திருவிளையாடல் ஆரம்பம்! பானாசீனா ஓடுகிறார்! ஒளிகிறார்!

சால்வை அழகர் பானாசீனா இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, நீதிமன்றத் தடை உத்தரவுகளாலேயே கைது  நடவடிக்கையைத் தவிர்த்து செட்டிநாட்டு ஜமீன் புள்ளி என்றிருந்தது மாறி ஜாமீன் புள்ளியாக நேற்றுமாலை வரை உலாவிக் கொண்டிருந்ததற்கு  டில்லி உயர்நீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கு காங்கிரஸ் கட்சியின் காசுக்கார வக்கீல்கள் அத்தனைபேரும் ஓடிப்போய் அவசர வழக்காக விசாரிக்கவேண்டுமென்று SLP தாக்கல் செய்ததும் பலிக்கவில்லை. நேற்று மாலை ஐந்து மணிக்கு உச்சநீதி மன்றத்தை விட்டு வெளியேறிய காட்சிக்குப் பின்னால் வாய்க்கொழுப்பு சிதம்பரம் எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது இந்த நிமிடம் வரை எவருக்கும் தெரியவில்லை. ஜாமீன் புள்ளி இப்போது அரசு ஏஜென்சிகளால் தேடப்படும் புள்ளியாக ஆகிப்போனது காலம் செய்திருக்கிற திருவிளையாடல்! 


ன்று காலை சிதம்பரத்தின் SLP விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதில்,விசாரித்த நீதிபதி ரமணா, இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்றும் அதுவரையிலும் சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். இதன் காரணமாக சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதில் தொடங்கிய சிக்கல் தற்போதும் தொடர்கிறது. தலைமை நீதிபதி இந்த மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும்வரை சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை இல்லை என்பதால் காங்கிரஸ் தரப்பினர் கலக்கம் அடைந்துள்ளனர் என்கிறது விகடன் தளச் செய்தி பின்னணியில் யூட்யூப் லைவ் செய்திகளில். CBI, மற்றும் ED  இரு ஏஜென்சிகளும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இந்தவிஷயத்தில் தங்களது தரப்பையும் கேட்டபிறகே முடிவு செய்யவேண்டும் என்று சொல்லி இருப்பதாக ஒளிபரப்பிக்  கொண்டிருக்கிறார்கள். அப்பச்சியின் தனிச்சிறப்பே மணிலாண்டரிங் தான் என்று அசால்ட்டாகப் போட்டுடைத்திருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி! காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பட்டாளம் முச்சூடுமாக்  ஈரக்குலை பதற சிதம்பரத்தைக் காப்பாற்ற பகீரதப்பிரயத்தனம் செய்வதில் டாக்டர் சுவாமி சொல்வது நிஜம் தானோவென சொல்லாமல் சொல்வது தெரிகிறது.  


பொழுது இன்று  சாய்வதற்கு முன்னால் சிதம்பரத்துக்கு ஆறுதலான செய்தி வருமா அல்லது கைதுநடவ்டிக்கையைத் தவிர்க்க அரசியல்வாதிகளுக்கு வழக்கமாக வருகிற நெஞ்சு வலி வருமா என்பதெல்லாம் தெரியாமல், வெறும் ஊகங்களில் பேசிக் கொண்டிருக்காமல்  இந்த விவகாரத்தைப் பற்றி நேற்றிரவு நான்  பார்த்த உருப்படியான தகவல்களையும் சொல்கிற விவாதம் ஒன்றைப் பார்க்கிறீர்களா? 51நிமிடம் தான்!  விவாதத்தின் கடைசிப்பகுதியில் (47 mts) சுமந்த் சி ராமன் ஷெர்லக்  ஹோம்ஸாகவே மாறி ஊகங்களை அடுக்கியது செம காமெடி! 

ரிபப்லிக் டிவி விவாதம்! சிவப்புநிற மைக்  கபில் சிபலுக்கு மிரட்டுகிற மாதிரியே காங்கிரசுக்கும்!   51 நிமிடம்.


An extremely qualified and respected member of the Rajya Sabha, ji has served our nation with loyalty for decades including as Finance Minister & Home Minister. He unhesitatingly speaks truth to power and exposes the failures of this government, 1/2
8:36 AM · Aug 21, 2019Modi's Govt is using the ED, CBI & sections of a spineless media to character assassinate Mr Chidambaram. I strongly condemn this disgraceful misuse of power.
12:47 PM · Aug 21, 2019

காங்கிரஸ் முதலாளிகள் எவ்வளவு தாமதமாக வருகிறார்கள் என்பதையும் கொஞ்சம் பார்க்கவேண்டாமா? பப்பு தூங்கி எழுந்திருக்க நேரமாகிவிட்டது போல! பப்பி ப்ரியங்கா முந்திக் கொண்டு ஒன்றுக்கு இரண்டாக ட்வீட் போட்டுவிட்டார்.

ஆக, பலவிதமாகவம் திருவிளையாடல் ஆரம்பம்! 

மீண்டும் சந்திப்போம்.

  

4 comments:

 1. சிதம்பரத்தைப் பிடித்தால், அடுத்தது வாத்ரா, ராகுல், சோனியா என்று லிஸ்ட் நீளுமே. அதுதான் பயம்.

  ReplyDelete
  Replies
  1. இதற்குத்தான் சரியான ஆப்பு வைப்பது என்பது! ஓடி ஒளிந்ததில் பசி அந்த ஆப்பைத் தனக்குத்தானே செருகிக் கொண்டார் என்றுகூட சொல்லலாமோ ?

   Delete
 2. அபிஷேக் சிங்வி, கபில்சிபில், இன்னும்சிலர் ....... இவங்களை விட கேடுகெட்ட பச்சை பொறுக்கித்தனம் கொண்டவர்களாக வக்கீல்கள் இருந்தால் மட்டுமே இவங்களை எதிர்த்து கேஸ் நிற்கும். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நிதியமைச்சராக இருந்து அருண் ஜெயிட்லி செய்யத்தவறியதை உள்துறை அமைச்சராக அமித் ஷா செய்து முடிப்பார் என்று நான் நம்புகிறேன்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!