பொதுத்துறை வங்கிகள் இணைப்பு! அடுத்த கட்ட நகர்வு!

நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று பொதுத் துறை வங்கிகளுக்குள் உத்தேசிக்கப்படும் இணைப்பைப் பற்றி அறிவித்திருக்கிறார். கொஞ்சம் முதிர்ச்சியோடு கூடிய முடிவாகப் பார்க்க முடிவதில் ஒரு முன்னாள் வங்கியாளனாக மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகத்தான் தெரிகிறது. ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒருதெளிவான அணுகுமுறை,  சரியான முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல் செய்யப்பட்ட வங்கிகள் இணைப்பு எப்படிப் பெரும் தலைவலியாக ஆயின என்பதைப் பணியில் இருந்த நாட்களில் பார்த்திருக்கிறேன். உதாரணமாக நெடுங்காடி வங்கி என்கிற மிகச்சிறிய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கியோடு இணைக்கப் பட்டதில் PNB நீண்டகாலம் அந்த இணைப்பை ஜீரணம் செய்ய முடியாமல் தவித்த கதையைச் சொல்லலாம்! 


இது உத்தேசிக்கப்படுகிற வங்கிகளுடைய இணைப்புக்கான இறுதிவடிவத்தில் எப்படியிருக்கும் என்பதற்கான விளக்கப் படம். பொதுவாக, இணைப்பில் உத்தேசிக்கப்படுகிற நிர்வாக சீர் திருத்தங்கள் மூன்று விளக்கப்படங்களில் முதலாவது 


இது இரண்டாவது 


இது மூன்றாவது 


எந்தெந்த வங்கிகள் இணைப்பு  இது முதல் மூன்று PNB,OBC, Utd Bk  பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த பெரிய வங்கியாக 


அடுத்தது கனரா, சிண்டிகேட் வங்கிகள் இணைப்பு. இந்த இரண்டும் இணைந்தபின் நாட்டின் 4வது பெரிய வங்கியாக 


1980 வாக்கிலேயே சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியோடு இணைக்கப் போவதாக பலத்த வதந்தி இருந்தது. இணைப்பைத் தவிர்க்க சிண்டிகேட் வங்கி நிர்வாகம் தவித்த தவிப்பு  வங்கி ஊழியர்கள் மத்தியில் ரொம்பவுமே பிரசித்தம். 


பொதுத்துறை வங்கிகளை எதற்காகத் தனித்தனிப் பாளையம் ஆக காங்கிரஸ் காலத்தில் வைத்திருந்தார்கள்? விடை என்னவோ சிதம்பர ரகசியம்தான்! (சீனாதானா ஆரம்ப நாட்களில் சம்பந்தப்படவில்லை!) 

கொங்கணி வங்கியான கார்பரேஷன் வங்கியை கனரா, சிண்டிகேட் வங்கிகளோடு இணைக்கவில்லையே, ஏன்? விடை மேலே கடைசி பாயிண்டில் இருக்கிறது. இணைப்புக்குப் பின் நாட்டின் 7 வது பெரிய வங்கியாகுமாம்!

 
பிரதேசங்களை வைத்து மட்டுமே இந்த இணைப்பு எதுவும் உத்தேசிக்கப்படவில்லை என்பதற்கு கீழே இந்தியன் வங்கி, அலஹாபாத் வங்கி இணைப்பே ஒரு உதாரணம்.


காரணம் CBS என்றழைக்கப்படும் கோர் பேங்கிங் மென்பொருள் என்பது கொஞ்சம் கவனித்தால் தெரிந்திருக்கும்.  
    


இதுபோக இன்னும் சிலவங்கிகள் இணைப்பு இல்லாமல் இப்போதிருக்கிற அந்தரத்தில் தொங்குவதான நிலையிலேயே தொடரும் என்பதை நிதியமைச்சர் வெளிப்படையாகச் சொல்ல மறந்துவிட்டார்!

 
மேலே ஒரு ஆறு வங்கிகள் தனித்து விடப் பட்டிருக்கின்றன! கொஞ்சம் அந்த ஆறுவங்கிகளுடைய கதையைத் தனித்  தனியாக விசாரித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒரு புது சித்திரம் கிடைக்கும்.  இந்த இணைப்புக்குப் பிறகு 27 பொதுத்துறைகள் 12 ஆகச் சுருங்கும்.  இது நிதியமைச்சருடைய முழு உரை, அறிவிப்பு, இன்னும் ஒன்றிரண்டு முறை கேட்டு, வேறு அம்சங்கள் விடுபட்டுவிட்டதா என்று செக் செய்து கொள்வதற்காக , இங்கேயும்! 75 நிமிடங்கள் 
    

வங்கிச் சீர்திருத்தங்களில் ஒரு முக்கியமான கட்டம் இது. info graphics எல்லாமே நிதியமைச்சருடைய ட்வீட்டரில் இருந்து, நன்றியுடன் இங்கே பகிரப்பட்டது.  

ஊழியர் சங்கங்களில் இருந்து ஊளைக்குரல்கள் எதையும் இதுவரை நான் கேட்கவில்லை. அப்படி   வரும்போது அடுத்தடுத்த பதிவுகளில் பார்த்துக் கொள்ளலாம்!

மீண்டும் சந்திப்போம்.
    

3 comments:

  1. இது மாதிரி இணைப்புகள் நடைபெறும்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நிலை கொஞ்சம் சங்கடம் இல்லையோ? வேறு இடங்களுக்கு - அவர்கள் விரும்பாத இடங்களுக்கு - மாறவேண்டிய நிலை வரலாம். ஸீனியாரிட்டி என்னாகுமோ?

    ReplyDelete
    Replies
    1. இதை எல்லாம் பார்த்தால் மாறுதல்களை செய்ய முடியுமா?

      நான் ஊழியர் சங்கங்களை பற்றி நீங்கள் சொல்லியிருந்த வரிகளைப் படித்த உடன் தோன்றியதைச் சொன்னேன்.

      Delete
    2. இங்கே ஒவ்வொரு பொதுத்துறை வங்கியும் முந்தையநாட்களில் சொல்வார்களே, பாளையத்துக்காரர்கள் முறை என்று அரசு யாருக்கோ குத்தகை விட்டமாதிரித்தான், தனித்தனி தீவுகளாக, வளர்த்தெடுக்கப்பட்டன என்பதில் ஊழியர்களுடைய பணித்திறனுமே அதேமாதிரித்தான் குறுகிய வட்டத்துக்குள் இருந்தன ஸ்ரீராம்!

      CRM, Core Banking என்று சர்வதேச அளவில் வங்கித்துறை விரிவாக மாறத்தொடங்கிய நாட்களில் இங்கே பழைய பேரேடுகளை கொண்டுதான் வங்கிகள் இயங்கின. கணினிகளைப் பயன்படுத்துவதற்கு ஊழியர் சங்கங்களோடு போராட வேண்டியிருந்தது. ஒரு இன்கிரிமெண்ட் எஸ்ட்ரா வாங்கி கொண்டு சங்கங்கள் சம்மதித்தது தனிக்கதை. லெட்ஜர் போஸ்டிங் மெஷின் எபேசில் ன்று ஆரம்பித்து TBM ஒரு கிளை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு, இப்போது கோர் பேங்கிங் என்று ஒருவங்கியின் அத்தனை கிளைகளும் ஒரே database என்று எங்கிருந்து வேண்டுமானாலும் எந்தக்கிளையில் இருக்கிற கணக்கிலும் வரவுசெய்யலாம் என்கிற நிலைக்கு உயர்ந்திருப்பதில், ஒரு சராசரி வங்கி ஊழியருடைய பணித்திறன் நூறுமடங்கு உயர்ந்திருக்கிறது என்பதில் கணினிகளின் பங்கு தான் அதிகம்.

      சீனியாரிடி என்பது என்ன? ஒருவருக்குத் தன்னுடைய வேலை என்ன என்பதில் தெளிவும் அனுபவமும் இருக்கும் என்ற அனுமானம், நம்பிக்கைதானே! இந்த வரையறைகளும் காலப்போக்கில் மாறக் கூடியவையே! இப்போதைக்கு வேளையில் சேர்ந்த நாளில் இருந்து கணக்கிடும் பழைய முறைதான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!