளூர் தலித் தலைவர்களிடமே ஒற்றுமையாக இருக்கத் தெரியாதவர், காஷ்மீரைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
ReplyDeleteகலீஞர் போல அல்லாமல் முனைந்து முனைவர் பட்டம் பெற்றவர் திருமாவளவன்! அவருக்கிருக்கிற தகுதி என்னவென்பதை விடக் கண்மூடித்தனமாக இவரைநம்பும் பல்லாயிரக்கணக்கான தலித்துகள் மத்தியில் வரலாற்றை எப்படி மேம்போக்காக, இஷ்டத்துக்குத் திரித்துப் பேசுகிறார் என்பதல்லவா முக்கியம்! திமுக சரவணன் மீது NIA நடவடிக்கை என்பது வெறும் வதந்தியாகவோ அல்லது அவரோடு மட்டும் நின்று விடக்கூடாது என்பதுதான் விஷயம்.
Delete