இட்லி வடை பொங்கல்! #39 ஒரு இந்தியப் பெருமிதம்!

ந்த சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் என்னை மிகவும் பெருமிதத்தோடு உணர வைத்த தருணங்கள் நிறைய இருந்தன. பெண் விடுதலை, அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்று நிறையப் பேசுகிறோம். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை என நமது முப்படைகளிலும் பெண்களின் பங்களிப்பும் சாதனைகளும் சத்தமே இல்லாமல் அதிகரித்துக் கொண்டே வருவதை பார்க்கும் போது நிச்சயம் ஒவ்வொருவரும் என்னைப்போலவே பெருமிதம் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.


ஆகஸ்ட் 15 அன்று  ரிபப்லிக் டிவியில் ஒளிபரப்பான லெப்டினென்ட் கர்னல் சோபியா குரேஷியுடைய நேர்காணல் 23 நிமிடங்கள் தான்! கணவர் தாஜுதீன் குரேஷியும் ராணுவத்தில் மேஜராகப் பணிபுரிகிறார். மகன் சமீருடன் மூவரும் அர்னாப் கோஸ்வாமியுடன் உரையாடுவதை அவசியம் பார்க்கவேண்டிய ஒரு நல்லவிஷயமாகப் பரிந்துரை செய்கிறேன்!

பிஜேபி அமைச்சர்களிலேயே அதிகம் அதிர்ந்து பேசாதவர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சேகர் குப்தாவே பாராட்டுகிறார் என்றால் அதற்கு மேல் நான் என்ன சொல்ல? அப்படிப்பட்ட ராஜ்நாத் சிங் நேற்றைக்கு பொக்ரானில் அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்ட இடத்தில் வாஜ்பாய் அவர்களுடைய முதலாவது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுச் , சொன்ன சில வார்த்தைகள், இந்திய அரசியலில் புதிய அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

 
  
இங்கே சேகர் குப்தா தன்னுடைய பார்வையாக ராஜ்நாத் சிங்குடைய  பேச்சின் மீது சிலவிஷயங்களைச் சொல்கிறார். ஒரு மாற்றுப்பார்வைக்காக இவர்மாதிரியான அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிற இந்த நேரத்தில் தமிழிலும் இதுபோல ஊடகங்களில் மாற்றுக் கருத்தை முறையாகச் சொல்கிற நல்லநாளும் வருமோ என்ற ஏக்கமும் சேர்ந்தே வருகிறது. முன்னெல்லாம் நாளிதழ்களில் தலையங்கம் என்று ஒரு பகுதி, அரசுக்கும் வாசகர்களுக்கும் பயன்படுகிறமாதிரி எழுதப்பட்டதுண்டு. இப்போதோ  நாளிதழ்  டெலிவிஷன் சேனல் எதுவானாலும் காசுக்கு கூவுகிற ஊடகம் என்றே ஆகிப்போய்க் கிடப்பதை இந்தப்பக்கங்களில் நாலாவது தூண் என்று ஹேஷ்டாக்கில்  தேடிப் பார்த்தால் எப்போதிலிருந்து இதுமாதிரி சீரழிவு தொடங்கியது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்!


காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்சினையாக்க  சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐநா பாதுகாப்புசபையில் முயற்சி செய்தது ஆரம்பநிலையிலேயே எடுபடவில்லை என்பதுதான் இந்த 4நிமிட வீடியோவின் சாராம்சம்.

மீண்டும் சந்திப்போம்.

     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!