ஆடி வெள்ளி! தேடி வரும் நல்ல செய்தி!

எங்கள்blog ஸ்ரீராமுக்கு ஒரு நல்ல செய்தி! காவேரி நியூஸ் சேனல் 146 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, விரல் விட்டு எண்ணக்கூடிய ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு சேனலை நடத்தப்போவதாக அறிவித்ததில் ஒரே ஒரு கேள்வி மட்டும் ஸ்ரீராமுக்கு இருந்தது போல! துணை ஆசிரியர் மதன் ரவிச்சந்திரன் சேனலில் இருக்கிறாரா? இல்லையா?

 

மதன் ரவிச்சந்திரன் காவேரியில் நீடிக்கிறார்! அதுமட்டுமல்ல அந்த சேனலில் அதிகம் பரிச்சயமான முகம் அவருடையது மட்டும்தான் என்ற வதனிநாடாகப் கையில்  காவேரியின் நட்சத்திரமாகவும் அவர்தான் இப்போதைக்கு நீடிக்கிறார்! இந்த 34 நிமிட பேட்டியில் திராவிடர்  கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜின் காதல் திருமணம் வினைதீர்க்கும் விநாயகர் கோவிலில் தான் கூட இருந்து நடத்திவைத்ததை போகிறபோக்கில் ஒரு தகவலாக சொல்கிறார். ரஜனிகாந்த் முஸ்லிம்களின் எதிரியா என்று இந்த வீடியோவுக்குத் தலைப்பு வைத்திருப்பதே ஒருவித விஷமத்தனம் என்று எனக்குப்படுகிறது. இந்தியர்களோடு ஒன்றாக இருக்கமாட்டோம் என்று முகமது அலி ஜின்னாவுடன் பிடிவாதமாக இருந்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் துணையோடு பாகிஸ்தான் என்று தனிநாடாகப் பிரிந்து போனார்கள். 

ஆனால் இந்தியாவிலேயே இருப்போம் என்று இங்கேயே தங்கி வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களிடையே காரணமில்லாத ஒரு அச்சம், பாதுகாப்பற்ற உணர்வைத் தூண்டிவிடுகிற போக்கை அவர்களிலேயே ஒருசிறுபகுதியும், அதற்கு அனுசரணையாக இருந்த pseudo seculars காங்கிரஸ், இடதுசாரிகள், திமுகழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்   வளர்த்தன. இந்த அடிப்படையில் பார்த்தால்   இவர்கள் மட்டும்தான் முஸ்லிம்களின் எதிரியாக  உண்மையிலேயே இருக்கமுடியும். அதை மறந்து விட்டு ரஜனியோ அல்லது பிஜேபியோ தான் முஸ்லிம்களின் எதிரி என்று சொல்வதே, நகைமுரண். பேட்டி எப்படிப்போகிறது என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!


இந்தியா டுடே ஒவ்வொரு ஆறு மாதத்திலும் The Mood of the Nation என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை அறிவிப்பது பல ஆண்டுகளாகவே நடந்து வருவதுதான்! அந்த வகையில் கடந்த ஜூலை இறுதியில் Karvy Insights உடன் சேர்ந்து நடத்தியதில் இதுவரை இருந்த இந்திய பிரதமர்களிலேயே  நரேந்திர மோடி தான் அதிக செல்வாக்குள்ள திறமையான பிரதமராக கருத்துக்கணிப்பு முடிவுகள் சொன்னதை வைத்து ஆரம்பிக்கிற இந்தவிவாதம் அதைவிட்டு விலகி எங்கெங்கெல்லாம் சுற்றுகிறது என்பதைக் கொஞ்சம் வேடிக்கை பாருங்கள்! அதிலும் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், யோகிஆதித்யநாத்தை சிறந்த முதல்வராக இந்தக் கருத்துக் கணிப்பு சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டாராம்! அதுவும் என்னகாரணம் என்று சொல்லாமலேயே!  புதியதலைமுறை பழைய தறுதலை தான்! 
                                                             


இது ஆகஸ்ட் 14 அன்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பை வெளியிட்ட வீடியோ. என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்த்துவிட்டு புதியதலைமுறை எப்படித் திரிக்கிறது என்பதையும்  பாருங்கள்.


என்னதான் ஹரிஹரன் ரங்கராஜ் பாண்டேவின் தயாரிப்பு என்ற மாதிரி ஒரு பிம்பம் இருந்தாலும், ஹரிஹரன் தந்திடிவி முதலாளிகள் மூடுக்குத் தகுந்தமாதிரித்தான் நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார் என்று எனக்குப் படுகிறது  தவிர, தமிழக ஊடகக்காரர்களில் எவரும் ஒரு பரந்தபார்வையில் செய்திகளைப் புரிந்துகொண்டு அதற்கு அப்புறம் தங்களுடைய கருத்தை ஏற்றிச் சொல்கிற அளவுக்குத் திறமையானவர்களாக உயரமுடியவில்லை என்ற மனக்குறை எனக்கு நீண்டநாட்களாகவே உண்டு, இங்கேயும் பிரதமரின் சுதந்திரதின உரைமீதான விவாதம் என்று தலைப்பு! ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத ரஜனி பேசியது தான் இங்கே விவாதமாகிறது. #தமிழேண்டா என்று இன்னும் எத்தனை காலத்துக்கு எது பொருளோ அதைப் பேசாமல் வேறெதையோ பேசித் திரியப்போகிறோம்? 

                                                               
மீண்டும் சந்திப்போம்.
                                                                          

2 comments:

  1. ஹா... ஹா.... ஹா... நல்ல எனக்கென்ன செய்தி? அவருக்குதான் நல்ல செய்தி! நான் சேனலே பார்ப்பதில்லையே...

    ReplyDelete
    Replies
    1. இல்லையா பின்னே? layoff செய்யப்பட்ட 146 பேரில் ம. ர. இருக்கிறாரா இல்லையா என்று கரிசனத்துடன் கேட்டவர் நீங்கள் ஒருவர்தானே ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!