இதென்ன தலைப்பு? கட்சி அரசியலும் சேனல் அரசியலும் வெவ்வேறா என்ன? மேம்போக்காக செய்திகளைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும். காற்று பலமாக வீசினால் கட்சி அரசியல் ஒருமாதிரிக் குழப்பத்திலும் சேனல் அரசியல் வேறொருமாதிரிக் குழப்புவதிலும் இருப்பதான துல்லியமான வேறுபாடு எழுவதையும் புரிந்துகொள்ள முடியும்!
சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்படும் கே எஸ் அழகிரி, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, சசி தரூர் இவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் கட்சிக்கு விரோதமாகப் பேசுகிறவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறட்டும் என்று காட்டமாகச் சொன்னதை வைத்து ஒரு விவாதம் வைகுண்டராஜன் நடத்துகிற நியூஸ் 7 சேனலுக்கும் அப்படி ஒரு குழப்பம் வந்து, பார்வையாளர்களையும் குழப்புகிற ஒரு கேள்விநேரம் நிகழ்ச்சி இது! வீடியோ 54 நிமிடம். முதல் 15 நிமிடம் non stop ஆக பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸைப் பேச விட்டதில் சேனலும் நெறியாளரும் எத்தனை குழப்பத்தில் இருந்தார்கள் என்பது நன்றாக வெளிப் பட்டது ஒரு அதிசயம்! விசிகவின் ஆளூர் நவாஸ் விசித்திரமான எதிர்வாதத்தை வைக்கிறார். பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமலேயே, கேள்விக்கு மோடி எதிர்ப்பு ஒன்று மட்டுமே போதும் என்கிற ரீதியில்! ஆளூர் நவாசை விடுங்கள்! அவருக்கு மோடி எதிர்ப்பு அஜெண்டா மிகமுக்கியமாக இருக்கிற ஒரு கட்சிக்காரர்! வெளியில் இருந்து விவாதம், விமரிசனம் செய்கிறவர்களுக்கே இத்தனை குழப்பம் என்றால், நெறியாளர் தான் பாவம் என்ன செய்வார்? போதாக்குறைக்கு விஜயதாரணி வேறு, கருத்தைச் சொன்ன விதம், ஆளூர் நவாசுக்கு எதிராக இருந்தது. balanced ஆகப் பேசியது நெறியாளருக்கே பொறுக்காமல் கேட்டும் விடுகிற பரிதாபம் செமகாமெடி! சீனியர் தலைவர்கள் பேச்சை எடுத்துக் கொள்வதா மாநிலத்தலைவர் பேச்சை எடுத்துக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருப்பதாக விஜய தாரணி சொன்னபிறகும் விடுவதாயில்லை. கணபதி என்கிற பத்திரிகையாளர், சசி தரூர் ஆதரிப்பதற்கு பயம்தான் காரணம் என்ற கண்டுபிடிப்பைச் சொல்கிறார்.ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி இவர்களுக்கு என்ன பயம் என்று சொல்லாமல் சாய்ஸில் விட்டுவிடுகிறார். ரவீந்திரன் துரைசாமியும் இருக்கிறார். வழக்கமான புருடாவாக நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் சேனல் நடத்திய ட்வீட்டர் கருத்துக்கணிப்பு, அதை ஆளூர் நவாஸ் வழி மொழிவதாக ஒரு நல்ல காமெடி! மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுங்கள்!
இவ்வளவு பெருமைமிகு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை தமிழகத்தில்ஏன் 1967-ல் வீழ்த்தினோம் என்று திமுகவினர் வருந்தி வருந்தி பதிவுகளை மேற்கொள்வதைப் பார்த்தால் கண்களில் நீர் கோர்க்கிறது.
முகநூலில் மாயவரத்தான் கி ரமேஷ் குமார் ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறார். முழுப்பதிவையும் இந்த லிங்கில் வாசித்துக் கொள்ளலாம்!
ஒருநிமிட வீடியோதான்!
ஆட்சியை இழந்த மஜத - காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.
இந்த வார்த்தைப் போரின் ஒரு பகுதியாக ஞாயிறன்று பேசிய சித்தராமையா, "குமாரசாமி என்னை எப்போதுமே நண்பராகவோ அல்லது நம்பிக்கைக்குரியவராகவோ பார்த்ததில்லை. அதற்குப் பதிலாக என்னை எதிரியாகவே பாவித்தார். அதனால்தான் மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது" எனக் கூறினார்.
முன்னதாக, தேவ கவுடா தனது மகன் குமாராசமிக்குப் பதிலாக பாஜகவின் எடியூரப்பா ஆட்சி செலுத்தட்டும் என்ற மனநிலையில் சித்தராமையா இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.அதற்கு பதிலடியாகவே சித்தராமையாவின் இந்தக் கருத்து வந்திருக்கிறது என்று இந்து தமிழ்திசை காங்கிரஸ் காமெடியை விவரித்திருக்கிறது.
கப்பலுக்குக் கால் உண்டா என்ன? !! அப்புறம் அந்த ஒன்னரை? அரை ராவுல் பாபா! சரி அந்த ஒண்ணு யாரு?
காங்கிரஸ்காரனாக இருப்பது முட்டாள்தனம் என்றால் அதை ஆதரித்துப்பேசுவது அதைவிட வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும் என்பது இங்குள்ள சேனல்களுக்கு ஏனோ புரிவதே இல்லை!
மீண்டும் சந்திப்போம்.
hi i used to read your blogs but unable to see the attached Videos. I dont watch these channels as well. but when i watched the first clipping of News7 channel , the anchor seems to be trying to get a statement out of the person i think he is some kolakala sreenivas for every explanation of him he seems to twist things out of no where. Sreenivas reitrates that you should be an opposition party and not as a enemy party
ReplyDeleteவாருங்கள் சரவணன்! எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள உதவியாகத்தான் சில காணொளிகள் , அதன்மீதான சிறு விமரிசனக்குறிப்புக்களாகத் தொடர்ந்து எழுதிவருகிறேன்.வீடியோவும் விமரிசனக்குறிப்பும் வெவ்வேறுதான் என்றாலும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.
Delete