மீண்டும் மதன் ரவிச்சந்திரன்! வங்கிகள் இணைப்பு! D K சிவகுமார்!

இட்லி வடை பொங்கல்! #41 இது! YG மகேந்திரன் நிறைய திரைப்படங்களில் அசட்டுத் தனமான வேடங்களில் நடித்திருந்தாலும் , நிஜத்தில் அசடு இல்லை. ஆனால் அவருடைய மகள் மதுவந்தி எப்படி? காவேரி நியூஸ் மதன் ரவிச்சந்திரன் ஒரு நேர்காணலில் அதை வெளியே கொண்டு வந்துவிட்டாரோ? இந்தப்பெண் தன் பாட்டியைப் போலவே ஒரு கல்வியாளர்! கல்வி நிறுவனம் நடத்துகிறவர் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?


மதுவந்தி இதற்கு முன்னும் ஊடகங்களில் கொஞ்சம் அபத்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.அங்கே பேசியது வேறு ரகம். இங்கே மதன் ரவிச்சந்திரனுடன் மிக அசட்டுத்தனமாக வாயாடுவது வேறு ரகம்! ஒரு 27 நிமிடக் காமெடி! அவ்வளவுதான்! இந்தப்பெண்ணுடன் 27 நிமிடம் தாக்குப் பிடித்ததே மதன் ரவிச்சந்திரனுடைய நல்லகாலம்தான்!

Prashanth Rajendran


பாண்டே எல்லாம் பிச்சை எடுக்கணும் மதன் கிட்ட... அப்புறம் இந்த திமுக சொம்பு சேவியர் நெல்சன் கொஞ்சம் வாங்கி குடி... பாமரனின் கேள்விகளை பிரதிபலிக்கும் மதன் இரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🤝🤝🤝🤝🤝👍👍👍👍🔥🔥🔥🔥🔥
Show less
21

எங்கே பிராமணன் என்று சோ ஒரு தொடராக துக்ளக்கில் எழுதியதை ஜெயாடிவியில் சீரியலாகவும் ஒளி பரப்பினார்கள்! மறைந்த பதிவர் டோண்டு ராகவன் தன்னுடைய வலைப்பதிவில் இந்த சீரியலுக்கு ஒவ்வொரு எபிசோடுக்கும் சுட்டி கொடுத்து, 106 பதிவுகளில்  குறிப்புகளும் எழுதிக் கொண்டிருந்த அந்தநாட்கள் நினைவுக்கு வந்து போகிறது. சுட்டியில் டெக் சதீஷ் நெட்டின் பழைய லிங்குகள் இப்போது கிடைப்பது இல்லை என்பது கூடுதல் தகவல். 


சரியும் பொருளாதாரம், வங்கிகள் இணைப்பு - மோடி மீட்பாரா? என்று வெட்டித்தனமான தலைப்பை வைத்து துறைசார்ந்த அல்லது விஷயம் புரிந்த நபர்களிடம் கருத்துக் கேட்காமல்,ஒரு 20 நிமிடங்கள் புதுப்புது அர்த்தம் கற்பிக்க முயல்வது புதியதறுதலை டிவியின் தனிப்பாணி! அப்படியானால் இங்கே இதைப் பகிர்வானேன்? முந்தைய பதிவில் சூட்டோடு சூடாக இந்தவிஷயம் குறித்து எழுதியதை நண்பர்கள்  தனி விண்டோவில் பார்த்துக்கொண்டே (பெரும்பாலும் படங்கள் infographics தான்)    இந்த 20 நிமிட விவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்களேன்! விவாதத்தில் பேசுகிற ராதாகிருஷ்ணன் அச்சு அசலாக ஒரு கழக உபி மேடையில் பேசுகிற மாதிரியே தொடர்பில்லாத விஷயங்களைக் கோர்த்துப் பேசுகிறார்! 




நான் 1980-ல் கனரா வங்கியில் சேர்ந்தேன். அப்போது CBEU எனப்படும் கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமரர் - சி.எஸ் ( C S SUBRAMANIAN) அவர்கள்!
அவர் மதுரை வந்தால் 'காலேஜ் ஹவுசில்' தான் தங்குவார். கூடவே ஊழியர் கூட்டத்தில் சொற்பொழிவும் ஆற்றுவார். ஒரு மாநாட்டில் சி.எஸ், மற்றும் அமரர் N. சம்பத் இருவரும் ஆற்றிய உரையும் கேட்டுள்ளேன்.
அது போக கோவை கீதா ஹால் கூட்டத்தில் தோழர் சி.எஸ் அவர்கள் ஆற்றிய அருமையான உரையும் கேட்டுள்ளேன். (1980 - 1982 சி.எஸ். அவர்கள் அமரர் ஆகும் வரை).
அப்போதெல்லாம் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் - பங்குச் சந்தைக்கு வராத காலம். ஒவ்வொரு அரசு வங்கியின் பெயர்ப்பலகையிலும் "WHOLLY OWNED BY GOVT OF INDIA"- என்று போட்டிருக்கும்.
ஆனால் அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இடையே இருந்த போட்டி பலமானது. பெரிய பெரிய கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் ( TNEB, TWAD, CO-OPTEX, STATE TRANSPORT CORPIRATIONS LIKE ANNA, JEEVA, CHERAN etc) இவற்றினுடைய BUSINESS ஐ பிடிப்பதற்கு எல்லா அரசு வங்கிகளும் போட்டிபோட்டன.
அந்தப் போட்டி எல்லா நேரங்களிலும் 'ஆரோக்கியமாக' இருந்தது எனக் கூற முடியாது! சில பல நேரங்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் 'குளிர்விக்க' சில பல வழிமுறைகள் கையாளப்பட்டதை அப்போது பணியில் இருந்த வங்கி உயர் அதிகாரிகள் அறிவர்!
'ஒரு பவுன் காயின் அன்பளிப்பு' முதல் வெளியில் கௌரவமாகச் சொல்லமுடியாத உபாயங்களும் கையாளப்பட்டதாக 'கிசு கிசு' ப்புகள் எழுந்தன!
போட்டி என்றால் அவ்வளவு போட்டி - பெட்டி, புட்டி... ட்டி... என்று பெரும் நிறுவனங்களின் கார்பரேட் எக்சிகியூட்டிவ்களை 'குளிர்விக்கவே' LIAISON போல சில வங்கி அதிகாரிகள் செயல்பட்டது உண்டு! பிசினஸ், டார்கெட், இவை இரண்டையும் விரிவுபடுத்தவும், அடையவும் அரசு வங்கிகளிடையே ஒரு CUT THROAT COMPETITION நிலவியது...
அப்போதுதான் வங்கி ஊழியர்கள் / அதிகாரிகளிடையே பரவலாக ஒரு எண்ணம் மேலோங்கியது - அது ஊழியர் சங்கக் கூட்டங்கள், மாநாடுகளிலும் எதிரொலித்தது!
தோழர் சி.எஸ், N சம்பத், இராம. வெள்ளையன் (மும்மூர்த்திகள் - தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம்) உரைகளிலும் இந்த எண்ணம் வெளிப்பட்டது - நானே கேட்டு இருக்கிறேன்.
'எல்லாமே அரசுக்குச் சொந்தமான வங்கி என்றால் எதற்கு இத்தனை பெயர்களில் தனித் தனி வங்கிகள்?' 'எல்லாமே அரசுக்குச் சொந்தமான வங்கி என்றால் எதற்கு இப்படி ஒரு CUT THROAT COMPETITION?'
'மேலும் ஒரு வங்கியில் கடனாளி - மற்றொரு வங்கியில் ஜாமீன்தார் - அல்லது ஒருவருக்கே MULTIPLE LENDING! அதிலும் IRDP போன்ற அரசாங்க SUBSIDY சார்ந்த திட்டங்களிலேயே ஒரு சில சமயங்களில் MULTIPLE LENDING!... (அப்போதெல்லாம் CIBIL, CBS, KYC, ஆதார் எதுவும் கிடையாது!) ஏன் இந்தப் போட்டி?'
'எனவே LIC என்று LIFE INSURANCE க்கு இருப்பது போல BANKING CORPORATION OF INDIA என்று ஒரு குடையின் கீழ் வர வேண்டும் - வேண்டுமானால் LIC போல EAST, WEST, NORTH, SOUTH, CENTRAL என்று நிர்வாக ZONE களை உருவாக்கலாம்"
இவை எல்லாம் வங்கி ஊழியர் சங்க மாநாடுகளில் - UNHEALTHY AND CUT THROAT COMPETITION AMONG GOVT BANKS என்பதைப் போக்க ஒலித்த குரல்கள்!
எனவே வங்கிகள் MERGER என்பது 1980 களில் நாம் விடுத்த கோரிக்கைதான் என்பதைப் போராடும் ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
இப்படி ஒரு வங்கி ஊழியரின் குரலில் இருந்து எதையாவது புரிந்து கொள்ள முடிகிறதா? 



சீனாதானாவை அடுத்து கர்நாடக காங்கிரசின் ஊழல் முகமாக அறியப்படும் DK சிவகுமார் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் மாதிரியே கைதுநடவடிக்கையிலிருந்து விலக்குகோரி நீதி மன்றத்தை அணுகியதில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம்!  மேலே வீடியோ 21நிமிடம். 

DK Shivakumar, Congress on being summoned by ED: There’s no illegal activities that I've done. BJP leaders have said it on record, they're going to harass me. Let them enjoy giving me trouble. But I'll participate&cooperate. I am busy till this afternoon, then I will go to Delhi.
Quote Tweet
ANI
@ANI
·
DK Shivakumar, Congress on being summoned by Enforcement Directorate: I've requested Court that it's a simple Income Tax matter. I've already filed ITR. There's no Prevention of Money Laundering(PMLA) Act. Last night, they summoned me to come to Delhi by 1 pm. I'll respect law.
9:18 AM · Aug 30, 2019

தாங்கள் செய்தது எல்லாம் சட்டசம்மதத்துடன் தான் என்று நம்புவதும் தொடர்ந்து சாதிப்பதும் இது பிஜேபியின் பழிவாங்குகிற நடவடிக்கை என்று புலம்புவதும்   ஊழல் புகார், மணி லாண்டரிங் வழக்குகளில் சிக்குகிற காங்கிரஸ் ஆசாமிகள் சமீபகாலத்தில் வாடிக்கையாகச் செய்கிற அரசியல் காமெடி தான்!  இது உப்பைத்தின்றவன், தண்ணி குடிக்கவேண்டிய  நேரம்!

மீண்டும் சந்திப்போம் 
       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!