#செய்திகள் செய்திகளின் அரசியல் புரிகிறதா?

நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு நிறைய நல்ல விஷயங்கள் நடந்து வருகின்றன. எடுத்துக் காட்டாக நிதியமைச்சராக  திருமதி நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றபிறகு நிதியமைச்சகத்தில் கொஞ்சம் ஊழல், பொறுப்பைச் சரிவர செய்யாதது என்று பல அதிகாரிகள் களையெடுக்கப்பட்டனர் என்பது ஒருநாள் கூத்து என்றாகிவிடாமல் தொடர்ந்து நடக்கிறது என்றுதானே நினைத்திருந்தோம். ஆனால் முந்தைய ஐந்தாண்டுகளிலேயே 312  நபர்கள் கழித்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது இதைப் பார்த்தபிறகுதானே தெரிகிறது! 



வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை செய்ய மாட்டோம், சம்பளம் இங்கே அரசிடம் வாங்கி கொள்வோம் ஆனால் விசுவாசமெல்லாம் வேறிடத்தில் என்றிருப்போம்! இப்படிப் பட்டவர்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது? IAS IPS லாபிதான் அதிகாரம் மிகுந்தது . இப்போது கழித்துக் கட்டப்பட்டவர்கள் IRS  தானே! IAS IPS ஆசாமிகள் மீது கைவைத்தால் அப்போதுதெரியும் சேதி என்று விமரிசனம் செய்வது காங்கி ஆதரவு The Print  தளத்தில் தான்!  

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் இலங்கை தமிழர் ஒருவர் அவரை  விரட்டியடித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. என்று செய்தியைத் தந்திருக்கிறது கதிர் நியூஸ்.



வெளிநாட்டு பணம் நின்று போனதால் இலங்கைவாழ் தமிழர்களிடம் பிச்சை எடுக்க இன்னோர் டப்பா குலுக்கி வருகிறது உஷார்.
மறைந்தவர்கள் அதைச்சொன்னர்கள் இதைச்சொன்னார் என சொல்லி காலத்தை ஓட்டிய கட்டுமரம் இருக்கும்போது அதை காப்பியடிக்க யாரும் துணியவில்லை. ஆனால் விடுதலைபுலிகள் அழிக்கப்பட்டபின்பு இந்த ஆமைக்கறியான் அதை சொல்லி இலங்கைத்தமிழர்களிடம் காசு சேர்த்தது.
ஆமைக்கறி யாவாரம் அருமையாக போகவும் இப்போது கூட கட்சிகள் மிரட்டுவதாலும் வெளிநாட்டு ஹவாலா பணம் தட்டுப்பாடாக இருப்பதாலும் அதிலே இன்னோர் ஆளும் சேர்ந்திருக்கிறது.
பிரபாகரன் தான் அந்த கூட்டணியிலே போய் சேர சொன்னார் எனவே சேர்ந்தோம் என ஒரே போடாக போட்டிருக்கிறது.
அதாவது விடுதலைப்புலிகளுடன் எப்போதும் தொடர்பிலே இருந்ததாக அதுவும் பிரபாகரனுடன் தொலைபேசியிலே அதுவும் போர் உச்சகட்டத்திலே இருக்கும் போது பேசுமளவுக்கு செல்வாக்கு உடைய ஆள் என காட்டிக்கொள்ளுதாம்.
போர் தொடங்கும் முன்னரே வெளியுலக தொடர்புகளிலே பாதியை புலிகளே அழித்துவிட்டனர். மிச்சமிருந்ததை இலங்கை ராணுவம் அழித்துவிட்டது. ஒரு துளி தகவல் கூட வெளியே வரவில்லை. எந்த ஒரு பத்திரிக்கையாளரும் உள்ளே போகவில்லை.
அதனால் தான் போர்குற்ற விசாரணைக்கு தடயங்களே இல்லை. இருக்கும் வீடியோக்கள் எல்லாம் இலங்கை ராணுவத்தினர் அவர்களின் சொந்த போன்களிலே எடுத்தது தான்.
இறுதியாக அழிக்கப்படும்போது உலக அளவிலான பிரச்சினையாக கொண்டு போகலாம் என தூண்டிவிட்டு அவர்களை அழித்ததே இந்த டமில்நாட் கட்சிகள் தான். அதையும் நம்பி இறங்கியவர்கள் முற்றாக அழிக்கப்பட்டனர். பல ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் உட்பட.
இந்த அழகிலே தொலைபேசியிலே பேசினார்களா? எப்படி பேசினார்கள்? எந்த எண்ணுக்குபேசினார்கள்?
தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிலே இருந்தது மட்டுமல்லாது அந்த தீவிரவாத இயக்கம் சொன்னபடி நடந்து அரசியலிலே கூட்டணி வைத்தோம் என சொல்கிறதுகளே
இதுகள் இப்படித்தானே இப்போதும் பாக்கிச்தானுடன் தொடர்பிலே இருந்து நாட்டுக்குள்ளே சதிகாரவேலையிலே ஈடுபடும்கள்?
இதை விட இதை இப்போது சொல்லவேண்டிய அவசியம் என்ன?
இலங்கை வாழ் தமிழர்களும் அகதியாய் நாடற்று அலைபவர்களும் இப்போது தான் கொஞ்சம் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்களிடம் மிரட்டி பணம் பிடுங்குவதற்கா?
ஏன் இந்த நாடகம்?
மக்களே இலங்கை வாழ் நண்பர்களே, வெளிநாடு வாழ் நண்பர்களே இதைச்சொல்லி இந்த கும்பல் டப்பாவை குலுக்கிகொண்டு வரும்
நம்பாதீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி தூக்கம் கெட்டு உறவுகளை பிரிந்து பாடுபட்ட சம்பாதித்த பணத்தை இந்த துரோகிகளின் கையிலே தராதீர்கள்.
உஷார் உஷார்          

அம்பேத்கர் பெரியார் பெயரைச் சொன்னால் மட்டும் ....! காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்று அந்த நாட்களிலேயே முத்தமிழ் வித்தவர் கோடுபோட்டுக் காட்டி இருக்கிறாரே! இவர்கள் ரோடு போட வேண்டாமா? 

ஏம்பா திருமா?
லண்டன்ல என்னய்யா நடந்துது? திருமா இன்னுமா உயிரோடு இருக்காருன்னு லண்டன்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க..
ஏதேதோ செய்தி வருகிறது
ஏம்பா ஆளூர் ஷாநவாஸ்...
எதுக்கெடுத்தாலும் டிரம்ப் போலவே டிவிட் செய்வீரே, இந்த லண்டன்ல திருமாவுக்கு என்ன நடந்ததுன்னு சொல்ல கூடாதா?
ஆ ஊன்னு எதுக்கெடுத்தாலும் கத்துவியே, திருமாவுக்கு லண்டன்ல என்ன நடந்துன்னு சொல்லு
படுவா பயலே, ஒழுங்கா நீயா சொல்லிரு, இல்ல எங்க நியூஸ் சோர்ஸ் சீக்கிரம் சொல்லிரும், அதுக்கப்புறம் "அடங்க மறு அத்து மீறு" எல்லாம் இல்ல
"கயிற எடு உடனே தொங்கு.." அளவுக்கு வந்துரும் , விஷயம் அவ்வளவு கேவலமா நடந்திருக்கு....

இது திமுக காமெடி என்றால் .....

டிவி விவாதங்களில் பிஜேபியினர் கலந்துகொள்ளாததால் TRP பார்வையாளர்கள் குறைந்துவிட்டதாக யாராவது டாக்டர் யக்கோவிடம் சொன்னீர்களா என்ன?


இனி காமெடிக்குப் பஞ்சமிருக்காதோ? சேனல்களை வாழவைத்த எங்கள் தமிழ்த்தாயே! தமிழிசையே!  என்று வாழ்த்துப் போஸ்டர்களை பாத்தீங்களா? எனக்கு இப்பவே கண்ணைக்கட்டுது!    

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. பிஜேபி நேரிடையாக ஆதரிப்பவர்கள், மறைமுகமாக ஆதரிப்பவர்கள் என்று பாரபட்சமில்லாமல் தமிழிசை யை கலாய்ப்பது, விமர்சனம் செய்வது இன்று வரையிலும் நின்றபாடில்லை. அவர் நிலையில் இருந்து பார்த்தால் தெரியும். அவர் எப்பேற்பட்ட பொறுமைசாலி என்று.

    ReplyDelete
    Replies
    1. தனிப்பட்ட ஒரு மனுஷியாக அவருடைய பொறுமை அல்லது வேறெந்த குணாதிசயத்தைப் பற்றியும் நான் இங்கே விமரிசிக்கவில்லை ஜோதிஜி! ஆனால் ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவராக அவருடைய செயல்பாடுகளில் கடுமையான அதிருப்தியும் கருத்தும் எனக்கிருக்கிறது. வேண்டுமானால் பிகேயாரிடம் பேசிப் பாருங்களேன்! என்னைவிட, அவர்தான் இந்தக்கேள்விக்குப் பதில்சொல்லப் பொருத்தமானவர்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!